நான் சாதா (point & Shoot) கேமராவிலிருந்து, DSLRக்கு மாறியும் கூட, DSLRஐ point&shoot போல, automaticல் தான் பல மாதங்கள் பல படங்களை எடுத்து வந்திருந்தேன்.DSLRன் முழுப்பலமே, கேமரா உங்களுக்காக எல்லா கணக்குகளையும் போடாமல், முழுச் சுந்தந்திரத்தையும் நமக்கே கொடுப்பது.
அந்த முழுப்பலத்தை வெளிக்கொணர, ஆட்டோமேட்டிக்கிலிருந்து, Manualக்கு மாறணும்.
முழுசா manualக்கு மாறலன்னாலும், இடைப்பட்ட semi-manualக்கு மாறுவது கூட, உங்கள் படங்களில், பெரிய மாற்றங்களை கொண்டுவரும்.
நான் அநேகமாய், இந்த semi-manualல் (or semi automatic) தான், சமீப காலமாய் படங்கள் எடுத்து வருகிறேன். பளிச்சென தெரியும்படியாய், பெரிய வித்யாசத்தை உணர்கிறேன், automaticல் எடுத்த படங்களுக்கும், இப்படி semi-manualல் எடுத்த படங்களுக்கும்.
கேமராவில் automatic mode எப்படி வெக்கரதுன்னு உங்களுக்கு தெரியும். பச்சை எழுத்துல AUTOன்னு போட்டிருக்குமே, அந்த modeதான்.
Semi-Manual என்னது அதுன்னு யோசிக்கறீங்கல்ல? விஷயத்துக்கு வரேன்.
ஒரு படம் எப்படி வரும் என்பதை நிர்ணயம் பண்ணுவது மிக்காரும் மூன்று விஷயங்கள் என்பது உங்களுக்கு எல்லாமே தெரிந்த விஷயம்.
1) ஷட்டரின் வேகம் - இது 1/25, 1/60, 1", 2" என்ற அளவுகோலில் இருக்கும். 1/60 என்பது, ஒரு விநாடியின் அறுபதில் ஒரு பகுதி. அதாவது, நெம்ப ஸ்பீடு. 1" என்பது ஒரு விநாடியை குறிக்கும். ட்ரைபோடு இல்லாமல் ஒரு படம் எடுக்க, 1/60க்கு மேல் ஷட்டர் வேகம் இருத்தல் நலம்.
2) aperture அளவு - இது லென்ஸின் ஓட்டையின் அளவை குறைக்கும். ஓட்டையின் அளவுக்கேற்ப, ஒளி உள்புகும். f/2.8, f/4, f/5.6, f/8 (கருவாயனின் விரிவான விளக்கங்களை பார்க்கவும்). இதில் சின்ன குழப்பம், நெம்பர் பெருசாக ஆக, லென்ஸ் ஓட்டை சின்னதாகுதுன்னு அர்த்தம். உ.ம். 2.8, 8ஐ விட பெருசு. லென்ஸ் ஓட்டை பெருசா இருந்தா, வெளிச்சம் அதிகம் இல்லா இடங்களையும், ஃப்ளாஷ் துணையில்லாமல் உள்வாங்கலாம். அதை விட பெரிய உபயோகம், ஒரு படம் எப்படி அமைய வேண்டும் என்பதை இந்த ஓட்டை அளவு நிர்ணயிக்கும். பூ வேணும், அதற்க்கு பின் இருக்கும் விஷயங்கள் மங்கலா வேணுமா? பெரிய ஓட்டை, குட்டி aperture நெம்பர் வேணும். ஒரு அழகிய பூங்காவை முழுசா அப்படியே டாப் டு பாட்டம், உளவாங்கணுமா, குட்டி ஓட்டை, பெரிய aperture நெம்பர். புரிஞ்சுதுல்ல? புரியலன்னா DOF பற்றிய மேல் வாசிப்புக்கு இங்கே செல்லவும்.
3) ISO அளவு - இது வந்து கேமரா சென்ஸாரின் வெளிச்சத்தை உள்வாங்கும் திறன் (sensitivity of the sensor). இதன் அளவுகோல், 100, 200, 400, 800, இப்படி இருக்கும். சுறுக்கச் சொலணும்னா, 100ல் எடுக்கும்போது, வெளிச்சம் தேவை, 800க்கு வெளிச்சம் குறைவா இருந்தாலும் போதும். ஆனா, 100ல் வைத்த்து எடுக்கும்போது, படங்களில் எல்லா பிக்ஸெல்ஸும் பளிச்னு பதிவாகியிருக்கும். பெருசாக ஆக, படத்தின் பளிச் தன்மை குறைந்து 'சொற சொற' (noise) தன்மை அதிகமாயிடும். ISO மேல் விவரங்களுக்கு இங்கே போகலாம்.
ஓ.கே, மூணு மேட்டர் பாத்தாச்சு. இப்ப இன்னா? அப்படீங்கறீங்களா.
கேமரவில், 'M'னு இருப்பதுதான் Manualமோடு, இந்த modelல் வச்சீங்கன்னா, மேலே சொன்ன, எல்லா விஷயங்களையும், இன்னும் பல விஷயங்களையும், நீங்களா தனித் தனியா தெரிவு பண்ணி ஒரு படத்தை எடுக்கணும். அநேகம் பெருந்தகைகள், இப்படித்தான் எடுப்பாங்க.
என்னை மாதிரி கத்துக்குட்டிகளுக்கு, மேல் மூச், கீழ் மூச் வாங்கக் கூடிய விஷயம் இது. ஆயிரமாயிரம் படங்கள் எடுத்தாலும், லைட் மீட்டர் எல்லாம் பாத்து, எடுக்கும் பக்குவம் வரலை. என்னை மாதிரியே பல பேர் இருப்பீங்க என்ற எண்ணத்தில் தான் இந்த பதிவு.
எங்க வூட்டுக்காரரும் வேலைக்கு போறாருங்கர கணக்கா, என்னைப் போல் உள்ளவர்களுக்கு, semi-manualதான் சரிபடும். இந்த semi-manualக்கு, கேரமாவில் இரண்டு தெரிவுகள் இருக்கு. A - Aperture Priority, S - Shutter Priority.
அதாகப்பட்டது, Aவில் வச்சு எடுத்தீங்கன்னா, aperture அளவு, நீங்களே தெரிவு செஞ்சுக்கணும். என்ன எடுக்க ஆசப்படறீங்களோ, அதற்கேற்ப (உ.ம்: பூ - 3.5, பூங்கா 16) aperture அளவை டயல் பண்ணி வச்சுக்கங்க.
இப்ப கேமரா என்ன பண்ணும்னா, உங்க இஷ்டமான aperture அளவுக்கு தேவையான ஷட்டர் வேகத்தை அதுவே தேர்ந்தெடுத்துக்கும். இது, ISO அளவு, வெளிச்சம், இதை வைத்து அமையும். 1/60க்கும் கீழ் ஷட்டர் வேகம் காட்டினால், முக்காலி அவசியம். முக்காலி கைவசம் இல்லை, கைல புடிச்சே படம் புடிக்கணும்னா, ISO கூட்டிப் பாருங்கள். 1/60ஐ விட வேகமாய் ஷட்டர் வேகத்தை கேமரா காட்டியதும், க்ளிக்கினா, படம் ப்ரமாதமாய் வரும் வாய்ப்புண்டு.
இந்த A modeல் போட்டீங்கன்னா, ஃப்ளாஷ் வேணுமா வேணாமான்றதையும் நீங்களே நிர்ணயிக்கலாம். இயன்றவரை ஃப்ளாஷை தவிர்த்தல் நலம். ஃப்ளாஷ் போட்டே தீரணும்னா, இங்க ஃப்ளாஷ் பற்றிய மேல் விஷயங்களை தெரிஞ்சுக்கங்க.
S - Shutter Priorityயிலும் படங்கள் எடுக்கலாம். என் சொந்த அனுபவத்தில் குறைந்த் நேரங்களில் மட்டுமே இதை உபயோகப்படுத்தி வருகிறேன். இதில், ஷட்டரின் வேகத்தை நீங்கள் நிர்ணயம் பண்ண, கேமரா அபெர்ச்சரின் அளவை நிர்ணயிக்கும். ஓட்டப்பந்தயங்களை எடுக்கப் போறீங்கன்னு வச்சுக்கவோம், அங்க அதி வேக விஷயங்களை க்ளிக்க வேண்டி வரும். அந்த மாதிரி தருணங்களில், 1/125 மாதிரி அளவை வச்சுக்கிட்டீங்கன்னா, ஆக்ஷன் படங்கள் பதிய சுலபமாய் இருக்கும். அதே போல், இரவில் ஓடும் வாகனங்களை பதிய, 1", 2" மாதிரி அளவை வச்சு முயலலாம்.
அதாகப்பட்டது DSLR வைத்துக் கொண்டு ஆட்டோமேட்டிக்கில் படம் புடிக்கும் மக்களே, இன்னா சொல்ல வரேன்னா, இன்றிலிருந்து, A-Aperture Priorityக்கு மாறுங்க. பழகப் பழக, இதன் அருமை உங்களுக்கே புரிஞ்சுடும்.
க்ளிக்குங்க, கலக்குங்க! அருமையான படங்களுக்கு கொம்பேனி காரண்ட்டி!

Manualல் எடுத்தது: | Automaticல் எடுத்தது: |

olympus digital கேமரா வைத்திருக்கிறேன். அதில் aperture மாற்ற எந்த வசதியும் இல்லை. என்ன செய்வது. வேறு வழி இருக்கிறதா ?
ReplyDeleteகேமரா வாங்கி 6 வருஷம் ஆகுது. இப்பதான் aperture செட்டிங்கஸ் இருக்குறத பார்த்தேன் :). போன பின்னூட்டத்துல இல்லைன்னு எழுதுனத ரப்பர் போட்டு அழிச்சுடுங்க :).
ReplyDeleteஎன் காமிராவுல f2.8 மற்றும் f4.0 மட்டுமே இருக்கிறது.
நல்லாகீதுங்கண்ணா டீடியலு! :) short, simple and to the point.
ReplyDeleteமிக மிக உபயோகமான பதிவு. அருமையான விளக்கங்கள்.
ReplyDelete//automaticல் தான் பல மாதங்கள் பல படங்களை எடுத்து வந்திருந்தேன்.//
DSLR-க்கு மாறினால் இதையேதான் நானும் செய்யக்கூடும் என்பதாலும், மேற்சொன்ன பல விஷயங்கள் complicated ஆகவே தோன்றுவதாலும் அந்த எண்ணத்தையே விட்டிருந்தேன். இப்போது இந்த 'semi' மேட்டர் உற்சாகம் தருவதாய் உள்ளது:)!
பின்னோக்கி, welcome to the club. பலரும் அப்படித்தான். :)
ReplyDeleteடாங்க்ஸு ஆ!
ReplyDeleteராமலக்ஷ்மி, உங்க ஃப்ரேமிங் திறன் அருமையா இருக்கு. கூடிய விரைவில் DSLRக்கு மாறுங்க. திருப்திகரமான மாற்றமா அமையும் :)
பயனுள்ள பதிவு நண்பரே.
ReplyDeleteஎன்னுடய படங்கல பொதுவா AV ல தான் எடுத்து வருகிறேன், ஆனால் உங்கள் விளக்கம் அருமை, இத படித்த பிறகு நான் செய்யும் தவறுகள் தெரிந்தது. நன்றி
ReplyDelete//மிக மிக உபயோகமான பதிவு. அருமையான விளக்கங்கள்.//
ReplyDeleteMany Thanks.
அன்பு நண்பரே,வணக்கம்.உங்களுடைய தமிழில் புகைப்படக்கலை பதிவின் வாயிலாக நான் பல விசயங்கள் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி!
ReplyDeleteparamesdriver.blogspot.com
மிக மிக உபயோகமான பதிவு. அருமையான விளக்கங்கள்.
ReplyDelete