அன்பான நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்!
கிரியேட்டிவா கொஞ்சம் யோசிங்க... மாதிரிப்படத்துல இருக்கிறதுக்கும் உங்க படத்துக்கும் இடைவெளி விட்டுறாதிங்க....
இம்மாத போட்டித் தலைப்பு: 'படத்திற்குள் படம் பிடித்தல்'
எப்படீன்னு யோசிக்கிறீங்களா? ரொம்ப சிம்பிள்! ஆத்துக்குள்ள கடலுக்குள்ள மீன் பிடிக்கிற மாதிரியொண்ணும் பெரிய கஷ்டமில்ல. ஃபிஷ் டாங்குக்குள்ள மீன் பிடிக்கிற மாதிரி சாதாரண விசயம். ஆனா, அசாதாரணமாக மீனப் பிடிக்கணும். சீச்சீ... அதாவது படம் பிடிக்கணுமுன்னு சொல்ல வர்றன்.
என்ன, பொடி வச்சு பேசுறனாக்கும்? ஓகே. விசயத்துக்கே வாறன்.
இந்தப் படத்தப் பாருங்க. அதுல என்னவெல்லாம் உங்களுக்குத் தெரியுது?
# மாதிரிப் படம் - ராமலக்ஷ்மி
எனக்கு நாய், பெல்ட், வயசான தாத்தா, சோளம், பலூன், விற்பனையாளரு, கட்டிடம், இளம் யுவதி, சுறுசுறுப்பான இளைஞர்கள், மரங்கள்..... இப்படியே நிறைய அயிட்டமெல்லாம் தெரியுது. இப்படி இந்த படத்துக்குள்ள இருக்கிற ஏதாவது ஒரு விஷயம் நீங்க போட்டிக்கு அனுப்புற படத்துல இருக்கோணும்.
உத்துப் பார்த்தா நம்மாளுங்க படம் பிடிக்க நிறையவே விஷயங்கள் இருக்கு. அப்போ நீங்க என்ன படம் அனுப்புவிங்கன்னு PiT குழுவுல உள்ளவங்களைக் கேட்டா Naufal காட்டின படம் இந்த இளம் யுவதி.
உத்துப் பார்த்தா நம்மாளுங்க படம் பிடிக்க நிறையவே விஷயங்கள் இருக்கு. அப்போ நீங்க என்ன படம் அனுப்புவிங்கன்னு PiT குழுவுல உள்ளவங்களைக் கேட்டா Naufal காட்டின படம் இந்த இளம் யுவதி.
#1: இளம் யுவதி - Naufal
ஏன்னா? பிரதான படத்துக்குள்ள இளம் யுவதி இருக்காங்கல்ல? இதுதான் 'படத்திற்குள் படம் பிடித்தல்'.
நான் சில மாதிரிகள் கிடைக்குமான்னு கேட்டன். அதுக்கு கிடைச்சசுதான் இங்கே வரிசையாக.....
#2: இளைஞன் - ஜீவ்ஸ்
#3: வீதி - An&
#4: பாதணிகள் - சர்வேசன்
#5: நடந்து செல்லும் வயோதிபர் - கருவாயன்
தவறான உதாரணம் முழிச்சுப் பாக்குற இந்த சிலந்திப்பூச்சி:
இருந்தும் ஒரு ஆர்வக்கோளாறுல, நான் இந்த படத்த போட்டிக்கு அனுப்பலாமான்னு கேட்டன்...
ஆனா மாதிரிப் படத்துக்கு சொந்தக்காரியம்மா, ராமலக்ஷ்மி "நோ" சொல்லிட்டாங்க. அதுமட்டுமா? என்னைய போட்டில கலந்துக்காம உங்க படங்களுக்கொல்லாம் தீர்ப்புச் சொல்ல சொல்லி என்ன PiT-டோட கனெக்ட் பண்ணிவிட்டாங்க.
உங்க படங்களுக்கு நான் "நோ" சொல்ல விரும்பல்ல. அதனால சில ரூல்ஸ் போடலாம்ன்னு யோசிக்கிறன். இதோ.....
- மாதிரிப் படத்துல தெரியும் விஷயத்தத்தான் நீங்க படம் புடிக்கணும்.
- உங்களுக்குத் தெரியுறது மத்தவங்களுக்கும் தெரியனும். உங்க கற்பனையில, கருத்துல வாரதெல்லாம் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது. (எனக்குத் தெரியும் அந்தப்படத்துல எங்காவது சிலந்திப்புச்சி இருக்குமுன்னு. ஆனா நான் ஃபெயிலாகிட்டன். நீங்க கெட்டிக்காரங்க. புரிஞ்சுக்குவிக்கன்னு நெனக்கிறன்.)
- நிறங்கள கருப்பொருளாக எடுக்கக் கூடாது. அங்க கருப்பு இருக்கிறதால கருப்புக் கருப்பா படம் எடுத்திடாதிங்க.
கிரியேட்டிவா கொஞ்சம் யோசிங்க... மாதிரிப்படத்துல இருக்கிறதுக்கும் உங்க படத்துக்கும் இடைவெளி விட்டுறாதிங்க....
போட்டி விதிமுறைகள் இங்கே.
படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி 15-07-2011.
படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி 15-07-2011.
உங்க படங்களுக்கு தீர்ப்புச் சொல்ல ஆர்வமுடன்.... மற்றும் PiT குழுமத்திற்கு நன்றிகளுடன்...
Anton










