Thursday, July 28, 2011

கூல் என்கிறது ஹாட்! ஹாட் என்கிறது கூல்! - Knowing Light - காரமுந்திரி II

2 comments:
 
கூல் என்கிறது ஹாட்! ஹாட் என்கிறது கூல்!

நாம் பார்க்கிற சூரியனும் வெளிச்சம்தான்; வெல்டிங்செய்கிறபோது பார்க்கிறதும் வெளிச்சம்தான். நிலா ஒளியும் வெளிச்சம்தான்.

ஆனா போட்டோ கிராபர்களுக்கு சும்மா வெளிச்சம் ன்னு சொன்னா போதாது. இன்னும் டெக்னிகலா சொல்லனும். எங்கே வெளிச்சத்தை நம்மால கட்டுப்படுத்த முடியாதோ - திறந்த புல்வெளி, இயற்கையான அரங்கு இப்படி - அங்கே எல்லாம் இப்படி டெக்னிகலா ஒளியை ஆராய்ஞ்சாதான் போட்டோ எடுக்கலாமா இல்லை சரியான சூழ்நிலை வரும் வரை காத்திருக்கணுமான்னு முடிவு செய்யலாம்.

இதுக்கு அவங்க பயன் படுத்தற டெக் வார்த்தைகள்:

ப்ரைட்னஸ், கலர், கான்ட்ராஸ்ட்.

அதாவது ஒளி அளவு, வண்ணம், வேறுபாடு.


ளி அளவை பார்க்கலாம்.

குறைந்த பட்சமா ஓரளவாவது வெளிச்சம் இருக்கணும். இல்லையானால் போட்டோ எடுக்க முடியாது. அதிகமா இருந்தா இன்னும் நல்ல படம் எடுக்க முடியலாம். அபெர்சரை இன்னும் சின்னதா வெச்சுக்கலாம்; ஷட்டர் வேகத்தை கூட்டிக்கலாம். முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் காலத்துல ஸ்லோ பில்ம் ன்னு உண்டு. அதை பயன்படுத்த முடியும். பில்மை விடுங்க! நல்ல வெளிச்சம் இருந்தா விடியோகிராபர்கள் சின்ன அபெர்சரை பயன்படுத்தி நகர் படம் எடுக்கலாம். அப்படி எடுக்கும் போது வண்ணங்கள் இன்னும் நல்லா வரும். படமும் கூர்மையா இருக்கும். விடியோ நாய்ஸ் (சிதறல்) குறைவா இருக்கும்.

ஆனா வெளிச்சம் குறைவா இருந்தா ஒண்ணும் செய்ய முடியாது. யாராவது கலைக்கண்ணோட எடுக்கிறேண்னு எடுத்தாத்தான் குறைவான வெளிச்சத்துக்கு பயன் உண்டு.


ந்த வண்ணம் என்கிறது என்னன்னு எல்லாருக்கும் தெரியும். எந்த வண்ண வெளிச்சத்திலேயும் படம் எடுக்கலாம். அது கலை மெருகை கூட்டலாம். பலரும் எடுப்பது '' வெள்ளை'' வெளிச்சத்திலேதான். வெள்ளை வெளிச்சம் என்பதென்ன? முக்கிய வண்ணங்களான சிவப்பு, நீலம், பச்சை மூணும் போதிய அளவு இருந்துட்டா நம் மூளை அதை வெள்ளைன்னு சொல்லிடும். ஆனா எப்பவும் ஏதோ ஒரு வண்ணம் அதிகமாகவே இருக்கும். டிஜிட்டல் காமிராவும் இதே போல அட்ஜஸ்ட் பண்ணும், ஆனா அவ்வளோ சரியா செய்யாது. அதனால சீரியஸா போட்டோ எடுக்கிறவங்க என்னமாதிரி வெள்ளை வெளிச்சம் ன்னு ஆராயணும். இதுக்கு பிசிக்ஸ் வாத்தியார்கள்கிட்டேந்து கடன் வாங்கி வெப்ப அளவாகவே இதை சொல்கிறாங்க- கெல்வின்.

இதென்ன வெப்ப அளவு?

ரு பொருளை வெற்றிடத்தில வெச்சு போதிய அளவு சூடாக்கினா அது ஒளிரும். இந்த ஒளி அளவைதான் வெப்ப அளவைத்தான் பார்க்கிறோம். 10,000 டிகிரி கெல்வின்ல - அதிக வெப்பத்தில நீல வண்ணம் அதிகமா இருக்கும். போட்டோகிராபர்கள் இதை கூல் என்கிறாங்க! 2,000 டிகிரி கெல்வின்ல - குறைந்த வெப்பத்தில சிவப்பு வண்ணம் அதிகமா இருக்கும். இதை வார்ம் என்கிறாங்க!

உண்மையில் இது புரிஞ்சுக்ககூடியதுதான். வெல்டர்களுக்கு தெரியும். அவங்க வெல்ட் பண்னும்போது நீல நிற வெல்டிங் ஜ்வாலை சிவப்பா இருக்கிற இரும்பைவிட சூடானது.

நம்ம சமையலறையில நீல நிற காஸ் ஸ்டவ் மெலே சுக்கா ரொட்டி செய்ய/ அப்பளம் சுட போடுகிற வலை சிவப்பா ஆனாலும் நீல காஸ் அதிக வெப்பம் உடையதுதானே?

# படங்கள்1,2,3: ராமலக்ஷ்மி



தப்புன்னு தோணினாலும், கூட்டிக்கழிச்சு பார்க்க சிவப்பு அதிகம் இருக்கிற படம் வார்ம். நீலம் அதிகம் இருக்கிற படம் கூல்! அப்படித்தான் மனசு பழகி இருக்கு!

5,500 K என்கிறது பகல் வெளிச்சம் - டே லைட். இது தவிர இன்னும் ரெண்டு ஸ்டான்டர்ட் இருக்கு . டங்க்ஸ்டன் 3200 K, 3400 K . இது ரெண்டும் கிட்ட கிட்ட இருக்கறதால் பெரிய வித்தியாசம் இல்லை. இந்த அளவெல்லாம் பில்ம் பயன்படுத்தினா கலர் பாலன்ஸ் பண்ண பில்ம் ஆ வாங்க பயன்பட்டது.

இப்ப டிஜிட்டல் படங்களை போஸ்ட் ப்ராசஸிங் ல இதை எல்லாம் கண்ட படிக்கு மாத்தமுடியுது! அதனால இந்த 5.500 க்கு மேல் வெப்பமோ 3,200 க்கு கீழ் வெப்பமோ உள்ள எந்த சூழ்நிலையிலும் படம் எடுக்க முடியுது.


உச்சிவெயிலில் எடுக்கப்பட்ட இப்படங்கள் அத்தனையிலும் கூல் கூல் நீலம் விளையாடுவதைக் காணலாம்.

# படம் 4: ஜேம்ஸ் வஸந்த்

(இன்னும் தெரிந்து கொள்வோம்)

பாகம் I இங்கே.

-திவா
‘சித்திரம் பேசுதடி’
http://chitirampesuthati.blogspot.com/

2 comments:

  1. பொருத்தமான படங்களுக்கு நன்றி ரா.ல!

    ReplyDelete
  2. Veku azhakakavum ,vilangumpadiakavum nangu ezhluthukireerkal.pala nunukkangal therindhukollavum purindhukollavum edhuvakiradhu.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff