Saturday, March 6, 2010
மலரும் நினைவுகள்.
Posted by
Anand V
at
1:13 AM
1 comment:
Labels:
Anand Vinayagam,
Gimp,
Lessons பாடங்கள்,
post production பிற்தயாரிப்பு
வீட்டில் இருக்கும் ஆல்பங்களை எடுத்து , பழைய படங்களை பார்த்து ஞாபகம் வருதே ஞாபகம் வ்ருதே என்று பழசைஅசை போடுவதே ஒரு சுகம்தான்.
புதுப் படங்களை பழையதுப் போல மாற்றுவது பற்றி ஏற்கனவே ஒரு முறை இங்கே பார்த்து இருக்கிறோம். இன்று, வேறு ஒரு முறையில்.
இந்தக் காலத்து திரிஷாவை அந்தக் கால மயிலு தேவியாக மாற்றப் பார்க்க்கலாம்.
படத்தை கிம்பில் திற்நத்து, முன்ணணி வண்ணமாக மஞ்சள் நிறத்தை தேர்ந்து எடுங்கள் ( R = 251 - G - 242 - B - 163)
ஒரு புதிய லேயரை உருவாக்கி
அதை இந்த வண்ணத்தால் நிரப்புங்கள்.
Layer Mode = Multiply என்று மாற்றிக் கொள்ளுங்கள்.
அடுத்து முன்ணணி வண்ணமாக ஒரு இள ரோசா வண்ணம்
( R 232 G 101 B 179)
ஒரு புதிய லேயரை உருவாக்கி அதை இந்த வண்ணத்தால் நிரப்புங்கள்.
Layer Mode => Screen
அடுத்து முன்ணணி வண்ணமாக ஒரு நீல வண்ணம்
( R 9 G 73 B 233)
ஒரு புதிய லேயரை உருவாக்கி அதை இந்த வண்ணத்தால் நிரப்புங்கள்.
Layer Mode => Screen
இனி மூலப் படத்தை நகலெடுத்துக்கொள்ளுங்கள்.
அதை அனைத்திற்கும் மேலே கொண்டு வாருங்கள்.
அதை கருப்பு வெள்ளைக்கு மாற்றுங்கள்.
எளிய வழி colors->desaturate
Layer Mode = Overlay என்று மாற்றுங்கள்.
அவ்வளவுதான் வேலை. இனி உங்களின் கற்பனை குதிரையை தட்டி எழுப்புங்கள். இந்த அனைத்து லேயர்களின் Opacity உங்களின் இரசனைக்கு ஏற்ப கூட்டிக் கழிக்க வேண்டியதுதான் வேலை.
உதாரணதிற்கு நான், நீல மற்றும் பிங்க வண்ண லேயர்களின் Opacity 48 % என்று மாற்றி இருக்கிறேன்.
விளையாடிப் பாருங்கள்.
Summary:
1. Open image
2. New solid color layer Yellow ( 252,242,163) in Multiply mode
3. New solid color layer Pink ( 232,101,179) in Screen mode
4. New solid color layer Cyan ( 9,73,233) in Screen mode
5. Duplicate the original layer, bring it top of stack
6.Convert the duplicate layer to B/W and Mode to Overlay.
7. Adjust layer capacities to taste ( Good starting point, Cyan and Pink to around 50% )
8. Flatten image.
Subscribe to:
Post Comments (Atom)
eastman color என்பது இதுதானோ??? பயனுள்ள தகவல்......நுட்பத்தை பகிர்ந்தமைக்கு நன்றி...
ReplyDelete