Monday, October 26, 2009

ISO - சிறு குறிப்பு

19 comments:
 
வணக்கம் மக்கா, வழக்கமா நாம படம் எடுக்கும் போது அபெர்ட்சர்(aperature) மற்றும் மூடுதிரை வேகம்(shutter speed) ஆகியவற்றை கருத்திற்கொண்டு எடுப்போம், இப்போ மூனாவதா ஒரு விடயத்தை பற்றி பாப்போம்.
ISO என்றால் (சர்வதேச நியதிகள் நிறுவனம் -International Organization for Standardization) .இவங்க பல பொருட்களின் அளவு, வடிவம், தரம், செந்தர வரையேடுகள்(standards) மற்றும் செயல் வழிமுறைகளை முறைப்படுத்தும் பணியினை செய்கிறார்கள். புகைப்படகலையில் ISO என்பது ஒளிபெட்டியின் உணரியின்(sensor) உணர்திறன்(sensitivity) அளப்பீடு. ISO அதிகரிக்க அதிகரிக்க உணரியின் ஒளி கிரகிக்கும் திறன் கூடுகிறது. இதனால் குறைந்த ஒளியில் கூட முக்காலி இல்லாமல் படம் எடுக்கலாம். பொதுவா ISO பின்வரும் அளபீடுகளில் இருக்கும் (100, 200, 320, 400, 640, 800, 1600 ....). ISO 100 என்பது அடிப்படை அளவு, இந்த ISO வில் தான் பெரும்பான்மையான நேரங்களில் படம் எடுப்போம். நீங்க ஒரு மீன்காட்சியகத்திலோ அல்லது உள்அரங்கு மேடை நிகழ்ச்சிகளை படம் பிடிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இவை இரண்டுமே ஒளி குறைவான இடங்கள். ISO 100 வச்சு படம் எடுக்கும்போது மூடுதிரை வேகம் மிக குறைவா தான் இருக்கும்( <>ஒளி இரைச்சல் அதிகமாக இருக்கும். DSLR ஒளிபெட்டியில் சத்த அளவு குறைவு. சத்தத்தின் அளவு ஒளிபெட்டியின் உணரியின் படத்துணுக்கு(pixel) அளவை பொருத்தது. படத்துணுக்கு அளவு சிறியதாக இருந்தால் படங்களில் ஒளி இரைச்சல் அளவு கூடும். (அதிகம் மெகாபிக்சல் உள்ள காமிராக்களில்[குறிப்பா பாயிண்ட் அண்ட் சூட்] படதுணுக்கின் அளவு குறைவாக இருக்கும், இதனால் ஒளி இரைச்சல் அதிகம் வரும்) பொதுவா ISO 100 வைத்தே படம் எடுங்கள். ஒளி குறைபாடு இருக்கும் போது மற்ற அதிக ISO அளவுகளை பயன் படுத்துங்கள். சிறிது ஒளி இரைச்சல் படங்களில் இருந்தால் கவலை படவேண்டாம். படங்களில் சத்தத்தை நீக்கும் இலவச மென்பொருட்கள் இணையத்தில் இருக்கின்றன. சில சமயங்களில் நல்ல ஒளி இருந்தும் கூட ISO கூட்டி வைக்கும் சூழ்நிலை ஏற்படும். விளையாட்டு நிகழ்ச்சிகளை படம் எடுக்கறவங்களுக்கு மூடுதிரை வேகம் 1/1000, 1/2000 இப்படி தேவை படும்(சிறு சிறு அசைவுகளை படம் பிடிக்க). உங்களுடைய ஒளிபெட்டியின் ISO செயல் முறைகளை அறிந்து கொண்டு முயற்சி செய்து பாருங்கள். கவனத்தில் வைத்து கொள்ள கூடிய ஒன்று இருக்கு. முதல் நாள் ISO அதிகம் வச்சு படம் எடுத்துட்டு அடுத்த நாள் காலையில் நல்ல வெளிச்சம் இருக்கும்போதும் கூட ISO அளவை மாத்த மறந்துட்டு ஒளி இரைச்சல் உள்ள படங்களை எடுக்க நேரிடலாம். அதனால் ஒவ்வொரு முறை ஒளிபெட்டியினை பயன் படுத்தும்போதும் ISO அளவினை சரி பார்த்துக் கொள்ளுங்கள். மற்றுமொரு விடயம், இப்பொழுது வரும் காமிராக்களில் "ஆட்டோ ISO" என்ற நுட்பம் வருகின்றது. இதன் பயன் என்னவென்றால், குறைந்தப்பட்ச மூடுதிரை வேக அளவை குறிப்பிட்டால், சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் ஒளிபெட்டி தானே ISO அளவுகளை மாற்றி அமைத்து கொண்டுவிடும். "Long Exposure" போன்று முக்காலி உதவியுடன் படம் எடுக்கும் போது இந்த "ஆட்டோ ISO" வை நிறுத்தி விடுங்கள். இன்னும் வேற எதாவது இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க. நன்றி !

19 comments:

  1. படங்களில் சத்தமா எனக்கு புரியல ..? போட்டோல எப்படி சத்தம் தெரியும் ..? தயவு செய்து தெரிந்தவர்கள் விளக்கவும் ... நன்றிகள் பல

    ReplyDelete
  2. பொதுவாக குறைவாக வைக்கனும் என்பது சரி. உணவு பொருட்கள் எடுக்கும் போது எப்படி? எந்த அளவு வைக்க வேண்டும் சொன்னால் நன்றாக இருக்கும்...

    ReplyDelete
  3. நானே கேக்கணும்ன்னு நினைச்ச விஷயத்தை ரொம்ப தெளிவா எழுதி இருக்கிங்க. நன்றி. ஆனால், noiseஐ சத்தம்ன்னு தமிழ்”படுத்தினது” :-), என்ன சொல்ல!!!

    ReplyDelete
  4. @arul ஒளி இரைச்சல் சரியாக வருமா :)

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி தல
    அப்படியே அந்த சத்தம் கம்மி பண்ணுரத பத்தியும் சொல்லுங்க

    ReplyDelete
  6. //@arul ஒளி இரைச்சல் சரியாக வருமா :)//

    now i understood..

    ReplyDelete
  7. சரியான விளக்கம் ஜீவ்ஸ்
    ஒலி இறைச்சலுக்கு சத்தம் என்றால்
    ஒளி இறைச்சலுக்கு சிதறல் என்பது சரியாக வருமா...

    ReplyDelete
  8. //@arul ஒளி இரைச்சல் சரியாக வருமா :)// Noise க்கு இரைச்சல் என்றும் பொருளுண்டு. :-))
    கமலகண்ணன் சொல்வது போல் சிதறல் என்பதையும் கணக்கில் எடுத்துக்கலாம்.

    ReplyDelete
  9. விரிவான விளக்கத்துக்கு நன்றிகள்!

    ReplyDelete
  10. சிதறல் சரியாக வராது கமலகண்ணன். காரணம் ஒளிச்சிதறல் வேறு இங்கே ஏற்படும் ஒளி இரைச்சல் வேறு.
    தேவையற்ற ஒளிப்புள்ளிகள் சேர்தலை ஒளி இரைச்சல் எனலாம். We cant make one on one translation tho ' ;)

    ReplyDelete
  11. நன்றி குறும்பன். ஒளியின் சப்தம் என்பதை அது புகைப்படத்தில் எந்த அளவு சேர்ந்துள்ளது என்றும் கொள்ளலாமே :) அந்த வகையில் இரைச்சல் சரியென்றே தோன்றுகிறது

    ReplyDelete
  12. இரைச்சல்/இரைத்தல் என்பதற்கு பரவலாக வீசுதல் என்பது போலவும் பொருள் கொள்ளலாம். ie . Splash. உதாரணத்துக்கு ஏற்றம் இரைத்தல், விதை இரைத்தல்/ தூவுதல் போன்றவை ஆக இவ்விடத்தில் இரைச்சல்/இரைத்தல் சரி என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  13. ///பொதுவாக குறைவாக வைக்கனும் என்பது சரி. உணவு பொருட்கள் எடுக்கும் போது எப்படி? எந்த அளவு வைக்க வேண்டும் சொன்னால் நன்றாக இருக்கும்...///

    இதுக்கு பதில் சொல்லவே இல்லையே!

    ReplyDelete
  14. /////பொதுவாக குறைவாக வைக்கனும் என்பது சரி. உணவு பொருட்கள் எடுக்கும் போது எப்படி? எந்த அளவு வைக்க வேண்டும் சொன்னால் நன்றாக இருக்கும்...///

    இதுக்கு பதில் சொல்லவே இல்லையே!//

    தாமதத்திற்கு மன்னிக்கவும் கமல்.

    உணவு பொருள் என்று மட்டும் அல்ல, எந்த பொருளாக இருந்தாலும், எந்த இடத்தில எடுத்தாலும், ஒளியின் அளவை பொருத்து ISO கூட்டி குறைச்சு வைக்கலாம். வெளிச்சம் நெறைய இருந்தா ISO 100 வச்சு எடுங்க. வெளிச்சம் பத்தலைன்னா ISO அதிகம்(200, 400, 640) வச்சு எடுக்கலாம். ட்ரைபாட் வச்சு எடுக்கும் போது வெளிச்சம் கம்மியா இருந்தா கூட ISO 100 வச்சு எடுங்க.
    -nathas

    ReplyDelete
  15. சுருக்கமான ஆனா அதே நேரத்துல ரொம்ப குழப்பாம தெளிவான ஒரு பதிவு.

    Iso-வுக்கும் ஒளி இரைச்சலுக்கும் உள்ள சம்பந்த்த பாக்கும் போது , ஒரே இடத்துல ஒரே Iso-ல வேறு வேறு காமேரக்களில் எடுக்கப்படும் படங்களில் ஒளி இரைச்சல் அளவு வேறுபடுவது ஏன்?
    அதாங்க, இந்த சென்சார் சைஸ் பத்தியும் கொஞ்சம் எழுதிடுங்க. With my FZ-7, I have never been able to go beyond ISO-200 for the noise that it gives me at 6 MP. I had accepted the fact until I saw a Iso-1600 picture of CVR in PiT. Then I came to know where my FZ-7 lacks.

    ஒளி இரைச்சல் பளுக்-இன் லின்க்ஸ் கூட அப்படியே, குடுத்தா நல்லா இருக்கும்.

    ReplyDelete
  16. // ஒரே இடத்துல ஒரே Iso-ல வேறு வேறு காமேரக்களில் எடுக்கப்படும் படங்களில் ஒளி இரைச்சல் அளவு வேறுபடுவது ஏன்?
    //

    நான் ஏற்கனவே சொன்ன மாதிரி காமிராவின் ISO, பிக்சல் அளவை பொருத்து இருக்கும்.

    FZ7 Sensor Size - (5.75 x 4.31 mm, 0.24 cm²)
    Pixcel Density - 24 MP/cm²

    Canon Xti(CVR's DSLR) Sensor Size - 22.2 x 14.8 mm (3.28 cm²)
    Pixcel Density - 3.1 MP/cm²

    Xti's pixcel size is approximately 8 times the size of Fz-7's pixcel. Some much more sensitivity so less noise ;)

    - nathas

    ReplyDelete
  17. நன்றி நாதஸ், என்னுடைய கிளை கேள்வி உங்கள் கண்களில் இருந்து தப்பி விட்டதே,
    //ஒளி இரைச்சல் பளுக்-இன் லின்க்ஸ் கூட அப்படியே, குடுத்தா நல்லா இருக்கும்.//

    ReplyDelete
  18. @ Nagappan -

    இந்த லிங்க்குல http://www.imagenomic.com/nwsa.aspx "community edition" free download இருக்கும் அதை முயற்சி செய்து பாருங்க.
    நான் இதை பத்தி இன்னொரு பதிவு விளக்கமா எழுதுறேன் :)

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff