Friday, October 2, 2009
அக்டோபர் 2009 மாத போட்டி - பொம்மை(கள்)!
Show case லே வைக்கிற பொருட்கள், பிள்ளைகள் விளையாடும் கிலுகிலுப்பை, உங்ககிட்டே இருக்கும் சாமி /ஆசாமி பொம்மை எல்லாமே இதுக்கு உட்படும். கண்ணுல பட்ட பொம்மைகளை எல்லாம் க்ளிக்கித்தள்ளுங்க. அதையும் வித்தியாசமான கோணத்துல உங்க கற்பனை குதிரையை பறக்க விட்டு செய்யுங்க.
வீட்டுக்கு வெளிய வந்துட்டா வேனுமட்டுக்கு நிறைய வெளிச்சம் கிடைக்குது. ஆனா வீட்டுக்குள்ள இருக்கிற வெளிச்சத்தை வச்சு புகைப்படம் எடுக்கிறதுங்கறது கொஞ்சம் சவலான விஷயம் தான். ஒரு முறை அமல் எடுத்த விளம்பரம் போட்டிக்கான புகைப்படத்தை பார்க்கும் போது நல்லா இருந்துச்சு. சிலர் இதை நெட்டுல இருந்து சுட்டு போட்டுட்டார்னு கூட கமெண்ட் போட்டாங்க. ஆனா அவர் எடுத்த முறையை விளக்கமா போட்டிருக்கார் இங்கே
என்னடா இவன் பொம்மைகள்னு தலைப்பு குடுத்துட்டு வேற எதைப் பத்தியோ பேசிட்டிருக்கானேன்னு யோசிக்க வேண்டாம். அந்த பதிவை முக்கியமாக சொல்லக் காரணம் உள்ளரங்கில் எடுக்கும் புகைப்படத்திற்கான ஒளியமைப்பு எப்படி செய்திருக்கிறார் என்று உணர்த்துவதற்காகத் தான்.!
இப்போ சில சாம்பிள் பொம்மை படங்கள்.
ஜீவ்ஸ்
கைப்புள்ள
திருமுருகன்
நல்ல பொம்மை படங்கள் எடுக்க என்னென்ன பண்ணலாம்.
1. மனித முகங்களைப் போர்ட்ரைட்(Portrait) படம் எடுக்க என்னென்ன செஞ்சீங்களோ அதெல்லாம் இங்கேயும் செய்து பார்க்கலாம் - உதாரணமா நல்ல க்ளோசப் ஷாட்கள் எடுக்கறது.
2. உங்கள் பொம்மைகள் ஏதாவது உணர்வுகளை உணர்த்த முயற்சிக்கிறதான்னு பாருங்கள். அதை புகைப்படத்தில் சொல்ல முயற்சியுங்கள்.
3. பொம்மைகளின் backgroundகளின் மீது கவனம் செலுத்துங்கள். Backgroundகளை எளிமையாக வைத்திருக்க முயற்சியுங்கள். படத்துக்கு வலு சேர்க்காத பொருட்களை உங்கள் படத்தில் வர அனுமதிக்காதீர்கள்.
4. உங்கள் பொம்மைகளை வீட்டினுள் படம் எடுக்கிறீர்கள் என்றால், படம் எடுப்பதற்கு போதுமான வெளிச்சம் இருக்கிறதா என்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் வீட்டின் வெளியில் தோட்டத்தில் அல்லது பூங்காவில் நல்ல வெளிச்சத்தில் முயன்று பாருங்கள்.
5. பொம்மைகளுக்கு அழகு சேர்ப்பவை வண்ணங்கள். அவ்வண்ணங்கள் நேர்த்தியாக உங்கள் படத்தில் தெரிவதற்கு உங்கள் கேமராவின் வைட் பேலன்சை(White Balance) பரிசோதித்துக் கொள்ளுங்கள். நீங்கள் படம் எடுக்கும் சூழலுக்கு ஏற்ப உங்கள் கேமராவின் white balance செட்டிங்கைத் தேர்ந்தெடுக்கவும்.
6. எப்போதும் போல, இம்முறையும் பொம்மைகளை வெவ்வேறு கோணங்களில் இருந்து படம் எடுத்து முயற்சி செய்து பாருங்கள். உதாரணமாக உங்கள் பொம்மையை கீழிருந்து மேல் நோக்கி படம் எடுத்துப் பார்த்தீர்கள் ஆனால் ஒரு 'larger than life' இமேஜ் கிடைக்கும். அது உங்கள் பொம்மையைப் பிரமாண்டமாக இருப்பது போல் காட்டும்.
7. பிகாசா, கிம்ப், ஃபோட்டோஷாப் முதலிய மென்பொருட்களைக் கொண்டு உங்கள் புகைப்படங்களை மெருகேற்றிப் போட்டிக்கு அனுப்ப முயற்சியுங்கள்.
சிரத்தையுடன் எடுக்கப் படும் படங்கள் எப்போதும் அதற்கான பலனைத் தராமல் இருப்பதில்லை. போட்டியில் பங்குகொண்டு கலக்குங்கள். வாழ்த்துகள்.
PiT மாதாந்திர போட்டி விதிமுறைகள்
படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 17 ஆம் தேதி, 23:59 IST
இம்மாத நடுவர்கள் : ஜீவ்ஸ், கைப்புள்ள
போட்டி விதிமுறைகள்
Subscribe to:
Post Comments (Atom)
அனுப்பியாச்சு!
ReplyDeletesent Jovin.jpg
ReplyDeleteவிபரமான விளக்கமான அறிவிப்புக்கு மிக்க நன்றி நான் அனுப்பிவிட்டேன்...
ReplyDeleteநீண்ட நாட்களின் பின் மீண்டும்...
ReplyDeleteSome more pictures on my site.
http://colourfotos.blogspot.com/2009/10/pit.html
எனது படத்தை அனுப்பியுள்ளேன்.
ReplyDeletei have a doubt...
ReplyDeleteonly dolls/toys are allowed or objects like pen, pencils, pins etc... are also allowed?
Also guys take a look at these pages having some examples of toy photography...
http://www.thephotoargus.com/inspiration/35-extraordinarily-clever-examples-of-toy-photography/
and
http://www.flickr.com/groups/toydioramarama/pool/page10/
come on friends lets make the competition tough...
பிரியதர்ஷன்,
ReplyDeleteபேனா பென்ஸில் எல்லாம் பொம்மைகளா... என்ன சார் :)
நீங்ககொடுத்த சுட்டிகள் அட்டகாசம். 35 படங்கள் போட்டிருப்பதில் சில போட்டோஷாப்புடாக இருந்தாலும் நன்றாக இருக்கிறது
ஃப்ளிக்கர் புகைப்படங்களும் அருமை. வாங்க எங்களுக்கும் தேர்வு செய்ய சவாலான புகைப்படங்களைத் தாங்க :)
சுட்டிகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி
Sent mine too...
ReplyDeleteஎனது படத்தை போட்டிக்கு அனுப்பியுள்ளேன்....சீ சீ பண்ண முயற்ச்சித்தேன் அந்த விலாசத்துக்கு முடியவில்லை
ReplyDeleteவெகு நாட்களுக்கு பிறகு
அன்புடன்
ஜாக்கிசேகர்
வணக்கம்,
ReplyDeleteபோட்டிக்கான எனது புகைப்படத்தை அனுப்பியுள்ளேன்.
வணக்கம்!
ReplyDeleteஇந்த மாதப் போட்டிக்கும் நம்மவர்கள் அசத்தலான புகைப்படங்களை அனுப்பியிருக்கிறார்கள்.
ஆனாலும் எனக்கு ஒரு சிறு சந்தேகம். கடவுள் உருவங்களை பொம்மைகள் என்ற வகைக்குள் எடுப்பது சரியா?
அன்புடன்,
விஜயாலயன்
வணக்கம் விஜய்
ReplyDelete//கடவுள் உருவங்களை பொம்மைகள் என்ற வகைக்குள் எடுப்பது சரியா? //
உங்களோட இந்த சந்தேகம் பல பேருக்கு உண்டு, தப்பொண்ணும் இல்லை.
மனுஷ உடம்பு உள்ள "பொம்மைக்கு" யானை தலை வச்சா பிள்ளையார்ன்னு சொல்லறோம், குரங்கு தலையை வச்சா ஹனுமார்ன்னு சொல்லறொம். இது நம்ம மக்கள் மத்தியிலே மட்டும் தான். இதே "பொம்மையை" உகாண்டாவுக்கு/ நம்ம காலாசாரம் பத்தி எதுவுமே தெரியாத்தா மக்களுக்கு கொண்டு போய் காட்டுங்க.. என்ன உருவமும் தலையும் மாறிப்போச்சான்னு வினோதமா கேப்பாங்க.
இதுவே.. சைஸ் சிறுசா இருந்தா பொம்மைன்னு சொல்லறோம், பெருசா இருந்தா சிலைன்னு சொல்லறோமில்லையா.. அதே மாதிரி பொம்மைகளை / சிலைகளை கடவுளாக நினைப்பது அவரவர் religion ஐ பொறுத்தது. பொதுப்படையா ஏத்துக்க அல்லது நிராகரிக்க முடியாதுங்கிரது என் அபிப்பராயம்.
எனது படத்தையும் அனுப்பியுள்ளேன்.
ReplyDeletehttp://shadowtjay.blogspot.com/
போட்டிக்கான எனது படத்தை அனுப்பி உள்ளேன்,
ReplyDeleteபார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
@ஜீவ்ஸ் நன்றி.
விஜயாலயன்,
ReplyDeleteபொதுவாகவே சிலைகளை ( தனித்திருப்பவை, புடைப்பு சிற்பங்களை அல்ல ) பொம்மைகள் என்றே கருதலாம். ( வழிபாட்டு முறைக்கு வந்தவகளை கருவரையில் மட்டுமே இருக்கும் அதை யாரும் பொதுவில் புகைப்படம் எடுக்க மாட்டார்கள் )
தவறென்று இதில் இல்லை!! சிறு குழந்தைகளுக்கு கிருஷ்ணனும், விநாயகனும் விளையாடும் பொம்மைகளே இல்லையா :)
அனுப்பியாச்சு! my 2 cents
ReplyDeleteஎன் பதிவு: பொம்மை [அக்டோபர் PiT]
ReplyDeleteநன்றி தீபா & ஜீவ்ஸ்!
ReplyDeleteஎனது மனதில் தோன்றிய சந்தேகத்தை கேட்டு வைத்தேன். யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல.
அன்புடன்,
விஜயாலயன்
படம் அனுப்பியாச்சு, நன்றி பிட் குழுவினர்க்கு நான் அதிகம் பொம்மைப் படங்கள் எடுத்ததில்லை,இந்த போட்டி அதற்க்கு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது நன்றி.
ReplyDeleteபோட்டிக்கான எனது புகைப்படத்தை அனுப்பியுள்ளேன்.
ReplyDeletePmt
நானும் படம் அனுப்பிட்டேன். இங்கே இருக்கு பாருங்க.
ReplyDeleteஅனுப்பிட்டேனுங்கோ!
ReplyDeleteமூணு பதிவு போட்டு இருக்கேன்.
பாருங்கோ!
http://chitirampesuthati.blogspot.com/
போட்டியில் கலந்து கொள்ள மயில் ஒன்று அனுப்பியிருக்கிறேன்
ReplyDeleteநானும் நுழைந்தாயிற்று. பார்த்து கருத்து சொல்லவும்.
ReplyDeletehttp://9-west.blogspot.com
நானும் நுழைந்தாயிற்று.
ReplyDeleteஇங்கே உள்ள படந்தான் போட்டிக்கு.
ReplyDeleteஎன் மயில் பிகாசாவில் பதிவாகவில்லையே....
ReplyDelete