Tuesday, March 9, 2010

ஜனவரி மாதம் - 2வது இடத்தின் செய்முறை - கமல்

8 comments:
 
வணக்கம் நண்பர்களே!


ஜனவரி மாதம் புகைப்படப் போட்டியில் 2வது இடத்திற்கு தேர்வு செய்த PiT உறுப்பினர்களுக்கு நன்றிகளுடன் தொடங்குகிறேன்.

இந்த புகைப்படம் சென்னை, மயிலாப்பூரில் அம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் மாடியில் நின்று கோயில் கோபுரத்தை எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது பின் பக்கம் கிணற்றின் மேல் எதார்த்தமாக திரும்பிய போது எனது கண்களில் விழுந்தது இந்த பூனை.

அங்கிருந்து எடுத்த இந்த புகைப்படம்



எனக்கு முழுமை அடையவில்லை, எனவே மிக வேகமாக கீழே இறங்கி சென்று பூனை நகர்வதற்குள் எடுத்த புகைப்படங்கள்


PiTயில் சிறுகதை போட்டி அறிவிப்பு வந்த சில நாட்கள் கழித்து, இந்த புகைப்படம் இந்த தலைப்புக்கு சரியாக வரும் என்று தோன்ற அதை போட்டோ ஷாப்பில் மாற்றியவை


1. முதல் படத்தில் Auto Levels கிளிக் செய்து வண்ணத்தை மெறுகேற்றினேன்.

2. குறுக்கே உள்ள முன்னடி உள்ள இரும்பு கம்பியையும், பின்னால் உள்ள குச்சியையும் Clone Stamp Tool மூலம் அகற்றினேன். பின் கண்ணை Paths மூலம் தேர்வு செய்து Image => Adjustments => Variations சென்று நீல நிறத்தை ஏற்றினேன்.



3. இரண்டு கண்களும் வண்ணம் மாற்றப்பட்டது.

கடைசியாக சிறு கதையின் தலைப்பு இணைக்கப்பட்டு PiTக்கு அனுப்பப்பட்டு 2வது இடத்தை பிடித்தது.


நமது தளத்தை கண்டு பிடித்த 4 நான்கு மாதங்களில் ஒவ்வொரு பதிவையும் கவனமாக படித்து, பரிச்சை செய்து பார்த்து, என்னை தரமேற்றிக் கொண்டேன். அதில் முதல்படி சில்லவுட் போட்டியில்தான் முதலில் கலந்து கொண்டேன்.

அதில் நான் வடபழனி முருகன் கோயிலை எடுத்த புகைப்படம் இறைச்சல் அதிகமாக இருந்தது.


என்ன காரணம் என்று அப்போது தெரியவில்லை. அந்த படத்தில் பின்னூட்டத்தில்

நம்ம நண்பர் Prem அவர்கள் கீழ்கண்டவாறு பதித்திருந்தார்.

a small tip:

please note ISO 400 and the resulting noise

athey neram shutter speed 1/2000

ISO kuraichu, shutter speed kuracihu intha shot eduthirukkalam...romba nalla vanthirukkum....other wise it is an excellent composition....

அப்போதுதான் ISO பற்றி முழுமையாக புரிந்துக் கொண்டேன்.

காசிமேட்டை முதலில் எடுத்த புகைப்படம்.



நண்பர் Prem சொன்ன பின்பு மீண்டும் அங்கு சென்று எடுத்த புகைப்படம்



இந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்தற்கு மிக முக்கிய காரணமே PiT தளம்தான். சமீபத்தில் என்னுடைய அலுவலகத்தில் நான் எடுத்த மேக்ரோ புகைப்படத்தை எனது பாஸ் பார்த்துக் கொண்டே சென்றவர் திரும்பி வந்து கை கொடுத்து மிக அருமையாக எடுத்திருக்கே என்று சொல்லிவிட்டு சென்றார்.

அந்த இன்ப அதிர்ச்சியில் சில நிமிடங்கள் உறைந்து போனது என்னமோ நிஜம்.

ஏன் இதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் என்றால், சற்றே ஆர்வம் + முயற்சி இவற்றுடன் முழுமையாக நமது PiT தளத்தை முழுமையாக படித்தால் போதும். அவர் முழு தகுதி உடைய புகைப்பட கலைஞர் ஆகிவிடுவார்கள்.

இதை கண்ணும் கருத்துமாக பராமரித்து வரும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி... நன்றி... நன்றி...

ஏற்கனவே எனது தேவதையை பற்றி சொல்லியிருக்கிறேன். மிக முக்கியமான பங்கு உண்டு என்னுடைய இந்த பரிமான வளர்ச்சிக்கு... அதற்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அதற்கு பலனாக காலம் முழுவதும் அன்போடு வைத்துக்கொள்ளவேண்டும்.

எனவே இந்த தொகுப்பை எனது தேவதைக்கும், நமது PiT தளத்திற்கும் காணிக்கையாக்குகிறேன். மிக்க நன்றி...

மீண்டும் வருவேன்... புதிய செய்தியுடன்...

8 comments:

  1. மிகவும் நல்ல பதிவு கமல்.. பதிவுக்கு நன்றி.

    -கருவாயன்

    ReplyDelete
  2. சூப்பரான பதிவு..

    ReplyDelete
  3. கமல் இது போன்ற பகிர்வுகள் எங்களை போன்ற கத்துகுட்டிகளுக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.. நன்றி....

    ReplyDelete
  4. படித்ததை படம்மாக்கி பதிய பக்குவமய் ஒரு இடம் தந்தால் நாட்டாமைக்கு நன்றியோ...நன்றி..

    ReplyDelete
  5. பின்னூட்டம் பதித்த அனைவருக்கும் நன்றி... நான் கற்றவற்றை மற்வர்களும் அறிய வேண்டும் என்ற கொள்கை உண்டு எனக்கு. அதை செயலில் காட்டியிருக்கிறேன்... இந்த பதிவை பதிய வைக்க சொன்ன சர்வேசன் அவர்களுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff