Sunday, July 24, 2011

ஜுலை 2011 போட்டி முடிவுகள் (படத்திற்குள் படம் பிடித்தல்)

12 comments:
 
அன்பான வணக்கங்கள்,

முதல் சுற்றில் வெற்றி பெற்ற டாப் 10 படங்களைப் பாத்திருப்பீங்க. போட்டியிட்டு முதல் சுற்றில் வெளியேறிய படங்களையும் அதற்காக காரணங்களையும் போட்டி ஆல்பத்திலேயே சுருக்கமாகத் தெரிவித்திருந்தேன். அத்தோடு, ஒரு படம் தெரிவு செய்யப்பட என்னன்னவெல்லாம் கருத்திற்கொள்ளப்படும் என்ற கேள்விக்கான எனது சிறு விளக்கம் உங்களுக்குப் புரிந்திருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஞாபகமூட்ட இதோ மீண்டும் அந்தப்பட்டியல்...
  • படம் தலைப்புக்கு (மிக) பொருத்தமாகவும் விளங்கிக் கொள்ளத்தக்கதாகவும் இருத்தல் வேண்டும்
  • பார்ப்பவரை இயல்பாகவே ஈர்க்க வேண்டும்
  • விபரமாகவும் (details) தெளிவாகவும் (clarity) இருத்தல் வேண்டும்
  • அடிப்படை விதிகள் (eg: composition, rule of thirds) கருத்தில் கொள்ளப்பட வேண்டும்
  • பிரதான கருப்பொருளிலிருந்து கவனத்தை திசை திருப்பும் விடயங்கள் இருக்கக்கூடாது
  • சிறப்பாக ஒளியும் நிழலும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்
முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் யார் என்று பார்ப்பதற்கு முன், இறுதி சுற்றில் வெளியேறிய படங்களை பற்றி பார்ப்போம்.(எழுமாற்றாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன)

# Karthi (நாய்,சாலை​யோர பூக்கள்)
வர்ணங்கள் அடுக்கடுக்காகத் தெரிவது, அழகாக வீழ்ந்து கிடக்கும் பூக்கள், தெளிவு என்பன சிறப்பான விடயங்கள். ஆனால் நாய் முழுமையாக தெரியாமல் இருப்பது (வாலின் மீதி தெரியாமல் இருப்பது) பெரிய பலவீனம்.

# KVR (ஜீ​ன்ஸ், பெல்ட்)
வித்தியாசமாக ஓர் விளம்பரம் போல இருப்பது சிறப்பு. ஆனால் அதிகமான
Post Processing இடம்பிடித்திருப்பது பெரிய குறைபாடு. அதைத்தவிர இயல்பான கவனயீர்ப்பு குறைவாகவுள்ளது.

# பிரேம்நாத்​ (கடிகாரம்​)
மேலேயுள்ள படம் போன்று வித்தியாசமாக ஓர் விளம்பரம் போல இருப்பது சிறப்பு. ஆனால் அதிகமான Post Processing இடம் பிடித்திருப்பது பெரிய குறைபாடு. அதைத்தவிர இயல்பான கவனயீர்ப்பு குறைவாகவுள்ளது.

# James Vasanth (கட்டிடம்)
அழகான கட்டடத்தை அழகாகப் படம் பிடித்துள்ளீர்கள். நிழல் வீழ்ந்துள்ள கருப்பு பகுதிகள் படத்தின் அழகைக் கெடுக்கின்றன. அதைத் தவிர Post Processing படத்தை செயற்கைத் தன்மையாக்கிவிட்டது.

# Sathiya (வீதி)
அழகான படம். பிரதான கருப்பெருளாகிய வீதியைப் பார்க்கும் கண்கள் சிவப்பு வண்டியில் பதிவது தவிர்க்க முடியாதிருப்பது பலவீனம். Leading lines leads to red car. மற்றும் படத்தின் மேலேயுள்ள வானம் வெளிறித் தெரிவதைத் தவிர்த்து Crop செய்திருக்கலாம்.

# Siddhadrea​ms (இளைஞன், செருப்பு & ஜீன்ஸ்)
தெளிவு, DoF, கருப்பொருளை கையாண்டவிதம் என்பன சிறப்பு. படத்தில் ஆங்காங்கே Over Exposure இருப்பது பலவீனம். படத்தின் கீழ் பகுதி, இடப்பக்க மூலையிலுள்ள தரையின் தோற்றப்பாடும் அழகாக அமையவில்லை.

சிறப்புக் கவனம்

# Gowri (young girl)
அழகை அழகாகப் படம் பிடித்துள்ளீர்கள். ஆனால் கண்கள் மறைவாக இருப்பது குறைபாடாகவுள்ளது. மற்றும், பின்னேயுள்ள மரம் பின்னணியைச் சற்று குழப்புகிறது.




மூன்றாம் இடம்!
# Narayanan (வீதி)
'இந்த வீதியிலே வண்டியோட்டிப் போன எப்டியிருக்கும்' என்ற உணர்வை ஏற்படுத்துகிறது இந்தப்படம். வெறுமையான வீதி வளைந்து செல்வது அழகு. வெளிறிய வானம் சற்று Over Exposure ஆகி இந்தப்படத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது.

இரண்டாம் இடம்!!
#நித்தி க்ளிக்ஸ் (பெரியவர்)
அருமையான படம். வயோதிபத்தை அருமையாகக் கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால் தலையிலும் தோளிலும் உள்ள Over Exposure படத்தை 2ம் இடத்திற்கு தள்ளிவிட்டது.

முதலிடம்!!!
# Mervinanto​ ( செல்லப் பிராணி )
இந்தப்படத்தில் இருப்பது உண்மையான பூனையா அல்லது படமா என எனக்கு சந்தேகம் வந்தது. அது படமாக இருந்தாலும் எனக்கு ஆட்சேபனையில்லை. படத்தை உயிருள்ள பூனையான காட்டியிருந்தால் அது ஃபோட்டோகிராபரின் திறமையே! செல்லப் பிராணியாகிய கருப்பொருள் குவளையில் மீண்டும் பதிவாகி 'படத்திற்குள் படம் பிடித்தல்' என்ற தலைப்பிற்கு வேறு ஒரு வழியிலும் பொருத்தமாகிறது! வாழ்த்துக்கள் மேர்வின்!

இப்போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி...! வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

அடுத்த மாத போட்டிக்குத் தயாராகுங்கள்...! தொடர்ந்து பங்கு பற்றுங்கள்...!
***


12 comments:

  1. வெற்றி பெற்ற மெர்வின், நித்தி, நாராயணன் மூவருக்கும், சிறப்புக் கவனம் பெற்ற கெளரிக்கும் பாராட்டுக்கள்!

    அருமையான தேர்வு ஆன்டன். தந்திருக்கும் விளக்கங்கள் அனைவருக்கும் உதவும்.

    ReplyDelete
  2. மோர்வின் படம் உண்மையில் அட்டகாசம்...

    ReplyDelete
  3. Anton!! Thank you so much for selecting my picture & especially your comments against all the snaps. I feel previleged & inspired to click still better photographs.

    Congrats to all the other winners!!

    ReplyDelete
  4. SELECTED PHOTOS SPEAK FOT THEMSELVES.
    such professional look in the pics are amazing. my greetings to all the people who tried their luck and special congrats to those who put in a tiny little more effort.
    Thanks Anton.,Ramalakshmi.
    Vallisimhan

    ReplyDelete
  5. போட்டியில் கலந்துகொண்டு பங்களிக்க முடிந்தது குறித்து மகிழ்ச்சி மற்றும் பெருமை! அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  6. என்னுடைய படத்தை இரண்டாவதாக தேர்வு செய்த நடுவர் ஆன்றன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி!!! நண்பர் ஜேம்ஸ் வசந்த்தின் படம் முதல் மூன்றில் வரும் என்று எதிர்பார்த்தேன்..
    வெற்றி பெற்ற+சிறப்பு கவனம் பெற்ற சக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...மீண்டும் சந்திப்போம்!!!

    என்றும் அன்புடன்,
    நித்தி கிளிக்ஸ்

    ReplyDelete
  7. Congrats to the winners and all the participants

    ReplyDelete
  8. மிக்க நன்றி ஆண்டன் சார். மீண்டும் ஒரு வருடத்திற்கு பிறகு முதல் இடம். முக்கியமாக ராமலெட்சுமி மேடத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்........ஒவ்வொரு மாதமும் என்னை படம் ஏன் அனுப்பவில்லை என்று கேட்டு அனுப்ப வைத்து விடுவார்கள்..... இந்த மாதமும் அப்படிதான். மீண்டும் மீண்டும் நன்றி மேடம். பிட் இல் முதல் இடம் வருவேதென்றால் லேசு பட்ட விஷயம் இல்லை ......விடா முயற்சி வேண்டும். ஆண்டன் சார் சொன்னது போல் இது உண்மையான பூனை அல்ல. படம் தான்.LCD SCREEN MONITOR WALL PAPER. நிஜமான பூனை எங்கள் வீட்டில் இல்லை. ஆனால் நிஜமான வளர்ப்பு பிராணியை வைத்து இதை போல் நிச்சயம் படம் எடுப்பேன். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இரண்டாம் மூன்றாம் இடம் வந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்....முக்கியமாக பிட் குழுமத்திற்கு நன்றி.

    ReplyDelete
  9. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! இந்த படங்கள் தான் வெல்லும் என்று நானும் நினைத்திருந்தேன். அருமையான விளக்கங்களுக்கு நன்றி ஆண்டன்!

    ReplyDelete
  10. நன்றி அன்டன். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  11. nice explanation for each...
    congrats winners

    ReplyDelete
  12. பங்குபெற்ற / வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff