புகைப்படகலை ஆசான் ‘எண்ணங்கள் இனியவை’ ஜீவ்ஸ்[www.flickr.com/photos/iyappan] அண்மையில் ஒரு மென் புத்தகம் கொடுத்து படிக்கச்சொன்னார். அது பற்றி நேற்று பேசிக்கொண்டு இருக்கும்போது படிக்கும் போது கிடைக்கும் சில தகவல்களை பகிர்ந்து கொள்ளச் சொன்னார். ஆகவே இதோ: கார முந்திரி. அப்பப்ப போக வர கொறிக்கலாம்!
கார முந்திரி - 1
நம்மால் ஊதா முதல் சிவப்பு வரை பல வண்ணங்களை பார்க்க முடிகிறது. ஆனால் புற ஊதா கதிர்களுக்கு அப்பாற்பட்ட கதிர்களையும் அகச்சிவப்பு கதிர்களுக்கு தாழ்ந்த கதிர்களையும் காண முடிவதில்லை.
இது தெரிந்ததுதானே? அதனால் என்ன? புகைப்படத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
என்ன சம்பந்தம் என்றால், நம்மால் பார்க்க முடியவில்லையே தவிர காமிராவால் பார்க்க முடியும். இது படத்தையும் பாதிக்கும். ஆகவே ஒரு இடத்தில் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் வீச்சின் நம் பார்வைக்கு அப்பாற்பட்ட கதிர்கள் நாம் எடுக்கும் புகைப்படத்தை பாதிக்கலாம்.
இதை படித்த போது ஆச்சரியமாக இருந்தது. நேற்று இரவு படுக்கச்செல்லும்போதுதான் இது குறித்து பதிவு ஒன்று நானே போட்டிருப்பது நினைவுக்கு வந்தது.
இதை நாம் சோதித்து பார்த்துவிடலாம்.
ஒரு டிவி/டிவிடி ப்லேயர்/ ஏசி ரிமோட் கண்ட்ரோல் எடுத்துக்கொள்ளுங்கள். இவை மின் சாதனங்களுடன் அகச்சிவப்பு கதிரால் தொடர்ப்பு கொள்வது நமக்குத்தெரியும். மின் சாதனம் வேலை செய்யவில்லை என்றால் அது ரிமோட் இன் மின்கலம் உயிர்ப்புடன் இல்லாத காரணமா வேறு ஏதாவதா? இதை தெரிந்துகொள்ள உங்கள் டிஜிட்டல் காமிராவை எடுத்துக்கொள்ளுங்கள். ரிமோட்டை நம் பக்கமாக திருப்பி இயக்குங்கள். அதன் முன் பக்கம் ஒன்றும் தெரியவில்லைதானே? இப்போது டிஜிட்டல் காமிராவால் அதை பார்த்துக்கொண்டு இயக்குங்கள். ரிமோட்டில் மின் சக்தி இருந்து சரியாக அது வேலை செய்தால் அதன் முன் பக்கம் ஒரு வெளிச்சத்தை பார்க்க முடியும்.
இந்த சோதனையின் படங்களை இங்கே பாருங்கள்.
அதாவது நம் கண்ணுக்குத்தெரியாத கதிர்களை காமிராவால் பார்க்க முடியும். அது பதிவும் ஆகும்:
#படம்: ராமலக்ஷ்மி
#படம்: வல்லிசிம்ஹன்
(இன்னும் தெரிந்து கொள்வோம்)
-திவா
‘சித்திரம் பேசுதடி’
http://chitirampesuthati.blogspot.com/

தகவல்கள் சுவாரஸ்யம்! அருமை திவா சார். தொடருங்கள்.
ReplyDeleteஅருமையான விவரங்கள். நன்றி திவா சார். தொடருங்கள் காத்திருக்கிறோம்!
ReplyDeleteமொபைல் கேமிரா வழியாக ரிமோட்டைப் பார்த்து கொண்டு இயக்கினாலும் வெளிச்சத்தைப் பார்க்க முடியும்.
ReplyDelete# மதுரை டவுண்ஹால் ரோடு ரிமோட் கடையில் பார்த்து தெரிந்து கொண்ட விசயம்.
அருமையான தகவல் படங்களும் அருமை...காத்திருக்கிறோம்.. பின்தொடர
ReplyDeleteThanks
ReplyDelete