Wednesday, March 10, 2010

குழுப் போட்டி - நீட்டி வைப்பு

4 comments:
 
குழுப்போட்டி அறிவிப்பு வந்து சில பல மாசங்களாயிடுச்சு. பலரும் ஆர்வத்துடன், குழுக்களைப் பதிந்து கொண்டுள்ளார்கள். ஆனால், பதிந்தவர்களில்,வெகு சிலரே, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து, குழுவை அமைத்ததோடல்லாமல், இயங்கவும் செய்து வருகின்றனர். இது புது முயற்சி என்பதாலும், சற்றே அதிகமான ஆர்வமும்/நேரமும்/திறமையும் கலந்த கலவையுடன் கூடிய ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து இயங்கவேண்டும் என்பதாலும், வழக்கமான போட்டியைப் போல் இல்லாமல் கொஞ்சம் தொய்வாகத்தான் நகர்கிறது. வெற்றி பெறும் ஆல்பத்தை, ஃபோட்டோ-புக்காக ப்ரிண்ட் செய்யலாம் என்ற எண்ணம் இருப்பதால், இந்தப் போட்டியின் அளவுகோல் கொஞ்சம் அதிகமாகவே வைத்துக் கொள்ள எண்ணம். குழுக்களில் பல இயங்க ஆரம்பிக்காததால், போட்டிக்கான, இறுதித் தேதியை மே மாதம் இறுதி வரை நீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டி வைக்க கொம்பேனியில் முடிவு செய்துள்ளோம். இதுவரை போட்டியில் பதிந்த குழுக்களைச் சேர்ந்தவர்கள், இயன்றவரை, ஆர்வத்தையும்/நேரத்தையும் முடுக்கிவிட்டு, க்ளிக்கி, படங்களை ஆல்பமாக தொகுத்து எங்களுக்கும் மற்ற வாச்கர்களுக்கும் அறியத் தரவும். குழு உருவாக்காதவர்கள், உருவாக்கி, உங்கள் குழு விவரங்களை இங்கே பதியவும். நன்றீஸ்.

4 comments:

  1. நல்லதுங்க.. ரெண்டு மாசம் பனி குளிர்ன்னு நான் போட்டோ எடுக்கமுடியாததுக்கு சாக்கு போக்கு சொல்லிட்டிருந்தேன்.. மற்ற நண்பர் நிறைய படங்களை அப்லோட் செய்திருக்கார். சீக்கிரமே பகிர்ந்து கொள்வார்.

    ReplyDelete
  2. நான் winsenங்க என்ற ஊரு கோவைங்க என்னையும் கோவை குருப்புல சேத்துக்கங்கங்கங்........ என்ற numper:9965944492

    ReplyDelete
  3. I have posted the link for Delhi Album on the comments, please update the link in the post.

    ReplyDelete
  4. குழுப்போட்டியில் கலந்துகொள்ள பெயர் கொடுத்தவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:

    அதிகப்படியானோர், இன்னும், எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த இந்நிலையில், இனியும் போட்டியை நீட்டி இழுப்பது, இதுவரை கலந்து கொண்டவர்களின் முயற்சியை அங்கீகரிக்காததுபோல் ஆகிவிடும்.
    ஆகவே, அனைவரும், உங்கள் 'படங்கள்/ஆல்பங்களை' முடிந்தவரை பூர்த்தி செய்து, ஒரு பெயர் சூட்டி, இந்தப் பக்கத்தில் விவரங்களை பின்னூட்டவும்.
    http://photography-in-tamil.blogspot.com/2009/12/blog-post.html
    ஜூன்30ஆம் தேதி, கடையை சாத்திவிட்டு, வெற்றியாளர்களை ஜூலையில் அறிவிக்கலாம் என்று எண்ணம்.

    ஆவன செய்யவும்.

    உங்கள் குழுவினர்களுக்கு, இந்த மடலை 'உந்தவும்'. :)

    நன்றீஸ்
    -சர்வேசன்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff