Saturday, March 20, 2010

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா?? - பாகம் - 7 / எந்த ZOOM RANGE வாங்கலாம்...?

20 comments:
 
எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா??
இதற்கு முந்தைய பகுதிகள்....
பகுதி:1 கேமரா வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியது.. பகுதி:6 கேமராவின் கண்கள் - லென்ஸ்
ZOOM RANGE
நாம் முதன் முதலில் கேமரா வாங்கும் போது வரும் ஒரு முக்கிய குழப்பம் எந்த zoom range வாங்கலாம் என்பது தான்.. லென்ஸின் zoom range என்பது தூரத்தில் இருப்பதை முன்- பின் நகராமல், வசதியாக ஒரு இடத்தில் இருந்து கொண்டே எளிதாக படம் எடுப்பதற்காக அமைக்கப்படுகின்றன. இது கீழே உள்ளவாறு இரண்டு வகைகளில் மாறும்..
  1. நாம் கண்களால் அதிகபட்சம் பார்க்க முடிந்த அளவுக்கும் (50mm) கீழ் உள்ள அளவுகளை(35mm,28mm,18mm..etc) wide angle எனவும்,
  2. 50mm மேல் வரும் அளவுகளை (70mm,120mm,200mm,300mm etc) tele photo எனவும் இரண்டு வகைப்படும
24mmற்கும் கீழ் உள்ள zoom range ஆன 10mm முதல் 24mm வரையிலான zoom range அளவுகளை ultra wide angle என்று சொல்வார்கள்.
இந்த ultra wide angle அளவுகள் என்பதை நாம் DSLR லென்ஸில் மட்டுமே காணலாம்..
சிறிய வகை கேமராக்களில் அதிகபட்சமாக wide angle என்பது 24mmல் இருந்து தான் தொடங்குகின்றன.. ultra wide angle என்பது சிறிய கேமராக்களில் இது வரையில் வரவில்லை..
telezoom என்பது 70mm முதல் 200mm வரையிலான அளவுகளை குறிக்கும்.. இதற்கும் மேல் வரும் 200mm முதல் 400mm,600mm etc.. அளவுகளை super telezoom என்று கூறப்படுகின்றன.. விதவிதமான zoom range லென்ஸ்கள்.. DSLR ஐ பொருத்த வரையில் wide angle / tele photo லென்ஸ்கள் என்பது தனித்தனியாகவும் கிடைக்கும்,(உ.ம். 12-24,10-22,10-17.. 70-300,55-200,80-400) இரண்டும் சேர்ந்தார்போலவும் கிடைக்கும்.. (உ.ம். 18-55,18-70,18-135,18-200) இதில் நம் விருப்பம் போல் தேவையான லென்ஸ்களை மாற்றிக்கொள்ளலாம்.
ஆனால், சிறிய மற்றும் ப்ரொசுமர் கேமராக்களை பொறுத்த வரையில் லென்ஸ் மற்றும் கேமரா இரண்டும் fixed ஆக தான் வரும்.. லென்ஸ்களை நம் விருப்பம் போல் மாற்றிக்கொள்ள முடியாது.. ஒரு தடவை வாங்கிவிட்டால் அவ்வளவு தான்.. மீண்டும் லென்ஸை மாற்றமுடியாது.. இதனால் தான் சிறிய மற்றும் prosume கேமராக்களில், wide angle மற்றும் telephoto இவ்விரண்டும் சேர்ந்து வருகின்ற மாதிரி பல்வேறு அளவுகளில் zoom range விதவிதமாக வருகின்றன..
24mm-70mm, 28mm-80mm, 35mm-105mm, 35mm-120mm, 24mm-140mm, 28mm-300mm, 35mm-500mm.. etc ,etc.. (மேலே சொன்னது எல்லாம் 35mm format படி உள்ள அளவுகள்..)
சிறிய கேமராக்களில் எல்லாம் மேலே சொன்ன அளவுகளில் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.வேறு அளவுகளில் தான் குறிப்பிட்டிருப்பார்கள்.. 6mm-30mm , 4.5mm - 24.5mm...etc என்று தான் குறிப்பிட்டிருப்பார்கள்.. ஆனால் இதன் உண்மையான zoom range என்பது சென்சார்களின் க்ராப்பிற்கு ஏற்ப மாறுபடும்.. (இது எப்படி என்று இந்த பகுதியை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்..) இதன் உண்மையான அளவு (35mm format) எது என்பதை, நாம் கேமராவின் manualல் தான் பார்த்து தெரிந்து கொள்ளமுடியும்.. WIDE ANGLE VS TELE PHOTO LENS.. சிறிய கேமராக்களில் zoom range என்பது பல வகைகள் வருகின்றன.. இவற்றில் எது முக்கியம்?? உதாரணமாக இரண்டு zoom range களை எடுத்துக்கொள்வோம்.. 35mm-105mm மற்றும் 28mm-80mm. இவ்விரண்டில் 35-105mm ல் tele zoom(80-105mm) அதிகம்,
28 - 80mm ல் wide angle(28-35mm) அதிகம்..
35-105mm zoom range என்பது அளவுகளில் பெரியதாக தெரிந்தாலும், கணக்கு போட்டு பார்த்தால் இரண்டுமே ஒரே X அளவு தான். இவ்விரண்டு zoom range ல்,
நாம் 28-80mm lens பயன்படுத்தினால், 80-105mm என்கிற zoom range நமக்கு மிஸ் ஆகின்றது..
105mmல் வைத்து ஒரு இடத்தில் இருந்து படம் எடுப்பதை,80mmல் வைத்து எடுக்கும் போது, இன்னும் ஒரு அடி முன்னே சென்றால் மட்டுமே படம் எடுக்கலாம்.. உதாரணமாக, ஒரே இடத்தில் இருந்து கொண்டு 80mm மற்றும் 105mm ல் வைத்து எடுத்தால் வரும் வித்தியாசத்தை கீழே உள்ள படத்தை பார்த்தால் தெரியும்.. 80mm 105mm 80mm ல் வைத்து ஒரு அடி முன்னே சென்று எடுத்தால்,105mm ல் வரும் படத்தை எடுத்து விடலாம்.. 80-105mm zoom range ஆல் நமக்கு ஒரு அடி முன்னே செல்வது மிச்சம் ஆகிறது.. இதுவே, 35-105mm பயன்படுத்தினால்,28-35mm என்கிற wide angle zoom range மிஸ் ஆகிறது.. உதாரணமாக, கீழே உள்ள படத்தில் 28mmல் வைத்து, ஒரு இடத்தில் இருந்து 7 நபர்களை எடுக்கலாம் , 28mm ஆனால் அதே இடத்தில் இருந்து 35mmல் வைத்து எடுத்தால் 5 நபர்களை தான் எடுக்க முடியும்.. 35mm அப்படி 7 நபர்களையும் எடுக்க வேண்டும் என்றால் இரண்டு அடி பின்னால் செல்ல வேண்டும்.. 28mmஆல் நமக்கு இரண்டு அடி பின்னால் செல்வது மிச்சம் ஆகிறது..
  • என்னை பொறுத்த வரையில் முன்னால் செல்வது கொஞ்சம் சுலபம், பின்னால் செல்வது கொஞ்சம் சிரமம்..ஏனென்றால் மேலே உள்ள அந்த சிறுவர்கள் படம் ஒரு சுவரில் சாய்ந்து கொண்டு எடுத்தது..28mm இருந்ததால் என்னால் 7 பேரையும் எடுக்க முடிந்தது.. இதுவே 35mm லென்ஸாக இருந்திருந்தால் நான் பின்னால் போக வேண்டும்.. ஆனால்என்னால் சுவருக்கு பின்னால் போய் எடுக்க முடியாது..இந்த மாதிரி நேரங்களில் wide angle என்பது மிகவும் பயன்படும்.
  • ஒரு இடத்தில் இருந்து 105mm ல் வைத்து எடுப்பதை,80mm ல் வைத்து கொஞ்சம் முன்னே சென்று அதே அளவை எடுத்தால் picture குவாலிட்டி நன்றாக இருக்கும்..
  • இவற்றில் 35mm-105mm என்பது பெரிதாக தோன்றினாலும், 28-80mm என்று இருப்பது தான் நமது பயன்பாட்டிற்கு சிறந்தது என்று சொல்வேன்..
  • அதிக அளவு tele zoom என்பதை விட, குறைந்த wide zoom தான் மிக முக்கியம்..
  • 26mm,24mm என்று வந்தால் ரொம்பவும் நல்லது..
  • ஏனென்றால் LANDSCAPE,GROUP SHOTS,FAMILY SHOTS போன்ற படங்களை எடுக்க wide angle என்பது மிகவும் அவசியம்..
எந்தெந்த zoom range எந்தெந்த படங்களை எடுக்க அவசியம்?
பொதுவாக நாம் அதிகமாக எடுக்க விருப்பபடுகின்ற, landscape, mountains, family shots, group shots,
போன்ற படங்களை எடுக்க 28mm - 50mm zoom range எனபதே போதும்.. இந்த மாதிரி படங்களை எடுப்பதற்கு wide angle என்பது மிகவும் அவசியம் அதுவும் ஊட்டி,கொடைக்கானல் போன்ற landscape, mountains போன்றவற்றை எடுக்கும் போது இன்னும் ultra wide angle(12mm-24mm) இருந்தால் இன்னும் சிறப்பாக வரும்...ஆனால் 24mm ற்கும் கீழ் wide angle என்பது சிறிய கேமராக்களில் இப்போதைக்கு வழி இல்லை... DSLR லென்ஸ் மட்டுமே உண்டு.. portrait, head and shoulder shots, full standing shots, table top photos, குழந்தைகளின் candit shots, ஒரு சில street photography..
போன்றவற்றை எடுக்க 50mm - 120mm வரையிலான medium telephoto zoom பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.. தெரியாமல் ஒருவரை எடுப்பதற்கு, ஒரு சில candit street photographyக்கு, tight close up shots போன்றவற்றை எடுக்க 100mm-250mm இருந்தால் போதும்.. தூரத்தில் இருக்கும் பறவைகளை ,wildlife photos போன்றவைகளை படம் எடுப்பதற்கு மட்டும் தான் 250mm - 500mm வரை வேண்டும் அல்லது சிறிய பறவை/சப்ஜெக்டாக இருந்தால் 500mmற்கும் அதிகமாக இருக்க வேண்டும் .. மற்ற வகை படங்களை எடுப்பதற்கு இந்த zoom range என்பது தேவையில்லை.. இவற்றில் நாம் எந்த வகையில் அதிகம் எடுக்கின்றோம் என்று தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் zoom லென்ஸ் இருந்தால் போதும்.. மற்றபடி அதிக zoom என்பது நமக்கு தேவையில்லை.. டிப்ஸ்
  • 200mm - 500mm போன்ற zoom range ல் படம் எடுக்கும் போது கை உறுதியாக இருந்தால் தான் படம் தெளிவாக எடுக்க முடியும்..
  • zoom range அதிகமாக அதிகமாக சிறிது ஆடினாலும் படம் blur ஆகிவிடும்..
  • அதுவுமில்லாமல் tripod இல்லாமல் 300mm ற்கும் மேல் தெளிவாக படம் எடுப்பது என்பது எளிதான காரியம் இல்லை.. வெளிச்சமும் அதிகம் வேண்டும்..
  • எந்த வகையான zoom lens ஆக இருந்தாலும் 5X ற்கும் மேல் இருந்தால் கண்டிப்பாக picture quality என்பது படிப்படியாக குறைவாக தான் இருக்கும்.. படம் ஷார்ப்னெஸ் இல்லாமல் சாஃப்டாகத்தான் படம் வரும்..
  • அதிகமான zoom range என்றால் விலை அதிகமாக தான் இருக்கும்,இதனால் நல்ல குவாலிட்டியாக தான் இருக்கும்,பலன் அதிகம் என்று அவசரப்பட்டு அதிக விலை கொடுத்து உங்களுக்கு தேவையில்லாத zoom rangeஐ வாங்க வேண்டாம்..
  • எத்தனை முறை நாம் wildlife,பறவைகளை படம் எடுக்கின்றோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.. என்றைக்கோ ஒரு தடவை அதுவும் பழக்கமில்லாமல்,வெளிச்சம் இல்லாமல்,தெளிவுமில்லாமல் எடுப்பதற்காக ஏன் அதிகமான zoom range வாங்கி அதிக விலை குடுக்கவேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்
  • டெலி சூம் என்பது குறைவான வித்தியாசம்(120mm vs 135mm, 105mm vs 120mm..etc.) என்றால் அதை பற்றி கவலைப்படவேண்டாம்.. ஒரு அடி முன்னால் வைத்தால் போதும் அதை எடுத்து விடலாம்.. விலையும் குறைவாக இருக்கும்..இது ஒரு பெரிய விசயமில்லை..
  • ஆனால், வைட் ஆங்கிள் என்பது குறைவான வித்தியாசம்(35mm vs 28mm, 28mm vs 24mm..) என்றாலும் அது நமக்கு அவசியமானதாக இருக்கும்..wide angle என்பது நமக்கு மிகவும் நல்லது..இதற்காக நாம் விலை கொஞ்சம் கூடுதலாக கொடுக்கலாம்.
  • 28mm(35mm formatன் படி) மற்றும் அதற்கும் கீழ் உள்ள அளவுகளில் தொடங்கும் கேமராக்களையே பார்த்து வாங்கவும்.. 35mm என்று தொடங்கும் லென்ஸ்கள் உன்மையான வைட் ஆங்கிள் கிடையாது..
  • தூரமாக இருப்பதை zoom செய்து எடுப்பதை விட முடிந்த அளவு அருகில் சென்று zoomஐ குறைத்து எடுத்தால் படம் நல்ல தெளிவாக வரும்..
  • basic compact கேமராவை பொறுத்த வரையில், நாம் நடைமுறையில் பொதுவாக எடுக்கும் படங்களுக்கு 28-80mm அல்லது 28-105mm zoom அளவே போதும் என்பது என் கருத்து..
  • 120mm க்கும் மேல் வைத்து படம் எடுப்பதற்க்கு compact cameraவை பொருத்த வரையில் LCD finderஐ மட்டும் வைத்து படம் எடுப்பது சற்று சிரமம்..கை கொஞ்சம் நடுங்கினாலும் படம் blur ஆக தான் வரும்.
லென்ஸில் zoom range என்பது முக்கியமாக இருப்பதை போல், நாம் அதிகமாக ஆசைப்படுகின்ற படங்களை எடுப்பதற்கு வேகமான லென்ஸ் தான் முக்கியம்.. இதை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்..
போயிட்டு வரனுங்க....
-கருவாயன்

20 comments:

  1. நன்றி கருவாயன் உங்களின் தெள்ளத் தெளிவான விளக்கம் எங்களுக்கு மிக அருமையாக புரிந்தது.

    ஒரு சந்தேகம். 12X Zoom உள்ள Point Sout ல் எடுக்கின்ற அளவுக்கு மிக நெருக்கமாக Zoom பன்ன முடியலையே

    அதற்கு எந்த வகை Zoom லென்ஸ் தேவை என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  2. """'''ஒரு சந்தேகம். 12X Zoom உள்ள Point Sout ல் எடுக்கின்ற அளவுக்கு மிக நெருக்கமாக Zoom பன்ன முடியலையே
    அதற்கு எந்த வகை Zoom லென்ஸ் தேவை என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.'''"""

    @kamalakannan...

    12X என்றால் 35MM format படி கிட்டதட்ட 350MM ல் வைத்து எடுப்பதற்கு சமம்..

    12Xன் சரியான அளவு என்பது நீங்கள் பயன்படுத்தும் லென்ஸில் ஆரம்ப அளவில் இருந்து 12 முறை multiplication செய்தால் வரும் அளவாகும்..

    அதை கேமராவின் manualஐ பார்த்தால் தான் தெரியும்..

    உதாரணமாக, உங்கள் லென்ஸ் 28mm என்று தொடங்கினால் அது 1X..இதுவே 12X என்றால் 28mm * 12X = 336mm ஆகும்..

    ஆனால் உங்கள் லென்ஸில் 35mm என்பது 1X ஆக இருந்தால் 12X என்பது 35mm * 12X = 420mm ஆகும்.

    ஒரு சந்தேகம் .. எந்த கேமராவில் உங்களால் நெருக்கமாக zoom செய்யமுடியவில்லை?? DSLR ல் பயன்படுத்த முடியவில்லை என்று சொல்கிறீர்களா??

    -கருவாயன்

    ReplyDelete
  3. நான் ஏற்கனவே உபயோகப்படுத்தியது panasonic lumix fz20

    தற்போது உபயோகப்படுத்துவது Canon 500D + 55-250mm Lens

    சரியா இப்போது சொல்லுங்கள்...

    ReplyDelete
  4. இணையத்தில் சுட்டது....
    35mm இற்கு ஈடான Panasonic Lumix DMC-FZ20 இனது zoom 36-432mm.
    55-250mm லென்சுடன் Canon 500D பயன்படுத்தும்போது zoom ஆனது 88-400mm இற்கு இணையாகின்றது (35mm ஒப்பீட்டில்).

    ReplyDelete
  5. @கமனக்கண்ணன்...
    welcome சொல்வது மிக சரி.. உங்கள் panasonic fz20ல் 36mm என்பது 1X.. இதுவே 12X என்றால்..
    36mm X 12 = 432mm..

    இதுவே உங்கள் கேனான் 55-200mm லென்ஸ் என்பது உங்கள் கேமராவின் சென்சார் க்ராப் படி 88mm - 400mm என்பது கவர் ஆகும்..

    panasonic fz20 = 36mm - 432mm
    canon 55-250mm = 88mm - 400mm

    நீங்கள் 55-250mm லென்ஸ் மட்டும் வைத்திருந்தால்...panasonic fz20ன் அளவுடன் ஒப்பிட்டு பார்த்தால் உங்களுக்கு 36-88mm மற்றும் 401-432mm zoom range மிஸ் ஆகின்றது..

    401-432mm மிஸ் ஆவது ஒரு பெரிய விசயமில்லை..கேனான் லென்ஸில் 250mm ல் வைத்து எடுத்தால் கிட்டதட்ட panasonicன் 12X ல் வைத்து எடுப்பதும் ஒரே அளவு தான்..

    ஆனால் wide angle லென்ஸ் உங்களிடம் இல்லையென்றால் நீங்கள் இன்னொரு லென்ஸ் வாங்கினால் தான் சரி வரும்..

    இதற்கு, உங்களிடம் canon 18-55mm kit lens இல்லையா? இது இருந்தால், உங்கள் இரு லென்ஸ்களையும் சேர்த்து பார்த்தால் மொத்தமாக 29-400mm வரை உங்கள் கேனானில் கவர் ஆகும்..

    அதாவது,
    canon 18-55mm + 55-250mm = 29 - 400mm என்று லென்ஸின் அளவாக இருக்கும்..

    -கருவாயன்

    ReplyDelete
  6. நன்றி welcome & கருவாயன் இருவருக்கும். நீங்கள் சொன்ன விளக்கத்திற்கு மிக்க நன்றி...

    400mm என்பது சரி. என்னிடம் canon 18-55mm + 55-250mm இரண்டும் இருக்கிறது. அதை எப்படி ஒன்றாக இணைப்பது என்ற விளக்கம் தாருங்கள்...

    உங்களின் பதிலுரைக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  7. Kamal, Thanks for asking these questions very clear :)

    I tried to ask the same question few weeks before... may be did not asked properly, i have also canon 18-55mm + 55-250mm, is there any interface to get 29 - 400mm.?

    ReplyDelete
  8. Hi kamal, Thanks for asking this question, it is very clear. I have tried to ask the same but may be i didn't asked properly.

    This what my question too, I have canon 450D, 18-55mm + 55-250mm. Is there any interface available to get 29 - 400mm?

    ReplyDelete
  9. No interface is available to join lenses to get wide range. Instead, wide range lenses are available.
    Eg: Canon 18-200mm, Tamron 18-270mm

    ReplyDelete
  10. @கமலகண்ணன் & கபிலன்... விஜய் சொல்வது மிக சரி..

    நீங்கள் வைத்திருக்கும் இரு லென்ஸ்களையும் இனைத்து ஒரே லென்ஸாக எல்லாம் எடுக்க வாய்ப்பே இல்லை... இரண்டையும் தனிதனியாக தான் எடுக்க முடியும்..

    அப்படி ஒரே லென்ஸாகதான் வேண்டும் என்றால் விஜய் குறிப்பிட்டுருப்பதைப்போல்,கீழே உள்ள

    1. canon 18-200mm ( 29mm - 320mm )
    2. tamron 18-270mm ( 29mm - 432mm )
    3. sigma 18-250mm ( 29mm - 400mm )

    போன்ற லென்ஸ்கள் தான் வழி..

    ஆனால் இவையெல்லாம் நீங்கள் வைத்திருக்கும் இரு லென்ஸ்களை விட picture quality கண்டிப்பாக குறைவாக தான் இருக்கும்..அதுவுமில்லாமல் கொஞ்சம் slow lens.. விலையும் அதிகம்..

    ஆகவே நீங்கள் வைத்திருக்கும் இரு லென்ஸ்களுமே மிகவும் நல்ல லென்ஸ்.. எனவே அதையெல்லாம் நீங்கள் மாற்ற தேவையில்லை..

    என்ன ஒரே பிரச்சினை... லென்ஸை மாற்ற வேண்டியிருக்கும்..

    ReplyDelete
  11. நன்றி கருவாயன் தெளிவான புரிகிறார் போல மிக அருமையாக விளக்கத்திற்கு மிக்க மிக்க நன்றி...

    ReplyDelete
  12. வணக்கம் கருவாயன் அவர்களே,

    உங்கள் வலைப்பதிவு அருமையோ அருமை..

    http://www.dpreview.com/products/nikon/compacts/nikon_cps3100

    மேலே குறிப்பிட கமரா நல்லதா ..என்று எனக்கு அறிவுரை கூறுங்கள் ஐயா!

    தொரட்டும் உங்கள் பணி

    வாழ்க நலமுடன்.
    ராம்கான்

    ReplyDelete
  13. @ராம்கான்..சிறிய பட்ஜெட் கேமராக்களை பொறுத்தவரையில் நல்லது,மோசம் என்று பெரிதாக கண்டுபிடிக்க முடியாது... ஏனென்றால் மிக விரைவில் மாடல்கள் மாறிக்கொண்டே இருக்கின்றது..

    image quality என்று பார்த்தால் பெரிய வித்தியாசங்கள் இருக்காது.. அதுவும் ரொம்ப technical ஆக பார்த்தால் தான் தெரியும்..எனவே அதை பற்றி கவலைப்படவேண்டாம்.. நீங்கள் பார்க்க வேண்டியது எல்லாம் அந்த கேமரா உங்கள் கைகளுக்கு நன்றாக இருக்கின்றதா,உங்கள் தேவைக்கேற்ப zoom range இருக்கின்றதா,பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கின்றதா என்பதை பார்த்தால் போதும்.. மற்றபடி நார்மல் picture ல் வித்தியாசங்கள் ஏதும் இருக்காது.. இவைகள் ஒத்து வந்தால் nikon கேமராவை வாங்கலாம்.. எதற்கும் கடைக்கு சென்று சில மாடல்களை பயன்படுத்தி பார்த்து வாங்கவும்..

    -கருவாயன்

    ReplyDelete
  14. Nikon 3100 Canon 1100D which one is good for beginner and which have good one

    ReplyDelete
  15. Thanesh -

    Please refer this link and decide

    http://snapsort.com/compare/Canon-1100D-vs-Nikon_D3100

    ReplyDelete
  16. Thanks ஐயப்பன் கிருஷ்ணன் ,
    And now i have canon SX500IS compact camera . i plan to buy canon 1100D DSLR with 55-250 lens. is it cover my SX500IS(24mm ,30X) Zoom range.if which lens cover same zoom range ?. i mostly used camera for capture animal and birds .

    ReplyDelete
  17. Dear all ,

    can you post review of famous DSLR camera ?. It is helpful for new camera buyer

    ReplyDelete
  18. Can anyone please include the link for the continuance of this part?

    ReplyDelete
  19. 200 mm டெலி போட்டோ லென்ஸ் விட 500 எம் எம் டெல் போட்டோ லென்ஸ்கள் விலை குறைவாக இருப்பது ஏன் 200 எம்எம் விலை அதிகமாக இருப்பது ஏன்?Tamron 18-400 mm lens வாங்கினால் நன்றாக இருக்குமா ? என்னிடம் என்னிடம் நிக்கான் டி 780 உள்ளது..விளக்கம் தர வேண்டுகிறேன் நன்றி வணக்கம்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff