வணக்கம் நண்பர்களே...
கடந்த பகுதிகள் வரை கேமரா வாங்குவதற்கு முன் நாம் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய பல் வேறு தகவல்களை பார்த்தோம்.. இனி ஒவ்வொரு கேமரா வகைகளை பற்றியும், அதன் பயன் மற்றும் தகவல்கள் என்ன என்பதை பார்ப்போம்..
முதலில்,
பேசிக் கம்பேக்ட் கேமரா..
பொதுவா மக்கள் அதிகமா விருப்படுகின்ற கேமரா வகை இது...
ஏனென்றால் இது அளவில் சிறியது,எளிதாக எங்கே வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.
ஈசியா பயன்படுத்த முடியுங்கிறதால, இதை பொதுவா point-and-shoot கேமரான்னும் சொல்லுவாங்க.
இந்த கேமராவை,கேமராவுக்கு பின்னாடி இருக்கிற LCD display screen ஐ முதன்மையா பயன்படுத்தி தான் படம் எடுப்பாங்க.ஒரு சில கேமாராக்களில் மட்டும், நமது பழைய கேமராக்களில் உள்ளது போல viewfinder(optical) ஐ பயன்படுத்தியும் எடுக்கலாம்..
ஆனால் இதில் 80-85% மட்டுமே நாம் நம் கண்களால் பார்க்க முடியும்.
அதாவது,உதாரணமாக 5 பேர் ஒரு போட்டோவுக்கு போஸ் குடுப்பாங்க,ஆனால் இந்த மாதிரி கேமரா viewfinder ல் 4 பேர் தான் தெரிவாங்க,ஆனா போட்டோ எடுத்த பின் result ல் 5 பேர் இருப்பாங்க. இதை தான் view finder coverage area என்று சொல்வார்கள்.
அதனால் இந்த வகை கேமராவில் viewfinderஐ பயன்படுத்தும் போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த compact கேமராக்கள் தற்போதைய நிலவரப்படி 6 முதல் 12 megapixels வரை கிடைக்கின்றன. பிக்ஸலை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.. அதை பற்றி ஏற்கனவே இந்த பகுதியில் பார்த்து விட்டோம்...
இந்த வகை கேமராக்கள், நாம் கஷ்ட்டபடாமல் அனைத்து settings ம் (shutter speed,aperture and other settings) எளிதாக கேமராக்களே பார்த்துக்கொள்ளும்படி அமைக்கபட்டிருக்கும்.
இந்த வகையிலான கேமாரக்கள் அனைத்தும், நாம் நடைமுறையில் அதிகமாக பயன்படுத்த கூடிய போதுமான zoom range உடன் வருகின்றது.
விலை குறைவிலான compact கேமராக்கள் கொஞ்சம் slow effective aperture வகையில் தான் வரும். அதாவது f4 , f5.6 என்று.... இதனால் நாம் வெளிச்சம் குறைவான நேரங்களிலும்,வேகமாக நடக்ககூடிய,ஓடக்கூடிய இடங்களிலும் இந்த வகை கேமராக்களை focus செய்வது சிரமமே.. இதை பற்றிய விரிவான தகவல்கள் இங்கே..
இவ்வகை கேமராக்களில் பொதுவாக ஒரு முக்கிய பிரச்சனை என்னவென்றால்,அது shutter lag தான்..
shutter lag என்றால் ஒரு image ஐ நாம் படம் பிடிப்பதற்காக கேமராவில் click செய்தபின், அந்த imageஐ கேமரா பதிவு செய்ய எடுத்துக்கொள்ளும் நேரமே shutter lag..
இவ்வகை compact கேமராக்களில் shutter lag என்பது மிக அதிகம்..
உதாரணமாக, இரண்டு மூன்று பேர் வரிசையாக நடந்து செல்கிறார்கள்,அவர்களில் நாம் முதலாவதாக நடப்பவரை click செய்வோம்,ஆனால் shutter lag பிரச்சனை காரணமாக கேமரா இரண்டாமானவரையோ,மூன்றாமானவரையோ படம் பிடித்து லொள்ளு பன்னும்..
இதனால் நமக்கு ACTION,WILDLIFE,SPORTS போன்ற போட்டோக்களை எடுக்க ஒத்து வராது.
ஆனால் landscape,casual shots,still shot,family shot போட்டோக்களை எடுக்க இந்த வகை மிகவும் சிறந்ததே..
ஏனென்றால் இதனுடய sensor size சிறியதாக இருப்பதால் zoom lens அளவும் சிறியதே..அதனால் மற்ற கேமரா வகைகளை போல் இல்லாமல் இதனுடைய depth of field கொஞ்சம் அதிகமாக இருக்கும்..
அதாவது உதாரணமாக,50mm zoom( 35mm format) அளவில் இரண்டு பேரை வைத்து DSLR ல் போட்டோ எடுக்கும் போது ஒருவர் நல்ல தெளிவாகவும்,மற்றொருவர் கொஞ்சம் தெளிவில்லாமலும் இருப்பார்.
அதே 50mm zoom( 35mm format) அளவில் smaller sensor size கொண்ட compact கேமராவில் எடுத்தால் இரண்டு பேரும் நல்ல focus ல் இருப்பார்கள்..
இதை extended depth of field என்று சொல்வார்கள்.
இவ்வகை கேமராக்களில் உள்ள நல்லது,கெட்டது என்னவென்று பார்ப்போம்,
நிறைகள்...
குறைகள்...
சரி நண்பர்களே மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்.. இந்த பகுதி குறித்து ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் அதை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..
நன்றி
கருவாயன்..
கடந்த பகுதிகள் வரை கேமரா வாங்குவதற்கு முன் நாம் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய பல் வேறு தகவல்களை பார்த்தோம்.. இனி ஒவ்வொரு கேமரா வகைகளை பற்றியும், அதன் பயன் மற்றும் தகவல்கள் என்ன என்பதை பார்ப்போம்..
முதலில்,
பேசிக் கம்பேக்ட் கேமரா..
பொதுவா மக்கள் அதிகமா விருப்படுகின்ற கேமரா வகை இது...
ஏனென்றால் இது அளவில் சிறியது,எளிதாக எங்கே வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.
ஈசியா பயன்படுத்த முடியுங்கிறதால, இதை பொதுவா point-and-shoot கேமரான்னும் சொல்லுவாங்க.
இந்த கேமராவை,கேமராவுக்கு பின்னாடி இருக்கிற LCD display screen ஐ முதன்மையா பயன்படுத்தி தான் படம் எடுப்பாங்க.ஒரு சில கேமாராக்களில் மட்டும், நமது பழைய கேமராக்களில் உள்ளது போல viewfinder(optical) ஐ பயன்படுத்தியும் எடுக்கலாம்..
ஆனால் இதில் 80-85% மட்டுமே நாம் நம் கண்களால் பார்க்க முடியும்.
அதாவது,உதாரணமாக 5 பேர் ஒரு போட்டோவுக்கு போஸ் குடுப்பாங்க,ஆனால் இந்த மாதிரி கேமரா viewfinder ல் 4 பேர் தான் தெரிவாங்க,ஆனா போட்டோ எடுத்த பின் result ல் 5 பேர் இருப்பாங்க. இதை தான் view finder coverage area என்று சொல்வார்கள்.
அதனால் இந்த வகை கேமராவில் viewfinderஐ பயன்படுத்தும் போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த compact கேமராக்கள் தற்போதைய நிலவரப்படி 6 முதல் 12 megapixels வரை கிடைக்கின்றன. பிக்ஸலை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.. அதை பற்றி ஏற்கனவே இந்த பகுதியில் பார்த்து விட்டோம்...
இந்த வகை கேமராக்கள், நாம் கஷ்ட்டபடாமல் அனைத்து settings ம் (shutter speed,aperture and other settings) எளிதாக கேமராக்களே பார்த்துக்கொள்ளும்படி அமைக்கபட்டிருக்கும்.
இந்த வகையிலான கேமாரக்கள் அனைத்தும், நாம் நடைமுறையில் அதிகமாக பயன்படுத்த கூடிய போதுமான zoom range உடன் வருகின்றது.
விலை குறைவிலான compact கேமராக்கள் கொஞ்சம் slow effective aperture வகையில் தான் வரும். அதாவது f4 , f5.6 என்று.... இதனால் நாம் வெளிச்சம் குறைவான நேரங்களிலும்,வேகமாக நடக்ககூடிய,ஓடக்கூடிய இடங்களிலும் இந்த வகை கேமராக்களை focus செய்வது சிரமமே.. இதை பற்றிய விரிவான தகவல்கள் இங்கே..
இவ்வகை கேமராக்களில் பொதுவாக ஒரு முக்கிய பிரச்சனை என்னவென்றால்,அது shutter lag தான்..
shutter lag என்றால் ஒரு image ஐ நாம் படம் பிடிப்பதற்காக கேமராவில் click செய்தபின், அந்த imageஐ கேமரா பதிவு செய்ய எடுத்துக்கொள்ளும் நேரமே shutter lag..
இவ்வகை compact கேமராக்களில் shutter lag என்பது மிக அதிகம்..
உதாரணமாக, இரண்டு மூன்று பேர் வரிசையாக நடந்து செல்கிறார்கள்,அவர்களில் நாம் முதலாவதாக நடப்பவரை click செய்வோம்,ஆனால் shutter lag பிரச்சனை காரணமாக கேமரா இரண்டாமானவரையோ,மூன்றாமானவரையோ படம் பிடித்து லொள்ளு பன்னும்..
இதனால் நமக்கு ACTION,WILDLIFE,SPORTS போன்ற போட்டோக்களை எடுக்க ஒத்து வராது.
ஆனால் landscape,casual shots,still shot,family shot போட்டோக்களை எடுக்க இந்த வகை மிகவும் சிறந்ததே..
ஏனென்றால் இதனுடய sensor size சிறியதாக இருப்பதால் zoom lens அளவும் சிறியதே..அதனால் மற்ற கேமரா வகைகளை போல் இல்லாமல் இதனுடைய depth of field கொஞ்சம் அதிகமாக இருக்கும்..
அதாவது உதாரணமாக,50mm zoom( 35mm format) அளவில் இரண்டு பேரை வைத்து DSLR ல் போட்டோ எடுக்கும் போது ஒருவர் நல்ல தெளிவாகவும்,மற்றொருவர் கொஞ்சம் தெளிவில்லாமலும் இருப்பார்.
அதே 50mm zoom( 35mm format) அளவில் smaller sensor size கொண்ட compact கேமராவில் எடுத்தால் இரண்டு பேரும் நல்ல focus ல் இருப்பார்கள்..
இதை extended depth of field என்று சொல்வார்கள்.
இவ்வகை கேமராக்களில் உள்ள நல்லது,கெட்டது என்னவென்று பார்ப்போம்,
நிறைகள்...
- சிறியது,அதனால் எங்கு வேண்டுமானலும் எளிதாக எடுத்து செல்லலாம்.
- பயன்படுத்துவதும் எளிது.
- விலை குறைவு.(விலை அதிகமும் உண்டு)
- திருட்டுதனமாக எடுப்பதற்க்கு மிகவும் பயன்படும்.
- லென்ஸ் மாற்ற இயலாது,அதனால் dust கேமராக்குள்ளே செல்ல வாய்ப்பு மிகவும் குறைவு.
- LANDSCAPE,FAMILY SHOT, சில வகை MACRO SHOTS எடுக்க சிறந்தது.
- live view ஆக போட்டோ எடுக்கலாம்.
- ஒரே குட்டி கேமராவில் பல feautres..
- உயர்ரக வீடியோ mode
குறைகள்...
- நம் கையில் எந்த கண்ட்ரோலும் கிடையாது..எல்லாம் கேமரா தான் முடிவு செய்யும்..
- zoom range குறைவு.இதனால் தூரத்தில் இருப்பதை எடுப்பதற்கு பயன் படாது.இருப்பினும் நமது நடைமுறைக்கு போதுமான அளவு zoom range இருக்கும்.
- shutter lag அதிகம்.இதனால் வேகமாக எடுக்க முடியாது.
- picture quality என்பது மற்ற கேமரா வகைகளை compare செய்தால் குறைவு.
- flash power குறைவு.உதாரணமாக flash effect முகத்திற்கு நன்றாக வரும், மற்ற பகுதிகளான உடம்புக்கு டல் அடிக்கும்
- ஒரு சில கேமராக்களை தவிர,LCD screen ஒன்று தான் நாம் படத்தை கம்போஸ் செய்யும் வழி.. view finder கிடையாது.அப்படியே இருந்தாலும் அது சிறியதாக தான் இருக்கும்.LCD screen கொஞ்சம் scratch ஆனாலும் நாம் கேமராவை பயன்படுத்துவது சிரமமாகிவிடும். இதனால் LCD screen ஐ மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும்
- அதிகமான சூரிய வெளிச்சத்தில் LCD screenஐ பயன்படுத்தி படம் எடுப்பது மிகவும் சிரமம். இதனால் சரியான exposure அளவை தெரிந்து கொள்வது மிகவும் சிரமம்.
- battery life கம்மி..viewfinder ஆக LCD screenஐ அதிகமாக பயன்படுத்துவதால் battery அதிகமாக இழுக்கும்.இதனால் அடிக்கடி recharge செய்யவேண்டும்
- noise அதிகம்... sensor சிறியதாக இருப்பதால் crop factor அதிகம் இருக்கும் .. எனவே iso 200க்கும் மேல் noise இல்லாமல் எடுப்பது மிக கஷ்டம்..இதனால் வெளிச்சம் குறைவான இடங்களில் படம் எடுப்பது சிரமம்.
- sensor size சிறியதாக இருப்பதால் கொஞ்சமாக crop செய்தாலே picture quality மோசமாகி விடும்..இதனால் பெரிய size ப்ரிண்ட் என்பது சிரமம்..
- manual zoom கிடையாது..ELECTRONIC ZOOM ஐ இயக்குவது சில நேரங்களில் கடினம்..
- ultra wide angle இன்றைய சிறிய கேமரா டெக்னாலஜியில் கிடையாது.. இன்று வரையில் 24mm என்பதே சிறிய வகை கேமராக்களில் அதிகமான wide angle.
- உங்கள் தேவைகள் என்ன என்பதை தவிர வேறு எதற்காகவும் பணத்தை waste செய்யவேண்டாம். அது பெரிய பலன் தராது.
- optical zoom அளவை மட்டும் பாருங்கள்,digital zoom ஐ பார்க்க தேவையில்லை. இதை பற்றி தகவல்கள் இங்கே..
- zoom அளவு என்பது 28mm அல்லது அதற்கு கீழ் உள்ளதாக பார்த்து வாங்கவும்...long zoom range ஐ விட wide zoom range தான் மிக முக்கியம்.
- 35-120mm என்பதை விட 28-100mm என்பதே சிறந்த zoom range ஆகும்.. இதை பற்றி தகவல்கள் இங்கே
- நாம் படம் எடுப்பதற்கு viewfinder என்பது LCD screen ஒன்று தான் வழி..எனவே LCD screenஐ பத்திரமாக பாதுகாக்கவும்.ஒரு சில கேமராக்களில் optical view finder உண்டு,ஆனால் அது மிகவும் சிறியதாகவும்,பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்காது.
- லென்ஸை மாற்றுவதற்கு வழியே கிடையாது எனவே லென்ஸ் மீது கை,அழுக்கு படாமல் பார்த்துகொள்ளவும்.
- 6 pixel என்பதே போதும்,எனவே pixel அதிகமாக இருந்தால் குவாலிட்டி நன்றாக இருக்கும் என்று செலவு செய்ய வேண்டாம்..இப்போது கிடைக்கும் விலை குறைவான கேமராக்களே குறைந்தபட்சம் 8 MP யாக தான் வருகிறது..எனவே pixelஐ பற்றி கவலை பட வேண்டாம்.
- எதுவாக இருந்தாலும் நீங்களே கையில் பயன்படுத்திய பின் வாங்கவும்..
- VR(nikon),IS(canon),MIOS(panasonic),steady shot(sony) இந்த feature இருப்பதாக பார்த்து வாங்கவும்..இதன் பயன் பெரிய அளவில் இல்லை என்றாலும்,ஒரு சில விஷயங்களுக்கு கொஞ்சம் பயன்படும்.. இதை பற்றி தகவல்கள் இங்கே..
- பில்,வாரண்ட்டி வேனுங்கறவங்க show room லேயே வாங்குவது நல்லது..விலை பற்றி கவலைப்பட கூடாது..
சரி நண்பர்களே மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்.. இந்த பகுதி குறித்து ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் அதை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..
நன்றி
கருவாயன்..
நண்பரே, எனக்கு Landscape, Family stills, some slow moving objects ஆகியவை எடுக்க flash உடன் 5000 ரூபாய்க்கு ஒரு கேமரா குறிப்பிட முடியமா? படங்கள் பிளாக்கில் போட்டால் தெளிவாக இருக்கவேண்டும்.
ReplyDelete@DrPKandaswamyPHD...
ReplyDeleteரூ.5000க்கு என்றால் இந்தியாவில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் தான் என்று நினைக்கின்றேன்.. அப்படி ஏதாவது கேமரா கிடைத்தால் அதன் மாடல் நம்பரை தெரிவிக்கவும்..பிறகு அது வாங்கலாமா வேண்டாமா என்று கூறமுடியும்..எதற்கும் கோவை சாவித்திரி போட்டோ ஹவுஸில் கேட்டுப்பார்க்கவும்..
நல்ல வெளிச்சத்தில் எடுக்கும் போது அனைத்து கேமராக்களும் கிட்டதட்ட ஒரே மாதிரியான ரிசல்ட் தான் கொடுக்கும்.. ,
ஆனால் கண்டிப்பாக technical வித்தியாசம் இருக்கும்.. நடைமுறையில் புதிதாக கற்றுக்கொள்பவர்கள் கண்டுபிடிக்க முடியாது..
எனவே ரூ.5000 க்கு எந்த கேமரா வாங்கினாலும் ஒன்று தான்.. இந்த விலைக்குள் பெரிய வித்தியாசம் இருக்காது..
-கருவாயன்
நான் தற்பொழுது அமெரிக்காவில் உள்ளேன்.. நண்பர்கள் சிலர் என்னை கேமரா வாங்க சொல்லி இருக்கிறார்கள். அடுத்த மாதம் நான் இந்தியா வருகிறேன். ஒரு நண்பன் சோனி கேமரா கேட்கிறான், இன்னொருவன் canon வாங்க சொல்கிறான்.. என் budget $300 ல இருந்து $ 250 . தயவு குர்ந்து ஒரு நல்லா மாடல் தெரிவிக்கவும்...
ReplyDelete@raja..
ReplyDeleteஅமெரிக்காவில் இருப்பதால் இந்த வெப்தளத்தில் நீங்கள் வாங்கலாம்..
sony ஐ விட canon கண்டிப்பாக சிறந்ததாக இருக்கும்..உங்கள் பட்ஜெட்டை கொஞ்சம் சேர்த்தி $310 க்கு இந்த canon மாடல் கேமராவை வாங்கலாம்.. சிறிய கேமரா வகைகளில் இந்த மாடல் சிறந்ததாக அனைத்து reviewers ம் கூறுகின்றனர்.. இதன் புதிய version (S95) இப்போது வந்து விட்டது ஆனால் உங்கள் budgetக்கு ஒத்து வராத்தால் இந்த மாடலையே தைரியமாக வாங்கலாம்..
http://www.adorama.com/ICAS90R.html
மேலே சொன்ன மாடல் என்பது canon கம்பெனியால் refurbished செய்யப்பட்டது.. refurbished என்று பயப்பட தேவையில்லை.. தைரியமாக வாங்கலாம்.. அப்படி refurbished வேண்டாம் என்றால் இன்னும் கொஞ்சம் பட்ஜெட் கூடும்.. பரவாயில்லையென்றால் இதை வாங்கலாம்
http://www.adorama.com/ICAS90.html
இப்போதைக்கு உங்கள் பட்ஜெட்டிற்கு இந்த மாடல் சிறந்ததே..(சிறிய சைஸ் கேமராக்களில்)
அல்லது DSLR பரவாயில்லை என்றால் மீண்டும் தெரிவிக்கவும்.. அதற்க்கு வேறு பல மாடல்கள் உள்ளன..
-கருவாயன்
Hai This is shunmugam from bangalore your blog is nice .Please add a option to ur blogspot for receive the post through feedblitz..........
ReplyDeletecan you pls suggest DSLR also in that Range
ReplyDeleteRaja
@raja...
ReplyDeleteஅந்த rangeல புதிய DSLR வாய்ப்பே இல்லை..
கடைசியாக nikon d3000(refurbished) என்ற மாடலை $375க்கு விற்றார்கள்..ஆனால் இப்போதைக்கு stock இல்லை..
இப்போதைக்கு குறைந்த விலையில் DSLR வேண்டும் என்றால் அமெரிக்காவில் இந்த மாடல் தான் வழி...
http://www.adorama.com/INKD40KR.html
ஆனால் இது சென்னையிலேயே இந்த விலைக்கு கிடைக்கும் என்று நினைக்கின்றேன்..
உங்களால் budget $520 அளவுக்கு ஒதுக்க முடியும் என்றால் இந்த மாடல் மிக அருமையான மாடல் ஆகும்..http://www.adorama.com/INKD5000RD.html?utm_source=rflAID021866&utm_medium=Affiliate&utm_campaign=Other&utm_term=Other
நான் இதை இங்கே தான் வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கின்றேன் .. மிகவும் நன்றாக இருக்கின்றது..
உங்களால் முடிந்தால் இதை வாங்கவும் இல்லையென்றால் உங்கள் budgetற்கு பயன்படுத்திய DSLR வேண்டுமானால் கிடைக்கும்..அதுவும் 400$ ஆகிவிடும் .. புதிது வாய்ப்பில்லை..
முடியாது என்றால் சிறிய வகை கேமரா தான் இப்போதைக்கு வழி..
உங்களுக்கு எந்த வகையில் படம் எடுக்க விருப்பம்??
-கருவாயன்
நண்பரே, தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.. என்னை பொறுத்த வரையில் வாழ்கையில் ஒரு நல்ல தரமான கேமரா வாங்க வேண்டும்.. இப்போது நன் படித்து கொண்டு இருப்பதால் என்னால் ட்ச்ல்ர் வாங்க முடியாது.
ReplyDeleteபிற்காலத்தில் இதனை வாங்கலாம். தற்பொழுது கை அடக்க கேமரா வாங்கலாமா இல்ல படத்தை ரெகார்ட் பண்ணுகிற மாத்ரி வீடியோ கேமரா வா ஒரே குழப்பம் . நண்பர்கள் சோனி தவிர வேறு எதுவும் வாங்க வேண்டாம் என சொல்கிறார்கள்.
ஆகவே, தங்கள் தயவு குர்ந்து சோனி மாடல்இல் நல்ல கேமரா பற்றி தெரிவிக்கவும்.
தங்கள் பொறுமையான பதிலுக்கு மிக்க நன்றினே
Raja
@raja...வீடியோ கேமரா என்றால் sony சிறந்ததே..
ReplyDeleteஉங்களுக்கு அதிக குவாலிட்டி உள்ள வீடியோ தான் முக்கியம் என்றால் வீடியோ கேமராவே வாங்கவும்..
அதிக குவாலிட்டி உள்ள photo தான் முக்கியம் என்றால் still கேமராவே வாங்கவும்..
ஆனால் இப்பொழுதுள்ள சிறிய still கேமராக்களில் கூட அதிக சக்தி வாய்ந்த வீடியோ optionனும் இருப்பதால் கவலைபட தேவையில்லை..
இதை நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்..
sony தான் சிறந்தது என்பதெல்லாம் அந்த காலம்..இன்றைய நிலையில் sony என்பது நல்ல பொருள்களை வாங்கி அசெம்பிள் செய்து விற்கும் ஒரு நல்ல நிறுவனமே..
உதாரணமாக sony கேமராவையே எடுத்துக்கொள்வோம்.. sonyன் எந்த கேமராவை பார்த்தாலும் லென்ஸில் carl zeiss என்று போட்டிருப்பார்கள்.. இதன் அர்த்தம் sony கேமராவில் carl zeiss லென்ஸை பயன்படுத்துகிறார்கள் என்று அர்த்தம்.. உங்கள் நண்பர்கள் கூறியபடி sony சிறந்தது என்றால் ஏன் sonyயே அதன் லென்ஸை பயன்படுத்தலாமே?? அப்படி கிடையாதே..
அதனால் நீங்கள் மற்ற brand வாங்குவதில் பயப்படதேவையில்லை..
என்னை பொறுத்த வரையில் சிறிய கேமராக்களில் இப்போதைக்கு canon மற்றும் panasonic தான் சிறந்தது என்று சொல்வேன்.. இவ்விரண்டும் sony ஐ விட சிறந்ததே..
உங்களுக்கு sony தான் வேண்டும் என்றால் கீழ்கண்டுள்ள மாடல்களை பரிசீலிக்கலாம்..
sony cyber shot dsc-hx5
sony cyber shot dsc-h55 இவ்விரண்டில் hx5 நன்றாக இருக்கும் என்று இந்த reviews தெரிவிக்கின்றது..
http://www.dpreview.com/reviews/Q210grouptravelzoom/page24.asp
prosumer கேமரா என்றால்,இந்த மாடல்களை பரிசீலிக்கலாம்..
canon sx 20 IS
panasonic fz35
http://www.dpreview.com/reviews/Q110superzoomgroup/page19.asp
உங்களுக்கு கையடக்கமான கேமரா வேண்டும் என்றால் ,விலை OK என்றால் canon s90 ஒரு நல்ல கேமராவாக உங்களுக்கு இருக்கும்..
-கருவாயன்
Thanks a Lot for your detailed Explanation.
ReplyDeleteRegards
Raja
http://shopping.sify.com/fuji-av100-cameras-CAM05052010FUJI01-10.htm
ReplyDeleteCamera below 5 K with 12 Mega Pixels
hi
ReplyDeleteif u like DSLR go nikon d3100 it is released on sep mid. it can 1080i video
@anony... very useful link and information...
ReplyDelete@mamiya mohan... thanks for the information...
-karuvayan
How about Nikon cameras for P&S?
ReplyDeleteHow abt Canon PowerShot A3000 IS Digital Camera ?
@jayashree..
ReplyDelete1. நிக்கான் P&S நல்ல கேமரா தான்..தாராளமாக வாங்கலாம்... ஆனால் இதை விட வேறு நல்ல கேமராக்களும் உண்டு..nikon DSLR ல் சிறந்ததாக இருப்பது போல் P&S கேமராக்களில் இல்லை .. அவ்வளவுதான்..மற்றபடி நல்ல கேமராவே...
2. canon a3000 IS ஐ பொறுத்த வரையில், விலைக்கு நல்ல கேமரா.. ஆனால் இதில் 35mm தான் wide angle.. இப்போதைக்கு மிகவும் விலை குறைவான கேமராக்களிலேயே 30mm , 28 mm என்பது வந்துவிட்டது.. உங்களுக்கு 35mm போதும் என்றால் அது நல்ல கேமரா..wide angle இன்னும் வேண்டுமென்றால் வேறு கேமரா பார்க்கலாம்.. இந்த கேமரா வேண்டாம்..
-கருவாயன்
@Karuvayan:
ReplyDeleteI already own a SLR from canon, which uses compact flash. Now, I am planning to buy a compact and simple camera for my father, who would like to use it during his travel to temples or so. And, he is very much interested in photography. So, I thought of buying a simple to use and less expensive camera, which might also probably use Compact flash, so that we can share the CF that we have. Please suggest.
@jayashree..
ReplyDeleteCF card எல்லாம் மாத்தி பயன்படுத்த முடியாது.. அது DSLR ல் மட்டும் தான் பயன்படுத்த முடியும்..(நீங்கள் அந்த அர்த்தத்தில் தானே கேட்டிருக்கின்றீர்கள்?)
temples எடுப்பதற்கு கொஞ்சம் wide angle இருந்தால் நல்லது.. எனவே எந்த கேமராவை வாங்கினாலும் அது குறைந்த பட்சம் 30mm என்றாவது wide angle இருந்தால் நல்லது..
விலை குறைவான கேமராக்களில் பெரிய அளவு குவாலிட்டி வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது..
என்னால் இது தான் சிறந்தது என்று அடித்து கூறமுடியாது..இருந்தாலும் ஒரு சில கேமராக்களை இங்கே list போட்டுள்ளேன்.. பார்க்கவும்..இது தற்பொழுது சந்தையில் கிடைக்கின்றதா என்பதை நீங்கள் பார்த்துக்கொள்ளவும்..
canon:
power shot ixus 105 IS
power shot ixus 120 IS
nikon
coolpix s3000
coolpix s4000
coolpix s570
olympus
FE-4000
FE-5020
panasonic
FS-15
ricoh
CX1
sony
dsc-w310
dsc-w320
dsc-w350
dsc-w360
dsc-h55
மேலே சொன்னது எல்லாம் அநேகமாக ரூ.7500 முதல் 10000 வரை கிடைக்கும் என்று நம்புகிறேன்..
இதில் உங்களுக்கு எது பிடிக்கின்றதோ அதை செலக்ட் செய்து கொள்ளவும்..
இன்னும் விலை குறைவாக வேண்டுமென்றால் wide angle ஐ தியாகம் பன்ன வேண்டும்.. அதற்கு இந்த மாடல் பரவாயில்லை.. வாங்கலாம்.
http://shopping.sify.com/fuji-av100-cameras-CAM05052010FUJI01-10.htm
இன்னும் குழப்பமாக இருந்தால் ஏதாவது மாடல் பார்த்தீர்கள் என்றால் தெரிவிக்கவும்..அதை பற்றி பிறகு பார்த்து கொள்ளலாம்.
-கருவாயன்
Thanks a lot for the detailed reply and suggestions.
ReplyDeleteDear Sir,
ReplyDeleteCan you pls tell sony w370 is good or Sony W350 or H55? m interested n purchasing Sony only
@saro..
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டுள்ள மாடல்கள் எல்லாம் கிட்டதட்ட ஒரே வகையான கேமராக்கள்.
இதன் முக்கிய வித்தியாசங்கள் zoom range மற்றும் விலை மட்டுமே.. ஒரு சில handling வித்தியாசம் இருக்கலாம் அவ்வளவு தான்..
இதில்,
sony w 350 = 26mm-105mm zoom range வரும்
sony w 370 = 34mm-238mm zoom range வரும்
sony h 55 = 25mm - 250mm zoom range வரும்.
இந்த மூன்றில் zoom range ஐ பார்த்தால் sony h55 பல வகையில் சிறந்ததாக இருக்கின்றது.. அருமையான wide angle(25mm) ,போதுமான telephoto zoom(250mm)..
w370 ன் wide angle 34mm தான்..இது சில நேரங்களில் பத்தாது.. எனவே இதை விட்டு விடுங்கள்..வேண்டாம்
w350 ன் zoom range 26-105mm ..டீசெண்ட்டான zoom range.. நமது பொதுவான பயன்பாட்டிற்கு இது போதும்..விலை மற்ற sony மாடல்களை விட குறைவு..கொஞ்சம் ஸ்பீடு அதிகம் ( f2.7 vs f3.5)..
எனவே,உங்களுக்கு பட்ஜெட் பிரச்சனை என்றால் sony w350 எடுக்கலாம்..
விலை பரவாயில்லை என்றால் sony h55 கேமரா இம் மூன்றில் சிறந்தது ஆகும்..எனவே இதை வாங்கலாம்
எதற்கும் நேரில் சென்று வாங்கும் போது,உங்களுக்கு கை அடக்கமாக,படம் எடுப்பதற்கு எளிதாக பட்டன்கள் உள்ளதா என்பதை ஒவ்வொரு மாடலையும் பயன் படுத்தி பார்க்கவும்.. சில நேரங்களில் அது கடுப்படிக்கும்..
இந்த comparisions எல்லாம் sony கேமராவுக்குள் மட்டும் தான்..மற்ற கேமராவுடன் கிடையாது..
உங்களுக்கு sony கேமராவே... தான் வேனுமா??
மற்ற மாடல்களும் ,பட்ஜெட்டும் பரவாயில்லை என்றால் கீழ்கண்டுள்ள மாடல்கள் இதை விட சிறந்ததாக தெரிகின்றது..
Casio EX-FH100
Samsung WB650 or WB550 (HZ35 in U.S)
இதனையும் தைரியமாக வாங்கலாம்.. இதன் detailed reviews இங்கே..
http://www.dpreview.com/reviews/Q210grouptravelzoom/
http://www.dpreview.com/reviews/Q210grouptravelzoom/page24.asp
-கருவாயன்
dear sir,
ReplyDeleteThanks a lot for your valuable reply with good analysis. I ll go for H55.. I love Sony..
nanbare,
ReplyDeleteYour explanation is very good about the camera.. I need a Help from you.. I want to Buy sony camera. can you pls suggest a good model. Budget is Rs.15000 ~ $300 to 350 in US amount.
Devi
@devika...
ReplyDeleteநீங்கள் தெரிவித்திருக்கும் பட்ஜெட்டிற்க்கு நானாக இருந்தால்,சிறிய கேமரா வாங்க விருப்பப்பட்டால் கண்டிப்பாக canon s90 கேமராவை,இங்கே தான் வாங்குவேன்..http://www.adorama.com/ICAS90R.html
அமெரிக்காவில் தானே வாங்குறீங்க? ஏனென்றால் இந்தியாவில் இந்த விலைக்கு கிடைக்க வாய்ப்பில்லை..
sony கேமராக்களை விட கண்டிப்பாக இந்த கேமராவின் செயல்பாடு நன்றாக இருக்கும்.. நல்ல வேகம்(aperture), போதுமான zoom range,இன்னும் பிற... இந்த மாடலை தைரியமாக வாங்குங்கள்..
sonyயே தான் வேண்டும் என்றால் ஏற்கனவே saro அவர்களுக்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும்..
அல்லது வேறு ஏதாவது மாடல் பார்த்து வைத்திருக்கின்றீர்கள் என்றால் தெரிவிக்கவும்..
-கருவாயன்
நண்பர்களே,
ReplyDeleteநான் சோனி நிறுவனத்தின் தயாரிப்பான w210 டிஜிட்டல் கேமரா வாங்கினேன். இதில் close-up இல் படமெடுப்பது எப்படி என்று புரியவில்லை.
macro (shooting - colse-up) என்று ஒரு mode உள்ளது இதில் Auto, Macro on என்று இரண்டு option உள்ளது இதில் பலமுறை முயன்றும் என்னால் close-up shot எடுக்க இயலவில்லை. எனவே விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
அன்புடன்,
சிவா
@k.sivakumar..
ReplyDeleteபொதுவாக நாம் ஃபோகஸ் செய்யும் போது ஒவ்வொரு லென்ஸும் ஒவ்வொரு தூரம் வரை ஃபோகஸ் ஆகும்.. இது எவ்வளவு அருகில் வரை ஃபோகஸ் ஆகின்றதோ அவ்வளவு தரத்தில் மேக்ரோ படம் அமையும்..
உங்கள் கேமராவில் macro mode ஐ பயன்படுத்தும் போது ரொம்ப க்ளோஸாக ஃபோகஸ் ஆகும்..
கிட்டதட்ட அரை/கால் அடி வரை உள்ள சப்ஜெக்ட் ஃபோகஸ் ஆகும்.. இது லென்ஸுக்கு லென்ஸ் மாறுபடும்..
ஆனால் உங்கள் கேமராவை பொறுத்த வரையில் wideangle ல் மட்டும் தான் ரொம்ப க்ளோஸாக ஃபோகஸ் ஆகும் என்று நினைக்கின்றேன்..
அதாவது zoom lever ல் W என்று இருக்கும் இடத்தில் அதிகமாக உள்ளதே அந்த zoom ல் தான் மேக்ரோ ஃபோகஸ் ஆகும்.. கொஞ்சம் zoom செய்தாலும் ஃபோகஸ் கிடைக்காது..
அதுவுமில்லாமல் அவ்வளவு closeஆக ஃபோகஸ் போகும் போது கை மிகவும் steadyஆக இருந்தால் மட்டுமே படம் தெளிவாக வரும் இல்லையென்றால் படம் வேஸ்ட் தான்.
-கருவாயன்
I have to plan buy a Nikon D5100 SLRD camera with 18-55mm lens. Is it good camera? my choice only Nikon and maximum budget is $1000. can you please advise about it?
ReplyDeleteregard,
gnanam
/I have to plan buy a Nikon D5100 SLRD camera with 18-55mm lens. Is it good camera? my choice only Nikon and maximum budget is $1000. can you please advise about it?
ReplyDeleteregard,
gnanam//
Its a good choice. if you have budget, buy 55-300 lens along with it. you would have complete range from 18 -300. Good luck
@gnanam... நீங்கள் 1000$ என்று குறிப்பிடுவதை பார்த்தால் நீங்கள் U.S. ல் வசிப்பவர் போல் தெரிகின்றது.. அப்படியென்றால் இந்த லிங்க்ல் வாங்கவும்.. மிகவும் நல்ல ஆஃபர்...
ReplyDeletehttp://www.ritzcamera.com/product/RI541538917.htm?utm_medium=dp&utm_source=KenRockwell
பட்ஜெட் ஒத்து வந்தால் 55-200mm lens அல்லது 55-300mm lens இரண்டில் எது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளவும்..இரண்டுமே நல்ல லென்ஸ்...
-கருவாயன்
அன்பு தோழரே....நான் பத்திரிக்கை ஒன்றில் வட்டார நிருபராக பணிபுரிகிறேன்.எனக்கு மேடை நிகழ்ச்சிகள் ,பள்ளி விழாக்கள் போன்றவற்றில் படம் எடுக்க ஏழாயிரம் பட்ஜெட்டுக்குள் படம் எடுக்க எந்த பிரான்ட் மற்றும் மாடல் சரியாக இருக்கும் .பரிந்துரைக்கவும் .ப்ளீஸ் ....நன்றி 9788770240
ReplyDeleteவிழாக்களில் படம் எடுப்பதற்கு சிறிய கேமராக்களில் சற்று சிரமம் தான்..அதுவும் பத்திரிக்கைக்காக படம் எடுக்க வேண்டுமென்றால் DSLR இருந்தால் தான் சரி வரும்.. சிறிய கேமராக்களிலும் எடுக்கலாம், ஆனால் நாம் மட்டும் பார்ப்பதற்கு வேண்டுமானால் ஓ.கே. ஏழாயிரம் ரூபாய்க்கு என்றால் பேஸிக் மாடல் தான் கிடைக்கும்..ஆனால் சிறிய கேமராக்களை பொருத்த வரையில் அதில் அதிக முதலீடும் தேவையில்லை.. எனவே, ஏதாவது canon கேமரா அந்த விலைக்குள் உங்களுக்கு பிடித்ததையே வாங்கவும்.. மாடல் எல்லாம் பிரச்சனை இல்லை..
ReplyDeleteநண்பரே..
ReplyDeleteநான் தற்போது வரை Mobil phoneகேமராவயே பயன்படுத்தி வந்தேன். இப்போது புதிய கேமரா வாங்கலாம் என்று உள்ளேன்.
P&S ல் எனக்கு ஆர்வம் இல்லை.
DSLR பயன்படுத்தலாம் என்று உள்ளேன்.
ஏனென்றால் நண்பர்களுடன் அடிக்கடி வெளியில் செல்வோம். முதல் கேமரா என்பதால் basic model போதும். எந்த கேமரா வாங்கலாம். எப்பட பயன்படுத்த வேண்டும் என்று சிறு குறிப்பு கொடுத்து உதவ முடியுமா?
கேனான் என்றால் 1100D / 1200D, நிக்கான் என்றால் D3200 / D3300. கூகிள் செய்து மேலும் இந்த மாடல்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ReplyDelete