1.Aadav | 2. Amal . | ||
3 . Jeya | 4. Kamal | ||
5. MQN | 6. Nila's Mom | ||
7. Nundhaa | 8. Oviya | ||
9. Priyadarshan | 10. Rajesh Natarajan | ||
11. Ramalakshmi | 12. Thulasi Gopal | ||
13. Tjay | 14. Truth | ||
15. Udayabaskar | |||
From PiT Oct 2009 - பொம்மைகள் |
Monday, October 26, 2009
PiT அக்டோபர் 2009 - முதல் குட்டைப் பட்டியல்
இந்த மாதப் போட்டியில் முதல் சுற்றில் தேர்வான படங்களைப் பாக்கறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்லனும்னு நெனைக்கிறோம்ங்க. புகைப்படம் எதுக்கு எடுக்கறோம்னு யோசிச்சு பாத்திருக்கீங்களா? இரண்டு கண்களால் காண முடியாததை எதையும் நாம புகைப்படமா எடுக்கறதில்லை. அதுவும் நாம எடுக்கற புகைப்படம் மாதிரியே ஏற்கனவே யாராவது எடுத்து தான் வச்சிருப்பாங்க. அப்படியிருந்தும் நாமெல்லாம் புகைப்படம் எடுத்துக்கிட்டுத் தான் இருக்கோம். நாம எடுக்கற புகைப்படத்தைப் பாத்து நல்லாருக்குன்னு நாலு பேரு பாராட்டத் தான் செய்யறாங்க. ஏன்? புகைப்படம் எடுக்கறது ஒரு கலை - Work of Art. மற்ற கலை வடிவங்களை மாதிரியே தான் இதுவும். உதாரணத்துக்கு சினிமாங்கிற கலையை எடுத்துக்குவோமே. இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வந்த படத்தோட கதையை மறுபடியும் கொஞ்சம் வேற மாதிரி சொன்னா ரசிக்கத் தான் செய்யறோம். ஆக ரசனைங்கிறது சினிமா, இசை, புகைப்படக்கலைன்னு எல்லா விஷயத்துலயும் நமக்கு தேவைப்படுது. எந்த ஒரு கலை வடிவமும் மக்களோட ரசிப்புத்தன்மையை ரசனையை வளர்க்கனும். அப்போ தான் அது கலை. எனவே நம்முடைய ரசனையையும் அடுத்தவர்களுடைய ரசனையையும் வளர்த்துக் கொள்ள/வளர்ப்பதற்காக நாம புகைப்படம் எடுக்கறோம்னு சொல்லலாம்ங்களா? சரியா?
சும்மா படம் எடுக்கறதே ரசனையை வளர்க்கன்னு சொல்லும் போது, ஒரு போட்டிக்குன்னு கொடுக்கப்பட்ட தலைப்புல புகைப்படம் எடுக்கும் போது எப்படி இருக்கனும்? போட்டியில பங்கு கொள்ளற ஒவ்வொருத்தரும் தன்னோட சிறப்பான புகைப்படங்களைத் தேர்வு செய்து போட்டிக்கு அனுப்பும் போது போட்டி ரொம்ப பலமா இருக்கும். போட்டியில பங்குபெறவங்களுக்குத் தங்களோட படம் ஒரு வேளை தேர்வு ஆகலைன்னா ஏன் தேர்வாகலைன்னு தெரிஞ்சுக்கற ஆர்வம் கண்டிப்பா இருக்கும். நான் இதே போட்டிகள்ல போட்டியாளரா இருக்கும் போது என்னோட படம் ஏன் தேர்வாகலைன்னு தெரிஞ்சுக்கற ஆர்வம் இருந்தது. ஆனா போட்டிக்கு வர்ற மொத்தப் படங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது ஒவ்வொரு படத்துக்கும் கருத்து சொல்லறதுங்கறது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான்னு இப்போ எனக்கு புரியுது. இருந்தாலும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நம்பிக்கையில, மனசுல ஒவ்வொரு கருத்தை வச்சிக்கிட்டு படம் எடுத்துருப்போம். உங்களோட அந்த நம்பிக்கைக்கு மரியாதை பண்ணும் பொருட்டு புகைப்படம் எடுக்கறப்போ கவனத்துல கொள்ள வேண்டிய விஷயங்களைப் பத்தி இந்த மாதப் போட்டி படங்களையே உதாரணமா வச்சிப் பார்ப்போம். ஏற்கனவே போட்டிகளில் ஜெயிப்பது எப்படின்னு நம்ம PiT தளத்துலேயே பதிவு போட்டிருக்காங்க. இருந்தாலும் அதை உதாரணத்தோட சொன்ன நல்லாருக்கும்னு உடம்பை ரணகளம் ஆக்கிக்கற ஒரு முயற்சில ஈடுபட்டிருக்கோம். அதுக்கு முன்னாடி ஒரு ஷார்ட் கமெர்ஷியல் பிரேக் எடுத்துக்கிட்டு இந்த மாதப் போட்டியில் தேர்வான முதல் பதினைஞ்சு படங்களை ஆங்கில அகர வரிசையில் பாத்துட்டு வந்துடுங்க.
Top 15
உங்க படம் என்ன சொல்லுது?
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நம்பிக்கையில, ஒரு கருத்தை மனசுல வச்சிப் படம் எடுத்துருப்பாங்கன்னு சொன்னோமில்லையா? நம்ம படம் மூலமா நாம சொல்ல வந்த கருத்து அல்லது நாம காட்ட நெனச்ச கருப்பொருள் பாக்கறவங்களோட ரசனையை எப்படி தூண்டுச்சுன்னும், அவங்களை எப்படி சென்று சேர்ந்துச்சும்னும் தெரிஞ்சுக்கனுமில்லியா? நம்ம படத்தைப் பத்தி பாக்கறவங்க என்ன உணருறாங்கன்னு எப்படி தெரிஞ்சுக்கறது?
தெரிஞ்சுக்கனும்னா எத்தனை பேரைப் போய் கேக்க முடியும்? பாக்கறவங்க எல்லாரையும் போய் கேக்கறதுங்கறது நடக்கக் கூடிய காரியமா? அதை தெரிஞ்சுக்க ஒரு வழி இருக்குங்க. போட்டிக்குப் படத்தை எடுக்கறீங்கல்லியா? எடுத்து முடிச்சுட்டு போட்டிக்கு அனுப்பறதுக்கு முன்னாடி நீங்க எடுத்த படத்தை ஒரு முறை பாருங்க. அதை பாத்துட்டு உங்க படத்தைப் பத்தி உங்களுக்கு என்ன தோனுதுன்னு ஒரு வரி ஒரு பேப்பர்ல எழுதுங்க...இல்லை மனசுல நெனச்சுக்கங்க. இப்போ நீங்க நெனச்சது/பேப்பர்ல எழுதுனதுக்கும் போட்டிக்குக் கொடுக்கப்பட்ட தலைப்புக்கும் எந்தளவுக்கும் சம்பந்தம் இருக்கும்னும் பாருங்க.
உதாரணத்துக்கு Sriniயோட இந்த படத்தை எடுத்துக்குவோம்.
இந்த படத்தைப் பார்த்ததும் என் மனசுக்குத் தோனுறது - "சாலையோரத்தில் இரு குழந்தைகள் பொம்மைகளை விற்கிறார்கள்." ஆனா நீங்க போட்டிக்குப் படத்தை அனுப்பும் போது நெனச்சது வேற எதாச்சும் இருக்கலாம். இந்த படத்துல சாலை, இரு பெண் குழந்தைகள், மரம், விளம்பரப் பலகை என போட்டிக்குத் தொடர்பில்லாத பல பொருட்கள் இருக்கின்றன. அப்பொருட்களோடு பொம்மைகளும் இருக்கின்றன. பொம்மைகளைப் பற்றி நீங்கள் சொல்ல விரும்புவது என்னவென்று பார்ப்பவருக்குக் குழப்பம் வரும். இந்த விஷயத்தில் benefit of doubt எப்போதும் பார்வையாளருக்குத் தான் :) பொம்மைகளின் அழகு, அவற்றின் வண்ணங்கள், சிரிக்கிற மாதிரி, அழுகிற மாதிரி எதாவது உணர்ச்சிகள் காட்டுகின்றன என்றால் அதை எல்லாம் பார்வையாளருக்குத் தெரிவிப்பதற்கு நீங்கள் பொம்மைகளுக்கு மிக அருகாமையில் செல்ல வேண்டும். எனவே தான் போட்டி அறிவிப்பு பதிவில் கீழ்கண்ட இவ்வழிமுறைகளைக் கூறியிருந்தோம்.
//2. உங்கள் பொம்மைகள் ஏதாவது உணர்வுகளை உணர்த்த முயற்சிக்கிறதான்னு பாருங்கள். அதை புகைப்படத்தில் சொல்ல முயற்சியுங்கள்.
3. பொம்மைகளின் backgroundகளின் மீது கவனம் செலுத்துங்கள். Backgroundகளை எளிமையாக வைத்திருக்க முயற்சியுங்கள். படத்துக்கு வலு சேர்க்காத பொருட்களை உங்கள் படத்தில் வர அனுமதிக்காதீர்கள்.//
கீழே உள்ள விவியனின் படத்திலும் கிட்டத்தட்ட இதே குறைபாடு தான் -
"ஒரு சிறுவன் பொம்மைகளோடு விளையாடுகின்றான்". என்பதே உங்கள் படத்தில் இருந்து எங்களுக்கு கிடைக்கும் கருத்து. ஆகவே போட்டியின் கருப்பொருளான பொம்மைகளை உங்கள் படத்தில் முதன்மை படுத்துங்கள். உங்கள் படத்தைப் பார்க்கும் போது சிறுவனின் மீது பார்வையாளனின் கவனம் செல்லவே கூடாது. உங்கள் படத்தைப் பார்த்து நீங்களே ஒரு வாக்கியத்தினைக் கூறும் போது பொம்மைகளைப் பற்றிய கருத்துகள் மட்டுமே வருமாறு கவனமாகப் பார்த்து கொள்ளுங்கள். அப்படி போட்டி தலைப்புடன் அதிகமாக ஒத்து வராத வார்த்தைகள் உங்கள் வாக்கியத்தில் வருமேயானால் உங்கள் படம் போட்டி தலைப்பிலிருந்து வெகுவாக மாறுபடுகிறது என அறிந்து கொள்ளவும்.
நாம இந்த பதிவுல பார்த்தது போட்டிக்குன்னு எடுக்கற படங்கள் தேர்ந்தெடுக்கப்படாததற்கான மிக முக்கியமான காரணங்களுன் ஒன்றான "போட்டித் தலைப்புக்கு ஏற்றாற் போல் படம் இல்லாதிருத்தல்" பற்றி. இது மாதிரி பல காரணங்கள் இருக்கு. ஆனா எல்லாத்தையும் ஒரே பதிவுல சொல்லறதுங்கிறது கொஞ்சம் கஷ்டமான விஷயம். அதனால ஒவ்வொரு மாசமும் இந்த முயற்சியைத் தொடரலாம்னு எதிர்பார்க்கறோம்.
இந்த மாதப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படாத வேறு சில படங்களும் அதற்கான காரணங்களும் கீழே.
அ. போட்டி தலைப்புக்கு ஏற்றாற் போல இல்லாதிருத்தல்
1. Mathan
2. Madhan.S.
3. Vivian
4. Srini
ஆ. படத்தில் குறுக்கீடுகள், வெளிச்சம் இல்லாமை, ஃபோகஸ் போதாமை
1. Goma
2. Somayajalu Shastri
3. Gowthaman
4. Jackie sekar
5. karthik_49870043
6. Nanani
7. MohanKumar
இ. தட்டையான ஒளியமைப்பு/காட்சியமைப்பு
1. Vasanth
2. Valli simhan
3. Oppaaree
4. Mathanlal
5. Murugesh
6. Kavaiprabhakaran
7. Boopathi
8. Jovin
9. Manivasagam
10. அருண்
11. Gadha
12. Kaaviyam
13. Nagappan
14. Nandhakumar
15. Rajesh.
16. Thiva
17. Vedivaal
ஈ. கீழுள்ள படங்கள் நன்றாக இருந்தும் சில காரணிகளால் முதல் பதினைந்துக்குள் வர இயலவில்லை.
1. Karuran - Background Distraction makes it to looks like tight cropping and deviating the concentration.
2. Manivannan - hmm... Selective lighting is good but too much of dead space on the frame.
3. Narayanan M - Background distortion
4. PMT - Pretty tight cropping
5. Parthasarathi - Probably contrasting background would have give nice perspective ? & bit more concentration needed with lighting on glossy surface like this
6 . S.M.Anbu Anand - Tho' it looks good on first look but overall Many distraction.
7. Sathiya - I really miss this in top 15. Lil wider angle with covering dog tail aswell would have made this shot perfect. Some what it gives incomplete feeling
8. TJ Vinodh - Nice try Vinodh. but it doesnt have punch which it needs for final 15
கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும், முதல் பதினைந்துக்குள் வந்தவர்களுக்கும், மீண்டும் மீண்டும் முயற்சித்து தங்களின் வெற்றிப் பாதைகளை சீரமைஇத்துக் கொண்டு வரும் அனைத்து போட்டியாளர்களுக்கும் குழும வாசகர்களுக்கும் குழுமம் சார்பில் நன்றியும் வணக்கமும்.
கூடிய விரைவில் முதல் மூன்றோடு சந்திப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
குட் அப்ரோச் இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் அப்படின்னு நிறைய பேர் ரிப்ளை செய்வாங்க பாருங்களேன் :))))
ReplyDeleteஅட, வந்தேன் வந்தேன் நானும் பதினைந்துக்குள்:)!
ReplyDeleteநன்றி புள்ளையாரப்பா! மற்ற பதினான்கு பேரும் என் வாழ்த்துக்களைப் புடியுங்கப்பா:)!
ஒவ்வொரு மாதமும் இது போன்ற விரிவான விளக்கங்களுடனான பதிவுகள் எங்களை நிச்சயம் மேம்படுத்திக் கொள்ள உதவும். நன்றி PiT!
அட! நெசமாவா?
ReplyDeleteமியாவ் மியாவ் மியாவ்
"ஆத்தா நான் முதல் பரிச்சையில பாஸாயிட்டேன்...."
ReplyDeleteஅப்பாடி முதல் 15க்குள் நானும் இருக்கிறேன் நினைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது... நன்றி PiT குழுவினருக்கு...
முதல் 15க்குள் வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeletePIT குழுவினருக்கு மிக்க நன்றி.
ReplyDeleteதெரிவான அனைத்து படங்களின் உரிமையாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
//ஒவ்வொரு மாதமும் இது போன்ற விரிவான விளக்கங்களுடனான பதிவுகள் எங்களை நிச்சயம் மேம்படுத்திக் கொள்ள உதவும்.
ReplyDeleteநன்றி PiT!//
Repeateeyyyyy
thanks all for your comments :
ReplyDeleteRamalakshmi & Ayilyan :)
We tried our best even last contests and time was main constraint. We shall try continuing this method on upcoming contests.
thanks again
வடை போச்சே..
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பர்களே
அருமையான விளக்கம் மற்றும் தேர்வு. நன்றி.
ReplyDeleteவாவ், எல்லா விநாயகரும் செலெக்ட் ஆகிட்டாங்களே :-)
ReplyDeleteபங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
PiT குழுவுக்கும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். அடுத்த மாச போட்டி தலைப்பை கொடுத்திங்கன்னா இப்பவே அதை பற்றி சிந்தித்து ஒரு படம் எடுக்கலாம். அக்டோபருக்கு சிந்தனை பண்ணியே காலம் போயிடுச்சு. நவம்பரை உடறதா இல்லை.
ReplyDeleteபடங்கள் நன்றாக இருந்தும் சில காரணிகளால் முதல் பதினைந்துக்குள் வர இயலவில்லை.
ReplyDeleteநாமெல்லாம் புகைப்படம் எடுத்துக்கிட்டுத் தான் இருக்கோம். நாம எடுக்கற புகைப்படத்தைப் பாத்து நல்லாருக்குன்னு நாலு பேரு பாராட்டத் தான் செய்யறாங்க. ஏன்? புகைப்படம் எடுக்கறது ஒரு கலை - Work of Art.
இந்த புகைப்பட கலையால் ஈர்க்கப்பட்டு தானே இதனை முயற்சியும் தாங்களின் கருத்துக்கள் எங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும் நன்றி.
Pmt
ஆஹா நான் குட்டைன்னு சொல்லி காட்டுறீக பார்த்தீகளா......
ReplyDeleteநன்றி மக்கா......இது வரைக்கும் தெரிந்தே பெரிய காரியம்....
ஜெயிக்க போற மக்களுக்கு இப்போவே வாழ்த்துக்கள்
.சரி சரி அடுத்த போட்டி தலைப்பை சொல்லுங்க....
ஹை.. என் படத்தை குட்டை பட்டியல்ல செலெக்ட் பணணதுக்கு நன்றி.
ReplyDeleteRajesh Natarajan
முதலில் முதல் குட்டை பட்டியலில் இடம் பெற்ற அனைவருக்கும் என் மனமார்த வாழ்த்துக்கள்......தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி...........அடுத்த முறை நிச்சியம் நீங்கள் கூறிய கருத்துக்களை பரிசீலித்து முயற்சி செய்கிறேன். நன்றி - ஸ்ரீனி
ReplyDeleteஅருமையான தேர்வு
ReplyDeleteவாழ்துக்கள்
// "ஆத்தா நான் முதல் பரிச்சையில பாஸாயிட்டேன்...."//
:-))
ராமலெஷ்மி மற்றும் ஆயில்யன் சொன்னது மிக சரி. மிக அருமையாக தெளிவாக ஒவ்வொரு படத்தையும் அதன் குறைநிறைகளை அப்படி நம் ஒவ்வொருவர் மனதும் ஆம் என்று உணர்கிறார் போல விளக்கியிருக்கிறீர்கள். அது போல குறைகளை எப்படி களைவது என்றும் கொடுத்தால் நிச்சயம் சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் பயனளிக்கும்... என்பது எனது தாழ்மையான கருத்து...
ReplyDeleteOMG!!! im also in "குட்டைப் பட்டியல்" for the first time. Thank you. குட்டை பட்டியலில் இடம் பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், Wish you all the best.
ReplyDelete// அடுத்த மாச போட்டி தலைப்பை கொடுத்திங்கன்னா இப்பவே அதை பற்றி சிந்தித்து ஒரு படம் எடுக்கலாம். //
ஆமாங்க, கொஞ்சம் பார்த்து செய்ங்க.
This comment has been removed by the author.
ReplyDeleteNice selection... Congrats!
ReplyDelete