இம்மாத போட்டித் தலைப்பு: 'படத்திற்குள் படம் பிடித்தல்'
எப்படீன்னு யோசிக்கிறீங்களா? ரொம்ப சிம்பிள்! ஆத்துக்குள்ள கடலுக்குள்ள மீன் பிடிக்கிற மாதிரியொண்ணும் பெரிய கஷ்டமில்ல. ஃபிஷ் டாங்குக்குள்ள மீன் பிடிக்கிற மாதிரி சாதாரண விசயம். ஆனா, அசாதாரணமாக மீனப் பிடிக்கணும். சீச்சீ... அதாவது படம் பிடிக்கணுமுன்னு சொல்ல வர்றன்.
என்ன, பொடி வச்சு பேசுறனாக்கும்? ஓகே. விசயத்துக்கே வாறன்.
இந்தப் படத்தப் பாருங்க. அதுல என்னவெல்லாம் உங்களுக்குத் தெரியுது?
# மாதிரிப் படம் - ராமலக்ஷ்மி
எனக்கு நாய், பெல்ட், வயசான தாத்தா, சோளம், பலூன், விற்பனையாளரு, கட்டிடம், இளம் யுவதி, சுறுசுறுப்பான இளைஞர்கள், மரங்கள்..... இப்படியே நிறைய அயிட்டமெல்லாம் தெரியுது. இப்படி இந்த படத்துக்குள்ள இருக்கிற ஏதாவது ஒரு விஷயம் நீங்க போட்டிக்கு அனுப்புற படத்துல இருக்கோணும்.
உத்துப் பார்த்தா நம்மாளுங்க படம் பிடிக்க நிறையவே விஷயங்கள் இருக்கு. அப்போ நீங்க என்ன படம் அனுப்புவிங்கன்னு PiT குழுவுல உள்ளவங்களைக் கேட்டா Naufal காட்டின படம் இந்த இளம் யுவதி.
உத்துப் பார்த்தா நம்மாளுங்க படம் பிடிக்க நிறையவே விஷயங்கள் இருக்கு. அப்போ நீங்க என்ன படம் அனுப்புவிங்கன்னு PiT குழுவுல உள்ளவங்களைக் கேட்டா Naufal காட்டின படம் இந்த இளம் யுவதி.
#1: இளம் யுவதி - Naufal
ஏன்னா? பிரதான படத்துக்குள்ள இளம் யுவதி இருக்காங்கல்ல? இதுதான் 'படத்திற்குள் படம் பிடித்தல்'.
நான் சில மாதிரிகள் கிடைக்குமான்னு கேட்டன். அதுக்கு கிடைச்சசுதான் இங்கே வரிசையாக.....
#2: இளைஞன் - ஜீவ்ஸ்
#3: வீதி - An&
#4: பாதணிகள் - சர்வேசன்
#5: நடந்து செல்லும் வயோதிபர் - கருவாயன்
தவறான உதாரணம் முழிச்சுப் பாக்குற இந்த சிலந்திப்பூச்சி:
இருந்தும் ஒரு ஆர்வக்கோளாறுல, நான் இந்த படத்த போட்டிக்கு அனுப்பலாமான்னு கேட்டன்...
ஆனா மாதிரிப் படத்துக்கு சொந்தக்காரியம்மா, ராமலக்ஷ்மி "நோ" சொல்லிட்டாங்க. அதுமட்டுமா? என்னைய போட்டில கலந்துக்காம உங்க படங்களுக்கொல்லாம் தீர்ப்புச் சொல்ல சொல்லி என்ன PiT-டோட கனெக்ட் பண்ணிவிட்டாங்க.
உங்க படங்களுக்கு நான் "நோ" சொல்ல விரும்பல்ல. அதனால சில ரூல்ஸ் போடலாம்ன்னு யோசிக்கிறன். இதோ.....
- மாதிரிப் படத்துல தெரியும் விஷயத்தத்தான் நீங்க படம் புடிக்கணும்.
- உங்களுக்குத் தெரியுறது மத்தவங்களுக்கும் தெரியனும். உங்க கற்பனையில, கருத்துல வாரதெல்லாம் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது. (எனக்குத் தெரியும் அந்தப்படத்துல எங்காவது சிலந்திப்புச்சி இருக்குமுன்னு. ஆனா நான் ஃபெயிலாகிட்டன். நீங்க கெட்டிக்காரங்க. புரிஞ்சுக்குவிக்கன்னு நெனக்கிறன்.)
- நிறங்கள கருப்பொருளாக எடுக்கக் கூடாது. அங்க கருப்பு இருக்கிறதால கருப்புக் கருப்பா படம் எடுத்திடாதிங்க.
கிரியேட்டிவா கொஞ்சம் யோசிங்க... மாதிரிப்படத்துல இருக்கிறதுக்கும் உங்க படத்துக்கும் இடைவெளி விட்டுறாதிங்க....
போட்டி விதிமுறைகள் இங்கே.
படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி 15-07-2011.
படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி 15-07-2011.
உங்க படங்களுக்கு தீர்ப்புச் சொல்ல ஆர்வமுடன்.... மற்றும் PiT குழுமத்திற்கு நன்றிகளுடன்...
Anton
புதிய நடுவருக்கு வரவேற்பும் வாழ்த்துக்களும்:)!
ReplyDeleteவித்தியாசமாக யோசித்து சுவாரஸ்யப் படுத்தியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் ஆன்றன் :-) அழகான தமிழ்...ரசித்து படித்தேன் :-) ரொம்ப வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க :-)
ReplyDelete//இந்தப் படத்தப் பாருங்க. அதுல என்னவெல்லாம் உங்களுக்குத் தெரியுது?//
ReplyDeleteஎனக்கு அந்த ஃபிகர் தான் நல்லா தெரியுது :-)
முயற்சிப்போம்...
ReplyDeleteபுதிய நடுவருக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteபோட்டி களைகட்டும் என நினைக்கிறேன். :))
வரவேற்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல...!!!
ReplyDelete@Sruthi, ராமலக்ஷ்மி அவர்களுக்கும் இதில் பங்குண்டு! மிட்நைட் வரைக்கும் முழிச்சிருந்து நான் டைப் பண்ணின போஸ்ட திருத்தி ஹெல்ப் பண்ணாங்க!
//எனக்கு அந்த ஃபிகர் தான் நல்லா தெரியுது//
ReplyDeleteஅதுக்காக ஃபிகருகள போட்டோ எடுக்கப்போய் தர்ம அடிவாங்கினா நாங்க பொறுப்பல்ல :-)
நல்லா தெளிவா குழப்பிருக்கீங்க. ஆனாலும் உள்ளே ஏதோ சுவாரஸ்யமிருக்கு. பாப்போம். வர்ரேன்.
ReplyDeleteநான் சொல்ல நினைச்சத நானானி சொல்லிட்டாங்க -
ReplyDeletekoyu
ReplyDeleteநல்ல தலைப்பு தான்!! ஆன்றன்(Anton)!!!!படத்தில் நிறைய கரு உள்ளது!!! PIT வாசகர்கள் பின்னி பெடலெடுக்கபோறாங்க!!!என் படத்தையும் அனுப்பியிருக்கிறேன்...!!!
ReplyDeleteஎன்றும் அன்புடன்
நித்தி கிளிக்ஸ்
அன்பு ராமலக்ஷ்மி, அது நான் அனுப்பிய படம்தான். போகஸ் சரியா அமையவில்லையோன்னு சந்தேகம். மக்கள் கடந்துகொண்டே இருந்தார்கள்.
ReplyDeleteஅவள் மட்டும் தனியே மேலே வெறித்த வண்ணம் இருந்தது
வேறு பட்டுத் தெரிந்தது. அதையே
பிட்டுக்கு இந்த மாத போட்டிப்படமாக அனுப்புகிறேன்.
மிகவும் நன்றி.
பிட் பதிவில் என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை. மீண்டும் மீண்டும்
ஐடி கேட்கிறது.
அன்புடன்,
வல்லிமா
நல்லது வல்லிம்மா:)! அந்தப் படத்தையே சேர்த்தாயிற்று. வேறுபட்ட நல்ல காட்சி. நன்றி.
ReplyDeleteஎன்னுடைய படத்தையும் அனுப்பியுள்ளேன் ..
ReplyDeleteநன்றி
சம்பத்
ஜூலை மாத போட்டிக்கு படம் அனுப்பி உளேன் படத்திற்குள் படம் பிடித்தல்
ReplyDeleteFile name :- jerald.jpg
'நன்றி
ஜெரால்ட் பிரசன்னா
குழப்பமாக உள்ளதெனப் பின்னூட்டத்தில் தெரிவித்தவர்களுக்கு மேலும் விளக்கமாக என் பதிவு இங்கே:படத்திற்குள் படம் -Get Set CLICK - ஜூலை போட்டி சுவாரஸ்யம் 23 மாதிரிப் படங்களுடன்:)!
ReplyDeleteஎனது படத்தை அனுப்பி விட்டேன். தலைப்பு ”(இளைஞன்(?), செருப்பு & ஜீன்ஸ்)” என்று இருக்க விரும்புகிறேன்.
ReplyDeleteநானும் போட்டியில் கலந்து கொண்டேன்
ReplyDeleteஇத்துடன் படங்கள் அனுப்புவதற்கான நேரம் முடிவடைந்தது. அனுப்பியவர் அனைவரின் படங்களும் சேர்க்கப்பட்டாயிற்று!
ReplyDelete1, 2, 3, 4, 5... என்டு எண்ணிக் கொண்டேயிருங்க... சீக்கிரமா முடிவ சொல்லிடுவன்...
Hi Anton
ReplyDeletei have also sent my snap (RAGUMUTHUKUMAR) on 16th. But it seems not in the list!!!No late entry display?
Thanks
RAGU