Wednesday, September 1, 2010

2010 செப்டம்பர் போட்டி - அறிவிப்பு

28 comments:
 
வணக்கம் மக்கா,
உங்க வீட்டுக்கு புதுசா வந்து, பின்னாடி உங்க வீட்டில் ஒருத்தரா மாறிவிடுகின்ற "வளர்ப்பு பிராணிகள்" தான் இந்த வார தலைப்பு.

உங்களுடைய நண்பர்களை வித விதமாக படம் எடுத்து, எங்களுக்கு "pitcontests2.submit@picasaweb.com" என்ற முகவரிக்கு அனுப்பவும்.

எடுத்துக்காட்டு படங்கள் கீழே,




படங்களுக்கு நன்றி நந்து

போட்டிக்கான விதிமுறைகள் இங்கே.

28 comments:

  1. வளர்ப்பு பிராணி இல்லாதவங்க என்ன செய்யறது? :-(
    என் கிட்ட எந்த பிராணியும் இல்லை.

    இருந்தாலே ஒழுங்கா படம் பிடிக்க நேரம் ஆகும். அப்புராணியை படம் பிடிக்கலாமா? :-))

    ReplyDelete
  2. அழகான சப்ஜெக்ட்:)! ஆனா கண்டிப்பா ‘வீட்டில்’ வளர்க்கப் படும் பிராணிகளாய் இருக்கணுமா? யானை கோவிலில் வளர்க்கிறார்கள். குரங்கினை வித்தை காட்டுபவர். மனிதனால் பராமரிக்கப் படக்கூடிய விலங்கு எதுவானாலும் இருக்கலாமா என சொல்லுங்களேன்.

    ReplyDelete
  3. படிக்கிற "வளர்ப்பு பிராணி" கணக்கில் வருமா? :-))
    நந்துவின் படம் அருமை.

    ReplyDelete
  4. "வளர்ப்புப் பிராணி" தலைப்பு.

    யார் வளக்கர பிராணியா வேணா இருக்கலாம். காட்டுக்கு போயி, சொந்தக் கால்ல நிக்கர பிராணியெல்லாம் படம் புடிச்சு, கடி பட்டா, கொம்பேனி பொறுப்பேத்துக்க முடியாது. :)

    ReplyDelete
  5. எதிர்பார்த்துகிட்டே இருந்தேன்... கலக்கிரலாம்...

    ReplyDelete
  6. என்னை வளக்குற என் அப்பாவும் அம்மாவும் சில நேரம் என்னை எருமை மாடுன்னு திட்டுறதால என் படத்த அனுப்பலாமுன்னு இருக்கேன்.

    வானம்

    ReplyDelete
  7. கோச்சுக்காம சொல்லுங்க....

    Zoo வுல வளக்கற பிராணி ஆட்டைக்கு உண்டா?

    ReplyDelete
  8. எருமை மாடுன்னு என் அம்மா என்னை திட்டுனதுனால என் படத்தை அனுப்பி வைக்கிறேன்.

    வானம்

    ReplyDelete
  9. வளர்த்த, இப்ப இல்லாத பிராணிகள் போட்டொ அனுப்பலாமா சர்வெசன்?
    எங்க மீனாக்ஷீக்கு ஒரு இடம் கிடைக்கும்.

    ReplyDelete
  10. நானும் கச்சேரிக்கு வந்திட்டேன்:)
    முதல் தடவை இமெயில் ஐடி சரியாகக் கொடுக்கவில்லை. இப்பச் சரியாக அனுப்பி இருக்கேன்னு நினைக்கிறேன். எதுக்கும் வந்ததுக்கு ஒரு வரி எழுதவும்:)

    ReplyDelete
  11. நானும் புகைப்படம் அனுப்பி உள்ளேன் - மணி

    ReplyDelete
  12. மணி உங்க படம் வந்துடுச்சு.

    வல்லி அம்மா, "contest" என்ற பெயரில் ஒரு படம் வந்து இருக்கு. அது உங்க படமா ?

    ReplyDelete
  13. என் படம் அனுப்பப்பட்டுவிட்டது.

    Paristhiva photography

    ReplyDelete
  14. நான் போன வாரமே அனுப்பிய படம் பிரசுரமாகவில்லையே? எதுக்கும் இருக்கட்டுமென்று இன்னொன்றும் அனுப்பியிருக்கிறேன்...எங்க Flaffy-யின் படத்தை.

    ReplyDelete
  15. படம் அனுப்பிவிட்டேன்.சாதாரண P&S காமெராவில் எடுத்த படத்தை crop செய்திருப்பதால் noise அதிகமாக இருப்பதை பொறுத்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  16. படம் அனுப்பி விட்டேன்.

    மேலும் படங்களுடன் பதிவு இங்கே: http://tamilamudam.blogspot.com/2010/09/pit.html

    ReplyDelete
  17. என்னாச்சு..? என் படத்தைக் காணோமே!!!

    ReplyDelete
  18. நானும் அனுப்பி விட்டேன்

    ReplyDelete
  19. நான் அனுப்பிய, பாயில் படுத்து இருக்கும் பொமோரேனியன் படம் சப்ஜெக்ட்டுக்கு கொடுத்த 'Deepa.jpg/CVR.jpg என்ற பெயருடன் வெளியாகியிருக்கிறது. தயவு செய்து ‘நானானி’ பெயர் மாற்றம் செய்வும்

    ReplyDelete
  20. எனது படத்தை அனுப்பியிருக்கிறேன்..கிடைத்ததா?

    For PIT Contest September 2010 http://msmrishan.blogspot.com/2010/09/for-pit-contest-september-2010.html

    ReplyDelete
  21. பெருந்தலைகளே,
    SLR ,NON-SLR எனும் இரண்டு வகைகளில் போட்டி நடத்துங்களேன்.FERRARI-க்கும்,MARUTHI 800-க்கும் போட்டி நடத்துவது போல இருக்கிறது நிறைய படங்களை பார்க்கும்போது.

    ReplyDelete
  22. ஆடு படுத்திருக்கின்ற(யார் படம்?) படம் நான் அனுப்பியது தான்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff