Wednesday, March 10, 2010
Channel Mixer - Part Deux
Posted by
Anand V
at
11:59 PM
1 comment:
Labels:
Anand Vinayagam,
Gimp,
Lessons பாடங்கள்,
post production பிற்தயாரிப்பு
முன்னொரு காலத்தில் சேனல் மிக்ஸ்ர் உபயோகப்படுத்தி கருப்பு வெள்ளை படங்களை செய்வது பற்றி பார்த்தோம். இந்த முறை சேனல் மிக்ஸர் மூலம் வண்ணங்களை எப்படி மெருகேற்றுவது பற்றி.
படத்தை கிம்பில் திறந்து பின்னணி லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து colors->Components->Channel Mixer தெரிவு செய்யுங்கள்.
Output Channel பகுதியில் Red, Green, Blue மூன்று வண்ணங்களும் இருக்கும்.
Output Channel: Red பகுதியில் Red=100 Green=0, Blue=0 என்று இருக்கும். இதே போல பச்சை பகுதியில் பச்சை 100, ம்ற்றவை 0 என்றும் இருக்கும். நீலப் பகுதியில் நீலம் 100 என்றும் மற்றவை 0 என்றும் இருக்கும்.
முதலில் Output Channel: Red தெரிவு செய்துக் கொண்டு,
Red 150 Green -25 Blue -25 என்று மாற்றுங்கள் ( கூட்டுத்தொகை இன்னமும் 100 தான், 50 சிவப்பை அதிகரித்து, அதை பச்சை மற்றும் நீலத்தில் இருந்து எடுத்து விட்டோம்.)
இதேப் போல பச்சையிலும்,
Output Channel Green : Red= -25, Green= 150 Blue= -25
நீலத்திலும்
Output Channel Blue : Red: -25 Green: -25 Blue: 150
அவ்வளவுத்தான். ஏதேனும் ஒரு வண்ணம் மிகுதியாகத் தெரிந்தால் லேயர் மாஸ்க் உபயோகப்படுத்தி குறைந்துக் கொள்ளுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Saturationஐ அதிகரிப்பதற்கும் இதற்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா?
ReplyDelete