Wednesday, March 24, 2010

`ஒன்று` -- முதல் சுற்றில் முன்னேறியவர்கள்..

14 comments:
 
வணக்கம் நன்பர்களே..

இந்த முறை `ஒன்று` போட்டியில் இவ்வளவு படம்(91படங்கள்) வரும் என்று நான் நினைக்கவில்லை.. ஏதோ 40 படம் வரும், கொஞ்சம் ஈசியா வேலையை முடிச்சிடலாம் என்று நினைத்திருந்தேன்..ஆனால் 91 படங்களை பார்த்ததும் மலைத்துப்போய்விட்டேன்.. இதை ஒவ்வொன்றாக அலசி பார்ப்பதற்குள் கொஞ்சம் பெண்டு கழட்டிவிட்டது...இருந்தாலும் மாதா மாதம் படங்கள் அதிகரிப்பது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை தருகின்றது..

இந்த முறை நிறைய புதுமுகங்கள் போட்டிக்கு ஆர்வத்துடன் வந்திருக்கின்றனர்,அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருக வருக என வரவேற்போம்.. புதிதாக போட்டோ போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வம் நண்பர்களிடையே அதிகரிப்பது புகைப்பட கலைக்கு ஆரோக்கியமானதாக தெரிகின்றது...

சரி.. இந்த முறை நிறைய படங்கள் வந்திருப்பதால் அதிலிருந்து ஒரேயடியாக 10 பேரை மட்டும் முதல் சுற்றிற்கு தேர்ந்தெடுப்பது கஷ்டமானதால்,முதலில்

தலைப்புக்கு பொருந்தாத படங்கள்,
சிம்பிள் படங்கள்,
பேக்கிரவுண்ட் சரியில்லாத படங்கள்,
நன்றாக இருந்தாலும் ஒரு சில குறையுள்ள படங்கள்,

என பிரித்தது போக,

முதல் சுற்றில் 35 பேர் முன்னேறியுள்ளனர்.. அவர்கள்,WINSEN


VISHNUVIJAYALAYANVENNILA MEERAN


VIGNESHTHOMAS


SENTHILSATHIYAGOPAL


S.M.ANBU ANANDRAGU MUTHUKUMARRAJAPRIYAPRAKASHPRABHAKARNICHOLASNANDAKUMARMQNMEENATCHI SUNDARAMMANIVANNANMANGAIMALLIKAKVRKARTHIK (VANDALUR)KARTHIKKAMALJENOVAGOWTHAMGOPALGANESHCHELLAMBOOPATHIANANTHAMALஆயில்யன்
இதில் தன் படங்கள் ஏன் தேர்வாகவில்லை,என்ன காரணம் என்று ஓவ்வொருவருக்கும் கேள்வி எழலாம்.. ஒவ்வொரு படத்திலும் உள்ள நிறை குறைகள்,எப்படி எடுத்திருந்தால் நன்றாக வரும் என்று விரிவாக ஒவ்வொரு படத்தையும் விமர்சனம் பன்ன மிகவும் ஆசை தான்.. ஆனால் படங்கள் அதிகமாக இருப்பதால் அது எளிதான காரியம் இல்லை..கண்டிப்பாக அதற்கு நேரம் ஒத்து வந்தால் விரிவாக எழுதுகின்றேன்..

இந்த போட்டியில்,முதல் சுற்றில் இல்லாத படங்கள் எல்லாம் நன்றாக இல்லை என்று கண்டிப்பாக அர்த்தம் கிடையாது.. சின்ன சின்ன குறைகள் தான்..இதே படம் வேறு தலைப்புகளுக்கு கூட perfect ஆக பொருந்தலாம்..

எனவே,அடுத்த முறை இன்னும் சிறப்பாக படங்களை எடுத்து, அடுத்த கட்டத்திற்கு முன்னேறி வெற்றி பெற முயற்சியுங்கள்.. கண்டிப்பாக பலன் கிடைக்கும்..

விரைவில் அடுத்த சுற்றில் முன்னேறிய பத்து படங்களுடன் உஙகளை சந்திக்கின்றேன்..

-கருவாயன்

14 comments:

 1. ஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐ முதல் சுற்றில் என் படமும் வந்துட்டு அஹஹஹஹஹஹா஡஡஡஡஡஡஡

  ReplyDelete
 2. நான் ஒரு படம் அனுப்பினேன்.... இதுவரை போடவில்லையே... ஏன்னு கேக்க மாட்டேன்... இருந்தாலும் கேட்டுட்டேன்...

  - கலீல்
  abkaleel@gmail.com

  ReplyDelete
 3. எனது படத்தை முதல் சுற்றுக்கு தேர்தெடுத்த நடுவர்களுக்கு நன்றி... அதர்க்கு பின்னுட்டம் அளித்த அனைத்து நண்பர்க்ளுக்கும் நன்றி... ந்ன்றி...

  ReplyDelete
 4. @கலீல்.... உங்களது படம் எங்களுக்கு கிடைத்தது.. ஆனால் அது ஏன் போடவில்லை என்பது உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்..

  வேறென்ன.. கெடு தேதி முடிந்த பின் வந்ததால் உங்கள் படத்தை ஆட்டத்தில் சேர்க்க முடியவில்லை..

  மன்னிக்கவும்...அடுத்த முறை சரியாக அனுப்பி வைக்கவும்..

  நன்றி
  கருவாயன்..

  ReplyDelete
 5. அனைவருக்கும் வாழ்துக்கள் :-))

  ReplyDelete
 6. அனைத்தும் அருமையான தேர்வு. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. ஹையா.. என்னோட படம் தேர்வாயிடுச்சு..

  ReplyDelete
 8. அனைவருக்கும் என்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. fine tuning பண்ணியது போல் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 10. Good selection... All the best for all who selected... GOWTHAM

  ReplyDelete
 11. தேர்வாகிய அனைத்து படங்களுக்கும்.. அதை எடுத்தவர்களுக்கும்.. பாரட்டியவர்களுக்கும்.. தேர்வு செய்தவர்களுக்கும்.. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.. நன்றிகள் :)

  ReplyDelete
 12. தேர்வுக்கு வந்த படங்கள் அனைத்தும் அற்புதம். வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. என்னை மாதிரியே இன்னும் மூன்று பேர் நினைத்திருப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது.

  ReplyDelete
 14. அலுவல் காரணமாக உடனடியாக பின்னூட்டம் இடமுடியவில்லை. எனது படத்தை முதல் சுற்றுக்கு தேர்வு செய்ததற்கும் மற்றும் அற்புதமாக யார் மனதையும் புண்படுத்தாமல் திருத்தங்கள் சொன்னதற்கும் என் மனதார்ந்த நன்றிகள்.

  அன்புடன்
  மீனாட்சி சுந்தரம்

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff