இன்றைய தொழில்நுட்பத்தில் புகைபடக்கலைஞர்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக இருப்பது எந்த format டில் படம்பிடிப்பது என்பதுதான். ஒருபுறம் தொழில்ரீதியாக புகைப்படமெடுப்பவர்கள் சட்டென்று RAW தான்னு ஒரேயடியாக சொல்லிவிடுவார்கள். மறுபுறம் நம்மைப் போன்றவர்கள் பொழுது போக்குக்காகவும் அதே நேரத்தில் புகைபடக்கலையை பற்றி முழுவதும் அறிந்து கொள்ள துடிப்பவர்களுக்கு RAW-வா JPG-கான்னு கேட்கும் போது சிலர் சட்டென்று JPG-தான்னு நெத்திப்பொட்டில் அடித்தமாதிரி சொல்லிவிடுவார்கள். காரணம் RAWவில் படமெடுப்பதால் என்ன நன்மை என்ன தீமை என்று அறியாத அவர்களுக்கு JPG என்பது user friendly மாதிரி தான். சரி அப்படி JPGக்கும் RAW க்கும் என்னங்க வித்தியாசம்ன்னு இந்த பதிவுல ஏதோ என்னுடைய அனுபவத்தில நான் கற்றுக்கொண்டதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
நான் கேமரா வாங்கிய கையோடு PIT குழுவைச் சேர்ந்த திரு.கருவாயன் சார் அவர்கள் எனக்கு அறிவுறுத்தியது RAW Format தான். RAW வின் பயன்பாடுகளை ஏற்கனவே அறிந்திருந்ததால் நானும் RAW வில் எடுப்பதையே விரும்பினேன்.
என்னுடைய கேமரா (Panasonic FZ-38)வில் ஒரே ஷாட்டை JPG மற்றும் RAW வில் எடுக்கும் வசதி இருக்கின்றது. பெரும்பாலான Prosumer+DSLR கேமராக்களில் இது சாத்தியமே. அவ்வாறு எடுப்பதால் எனக்கு RAW வை நான் Post Processingக்கும் JPG ஐ என்னுடைய thumbnail மற்றும் Reference கோப்பாகவே என்னுடைய கணினியில் வைத்துக்கொள்வேன். சரி கட்டுரைக்கு வருவோம்.
RAW-வில் படமெடுப்பது என்பது நாம் கடைக்கு சென்று Fresh ஆகக் காய்கறி வங்கியதற்கு சமம். அதாவது வாங்கிய காய்கறியை நீங்களே நறுக்கி அதனை குழம்போ பொரியலோ கூட்டோ என உங்களின் விருப்பத்திற்க்கு சமைத்து ருசிக்கலாம். என்னடா இவன் சம்மந்தமே இல்லாமல் பேசுகிறான்னு நீங்க நினைக்கலாம். ஆனால் இதான் உண்மை !
JPG யில படமெடுப்பது என்பது கடையில் Readymade Pizza வாங்கி Microwave Oven னில் சூடு செய்து சாப்பிடுவதற்கு சமம். ஏனென்றால், ஒரு கேமராவில் JPG யில் படமெடுக்கும் போது படத்திற்கு தேவையான Sharpness, Saturation,Contrast போன்ற அவசிய செட்டிங்குகளை உங்களது கேமராவே உங்களுக்காக உருவாக்கிக்கொடுத்துவிடும். இதில் பெரியதாக Post Processing ஒன்றும் செய்யவேண்டியதில்லை. மேலும் எடுத்த படத்தை அப்படியே உங்களது பிரிண்டரிலோ அல்லது ஸ்டுடியோவிலோ கொடுத்து பிரிண்ட் போட்டுக்கொள்ளலாம். இது JPG யில் இருக்கிற ஒரு நல்ல விஷயம்.
ஆனால் JPG என்று வரும் போது புகைப்படகலைஞர்களுக்கு எங்கு இடிக்கிறது என்று பார்த்தால், நீங்கள் உங்களது கேமராவில் மேனுவலாக செட் செய்து படமெடுப்பவராக இருப்பின் நீங்கள் உங்களது செட்டிங்கில் எங்கேயாவது தவறு செய்துவிட்டால் உங்கள் கேமரா JPG format ல உங்கள கைவிட்டும்ங்க.., உங்களால் இந்த தவறை "recover" செய்ய இயலாது. குறிப்பாக Exposure, White Balance போன்றவிஷயங்களை மேனுவலாக செட்செய்யரவங்க இந்த செட்டிங்ஸில் கோட்டை விட்டா உங்க கேமரா JPG formatல உங்கள கைவிட்டுவிடும் என்பதை மறக்காதீர்கள். இது JPG யில இருக்கிற குறைபாடு தானே? மேலும் Post Processing முடித்து JPG யாக கோப்பு எழுதப்படும் போது அங்குCompression னும் நடக்கிறது. ஆக படத்தின் தரமும் compress செய்யப்படுகிறது என்பதும் ஒரு குறையே.
ஆனால் RAW பார்மேட்டில் என்ன நடக்கிறது என்றால் அங்கு Post Processing நடப்பது கிடையாது. உங்களது lens எதை focus செய்கிறதோ அதை அப்படியே உங்களது கேமரா உள்வாங்கிக்கொள்ளும். இங்கு Post Processing என்பது இன்னும் நடக்கவில்லை. ஆகவே படத்தின் தரம் அப்படியே இருக்கிறது. இதனை நல்ல விஷயமாக எடுத்துக்கொண்டாலும் உங்களது மெமரி கார்டில் JPG ஐ காட்டிலும் 10 மடங்கு இடம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் என்பதை ஒரு குறையாக சொல்லலாம். என்னுடைய Panasonic fz-38 ல் JPG யில் எடுக்கும் படங்கள் 4 mb அளவுள்ளதாகவும் RAW வில் எடுக்கப்படும் படங்கள் 14 mb இடத்தையும் பிடிக்கும். எனினும் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மெமரிகார்டுகளின் விலைகள் நியாயமான விலைக்கே கிடைப்பதால் இதனை நாம் பெரிய குறையாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை.
ஆனால் RAW இல் எடுத்த புகைப்படங்களை Post Processing செய்து பின்னர் JPGயில் மாற்றப்பட்டால் மட்டுமே உங்களால் பிரிண்ட் செய்ய இயலும் என்பது ஒரு குறையே, உங்களது கணினியில் நீங்கள் கண்டிப்பாக RAW Editor Tool ஐ கண்டிப்பாக வைத்திருக்கவேண்டிய கட்டாயம் "RAW" ஏற்படுத்துகிறது. பொதுவாக உங்களது கேமரா, RAW Format ல் படமெடுக்கும் தன்மை வாய்ந்திருந்தால் அதற்கான மென்பொருளையும் கேமரா தயாரிப்பாளர்கள் இலவசமாகவே அளித்திருப்பார்கள். உதாரணமாக என்னுடைய Panasonic fz-38 க்கு Silkypix என்ற RAW எடிட்டரை கொடுத்தார்கள். இது தவிர சந்தையில் கிடைக்கும் மென்பொருட்களை பயன்படுத்தலாம் என்றால் அவற்றின் விலைகள் மிக மிக அதிகம் (Adobe Photoshop,Photoshop Elements,Lightroom,I-Photo, Apple Aperture,Nikon Capture) என்பதாலும் சாதாரண பயனாளர்கள் "RAW" வில் படமெடுக்க தயங்குகிறார்கள். இருப்பினும் UFRaw,Raw Therapee போன்ற இலவச எடிட்டர்களும் இருக்கின்றன.
RAW vs JPG ஒரு சிறிய comparison செய்யலாம். கீழே இருக்கும் படம் நான் கிளிக் செய்தது. ஒரே படத்தை RAW+JPG யில் எடுத்தேன். JPGயில் எனக்கு என்னுடைய படத்தை அப்படியே பிரிண்ட் செய்துகொள்ளும் அளவிறக்கு என்னுடைய கேமராவே Post Processing செய்து கொடுத்துவிட்டது. காரணம் நான் மேனுவலாக எந்த செட்டிங்குகளையும் மாற்றவில்லை.
ஆனால் படத்தின் Sharpness ஐ பொருத்தவரை எனக்கு இந்த அளவிற்க்கு Sharpness தேவையில்லை என்பதை நான் முடிவு செய்ய இயலாது காரணம் என்னுடைய கேமரா ஏற்கனவே தானாகவே முடிவு செய்துவிட்டது. இந்த Sharpness ஐ என்னால் எந்த நிலையிலும் குறைக்க இயலாது இது JPGயில் பார்மேட்டில் இருக்கும் குறைபாடு.
RAW முறையில் எடுக்கப்பட்ட படத்தை பாருங்கள்.படமானது JPG படத்தோடு ஒப்பிடும்போது தரம் குறைந்தே காணப்படுகிறது காரணம் இங்கு எந்த Post Processing ம் நடக்கவில்லை எனவே படத்தின் Sharpness, saturation,Details போன்ற அனைத்தும் controls ம் என் கையில் இருக்கின்றது என்பது RAW Formatடின் சிறப்பு.
மேலும் JPG கோப்பானது அளவில் மிகச்சிறியது (8-bits per color,12-bits per
Location) ஆனால் RAW கோப்பானது அளவில் மிகப்பெரியது(8 bits per color 36-its per location).மேலும் கனினியில் இதனை பார்ப்பதற்க்கே (Explorer view) மென்பொருள் தேவை.
(எனினும் Google Picasa போன்ற இலவச மென்பொருளே RAW Formatடை ஆதரிக்கிறது). மேலும் JPG யில் உங்களது கேமராவானது மிக விரைவாக ஷூட் செய்துவிடும் ஆனால் RAW Formatடில் படம் ஷூட் செய்ய நேரம் அதிகமாக பிடிக்கும். இதனால் அடுத்தடுத்து படங்களை விரைவாக பிடிக்க வேண்டுமென்றால் கொஞ்சம் சிரமம் தான். எனவே நம்மைபோன்றவர்கள் User Freindly அல்லாத இந்த RAWவில் ஷூட் செய்ய தயங்குகிறோம்.
அடுத்ததாக ஒரு சிறிய செய்முறை விளக்கத்திற்க்கு வருவோம். கீழேயுள்ள படத்தை நான் மேனுவல் மோடில் எடுத்தேன். கேமராவில் White balance மோடை Tungstenனில் வைத்திருந்தேன். ஆனால் இதனை கவனிக்காமல் படத்தையும் ஷூட் செய்துவிட்டேன். என்ன ஆயிற்று படமானது நீல நிறம் தோய்ந்து காணப்படுகிறது.
இங்கு JPG யில் நான் மேனுவலாக செட் செய்த செட்டிங்கை வைத்து என்னுடைய கேமரா எனக்கு படம் எடுத்து கொடுத்து விட்டது. ஆனால் படத்தின் தரம் அந்த அளவிற்கு இல்லை. இதே படத்தை நான் RAW Format-டிலும் எடுத்திருக்கிறேன். இதனை RAW எடிட்டரில் திறக்கும்போது என்னுடைய கேமராவில் இருப்பது போலவே White Balance preset எனக்கு இந்த RAW எடிட்டரிலும் இருக்கிறது..
எனக்கு எந்த preset வேண்டுமோ அதனை நான் தேர்வு செய்ததும் படம் சரியாகிவிட்டது (இங்கு நான் Auto வை தேர்வு செய்தேன்).
RAW எடிட்டரில் சரிசெய்யப்பட்ட படத்தை பாருங்கள் தவறான மேனுவல் செட்டிங் செய்திருந்தும் படத்தை திருத்திக்கொண்டுவிட்டோம்.
ஆனால் JPG படத்தை நான் இதே எடிட்டரில் திறக்கும்போது எனக்கு கிடைக்கும் whiteBalance preset பாருங்கள் எனக்கு As shot, Auto,Custom மட்டுமே கிடைக்கிறது.
அவ்வாறாக Auto வில் correct செய்த என்னுடைய JPG படத்தை பாருங்கள் நான் எதிர் பார்த்த அளவு எனக்கு result கிடைக்கவில்லை. என்னுடைய தவறான மேனுவல் செட்டிங்கால் என்னை JPG Format கைவிட்டது.
இதேபோல தவறான Manual exposure ல் பாதிக்கப்பட்ட RAW படங்களை RAW Editor ரின் துணைக்கொண்டு சரி செய்துவிடலாம். கீழே இருக்கும் படமானது Under Exposure இல் எடுக்கப்பட்ட படம் என்னுடைய மேனுவல் செட்டிங்ஸை வைத்து எனக்கு என்னுடைய கேமரா JPGயில் உருவாக்கி தந்து விட்டது.
RAW வில் எடுக்கப்பட்ட படத்தை பாருங்கள் :
இங்கு இன்னும் Post Processing நடக்கவில்லை RAW எடிட்டரின் உதவியால் Exposure சரிசெய்யப்பட்ட படத்தை பாருங்கள்:
இதனால் நான் RAW Format டில் படமெடுப்பது தான் சிறந்தது என வாதிடவில்லை இரண்டு Formatடிலும் இருக்கும் நிறை குறைகளை ஏதோ எனக்கு தெரிந்ததை உங்களோடு பகிர்ந்துகொண்டேன். எந்த Format-டில் படமெடுப்பது என்பது அவரவரது விருப்பமே!!
Lesson By ‘Nithi Clicks’http://www.flickr.com/photos/nithiclicks/

அருமையான விளக்கங்கள். சிரமங்கள் சில இருப்பினும் முயன்று பார்க்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு. நன்றி ஆனந்த்!
ReplyDeleteஅருமையான பதிவு நித்தி. RAW-என்றாலே காத தூரம்
ReplyDeleteஓடும் எனக்கே இதை முயற்சி செய்து பார்த்தால் என்ன
என்று யோசிக்க வைத்து விட்டீர்கள்.. நன்றி
பயனுள்ள விளக்கங்கள்..!!
ReplyDeleteஅருமையான விளக்கம். நன்றி
ReplyDeleteNice sharing ..
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteதொடர்ந்து படிக்கிறேன்.
முயற்சி செய்து பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்.
மிக முக்கியமான பதிவு, RAW Format பார்த்து யாரும் பயப்படத் தேவை இல்லை. பெரும்பாலான DSLR காமிராக்களில் "RAW+JPG" சேர்த்து எடுக்கும் வசதி உள்ளது. பின் நாளில் போஸ்ட் பிராசசிங் தேவைப்பட்டால் RAW உதவியாக இருக்கும்.
ReplyDeleteMikka nandri... Naanum Inimael RAW format -il muyarchi seithu paarkiraen... :)
ReplyDeleteSuper post friend
ReplyDeleteமுனி-2 காஞ்சனா திரை விமர்சனம்
//
ReplyDeleteஅருமையான பதிவு நித்தி. RAW-என்றாலே காத தூரம்
ஓடும் எனக்கே இதை முயற்சி செய்து பார்த்தால் என்ன
என்று யோசிக்க வைத்து விட்டீர்கள்.. நன்றி//
நானும் இதையே தான் எழுத வந்தேன் :-)
ஃப்ளிக்கர்-ல உங்க போஸ்ட் பார்த்தப்பவே கேமெராவில் செட்டிங்ஸ் மாத்தியாச்சு...இப்ப RAW+JPG தான் :-)
பார்ப்பதற்கே நல்ல difference தெரியுது இரண்டிற்க்கும்...மிக்க நன்றி :-))
கருத்துரையிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி!!
ReplyDeleteExcellent write-up in a elementary level..இன்னும் நாங்க உங்ககிட்ட இருந்து நெறைய எதிர் பார்க்குறோம்..
ReplyDeleteThanks
ReplyDeleteThanks...
ReplyDeleteஅருமையான கட்டுரை
ReplyDeleteஅருமையான விளக்கம் ,படத்துடன் அளித்தது நல்லது.
ReplyDeleteநன்றி அருமையான விளக்கம்
ReplyDelete