வணக்கம் நண்பர்களே....
நீண்ட இடைவெளிக்கு பிறகு `புகைப்படங்களில் நேர்த்தி` என்கிற புதிய தலைப்பின் வழியாக உங்களை சந்திப்பதில், பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்...
இன்றைக்கு கிட்டதட்ட அனைவரிடத்திலும் ஏதோ ஒரு வடிவில் கேமரா என்பது நம்மிடம் இருப்பது உறுதி..
ஒரு சிலர் , முதன் முதலில் வாங்குகின்றோம் , நல்லதாக வாங்கிவிடலாம் என்று தனக்கு சம்பந்தமில்லாத , தேவையில்லாத விலை அதிகமான கேமராக்களை ஆர்வத்தில் வாங்கிவிடுவார்கள்..ஆனால் அவர்களுக்கு நன்றாக படம் எடுக்க தெரியாது...
சரி நமக்கு அவ்வளவு தான் தெரியும் என்று படம் எடுக்க விருப்பப்படமாட்டார்கள்.. அவ்வளவு தான், கேமரா சும்மா வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும்..
அதே சமயம் விலை குறைவான கேமராக்களை வைத்திருப்பவர்கள், தான் தவறாக எடுத்த படங்களை பார்த்து, இந்த கேமராவில் இவ்வளவு தான் எடுக்க முடியும் என்று தாழ்வு மனப்பான்மையுடன் மேலும் படம் எடுக்க ஆர்வம் காட்ட மாட்டார்கள்...
ஆனால் நல்ல படம் என்பது கண்டிப்பாக விலை அதிகமான கேமராவை வாங்குவதில் மட்டும் இல்லை என்பதை கீழே உள்ள படங்களை பார்த்தால் புரியும்..
இந்த படங்கள் 9000 ரூபாய் சிறிய கேமராவில் தான் எடுத்தது...
எனவே நல்ல படம் என்பது கேமராவில் மட்டுமல்ல ,எடுப்பவரின் கையிலும் உள்ளது..
2 லட்ச ரூபாய் கேமராவில் கொஞ்சம் தவறாக எடுக்கும் படத்தை விட 2 ஆயிரம் ரூபாய் கேமராவில் சரியாக எடுக்கப்படும் படம் சிறந்ததாக தான் இருக்கும்.. இதற்கு உதாரணங்கள் கீழே உள்ள படங்கள்.
இந்த படம் -1 40000 ரூபாய் கேமரா மற்றும் 40000 ரூபாய் லென்ஸில் எடுக்கப்பட்டது... இந்த படம் சற்று blur ஆக எடுக்கபட்டுள்ளதை இந்த சிறுவனின் முகத்தில் தெரியும்.. படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்க்கவும்..
(படம்-1)
ஆனால் அதே சிறுவன்,அதே இடத்தில், அதே நேரத்தில் 9000 ரூபாய் சிறிய கேமராவில் சரியாக(என்னால் முடிந்த அளவு) எடுக்கப்பட்டுள்ளதை இந்த படத்தை(படம்-2) பார்த்தால் புரியும்
(படம்-2)
ஒரு சில நேரங்களில் சின்ன sensor கேமராக்கள் தரும் சில சிறப்பம்சங்கள் (அதிக depth of field, macro close focusing etc.) பெரிய கேமராவில் கிடைக்காது என்பதை கீழே உள்ள படங்களை பார்த்தால் புரியும்...
இந்த படம் (படம்-3) 9000 ரூபாய் சிறிய கேமராவில் எடுத்தது.. இந்த தும்பியின் உடல் முழுவதும் டீடெய்ல்ஸ் இருக்கும்... இதன் காரணம் சிறிய கேமராவில் இருக்கும் அதிக depth of field ஆகும்.. இதை பற்றி பின் வரும் தொடர்களில் பார்க்கலாம்..
(படம் - 3 )
இந்த (படம் -4) 40,000 ரூபாய் கேமரா மற்றும் 40,000 ரூபாய் லென்ஸில் எடுக்கப்பட்டது... இவ்வளவு விலை இருந்தாலும் தும்பி பூச்சியின் தலையில் மட்டும் தான் டீடெயில்ஸ் இருக்கின்றது...
(படம் - 4)
அதற்காக பெரிய கேமராக்கள் தேவையில்லை என்று அர்த்தமில்லை.. நாம் நன்றாக எடுத்தால் சிறிய கேமராக்களும் நன்றாக படம் எடுக்கும்...
புதிதாக கேமரா வாங்குபவர்கள் கேமராவில் மலை போல் இருக்கும் settings ஐ பார்த்து பயந்து போய் இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது என்று சிம்பிளாக auto mode ல் போட்டு படமெத்துக்கொண்டு திருப்திப்பட்டுக்கொள்வார்கள்..
ஒரு சிலர் பெரிய zoom கேமரா/ லென்ஸ் வைத்துக்கொண்டு zoom பட்டனைக்கூட சரியாக பயன்படுத்தாமல் wide angleலேயே படமெடுப்பார்கள்.. இதனால் அந்த மாதிரி கேமராக்களை வாங்குதில் அர்த்தமில்லாமல் போய் விடுகின்றது..
இந்த மாதிரி எல்லாம் தவறுதலாக படம் எடுக்கும் போது நாம் புதுமையாக படம் எடுக்கவோ, கற்றுக்கொள்ளவோ வழியில்லை என்று சொல்லலாம்..
இப்படி பல குறைகள் தீர இத்தொடர் உதவும் என்று நம்புகின்றேன்..
ஒரு நல்ல படம் அமைய வேண்டுமென்றால், முக்கியமாக கவனிக்கவேண்டியது என்று மூன்று விதமாக பிரித்துக்கொள்ளலாம்..
1. படம் எடுப்பதற்கு முன்
கேமராவை எப்படி செட்டிங்ஸ் செய்வது , அதாவது exposure , ISO , white balance , aperture , shutter speed zoom எப்படி பயன்படுத்துவது,கேமராவை எப்படி கையாள்வது என்பதை பற்றி பார்க்கலாம்..
2. படம் எடுக்கும் போது
சரியாக ஃபோகஸ் செய்வது எப்படி , back ground எப்படி , focal length பயன்படுத்துவது , blur இல்லாமல் எடுப்பது, கம்போஸிசன் போன்றவற்றை பற்றி பார்க்கலாம்..
3. படம் எடுத்த பின்
இன்றைய டிஜிட்டல் கேமரா உலகில் படம் எடுக்கும் போது எவ்வளவு முக்கியமாக கவனிக்க வேண்டுமோ ,அதே அளவுக்கு post processing(குறைந்தபட்சம்) என்பதும் முக்கியமே..
இதில் முக்கியமான எளிதான cropping , contrast , sharpening ஆகியவற்றின் முக்கியதுவம் பற்றியது..
முதலில், படம் எடுப்பதற்கு முன் கவனிக்கவேண்டியதை அடுத்து பகுதியில் இருந்து பார்ப்போம்...
-கருவாயன்

ஆவலாக எதிர்பார்க்கிறேன் அடுத்த பாகங்களை.
ReplyDeleteநானும்.... ஆவலாக எதிர்பார்க்கிறேன் அடுத்த பாகங்களை....:)
ReplyDeleteநேர்த்தியாக நிறைய படித்துக்கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஎன்ன இது என் பக்கத்தில இருந்து பார்த்து எழுதினது மாதிரி இருக்கு..(முதல் பகுதி) :)
ReplyDeleteஆவலாக எதிர்பார்க்கிறேன் அடுத்த பாகங்களை.
ரகு
ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் அடுத்த பாகத்திற்காக
ReplyDeleteநம்மள் போல டப்பா கெமரா வச்சிருக்குரவங்க மனசுல பால வார்த்துடீங்க.. அடுத்த பதிவை எதிர் பார்க்கிறேன்.
ReplyDeleteஅருமையான தொடர்....தொடருங்கள் கருவாயன் சார்...பின்தொடருகிறோம்...
ReplyDeleteவிரைவில் உங்கள் அடுத்த பாகம் வருமென எதிர்பார்க்கிறொம் !!
ReplyDeleteஆறுமுகம்
சூப்பர் தல... அருமையான பதிவு .... நானும் சிறிய கேமரா -வில் எடுத்த படங்கள் இப்பொழுது வைத்திருக்கும் DSLR கேமரா - வினால் எடுக்க முடிவதில்லை ... DSLR ல் உள்ள முழுமையான பயன்பாடு மற்றும் settings - லின் புரிதல் இல்லாமையே இதற்க்கு காரணம் என்று நினைக்கிறேன்.. அடுத்த பதிவுகளை ஆர்வமுடன் எதிர் பார்க்கிறேன் .. மிக்க நன்றி ....
ReplyDeleteபுகைப்படம் எடுத்தல் இப்போது வரை அவரது ரசிகர்களுக்கு தெரிய வருகிறது, இது ரஜினி ஆழ்ந்த நலன்களை ஒன்று உள்ளது. கண்கவர் காட்சிகளின் சில பாருங்கள் அவர் எடுத்திருப்பார்கள்
ReplyDeletehttp://bit.ly/n9GwsR
Nice things to start with..keep going Suresh
ReplyDeletevery nice. thoughtful subject.
ReplyDeleteI like this.. plz keep posting.
ReplyDeleteazhagu...
ReplyDeleteVery useful for new photographers
ReplyDeletenice Ple keep Posting
ReplyDeleteமதிப்பிற்கு உரிய சேர் அவர்களுக்கு நீங்கள் சொல்லியதுபோல் எனக்கும் புகைப்படக் கலையில் மிகவும் ஆர்வம் இருக்கின்றது ஆனால் இதுவரை என்னால் ஒரு கேமரா வாங்க முடியவில்லை தற்போது மிகவும் கஸ்டப்பட்டு விலைஉயர்ந்த கேமரா வாங்கிவிட்டேன் ஆனால் அதில் இருக்கும் செட்டிங்ஸ் அனைத்தையும் பார்த்தால் தலை சுற்றுகின்றது 600D cannon என்னுடைய கேமரா மொடல் உங்கள் தளத்தினை தொடர்ந்தும் வாசித்து வருகின்றேன் தற்போது நான் எதிர்ப்பார்த்தது போல் DRSL பற்றி ஆரம்பித்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சேர் சில பல சந்தேகங்கள் இருக்கின்றன உங்களுடன் தொடர்பு கொள்வதற்கு மெயில் அல்லது போன் நம்பர் கிடைக்குமா?தயவு செய்து பதில் அனுப்பவும் ஏனெனில் தற்போது நான் சவுதி அரபியாவில் வசிக்கிறேன் அதனால் யாரிடமும் உதவிகேட்பது கடினமாக உள்ளது தயவு செய்து பதில் அனுப்புங்கள் my mail ID kk38274Gmail.com
ReplyDeleteநல்ல தகவல்........மிக்க நன்றி..
ReplyDeleteநல்ல தகவல்கள். தொடரட்டும் உங்கள் சேவை...
ReplyDeleteஅருமை இனி பட்டைய கிளபபுங்கள்
ReplyDeleteஎனக்குன்னு பதிவிட்ட மாதிரி இருக்கு.என் சந்தேகங்கள் தெளிவாகி வருகிறது.தொடர்ந்து பதிவிடுங்கள்.நன்றி.
ReplyDelete//தனக்கு சம்பந்தமில்லாத , தேவையில்லாத விலை அதிகமான கேமராக்களை ஆர்வத்தில் வாங்கிவிடுவார்கள்..ஆனால் அவர்களுக்கு நன்றாக படம் எடுக்க தெரியாது...//
ReplyDeleteஆமா .. ஆமா ..
Aperture endraal enna ?
ReplyDelete@vijai.. அடுத்த பதிவில் aperture ஐ பற்றி விரிவாக வரும்..
ReplyDelete-கருவாயன்
அழைப்பிதழ்:
ReplyDeleteஉங்களது இந்த இடுகையை இன்றைய வலைச்சரத்தில் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து உள்ளேன்.
மனோரஞ்சிதம் - புகைப்படச் சரம்
http://www.blogintamil.blogspot.in/2012/04/blog-post_06.html
வருகை புரிந்து உங்கள் கருத்துகளைச் சொல்ல அன்புடன் அழைக்கிறேன்.
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
ரொம்ப சூப்ப்ர
ReplyDeleteஉங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்கிறேன்
ReplyDeleteஅருமையான தொகுப்பு... நன்றி...

ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDelete