Wednesday, October 28, 2009

PiT அக்டோபர் 2009 - மோசமானவங்கள்லேயே முக்கியமானவங்க!

19 comments:
 
"ஏய்! எல்லாரும் பாத்துக்கங்க, நான் கூட ரவுடி தான்"னு நாமே வலுக்கட்டாயமா போய் ஜீப்புல ஏறிக்காம, "டேய் ரவுடி! வந்து ஜீப்புல ஏறுய்யா"னு நமக்கு மரியாதை குடுத்து ஜீப்புல ஏற சொன்னா எப்படி இருக்கும்? PiT மாதாந்திர போட்டிகள்ல டாப் 10ல என்னோட படம் ஒரு ரெண்டு மூனு முறை இடம்பிடிச்சப்போ எனக்கு அப்படி தான் இருந்தது. புரொபஷனல் குரியர் ரேஞ்சுக்குப் படம் எடுக்கறவங்க மத்தியில நம்ம படமும் தேர்வாகியிருக்கேன்னு நெனக்கறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கும். அதே மாதிரி சந்தோஷத்தை இந்த மாசப் போட்டியில டாப் 15இல் தேர்வான நீங்களும் அனுபவிச்சிருந்தீங்கன்னா என் சார்பா உங்களை நீங்களே 'சேம் பின்ச்' பண்ணிக்கங்க. ரைட்டு. இந்த மாதப் போட்டி தலைப்பு பொம்மைகள். இந்த தலைப்புல நாங்க எதிர்பார்த்தது இதெல்லாம் தான். 1. - காட்சியமைப்பு. 2. - தெளிவு 3. - இடர்பாடுகள்/கவனச்சிதறல்கள் இல்லாமை 4. - தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிச்சம் / வெளிச்சத்தை கையாண்ட முறை 5. - பார்த்த உடனே " அட" சொல்ல வைக்கும் க்ரியேட்டிவிடி டாப் 15இல் இடம்பிடிச்ச ரவுடிங்க எல்லாருமே மோசமானவங்க தான்னாலும், மோசமானவங்கள்லேயே முக்கியமான அந்த மூனு பேரோட படங்களை இப்போ பாப்போம். தேர்வாகியுள்ள இந்தப் படங்களை அதுகளைப் பெத்தவங்க என்ன நெனச்சு எடுத்தாங்களோ தெரியாது, ஆனா எங்களை வெகுவாக ரசிக்க வைத்ததுடன் வித்தியாசமான சில விஷயங்களைச் சொல்ல முடிந்ததாகவும் நாங்க நெனைக்கிறோம். முதல் இடம் : MQN டாப் 15இல் இருந்து முதல் இடத்தைப் பிடித்த இப்படத்தைத் தேர்ந்தெடுக்க அதிக நேரம் பிடிக்கவில்லை. இருவரும் ஒருமனதாகத் தேர்ந்தேடுத்துவிட்டோம். புகைப்பட ஆர்வலர்கள் பலரும் இப்படத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன. கறுப்பு பேக்ரவுண்ட் படத்தின் வண்ணத்தை எவ்வாறு மெருகேற்றுகிறது என்று கவனிக்கவும். அடுத்தது ஒளியமைப்பு. கரடியின் முகம் மட்டும் பளிச்சென்று தெரிவதை கவனிக்கவும். நம் கவனம் கரடியின் மீது செல்லவேண்டும் என்பதற்காக மிகக் கவனமாக ஃபோகஸ்சும் செய்திருக்கிறார். கரடி பொம்மைகள் என்றதும் பொதுவாக cute, chubby போன்ற பதங்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் இப்படத்தைப் பார்க்கும் போது confident என்ற பதம் தான் என் நினைவுக்கு வருகிறது. தன்னம்பிக்கையுள்ள ஒரு இசை கலைஞனாக இக்கரடி பொம்மையை நாங்கள் பார்க்கிறோம். இப்படத்தைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் "புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே!". இரண்டாம் இடம் : TJay ஒரு பொருளைப் படம் பிடிக்கும் போது அது இருக்கும் சூழ்நிலையையும் காட்ட வேண்டும், ஆனால் அதனால் அப்பொருளின் மீது பார்ப்பவரின் கவனமும் குலையாமல் இருக்க எப்படி படம் எடுக்க வேண்டும் என்பதற்கு இப்படம் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இரவு நேரத்தில் ஒரு குழந்தை தூங்காமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறது போன்றான இப்படத்தில், பின்புறத்தில் உள்ள மின்விளக்கு, குழந்தை பொம்மையின் மீதான நம் கவனத்தைத் திசை திருப்பாமல் படத்திற்கு வலு சேர்ப்பதை கவனிக்கவும். Backgroundஐ out of focus ஆக்கியிருப்பதன் மூலம் foregroundஇல் பொம்மை அழகாகத் தோன்றுவதை கவனிக்கவும். இதை "Background blurring" என்று சொல்வார்கள். குழ்ந்தை தலையைக் கவிழ்ந்து இரவு நேரத்தில் உட்கார்ந்திருப்பது ஒரு 'eerie feeling'ஐக் கொடுக்கிறது. குழந்தை நிமிர்ந்து பார்த்தால் என்ன செய்யுமோ என்று. 'பிள்ளை நிலா' அப்படிங்கிற பேருல பேபி ஷாலினி நடிச்ச படம் ஒன்னும் ஞாபகத்துக்கு வந்துச்சு. மூன்றாம் இடம் : Udayabaskar மற்றும் Truth இந்தப் படத்தில் காட்சியமைப்பு அருமை. சந்தோஷமான முகம் கொண்ட ஒரு குரங்கும் ஒரு குழந்தையும் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற ஒரு படம். ஒரு நண்பனின் தோளில் சாய்ந்து கொண்டிருப்பது போல குரங்கு சாய்ந்து கொண்டிருப்பது மிக அழகு. படத்தில் ஒரு சில இடங்களில்(முக்கியமான் இடங்களில் அல்ல) ஃபோகஸ் குறைவது போல இருப்பதை தவிர்த்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இப்படத்தைப் பார்த்ததும் எங்களுக்குச் சொல்லத் தோன்றியது "தோழா! தோழா! தோள் கொடு கொஞ்சம் சாய்ஞ்சுக்கனும்" இந்த மாதப் போட்டியில் நிறைய பிள்ளையார் படங்கள் வந்தன. அதற்கு காரணம் பிள்ளையாரை "friendly neighbourhood" தெய்வமாகப் பலரும் பார்ப்பதாக இருக்கக் கூடும் :) ஆனால் டைட் க்ளோசப்பில் அழகிய நயனத்தைக் காட்டும் இந்த 'நயன்தாரா பிள்ளையார்' Truth அவர்களுக்கு கூட்டு மூன்றாவது இடத்தைப் பெற்று தருகிறார். சிறப்பு கவனம் : அமல். ஒவ்வொரு முறையும் உங்களின் காட்சியமைப்பு முறை பிரமாதப் படுத்துகிறது அமல். வாழ்த்துகள். கூடிய சீக்கிறம் உங்களை பிட்டில் சேர்த்துடனும். ஸ்பெஷல் பாராட்டு : பிரியதர்ஷன். MQN மாதிரி கொஞ்சம் வெளிச்சத்தை சரியா புடிச்சிருந்தீங்கன்னா.. முதல் படமா இது தான் வந்திருக்கும். சிரத்தையுடன் கூடிய உங்கள் உழைப்புக்கு எங்கள் குழுவின் பாராட்டுகள். இந்தப் படம் எப்படி எடுக்கப்பட்டது என்பதற்கான விளக்கம் இங்கே இப்போ மோசமான மத்த பதினோரு பேர் - இவர்கள் ஏன் முதல் மூன்றுக்கு வரவில்லை என்பதற்கான காரணம் - மேலே குறிப்பிட்ட அஞ்சு பாயிண்ட்டுல ஒன்றோ அல்லது சிலவோ குறைவதுடன் நடுவர்களின் இரசனைக்கு ஏற்ப இல்லாமல் போயிருக்க வேண்டும். ஆனால் இவை அனைத்துமே அருமையானவை. இவர்கள் பட்டைத் தீட்டப் படக் காத்திருக்கும் வைரங்கள். வாழ்த்துக்கள் நண்பர்களே!
AadavAmal
Jeya Kamal
Nila's Mom
NundhaaOviya
PriyadarshanRajesh Natarajan
RamalakshmiThulasi Gopal
From PiT Oct 2009 - பொம்மைகள்
முதல் மூன்றிடங்களைப் பெற்றவர்கள் படங்களை எடுத்த முறையை பகிர்ந்து கொண்டால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். மோசமானவங்கள்லேயே முக்கியமானவங்க, மோசமானவங்க இவங்கள்லாம் எப்படி இப்படி எல்லாம் படம் எடுக்கிறாங்கன்னு நெனச்சு ஆச்சரியப்பட்டு இந்த மாசம் தேர்வாகாதவங்க யாரும் மோசம் போயிட்டதா மட்டும் நெனச்சிடாதீங்க. காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் நீங்களும் மோசமானவங்களா மாறி 'லந்து பண்ணும்' காலமும் வரும். அதை மட்டும் மறந்துடாதீங்க. இந்த மாதப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகளும் நன்றிகளும். முதல் மூன்றிடங்களைப் பெற்றவர்கள் படங்களை எடுத்த முறையை பகிர்ந்து கொண்டால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்

19 comments:

  1. வெற்றி பெற்ற நால்வருக்கும் வாழ்த்துகள். அசத்தல் படங்கள்.அடுத்த தடவ ரவுடியிலேர்ந்து தாதாவா ஆக முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  2. அருமையான தேர்வு. வெற்றி பெற்ற நால்வருக்கும் நல்வாழ்த்துக்கள்!

    படங்களின் தேர்வுக்கான விளக்கங்கள் யாவும் ரசிக்கும்படி உள்ளன.

    குறிப்பாக MQN படத்துக்கு..
    // தன்னம்பிக்கையுள்ள ஒரு இசை கலைஞனாக இக்கரடி பொம்மையை நாங்கள் பார்க்கிறோம். இப்படத்தைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் "புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே!".//

    படங்களை உணர்வுப்பூர்வமாகவும் பார்க்க யோசிக்க வைக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. வெற்றி பெற்ற நால்வருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. ரொம்பவே மோசமானவங்க நாலு பேருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

    நானும் ரௌடிதான்னு என்னைச் சொல்ல வச்ச பிட்டு எசமான்களுக்கு நன்றி.

    அடுத்தமாசத் தலைப்பைச் சொல்லுங்க.

    தேறுவேனான்னு யோசிக்கலாம்:-)

    ReplyDelete
  5. ///முதல் மூன்றிடங்களைப் பெற்றவர்கள் படங்களை எடுத்த முறையை பகிர்ந்து கொண்டால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்
    //

    repeatuuuu.

    congrats winners!

    MQN - asaththal padam.

    Amal - as usual, greatuu!

    thulasi madam - lighting mattum sariyaa vandhirundhaa, unga padam engiyo poyirukkum. nalla kaatchi amaippu. :)

    ReplyDelete
  6. congrats to the 4 mosamaanavangka .

    next time i will give more attention on lighting and avoid last minute attempt

    ReplyDelete
  7. நல்ல தேர்வு... மிகவும் சிரமப்பட்டு செய்கிற எந்த காரியமும் வீணாவதில்லை. அது MQNக்கு பொருந்தும் வாழ்த்துக்கள் உங்களுக்கு, நீங்கள் அதை எடுத்த முறையை படங்களுடன் விளக்கினால் எங்களுக்கு உதவும்...

    மற்ற மூன்று பேருக்கும் வாழ்த்துக்கள்...

    பிரியதர்சன் உங்களின் உழைப்பு அற்புதம்... நடுவர்களின் தீர்ப்பு மிக சரி... நீங்கள் எடுத்த முறையை படங்களுடன் விளக்கிய முறை எங்களை சிலிர்க்க வைத்தது என்பதே உண்மை...

    நடுவர்களுக்கு பாராட்டுக்கள் உணர்வுபூர்வமான தீர்ப்பை வழங்கியமைக்கு... இதே போல ஒவ்வொரு முறையும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்... நன்றி நடுவர்களே...

    ம்ம்ம்ம் அடுத்த முறையாவது நாம முக்கயமானவங்களா ஆகனும்...

    ReplyDelete
  8. தேர்ந்தெடுத்த, வாழ்த்திய எல்லாருக்கும் நன்றி.

    நான் படம் எடுத்த முறை மிகவும் எளியது. இயற்கையாக சன்னலிலிருந்து மெல்லிய சன்னல்திரை வழியாக வரும் வெளிச்சத்தில் எடுத்தது. பின்னனியில் கருப்பாக தெரிவது ஒரு அலமாரி (brown color). அது பிற்சேர்க்கையின் போது தனியாக தெர்ந்தெடுக்கப்பட்டு கருப்பாக்கப்பட்டது. மேலும் விபரங்கள் தேவைப்பட்டால் பதிலளிக்கிறேன்.

    ReplyDelete
  9. அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வாவ் :-) டாப் மூனுல வந்துடுச்சா? உண்மையாவே இந்த முறை முதல் மூனுல வரும்னு எதிர்பார்க்கல தான். இதை என்னோட ப்ளாக்லையே மென்ஷன் பண்ணனும்னு நினைச்சேன். ஆனா சொல்லி, எதுக்கு நெகட்டிவ் எனெர்ஜி கொண்டு வரனும்னு தான் சொல்லல. இப்போ படத்தை எடுத்த விதத்தை விளக்கி ஒரு பதிவு போட்டா, அதுல சொல்றேன், என்ன ஆச்சுன்னு.

    ReplyDelete
  11. பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வெற்றி பெற்ற நால்வருக்கும் இனிய வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. நான் கொஞ்சம் லேட் :( முதல் மூன்றிடத்திற்குள் வந்தது, எதிர்பாராத மகிழ்ச்சி! MQN, நான் முன்பே சொன்னது போல, உங்கள் படம் very beautiful! It deserves the first place. வாழ்த்துக்கள். TJay and Kiran: உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!! பங்கு பெற்ற, முதல் 15-ல் இடம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    படம், எங்கள் வீட்டு டிவி ஸ்டேண்ட்-ல் (Black color) வைத்து, day light-ல் எடுத்தது. இப்படி இருந்த ஒரிஜினல் படம் (http://picasaweb.google.com/nubaskar/PITContests#5398269685375063506), GIMP -ல் மெருகேற்றிய பின்பு இப்படி (http://picasaweb.google.com/nubaskar/PITContests#5398269693646216722) ஆனது!

    Priyadharsan, நீங்கள் படம் எடுத்தவிதத்தைப் பற்றிய பதிவு சூப்பர். ரொம்ப மெனக்கெட்டிருகீங்க.

    ReplyDelete
  14. வாழ்த்துகள், மோசமானவைங்களுக்கும் அதிலேயே முக்கியமானவைங்களுக்கும்.

    ReplyDelete
  15. மோசமானவங்க இன்னும் மோசமா ஆகணும்ன்னு வாழ்த்தறேன். வித்தியாசமான நடையில் பதிவை எழுதியதுக்கு ஒரு மாசம் உள்ளே தள்ளலாம்! :-))

    ReplyDelete
  16. வணக்கம்

    தேர்ந்தெடுத்த, வாழ்த்திய எல்லாருக்கும் நன்றி.
    என்னைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி என்பதை விட பங்களிப்பும் Homework க்குமே முக்கியமானவை. ஒரு நல்ல மாணவனுக்கு

    ஆகவே தொடர்ந்து கிளிக்குவோம்.

    எனது புகைப்படம் சிறு குறிப்பு- வெளி ஒளி குறைவாக உட்புகும் அறை செயற்கை ஒளியில் flash உபயோகித்து செய்த சிறு பரீட்சையே.

    Tjay

    ReplyDelete
  17. ஆஹா..., அனைத்து ராஜதந்திரங்களும் வீணாகிவிட்டதே... இன்னும் பயிற்சி வேண்டுமோ?... :)
    thats the lighter part...
    Special mentioning about my picture is really very much encouraging, thanks judges.

    Congrats to MQN, Tjay, Udaybaskar and Truth...
    Boss, exactly in this same order i prioritised the best 15's...
    once again thanks kamalakannan and uday baskar for your appreciations,

    ReplyDelete
  18. மோசமானவங்கள்லேயே முக்கியமானவங்க, மோசமானவங்க இவங்கள்லாம் எப்படி இப்படி எல்லாம் படம் எடுக்கிறாங்கன்னு நெனச்சு ஆச்சரியப்பட்டு இந்த மாசம் தேர்வாகாதவங்க //:))
    congrats to the rowdys.
    will try my level best inthe next round to be the best next time:))

    ReplyDelete
  19. Romba late'a vandhutten......nalla thervu....verri perravargalukku vaazhthukkal!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff