எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா??
இதற்கு முந்தைய பகுதிகள்....
பகுதி:1 கேமரா வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியது..
பகுதி:7 எந்த ZOOM RANGE வாங்கலாம்
பகுதி:8 வேகமான லென்ஸ் என்றால் என்ன?
VR , IS, OS, என்றால் என்ன?
இப்பொழுதெல்லாம் பொதுவாக பல கேமராக்களில் மற்றும் லென்ஸ்களில் VR,IS,OS என்று எழுதியிருப்பதை பார்த்திருப்பீர்கள்...இது என்ன அர்த்தம்?இதன் பயன் என்ன? என்பதை இப்பகுதியில் பார்ப்போம்..
புகைப்படம் எடுப்பவர்கள் பெரும்பாலானோர்,பல முக்கியமான நேரத்தில் படங்களை தெளிவில்லாமல் எடுத்து கசப்பான அனுபவங்களை சந்தித்திருப்பார்கள். இதற்கு முக்கியமான ஒரு காரணம் கேமராவை போதிய அளவு steadyயாக பிடிக்காமல் எடுத்ததன் விளைவாகும்.
நாம் சில நேரங்களில் போட்டோ எடுக்கும் போது நம்மால் கை ஆடாமல்(shake,vibration) போட்டோ எடுக்க சிரமப்படுவோம்.அந்த மாதிரி நேரங்களில் நாம் blur இல்லாமல் போட்டோ எடுப்பது சிரம
இக்குறைகளை நாம் TRIPOD பயன்படுத்தி சரி செய்து கொள்ளலாம்..ஆனால் TRIPOD என்பது still photographyஐ தவிர எல்லா இடங்களுக்கும் உதவாது,மேலும் அனைவராலும் வாங்க முடியாது..
இந்த மாதிரி சிரமங்களை கொஞ்சம் குறைத்து நமக்கு போட்டோவை தெளிவாக எடுக்க, லென்ஸ் மற்றும் கேமரா நமக்கு உதவி செய்யும் படி ஒரு டெக்னாலஜி உருவாக்கப்பட்டது..
நாம் செய்யும் கை நடுக்கத்தால் கேமராவை ஆட்டினாலும், இந்த டெக்னாலஜியானது கேமராவுக்குள் அல்லது லென்ஸிற்குள் கொஞ்சம் பம்மாத்து வேலைகளை செய்து, படமெடுக்கும் வேகத்தை அதிகரித்து, நம் படத்தை blur ஆகாமல் காப்பாற்றும்.இதனால் நமக்கு படம் தெளிவாக கிடைக்கும் படி இந்த டெக்னாலஜி உதவும்படி அமைக்கப்பட்டிருக்கின்றது..
இந்த டெக்னாலஜிக்கு ஒவ்வொரு கம்பெனியும் ஒவ்வொரு பெயர் வைத்திருக்கும்..அப்படி அந்த technology க்கு வைக்கபட்ட பெயர்கள் தான் மேலே சொன்ன பெயர் எல்லாம்..
அப்படி ஒவ்வொரு கம்பெனியும் அந்த featureக்கு என்ன பெயர் வைத்திருக்கின்றது என்று பார்ப்போம்...
1. NIKON - VR (vibration reduction)
2. CANON - IS(image stabilisation)
3. PANASONIC - MOIS(mega optical image stabilisation)
4. SIGMA - OS (optical stabilisation)
5. SONY - SUPER STEADY SHOT
6. KODAK - OPTICAL IMAGE STABILISED
7. PENTAX - SHAKE REDUCTION
8. FUJI - OPTICAL IMAGE STABILISATION
9.TAMRON - VC (vibration compensation).
10. OLYMPUS - DIGITAL IMAGE STABILISATION and SENSOR SHIFT STABILISATION
நமக்கு ஏன் கையை லேசாக ஆட்டினாலும் படம் blur ஆகின்றது?..
பொதுவாக வெளிச்சம் இல்லாத நேரங்களில் படம் எடுக்கும் போது shutter speedன் அளவு என்பது வெளிச்ச பற்றாக்குறைக்கு தகுந்த மாதிரி குறைந்து விடும்.. நம்மால் ஒரு குறிப்பிட்ட shutter speedற்கு(1/30secs) கீழ் (tripod உதவி இல்லாமல்) படம் எடுக்கும் போது கண்டிப்பாக படத்தை blur இல்லாமல் எடுப்பது என்பது மிகவும் சிரமம்..
பொதுவாக நாம் ஒரு படத்தை blur இல்லாமல் நல்ல ஷார்ப்பாக படம் எடுப்பதற்கு என்று ஒரு எழுதப்படாத ஷட்டர் ஸ்பீடு விதி இருக்கின்றது..
அது என்னவென்றால் ,ஒரு குறிப்பிட்ட zoom range ல் வைத்து நாம் படம் எடுக்கும் போது shutter speedன் அளவு என்பது, குறைந்தபட்சம் எந்த zoom range(MM) ல் உள்ளதோ அதே அளவு shutter speed அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்...
அதாவது, நாம் 100 mm ல் வைத்து எடுக்கும் போது shutter speed என்பது 1/100 secs அல்லது அதற்கும் மேல் இருந்தால் தான் படம் blur இல்லாமல் sharpஆக வரும் என்பது ஒரு கணக்கு..
ஆனால் இது எல்லா நேரங்களிலும் இதே மாதிரி shutter speed நமக்கு அமையாது..
இந்த மாதிரி பிரச்சனைகளை சில சமயம் ISO வை அதிகப்படுத்தி,அதனால் shutter speedம் அதிகமாக்கி படம் எடுக்கமுடியும்.ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கும் மேல் ISO அதிகமாகும் போது கண்டிப்பாக கேமராவின் தன்மைக்கு ஏற்ப noiseம் அதிகமாகும்...இதனால் படத்தின் sharpnessம் குறையும். எனவே முடிந்த வரை குறைவான ISO வில் வைத்து படம் எடுக்க முயற்சிக்க வேண்டும்..
அதுவுமில்லாமல் பல சிறிய வகை கேமராக்களில் ISO என்பதை நம்மால் manual ஆக அதிகப்படுத்த முடியாது..எல்லாம் auto isoவாக இருக்கும்.
இந்த மாதிரி நேரத்தில்,இந்த டெக்னாலஜியானது கேமராவில் அல்லது லென்ஸில் இருந்தால்,நாம் அதற்கான சுவிட்சுஐ போட்டதும்
நமக்கு shutter speed ஐ 2 or 3 stop அளவு(கேமரா,லென்ஸுக்கு தகுந்த மாதிரி) கொஞ்சம் அதிகப்படுத்தி கொடுக்கும்..
உதாரணமாக,ஒரு படத்தை எடுக்கும் போது ,ஷ்ட்டர் ஸ்பீடு என்பது 1/20secs என்று இருந்தால், இந்த டெக்னாலஜியை பயன்படுத்தும் போது 1/40secsல் தரும் வேகத்தில் படம் எடுத்து தர உதவும்.. இதனால் நமக்கு படம் blur இல்லாமல் அமையும்..
ஆனால் 1/40secsஆக மாறாது.
இது எந்த அளவுக்கு உதவும்?
எனக்கு ஒரு cousin இருக்கிறார்,சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த technology பரவலாக இல்லாத ஆரம்ப காலத்தில், தான் ஒரு கேமரா பார்த்ததாக கூறினார்..அதில் ஒரு புது technology பார்த்தேன்,அதுல வெச்சு போட்டோ எடுத்தா ஆடறதே இல்லை, நானும்(cousin) கேமரவாவை வாங்கி கையை ஒரு ஆட்டு ஆட்டிபோட்டோ எடுத்து பார்த்தேன்(கிட்டதட்ட ஒரு `O` போட்டு காண்பித்தார்), போட்டோ கொஞ்சம் கூட ஆடாமல் தெளிவா இருந்தது என்று சொல்லி பெருமை அடித்தார்.. நானும் அப்ப கொஞ்சமா நம்பி தான் போனேன்..
ஆனால் அந்த மாதிரி எல்லாம் கிடையவே கிடையாது..
இது எந்தளவுக்கு உபயோகப்படுகின்றது என்பதை கீழே உள்ள படங்களை பார்த்து தெரிந்து கொள்வோம்...
VR (ON)
VR (OFF)
மேலே உள்ள ரெண்டு படங்களையும் பார்த்தால் நம்மால் பெரிதாக குறை கண்டுபிடிக்க முடியாது.. அப்படியே சிறிய சைசில் ப்ரிண்ட் போட்டால் ஒரு வித்தியாசமும் தெரியாது..
ஆனால் அதையே க்ராப் செய்து கீழே உள்ள படங்களை பார்த்தால் நமக்கு VR ன் தேவை புரியும்..
VR (ON)
VR (OFF)
.இரண்டிற்கும் உள்ள blur வித்தியாசத்தை நாம் பார்க்கலாம்..இதனால் நமக்கு படங்கள் ஷார்ப்பாக கிடைக்கின்றது...
கீழே உள்ள படங்களும் க்ராப் செய்யப்பட்டுள்ள்து...
VR (ON)
VR (OFF)
சில தகவல்கள்:
1.பொதுவாக இந்த featureஆனது கேமராவை வைத்திருப்பவர் ஒரு குறிப்பிட்ட அளவு வரை தெரியாமல் அல்லது முடியாமல் கைகள்ஆடினால்/ நடுங்கினால் மட்டுமே பயன்படும்..மாறாக எடுக்க கூடிய subject ஆனது ஆடினாலோ,அசைந்தாலோ கண்டிப்பாக பயன் இல்லை.. உதாரணமாக ஒரு குழந்தை ஓடுவது, வாகனங்கள் ஓடுவது, பறவைகள் பறப்பது போன்றவற்றை எடுப்பதற்கு இது பயன்படாது..இதற்கு வேகமான லென்ஸ் தான் வேண்டும்..
2.இந்த பயனானது ஒரு குறிப்பிட்ட ஷட்டர் ஸ்பீடு (upto 1/15secs)வரை தான் effectiveஆக பயன்படும்...
வெளிச்சம் குறைவால் இந்த ஸ்பீடுக்கு கீழ்(1/10sec,1/5secs என்று) போனால் கண்டிப்பாக TRIPOD இல்லாமல் தெளிவாக எடுக்க முடியாது.
3.அதே மாதிரி வெளிச்சம் போதுமான அளவு இருந்து,shutter speedன் அளவு 1/40secsற்கும் மேல் (1/50secs,1/60secs etc.etc.)போகும் போது கண்டிப்பாக இந்த VR feature பெரும்பாலும் பயன் இல்லை..எனவே,இந்த பயனானது 1/15secs முதல் 1/40secs வரை வைத்து எடுக்கும் போது தான் அதிகம் பயன்படும்.மற்றபடி தேவையில்லை.
4.இந்த பயன்பாடு எல்லாம் zoom range 60mm முதல் 200mm வரை தான் 1/20secs to 1/40secs shutter speedல் தெளிவாக எடுக்க முடியும்.. அதாவது 40mm ல் வைத்து எடுக்கும் போது 1/20secsல் படத்தை blur இல்லாமல் எடுக்க முடிந்ததை, அதுவே 150mmல் வைத்து எடுக்கும் போது 1/20secல் வைத்து blur இல்லாமல் கண்டிப்பாக எடுக்க முடியாது.. எனவே zoom range அதிகம் ஆகாக நமக்கு shutter speed ன் தேவை அதிகமாகிக்கொண்டே இருக்கும்..
5 wide angle லென்ஸ்களை பொருத்தவரையில் இது தேவையில்லை.. அதாவது 12MM - 40MM வரையில் இந்த feature பெரும்பாலும் அதிக பயன் இல்லை... உதாரணமாக NIKON 18-55MM VR லென்ஸ் என்பது ரூ.6500 விற்கின்றார்கள்,ஆனால் பழைய NIKON 18-55mm லென்ஸ் ( VR இல்லாதது) ரூ.5000க்கு கிடைக்கும்.. இந்த லென்ஸ்களை பொறுத்த வரையில் நாம் பழைய லென்ஸையே வாங்கி ரூ.1500 ஐ மிச்சம் செய்யலாம்..
6. zoom range(100mmக்கு மேல்) அதிகமாகும் போது தான் நம் கை லேசாக ஆடினாலும் அதை (கை நடுங்குவதை)தெளிவாக நாம் viewfinder/LCDfinderல் பார்க்கும்போது புரிந்து கொள்ளலாம்.. இதனால் நம்க்கு மேலும் shutter speed ன் தேவை அதிகரிக்கும்.. இந்த மாதிரி நேரங்களில் நமக்கு fast lens தான் பயன்படும்.
7. focus distanceஐ பொருத்தும் இதன் பயன்பாடு மாறும்.. ரொம்ப close ஆக எடுக்கும் படங்களில் (1:1 , 1:2, 1:3 magnification ratioவில்) இந்த VR , IS பெரிதாக பயன்படாது. இந்த மாதிரி macro படங்களை எடுப்பதற்கு கண்டிப்பாக TRIPOD வேண்டும்...
8. TRIPOD பயன்படுத்தி படம் எடுக்கும் போது இந்த feature ஐ பயன்படுத்தக்கூடாது.. இதனால் படத்தின் ஷார்ப்னெஸ் பாதிக்கும் என்று கூறுகின்றனர்.. அதாவது இந்த feature என்பது handheld ஷாட் எடுப்பதற்கு மட்டுமே...
இந்த பகுதி குறித்து ஏதாவது சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் கேட்கவும்...மேலும் தங்களது மேலான கருத்துக்களையும் தெரிவிக்கவும்..
நன்றி
கருவாயன்
பகுதி:2 எத்தனை மெகாபிக்சல்கள் வாங்கலாம்
பகுதி:3 மெகாபிக்சல்களின் தேவைகள்,தகவல்கள்
பகுதி:4 டிஜிட்டல் சென்சார்கள் பற்றி..
பகுதி:5 சென்சார் பெட்டிக்குள் பிக்சல் பழங்கள்
பகுதி:6 கேமராவின் கண்கள் - லென்ஸ் பகுதி:3 மெகாபிக்சல்களின் தேவைகள்,தகவல்கள்

கை நடுக்கம் ஆயிருது சில சமயமுன்னு இமேஜ் ஸ்டெபிலைசர் இருக்கும் கேமெரா வாங்கினோம். ஆனா அதுலே எடுக்கும் படங்கள் 10 டைம்ஸ் optical ZOOM செய்து க்ளோஸ் அப் எடுத்தால் அப்படி ஒன்னும் நல்லா வரலைங்களே.
ReplyDeleteஎங்கே தப்பு செய்யறோமுன்னு விளங்கலை.
துளசி மேடம், இந்த பாயிண்ட்டை கவனிக்கவும்.
ReplyDeleteஎன்ன கேமரா வச்சிருக்கீங்க. சில கேமராவில், verticalஆ புடிச்சா IS வேலை செய்யாதுன்னு படிச்ச ஞாபகம்.
///2.இந்த பயனானது ஒரு குறிப்பிட்ட ஷட்டர் ஸ்பீடு (upto 1/15secs)வரை தான் effectiveஆக பயன்படும்...
வெளிச்சம் குறைவால் இந்த ஸ்பீடுக்கு கீழ்(1/10sec,1/5secs என்று) போனால் கண்டிப்பாக TRIPOD இல்லாமல் தெளிவாக எடுக்க முடியாது.////
வணக்கம் சர்வேஸன்.
ReplyDeleteநான் படம் எடுக்கும் அழகுக்கு பிரமாதமா உள்ள கேமெராவா வாங்கி இருப்பேன்?
Samsung WB 500. 10 X optical zoom
10.2 Mega Pixels
எல்லா இடத்துக்கும் tripod தூக்கிட்டு அலைய முடியுதா? முக்கியமா கலை நிகழ்ச்சிகளுக்கு சபாக்களுக்குப்போகும்போது:(
துளசி மேடம், நல்ல கேமராவாத்தான் தெரியுது.
ReplyDeleteIS enable பண்ணியாச்சான்னு ஆப்ஷன்ஸ்ல பாத்து நிச்சயம் பண்ணிடுங்க.
zoom செய்யும்போது, நடுக்கத்தை குறைப்பது ரொம்பவே கஷ்டம். காஸ்ட்லி கேமராவும் கூட பெருசா கை கொடுப்பதில்லை. குறிப்பா, indoor கலை நிகழ்ச்சிகளிலெல்லாம் போதிய வெளிச்சமும் இருக்காது. ஷட்டர் வேகம் மெதுவாத்தான் இருக்கும். 1/60 secsஐ விட கெம்மியா ஸ்பீடு இருந்தா, படம் நடுக்கமாத்தான் வரும்.
my advice, indoor கலை நிகழ்ச்சிகளுக்குப் போனா, அனுபவிக்கணும், கேமராவை கொண்டு போய் ஆராயக் கூடாது ;)
//my advice, indoor கலை நிகழ்ச்சிகளுக்குப் போனா, அனுபவிக்கணும், கேமராவை கொண்டு போய் ஆராயக் கூடாது ;)//
ReplyDeleteஉண்மை:))))))
//அதாவது, நாம் 100 mm ல் வைத்து எடுக்கும் போது shutter speed என்பது 1/100 secs அல்லது அதற்கும் மேல் இருந்தால் தான் படம் blur இல்லாமல் sharpஆக வரும் என்பது ஒரு கணக்கு..//
ReplyDeleteIs the same applicable for cropped sensor also? because 100mm becomes 160mm na?
so i understand that the multiplying fact as applicable for focal length has to be considered here too, to decide whether to have a tripod or not.
Is this correct?
And how does this apply to P&S with very small sensors?
இது ரொம்ப நாளா எனக்கு வெளங்காத ஒரு விஷயம்.
@நாகப்பன்...
ReplyDeleteசுட்டிக்காட்டியதற்கு நன்றி நண்பரே... 100MM அனைத்து கேமராக்களுக்கும் பொதுவான 35MM format படி தான்.. தெரிவிக்க மறந்துவிட்டேன்..DSLR ல் 100mm ல் வைத்து எடுத்தால் shutter speed 1/150secs இருக்க வேண்டும்..
35mm format படி இந்த விதி அமைவதால், இது சின்ன சென்சார் மற்றும் எல்லா கேமராக்களும் இந்த விதி பொதுவே..
அதாவது உதாரணமாக உங்களது P&S cameraவில் 15mm ல் வைத்து எடுக்கும் போது உங்களது உண்மையான zoom அளவு என்பது 75MM (35mm format படி) என்று இருக்கும்..எனவே இந்த நேரத்தில் உங்களது shutter speed என்பது 1/75secs என்று இருக்க வேண்டும்.. 1/15secs இருக்கக்கூடாது..
அதே சமயம் இந்த விதி தான் இருக்கவேண்டும் என்று இல்லை..அவரவர் கை உறுதியை பொறுத்து இந்த ஷட்டர் ஸ்பீடுக்கு கீழும் நல்ல ஷார்ப்பாக எடுக்கலாம்..
-கருவாயன்
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.
ReplyDelete