Saturday, August 28, 2010

ஆகஸ்ட் 2010 பச்சை - முடிவுகள்

24 comments:
 
பச்சை தலைப்புக்கு, வந்த 91 படங்களை அலசி ஆராஞ்சு டாப்10 போட்டிருந்ததை ஏற்கனவே பாத்திருப்பீங்க.

வெற்றி படங்களைப் பார்ப்பதர்க்கு முன், டாப்10ல் வந்த படங்களின் நிறை குறைகள், என் குட்டி அறிவுக்கு பட்டதை சொல்றேன். மேலே போறதுக்கு முன்னாடி கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், 'அழகு/ஈர்ப்பு/ரசனை' என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். எனக்கு புடிச்சது, உங்களுக்குப் பிடிக்காம போலாம், உங்களுக்குப் பிடிப்பது எனக்கு பிடிக்காம போலாம், etc.. etc..
என்னைப் பொறுத்தவரை, ஒரு ஆல்பத்தை புரட்டிப் பார்க்கும்போது, சட்டுனு வசீகரம் பண்ண படங்கள் டாப்10 ஆகியிருக்கு. இப்ப, டாப்10 படங்களை புரட்டிப் பார்க்கும்போது, அதில் அதிகமாய் ஈர்த்த மூன்று படங்கள் டாப்3 ஆகிரது. ரொம்ப சிம்பிளான, வடிகட்டல் முறை இது. ரொம்ப ஆராயாம, இந்த மாத டாப்பர்களை பார்த்து மகிழ்வோம்.

அஷோக்:
பார்த்தவுடன் வசீகரித்த படம் இது. ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கலாம் என்பது போன்ற நளினமான ஷாட். ஆனா, முழு இல்லை இல்லாமல் போனது ஒரு குறையாகத் தெரிகிறது, இப்ப பாக்கும்போது.


சிவபரணிதரன்:
வலப்பக்க வெளிச்சம் கொஞ்சம் உறுத்தலாய் இருக்கிறது. காட்சியமைப்பும், கிராப் செய்ததும் கூட சரியாக அமையவில்லை.


கார்த்திக் ராமலிங்கம்:
இன்னும் கொஞ்சம் பளிச்னு வந்திருந்தா மெருகேறியிருந்திருக்கும். கட்டம் கட்டியதிலும் ஒரு இன்ச் இடதோ வலதோ நகர்த்தி கட் செய்திருந்தாலும் மெருகு கூடியிருக்கும். இன்னும் கொஞ்சம், ஜூம் செய்திருந்தாலும் நன்றாயிருந்திருக்கும்.


செந்தில்குமார் சுப்ரமணியன்:
முதல் முறை பார்க்கும்போதே, வெளிச்சத்தின் கையாடல் வெகுவாய் கவர்ந்தது. ஆனா, இலையில் பொத்தல் இல்லாமல், முழு இலையும் தெரிந்திருந்தால் இலையைத் தவிர மற்ற இடங்களில் வெளிச்சம் மங்கலாய் இருந்து, ப்ளர்ராகவும் இருந்திருந்தால், 'யப்பா'ன்னு தூக்க்யிருந்திருக்கலாம்.


வெங்கட்நாராயணன்:
'winning shot' கணக்கான மிருதுவான அழகான க்ளோஸ்-அப். ஆனால், சுற்றளவை குறைத்திருக்கலாம். இடது முலையில் இருக்கும் சிவப்புத் திட்டு மேல் விரல் வைத்து மறைத்துப் பாருங்கள். படத்தின் வசீகரம் சடார்னு மேல ஏறுது.
(picasa ஆல்பத்தில் எல்லாரும் இதச் சொல்லிட்டாங்க, அதுக்கு பதிலா Venkatம், தனக்கு post-processing செய்வதில் நாட்டமில்லைன்னு சொல்லியிருக்காரு. Venkat, நல்ல விஷயம்தான், ஆனா, கிராப்பிங் செய்வது குத்தமில்லை. கிராப்பிங் தேவைப்படும் நேரங்களில் செய்வது, சாலச் சிறந்த பயனளிக்கும்)


KVR:
'நச்'னு வந்திருக்கு. வெள்ளை பேக்ரவுண்ட் பிரமாதம். ஒரொ ப்ரொஃபெஷனல் டச் வந்திருக்கு படத்தில். ஆனா, அதீக வெளிச்சம். ஃப்ளாஷ் போட்டிருக்கீங்களோ? ஃப்ளாஷுக்கு/விளக்குக்கு முன்னால் ஒரு வெள்லை பேப்பரையோ ஃபிலிம் டப்பாவையொ போட்டு difuse செஞ்சிருக்கலாம். மொளகா மேல் மட்டும் வெளிச்சம் அதிகப்படியா இல்லாதிருந்திருந்தால், கண்ணை மூடிக்கிட்டு பரிசை அள்ளிக் கொடுத்திருக்கலாம் என்கிர மாதிரியான படம். வாழ்த்துக்கள்.


Anand:
படம் தொழில்நுட்ப ரீதியாக பளிச்னு அமையலை. ஆனா, சப்ஜெக்ட்டை கையாண்ட விதமும், மொத்த ஏற்பாடும் பிடிச்சிருக்கு. ரசனையோட அமைந்த படம். நல்ல முயற்சி.



அம்மாடி, அப்டீ இப்டீன்னு ஒப்பேத்தியாச்சு, இனி டாப்3 ஐ பாத்திடலாம்ல?

மூன்றாவது இடத்தில், Priyadarsanன் பச்சைத் துளிர் இலை:

ரெண்டு மூணு தடவை பாக்க வைச்ச படம் இது. அந்த, இளம் தளிரின் அழகே அழகு. அதன் மேல் படறிய வெளிச்சமும் அழகு. வலது பக்கத்தில் கொஞ்சம் குறைத்திருக்கலாமோ? இரண்டாவது இலை ஒரு நெருடலா அமைஞ்சிடுச்சு. படத்துக்கு பலம் சேர்க்கலை அது.
ஆனாலும், ஒரு பரவசமான அழகு இருக்கு படத்தில். 'பச்சை' தலைப்புக்கு நெத்தியடி படம். வாழ்த்துக்கள் Priyadarshan.


இரண்டாம் இடத்தில், Amalன் வளர்ந்த பச்சை இலை:

அழகான க்ளோஸ்-அப். அழகான வெளிச்சம்.இலையின் நாடி நரம்பெல்லாம் தெரிவது பிரமாதம். விட்டா, பாட்டனி பாடமே எடுக்கலாம் போலருக்கு படத்தைப் பார்த்து. ஒரு abstract ஓவியம் போல், வித்யாசமான க்ளோஸ் கிராப்பிங் அழகை கூட்டியுள்ளது.
வாழ்த்துக்கள் அமல்.



முதலாம் இடத்தில், எம்.ரிஷான் ஷெரீப், கவிதைப் பச்சை:

91+ படங்களில் டாப்10க்காக மேலும் கீழும் அலசும்போதே, கணகளை கட்டிப் போட்ட படம். படத்தில் பெரிய தொழில்நுட்ப ஜாலவித்தையோ, மற்ற பிற கையாடல்களோ இல்லை. ஆனா, கவித்துவமான இலைகளும், அதன் வளைவுகளும், அழகா வந்திருக்கு. பின்னில் உள்ள கருமை, படத்தின் அழகுக்கு அழகு சேர்க்குது. படத்தை கட்டம் கட்டிய விதமௌம் மெருகேத்தியிருக்கு.
வாழ்த்துக்கள் ரிஷான்.



போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்.

தொடர்ந்து கலக்கோ கலக்குன்னு கலக்குவோம்.

24 comments:

  1. செம‌த்தியா இருக்கு ப‌ட‌ங்க‌ள்‍ -குளோச‌ப் இலை அப்ப‌டியே அள்ளுது.

    ReplyDelete
  2. அனைத்தும் நேர்த்தியான படங்கள்.... வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து. கலந்துகொண்டவங்களுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. நல்ல செலக்‌ஷன்ஸ் நல்ல முடிவு :)

    அனைவருக்கும் வாழ்த்துகள் !

    ReplyDelete
  4. ரிஷான், அமல், ப்ரியதர்ஷன்

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்:)!

    ReplyDelete
  5. அனைத்தும் நேர்த்தியான படங்கள்.... வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து. கலந்துகொண்டவங்களுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  6. ஃப்ளாஷ் போட்டு எடுக்கலை. daylight தான். அடுத்த முறை பெட்டரா முயற்சி செய்யிறேன். வெற்றிப்பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  7. அனைவருக்கும் வாழ்த்துகள் !

    ReplyDelete
  8. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ஆனாலும் நடுவர் மிக அருமையாக தேர்ந்தெடுத்திருக்கிறார்... உண்மையில் அந்த சற்று கடினம்தான்...

    ஆனாலும் மிக சரியான விளக்கம்...

    ReplyDelete
  9. நீண்ட காலங்களின் பின் கலந்துகொண்ட முதல்போட்டியிலேயே முதல் பரிசினைப் பெற்றுக் கொண்டதில் மிகவும் மகிழ்வாக உணர்கிறேன்.

    எனது வீட்டுத் தோட்டத்திலுள்ள மடுப்பனை (Sago Palms tree) என அழைக்கப்படும் ஒரு வகை Palm tree யின் இலைகள்தான் இவை.

    இங்கும், எனது Blogger, Picasa, Face book, Twitter வலைத்தளங்களிலும், தனி மின்னஞ்சலிலும், சாட்டிலும் தங்கள் கருத்துக்களையும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்ட, பகிர்ந்துகொள்ளப் போகும் அனைவருக்கும் மற்றும் PIT குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் பிரியதர்ஷன் & அமல்!
    வாழ்த்துக்கள் ரிஷான்.. இது போல் இன்னும் பல படங்களை சுட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. congrats for all the three...and for the winning one ,best compliments Rishan....

    ReplyDelete
  12. இரசிக்க மட்டுமே தெரிந்த என் போன்றோர் கண்களுக்கு யாவும் குளிர்ச்சி

    வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  13. எல்லா படங்களும் ரொம்ப அழகா இருக்கு படம் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. ரிஷான், அமல். ப்ரியதர்ஷன் அமர்க்களமான படங்கள். வெற்றி பெறத் தகுதி யான படங்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள். அடுத்தாப்ல என்ன டைடில் சர்வேஸ்?

    ReplyDelete
  15. பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. படத்தில் "Noise " அதிகமாக இருந்ததால் இப்படம் மூன்றாவதாக தேர்வு பெறும் என்று எதிர்பார்கவில்லை. நன்றி சர்வேசன் மற்றும் PiT .
    (இனி நானும் ரவுடி தான் என்று பய புள்ளங்கட்ட சீன் போடலாம்.... :))

    "இரண்டாவது இலை ஒரு நெருடலா அமைஞ்சிடுச்சு. படத்துக்கு பலம் சேர்க்கலை அது." உண்மைதான் சர்வேசன், படம் எடுக்கும்போது இதை கவனிக்கவில்லை. next time correct பன்னிகிறேன்.

    அமல், just miss ... urs is my favorite . Congratulation .
    ரிஷான், கவிதையான படம். வாழ்த்துக்கள், black background எப்படி சேர்த்திர்கள் என்று எங்களுக்கும் சொல்லுங்களேன்...

    @ பிட், அடுத்த போட்டி தலைப்பை கொஞ்சம் அட்வான்சா 20 /25 ம் தேதி போல் சொல்லலாமே ப்ளீஸ்....

    ReplyDelete
  16. I expected the first and third ranked photos to be in the panel of three. I liked them very much. Second ranked photo-vai ippo parthal i thought, it deserve it. Best wishes to the winners. Very best wishes to the other seven. You can hit.

    ReplyDelete
  17. வெற்றிப்பெற்ற நண்பர்களுக்கு பாரட்டுகள்... பிட் குழுவினருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் ரிஷான், அமல் & ப்ரியதர்ஷன்.

    1st is a good selection.

    ReplyDelete
  19. //'அழகு/ஈர்ப்பு/ரசனை' என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும்//

    I totally agree. போட்டிக்கு படம் பிடித்து அனுப்பும்போது என்ன விடயங்களை கவனிக்க வேண்டும் என்று சற்று விளக்குவீர்களா? இது PiT க்கு மாத்திரமல்ல ஏனைய போட்டிகளில் பங்குபற்றவும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  20. வாழ்த்துகள் ரிஷான், அமல், & பிரியதர்ஷன்!
    இதுபோல் இன்னும் பல வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
  21. அருமையான தேர்வு,
    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    வாசி

    ReplyDelete
  22. வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும், சக வெற்றியாளர்களுக்கும்,போட்டியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    //ரிஷான், கவிதையான படம். வாழ்த்துக்கள், black background எப்படி சேர்த்திர்கள் என்று எங்களுக்கும் சொல்லுங்களேன்...//

    நன்றி நண்பர் ப்ரியதர்ஷன். எதுவும் சேர்க்கவில்லை. பெரிதாக எதுவும் செய்யவுமில்லை.
    எனது இந்தப் பதிவினைப் பாருங்கள்
    http://msmrishan.blogspot.com/2010/08/green-for-pit-contest-august-2010.html

    இதில் கடைசிப் படத்துக்கு முந்தைய படத்தைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். அதன் குறிப்பிட்ட பாகத்தை மட்டும் Crop செய்து Border இட்டு போட்டிக்குக் கொடுத்தேன். :-)

    ReplyDelete
  23. அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-))

    ReplyDelete
  24. About this n "vidivelli' weekly magazine

    http://www.facebook.com/photo.php?pid=6973685&id=797249201&ref=fbx_album#/photo.php?pid=6973685&fbid=495541349201&id=797249201

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff