Friday, August 6, 2010

உள்ளரங்கு புகைப்படக்கலை - 2- க்ளிக், க்ளிக் .. ஃப்ளாஷ்!

10 comments:
 
அனைவருக்கும்,

ஃப்ளாஷ் போட்டோகிராபி பற்றிய உங்களின் கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் விவாதிக்கலாம். உங்களின் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்


ஃப்ளாஷ் எப்படி வேலை செய்கிறது ?


செறிவூட்டப் பட்ட மின்சாரத்தை ( கிட்ட தட்ட பல ஆயிரம் வோல்ட் ) xenon Gas நிரப்பப் பட்ட டிஸ்சார்ஜ் ட்யூப் ( நியான் பல்ப் பாத்திருப்பீங்களே அது மாதிரி இருக்கும் ) ஒரு முனைக்கு செலுத்தப் படும். டிரிக்கர் ப்ளேட் அடுத்த முனை (பாஸிடிவ் / நெகடிவ் மின்சாரம் ). அதிக செறிவூட்டப் பட்ட எதிர்மின்சாரம் டிரிக்கர் ப்ளேட்டில் ஏற்றப் படும் போது ionisation என்ற முறையில் அணுக்களின் நகர்வு இரு புறமும் ஏற்படுகிறது. செறிவூட்டப் பட்ட மின்சாரம் விடுவிக்கப் படும் போது மோதும் அணுக்களின் மூலம் ஏற்படும் ஆற்றலினால் அதிக ஒளி உண்டாகிறது. ஏறக்குறைய குழல் விளக்குகள் எப்படி வேலை செய்கிறதோ அதே முறையில். ஆனால் இங்கே மிக அதிக அளவில் மின்சாரம் செலுத்தப் படுகிறது.



எப்போதெல்லாம் ப்ளாஷ் பயன்படுத்த வேண்டும். எங்கு பயன்படுத்த கூடாது?

இது தனி பதிவுக்கான கேள்வி. பதில் சற்றே சுருக்கமாக சில உதாரணங்கள்.
  • எங்கே பயன் படுத்தலாம் ?
  • - இருட்டு இருக்கும் போது தெளிவான படங்களைக் கொணர
  • - அதி/வேகத்தில் நகரும் பொருளை "உறைந்த" நிலையில் எடுக்க
  • - ஒளி இரைச்சல் அதிகம் வரும் என்று தோன்றினால் அதை தவிர்க்க
  • - போர்ட்ரைட் படங்கள் எடுக்க ( முகம் எல்லாப் பக்கமும் தெளிவாக வரவேண்டும் என்ற முனைப்பிருந்தால் ). முடிந்த வரை ஒளி சுவர்களில் பட்டு எதிரொளிப்பது நல்லது.
  • - விளம்பர படங்களின் (தேவையான ) போது.
  • - மேக்ரோ போட்டோ எடுக்கும் போது
  • - நல்ல வெயில் நேரங்களில் மனிதர்களை / பொருட்களை புகைப்படம் எடுக்கும் போது ஃபிளாஷ் உபயோகித்தல் நலம். இல்லாவிட்டால் நிழல் படிந்த இடங்கள் ( முக்கியமாய் மூக்கு மற்றும் கண்களுக்கு அடியில்) கருப்பாகவும் மற்ற இடங்கள் நல்ல வெளிச்சத்துடன் இருக்கும். ஃபிளாஷ் வேண்டாம் என்று கரும் பட்சத்தில் மூக்கின் கீழும் கண்களின் கீழும் நிழல் விழாமல் இருக்கும் வகையில் பார்த்து எடுக்க வேண்டும்.

  • எங்கே கூடாது ?
  • - தொட்டிலில் இருக்கும் குழந்தைகள்
  • - முகம் அறியா மூன்றாம் மனிதர்கள்
  • - பறவைக் கூடுகளில்
  • - முகத்துக்கு மிக அருகில்
  • - உங்கள் கற்பனைத் திறன் பாதிக்கப் படும் இடங்களில். உதாரணத்துக்கு மெழுகுவத்தியின் வெளிச்சத்தில் அருமையாகக் காணும் பொருள் ஃப்ளாஷ் போட்டால் தட்டையாகப் போய் நீங்கள் கற்பனை செய்த வகையில் வராது.
  • - சில வழிபாட்டுத் தலங்கள்.
  • - தொல்பொருள் பாதுகாப்பிடம்
  • - இரவின் ஒளியை புகைப்படத்தில் சேகரிக்க நினைக்கும் போது


எந்த ப்ளாஷ் வாங்கலாம்?

அது உங்கள் கேமராவைப் பொருத்தது. தேவையைப் பொறுத்தது . கூடவே உங்களின் பட்ஜெட்டையும் பொறுத்தது.

* பாயிண்ட் & ஷூட் கேமரா என்றால் ( ஹாட் ஷூ இல்லாத பட்சத்தில்) சில நேரங்களில் கேமராவில் இருக்கும் ஃப்ளாஷ் வெளிச்சம் போதாது. அப்போது கேமரா ஃப்ளாஷின் ஒளியினால் ஆக்டிவேட் ஆகும் ரிமோட் ஃப்ளாஷ் வாங்கலாம்
* உங்களுக்கு வெறுமே அதிக வெளிச்சம் தேவைப்படும் பட்சத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் ஃப்ளாஷ் வாங்கலாம்.
* சில ஃப்ளாஷ் களில் ஒளியின் அளவைக் கட்டுப் படுத்த முடியும். அது போன்றவை சற்று அதிக விலையில் கிடைக்கிறது. முழு வெளிச்சத்தைக் குறைத்து 1/16 அல்லது 1/24 என்ற அளவில் வெளிச்சம் தரும்.
* எஸ்.எல்.ஆர் கேமராக்களுக்கு அந்த கேமராவின் தயாரிப்பு நிறுவனங்களின் ஃப்ளாஷ்கள் நல்ல பயன் தரும். விலை சற்று அதிகம் என்றாலும் கூட. கேமராவின் மூலம் ஃப்ளாஷைக் கட்டுப்படுத்தும் வசதி அதிகம் அதில் உண்டு.
* விளம்பரம் எடுக்கும் போது பல ஃப்ளாஷ் ( சாஃப்ட் பாக்ஸ் ) கொண்டு எடுப்பார்கள்.


ப்ளாஷுடன் வேறு ஏதேனும் பயன்படுத்த வேண்டுமா? (தெர்மோகால்)

எப்போதும் உபயோகிக்க வேண்டும் என்று இல்லை. வெளிச்சத்தைப் பிரதிபலிக்க வேண்டிய நேரத்தில் உபயோகிக்கலாம். தெர்மோகோல்/ரிஃப்லெக்டர் போன்றவை ஃப்ளாஷுடன் தான் உபயோகிக்க வேண்டும் என்று இல்லை. சூரிய வெளிச்சத்திலோ அல்லது வெளிச்சம் ஒரு புறத்தில் நன்றாக விழுந்து மறுபுறம் கருப்பாக இருக்கும் பக்கத்திற்காகவோ உபயோகிக்கலாம்.
உங்களின் கேள்விகளோ மாற்றுக் கருத்துகளோ இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். ஃப்ளாஷைக் கொண்டு சிறப்பாக பொருட்களை எடுப்பது பற்றி அடுத்தப் பதிவில் விவாதிக்கலாம்.
நன்றி

10 comments:

  1. நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு பதிவு...
    1. கேமரா இன்பில்ட் ப்ளாஷ் - டீப்ஸ் ப்ளீஸ் (கேனன் 1000டி)
    2. ப்ளாஷ் எக்ஸ்போசர் காம்பன்செஷன் - எங்கே? எப்படி?
    3. ப்ளாஷ் பயன்படுத்தி 1/60 க்கு கீழே நல்ல படம் எடுக்க முடியுமா?
    - - நல்ல விளக்கம், ஆனா படங்கள் தான் மிஸ்ஸிங் பாஸ் - -

    ReplyDelete
  2. நல்ல பயனுள்ள பதிவு. (இது போன்ற பதிவுகள் தொடரட்டும்)

    நாகப்பன் கேட்ட அதே கேள்விகள்.... கேனன் 1000d யில் ஃப்லாஷ் எப்படி உபயோகப்படுத்துவது.... என்னிடம் அது இல்லை என்றாலும் அடுத்து நான் வாங்கக்கூடிய பட்ஜெட்டுக்கு அந்த கேமராதான்.. ஆக தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. நடுவர்கள் அனுமதித்தால் நான் இங்கே சில கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.

    அன்புடன்,
    மீனாட்சிசுந்தரம்

    ReplyDelete
  4. நன்று.... அடுத்த பதிவுக்காக காத்திருக்கின்றேன்.

    ReplyDelete
  5. மீனாட்சிசுந்தரம்,

    பதில் அளிக்கவும். அனுமதி எல்லாம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. :)

    ReplyDelete
  6. 1. பிளாஷ் பெரும்பாலும் உள்அரங்கில் வெளிச்சம் கம்மியாக இருக்குமிடத்தில் உபயோகிப்போம். அதுவும் மக்கள் மற்றும் உருவங்கள் படமெடுக்க விரும்புவோம். ஆன் கேமரா பிளஷானது சிறிய பல்பிலிருந்து வெளிப்படும் வெளிச்சம் அதுவும் கூர்மையான வெளிச்சம். அந்த வெளிச்சம் மனிதர்களை படமெடுத்தால் கரிய மற்றும் கூர்மையான நிழல்களை கண்ணுக்கு கீழ் மற்றும் நிழல் விழுகும் இடங்களில் உருவாக்கும். இதே தான் மதியம் பன்னிரண்டு மணிவாக்கில் சூரியன் உச்சத்தில் இருக்கும் போதும் நிகழும். கூரிய வெய்யில் கரிய கூரான நிழல்களை உருவாக்கும். நிழல்களின் கூர்மையை குறைபதற்கு ஒளி வெளிப்பாடை டிப்யூஸ் Diffuse செய்யவேண்டும். அதாவது மேக மூட்டமாயிருந்தால் எப்படி பரவலான நிழல்அற்ற வெளிச்சம் கிடைக்குமோ அது போல. ஆன் காமிரா பிளாஷ் ஒளியை எப்படி டிப்யூஸ் செய்வது? அதற்கு சில எளிய வழிமுறைகள் உண்டு.

    a. படம் எடுக்கும் போது ஒரு வெள்ளைத் தாளயையோ அல்லது துணியையோ லென்சை மறைக்காமல் பிளாஷ் முன்னாடி வைத்தால் படம் எடுக்கும் போது ஒளி டிப்யூஸ் ஆகிவிடும். நிழல்களும் கரைந்து படத்தை மெருகூட்டும்.

    b. உதிரி பிளாஷ் வாங்கினால் அதில் பல்பை 45 டிகிரி கோணத்தில் வைத்து கூரை மீது (சமமான பெரும்பாலும் வீடுகளில் காணப்படுகிற) பாய்ச்சினால் ஒளி டிப்யூஸ் ஆகி படம் தெளிவான ஒளியுடன் பதிவாகும்.

    c. ஆன் கேமரா பிளாஷ்சின் இன்னொரு முக்கிய அம்சம், பின்ஒளியில் உருவப் படம் எடுக்கும் போது முகம் இருட்டாகிவிடும். அப்போது பிளாஷ் இயக்கினால் கேமரா கணக்கிட்டு அளவான ஒளியை வெளிப்படுத்தி முகத்தை தெளிவுபடுத்தி விடும்.இதற்கு "Fill Flash" என்று பெயர். இதில் முக்கியமான ஒன்று கேமரா பிளாஷ் செட்டிங் "TTL" ல் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

    TTL- Nikon ல் TTL Canon ல் இதே போல் ஆட்டோ செட்டிங் உள்ளது - கேமரா தானாகவே ஒளி அளவை கணக்கிட்டுக் கொள்ளும். இது காமெராவின் ஆட்டோ மோடில் இருந்து வேறுபட்டது. கேமரா M,A,S,P என்று எந்த மோடில் இருந்தாலும் "TTL" ல் ஒளி அளவை தானாகவே கணக்கிடுக் கொள்ளும்.

    அடுத்த பதிலில் Manual Mode Flash, Flash Synch Speed, விளக்குகிறேன்.

    ReplyDelete
  7. நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு பதிவு...TTL- Nikon ல் TTL Canon ல் இதே போல் ஆட்டோ செட்டிங் உள்ளது - கேமரா தானாகவே ஒளி அளவை கணக்கிட்டுக் கொள்ளும். இது காமெராவின் ஆட்டோ மோடில் இருந்து வேறுபட்டது. கேமரா M,A,S,P என்று எந்த மோடில் இருந்தாலும் "TTL" ல் ஒளி அளவை தானாகவே கணக்கிடுக் கொள்ளும்.
    நல்ல விளக்கம், ஆனா படங்கள் தான் மிஸ்ஸிங் பாஸ் - -

    ReplyDelete
  8. i have d300s which flash shootable for me? i need professional flash,please sent the answer - illakiyam47@hotmail.com.

    - valliappan muthiah

    ReplyDelete
  9. Your tips are very useful to me. Thanks.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff