Tuesday, October 13, 2009
இழைநய அமைப்பு சேர்ப்பது எப்படி ?
Posted by
Anand V
at
6:19 AM
6 comments:
Labels:
Gimp,
Lessons பாடங்கள்,
post production பிற்தயாரிப்பு
இழைநய அமைப்பு சேர்ப்பது எப்படி ?
முதலில் கூகுளாண்டவரிடம் சரணடைந்து இலவச textures தேடி வைத்துக் கொள்ளுங்கள். ( free Textures என்று தேடினால் ஏராளமாய் இலவசமாய் கிடைக்கும். )
தேவையான ப்டத்தை கிம்பில் திறவுங்கள் .
இனி இதற்கு தோதான படத்தை தேர்ந்து எடுக்க வேண்டும். உதாரணதிற்கு நான் இந்த கருங்கல் படத்தை எடுத்துக்கொண்டேன்.
இனி கருங்கல் படத்தை முழுவதுமாய் நகலெடுத்து, ஒரு புதிய லேயராய், மூலப் படத்தில் உருவாக்கி்க் கொள்ளுங்கள் ( Ctrl +A, Ctrl +C, Ctrl+V. நமக்கு நன்றாக தெரிந்த cut and paste தான் ). இனி கருங்கல் படம் தேவை இல்லை, அதை மூடி விடலாம்.
இனி இந்த லேயரை படத்தோடு இணைய வைக்க வேண்டும். லேயர் Mode Overlay என்று மாற்றிக் கொள்ளுங்கள் . ( இங்கே கொஞ்சம் விளையாடிப் பார்க்க வேணும். உங்களின் படத்துக்கு Soft light, Hard light, Multiply. Screen என்று எது சரியாகத் தோன்றுகிறதோ அதற்கு மாற்றிக் கொள்ளுங்கள் ).
விளைவு அதிகம் போலத் தோன்றினால் opacity குறைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் மொத்த வேலை. இனி வரும் பகுதிகள், மேலும் மெருக்கூட்டவே.
படத்திற்கு ஒரு சிவப்பு சாயல் வர, ஒரு புதிய லேயரை சிவப்பு வண்ணத்தால் நிரப்பி, அதை Color mode க்கு மாற்றி தேவைக்கு ஏற்ப அதன் opacity குறைத்துக் கொண்டேன்.
இந்த முறை , வண்ணப்படத்தில் மேற்கூறிய முறைகளை செய்யாமல், படத்தை முதலில் கருப்பு வெள்ளைக்கு மாற்றிக் கொண்டேன்.
விளையாடிப் பாருங்கள்.
மேலும் சில எடுத்துக்காட்டுக்கள்:
Subscribe to:
Post Comments (Atom)
பாஸ் இப்படி ஒரு நினைப்பு ரொம்ப நாளா மன்சிலே ஓடிக்கிட்டிருந்துச்சு டிரை பண்ணி பார்த்துடறேன்! :)
ReplyDeleteநன்னி!
Let me try..Thanks.
ReplyDeleteநன்றி... An& அண்ணாச்சி உங்களுடைய அருமையான பாடம்... அழகாய் படைத்தமைக்கு நன்றிகள் பல...
ReplyDeleteநன்றி ஆயில்யன், கோபிநாத், கமலகண்ணன்.
ReplyDeletenice.
ReplyDeleteஇழைநய அமைப்பு = texture?
adengappaa :)
-Surveysan
Nice post!!
ReplyDeleteWill try out sometime...