Thursday, January 22, 2009

ஜனவரி போட்டி - முதல் பத்து + 5 இடங்கள்

19 comments:
 
வணக்கம் மக்கா!

இந்த தடவையும் வழக்கம் போல போட்டில கலந்துகிட்டு கலக்கோ கலக்குன்னு கலக்கி இருக்கும் உங்க எல்லோருக்கும் "நம்" குழுவின் சார்பில் நன்றி. கலந்துக்கிட்ட எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

இந்த மாசம் பத்து புகைப்படங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கலாம்னு தான் உக்காந்தேன். ஆனா பதினைஞ்சா போட வேண்டிய கட்டாயம்.

முதல் பதினைஞ்சுக்குள்ள வந்த படங்களை பாக்கறதுக்கு முன்னாடி சில விஷயங்கள்.



போன பதிவில் ஏற்கனவே சொன்னது போல அடிப்படைகளை முக்கியமாக கவனத்தில் கொள்ளுங்கள். போன பதிவில ஸ்லைடு ஒண்ணு போட்டிருந்தேன் எத்தனை பேர் பார்த்தீங்கன்னு தெரியாது. அந்த ஸ்லைட் ஆரம்ப மற்றும் இடைநிலை புகைப்படக் கலைக்கு மிகவும் தேவையான விவரங்களைத் தருகிறது. அதோடில்லாமல் எடுத்துக்காட்டுப் புகைப்படங்களையும் தந்து செட்டிங் மாறினால் எப்படி படத்தின் தன்மை மாறும் அப்படின்னு நீங்களே நேரடியா செஞ்சு பாக்கக் கூடிய வசதியோட இருக்கு. எ.கா: ஷட்டர் ஸ்பீட் அதிகமானா/குறைவான புகைப்படங்கள் எப்படி மாறுபடும் ? அதை அந்த ஸ்லைடில் நீங்களே செஞ்சு பாக்கலாம்.

இப்ப போட்டிக்கு வருவோம்.

கிருஷ்ணாவின் புகைப்படத்தில் காண்ட்ராஸ்ட் மற்றும் ஷார்ப்னெஸ் குறைஞ்சு இருக்கு. very tight cropping.

நனானி அவர்களின் புகைப்படம் அழகா இருந்தது. பழைய புகைப்படங்களுக்குண்டான மதிப்பே தனி தான். அது ஸ்கேன் செஞ்சு போட்டிருக்காங்க. நல்ல புகைப்படம்.

காரூரன் படத்தில் இருக்கும் குழந்தைக்கு சுத்திப் போடுங்க. பின்பக்கம் மரச்சட்டத்தின் நிறமும் , சருமத்தின் நிறமும், உடையின் நிறமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகிப் போனது குறை. பின் புறம் இருக்கும் சட்டம் முழுதும் குழந்தைக்கு பேக் கிரவுண்டாக வந்திருந்தாலோ அல்லது அந்த சட்டம் முழுதும் இல்லாமல் பின்னால் தெரியும் வண்ணங்கள் நிறைந்திருந்தாலோ இன்னமும் மெருகோடிருந்திருக்கும். கோணம் மாற்றி எடுக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வது இதற்காகத் தான்.

கொரியர் கைப்புள்ள அண்ணாச்சியின் படம் அழகாய் இருந்தாலும் அதில் ஏதோ குறைவது போன்ற உணர்வு. அருமையானக் கோணம் ஆனால் பூச்சிகளின் பின்னால் தெரியும் அந்தக் கோடு Disturbing one

விஜயின் அந்த மலையில் இருக்கும் பனியும், அதன் பிரதிபலிப்பும் அருமை. But Bluish tint reduces the beauty bit. Little more contrast would have solved the problem ?

ஜாக்கி சேகர் - உங்களின் பிற புகைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். இது அவ்வளவாக ஈர்க்கவில்லை.


திவா அவர்களின் அகல்பரப்பு புகைப்படம் முழு அளவில் பார்த்தால் அன்றி அதன் வீச்சு தெரியாது. அதுவும் தவிர சரியான படி தேவையற்றவைகளை விலக்கி இருந்திருந்தால் அல்லது பாலத்தை முழுமையாக எடுத்திருந்தால் காட்சி செம்மைப் பட்டிருக்கும்.

வெண்ணிலா மீரான் படம் - Flower over exposed bit.


ட்ரூத். இதை விட வெகு அருமையானப் புகைப்படங்கள் உங்களிடம் இருந்து நாங்கள் பார்த்திருக்கிறோம்.

சதாங்கா - வானமும் ஏறக்குறைய வெளிறியே இருக்கிறது. கூடவே கோபுரத்தின் நிறமும் வெண்மை என்ற போதில் அதிகம் கவனத்தை ஈர்க்கவில்லை.

வாசியின் புகைப்படத்தில் குழந்தையின் சிரிப்பு அழகு. ஆனால் சுற்றி இருக்கும் பார்டர் ? அல்லது வேறெதுவோ ஒன்று குறைவு. வண்ணத்தில் இன்னும் அழகாய் இருந்திருக்குமோ என்னமோ

நாகப்பன் படம் அழகு. இருந்தாலும் படம் முழுமையாய் இல்லாதது போல் உணர்வு!

மேலே குறிப்பிட்ட படங்களில் சில முதல் பதினைந்திற்கு வெகு அருகில் வந்தவை. இதைவிட இவர்களால் இன்னமும் அழகுற புகைப்படம் எடுக்க முடியும் என்பதில் நிச்சயமாக எனக்கு நம்பிக்கை உண்டு. முடிந்த வரையில் புகைப்படத்தின் கீழ் எங்களுடைய கருத்துகளைத் தந்திருக்கிறோம்.
****

இனி முதல் பதினைந்து -(தர வரிசைக் கிரமமாக இல்லை. )

மாணிக்க வாசகம் சற்றே வெளுத்தது போல இருந்தாலும் அழகான படம்.
சங்கர் பாலசுப்ரமணியன் அருமையான புகைப்படம். அவர் சொன்ன மாதிரி வைட் ஆங்கிள் லென்ஸ் இருந்திருந்தா இன்னும் பட்டைய கிளப்பி இருக்கும் போல
பிரகாஷ்__GR இது பிற்தயாரிப்பு செய்யப்படாதப் படம்னா நம்பறதுக்கு கஸ்டமா தான் இருக்கு. ஆனா உண்மை. அழகான கோணம்.
Shanth அழகானக் கோயில். வானத்தின் நீல நிறம் படத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. மேலே வலது மற்றும் இடது புறத்தில் காணும் மரத்தின் இலைகள் இல்லாமல் இருந்தால் இந்தப் படம் வெகு சாதரணமாகியிருக்கலாம்
நந்து f/o நிலா அட்டகாசமான புகைப்படம். பின்னாலிருந்து வரும் ஒளியை உபயோகித்திருக்கும் விதமும், கூடவே நிலாவின் புன்சிரிப்புடன் கூடிய முகபாவனையும் அதை ஒளிச்சிறைப் பிடித்திருக்கும் நேரமும் அருமை. கருப்பு வெள்ளைக் காவியம் படைக்கிறது
MQN நல்ல புகைப்படம் எடுக்க புகைப்படக் கருவி ஒரு சாதனமே தவிர அது மட்டுமே நல்லப் புகைப்படம் எடுப்பதில்லை. எடுப்பவர் எடுக்கும் விதத்தில் Point and shoot கேமராவிலும் நல்ல புகைப்படங்களைத் தரலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. நிலையாக நின்றிருக்கும் சிறுவன், பக்கத்தில் அசைந்தாடிக்கொண்டிருக்கும் பெரியவர்கள் என அதை காட்சிப் படுத்திய விதம் மிக அழகு.
கருவாயன் அழகான புகைப்படம். இருந்தும் multiple leading lines இருக்கும் இந்தப் புகைப்படத்தில் கவனம் இடதுபக்கம் தெக்கி நிற்கும் நீர்த்துளி மீது சென்றுவிடுகிறது.
சூர்யா எகிறி குதிச்சதை நல்லாவே பிடிச்சிருக்காரு. நல்ல டைமிங். வானம் படத்தின் ப்ளஸ் பாயிண்ட்.
சுமதி முன்னாடி சிவனின் நிறமும் பின்னாடி தெரியும் கருப்பும் நல்லா பொருந்துது. வலது பக்கம் சிறிது வெட்டியிருக்கலாம்.
ராம் நல்ல காட்சியமைப்பு. nice contrast
அமல் நல்ல காட்சியமைப்பு. very tight crop. நந்து சொன்னது போல அதே நிறத்தைக் கொண்டு வருவது சவாலான விஷயம்.
கோமா புதுக் கோணத்தில் பைசா சாய்ந்த கோபுரம். வானத்தில் கொஞ்சம் நீலம் பாவியிருந்தால் இன்னும் அழகு கூடியிருக்கும்
கார்த்திக் நல்ல சில்ஹவுட் படம். பெரியதா பார்த்தா அழகா இருக்கும்.
Srini துரு துருக் கண்கள், நல்ல பேக் கிரவுண்டு. நல்ல படம்- Nice and soft lighting over the face.
ஆனந்த் விளம்பரப் புகைப்படத்துக்குறிய நேர்த்தியுடன் நல்ல ஒளியமைப்பு. வாழ்த்துக்கள்.


அம்புட்டுத்தேன்.

கூடிய விரைவில் முதல் மூன்றுடன் சந்திக்கலாம் மக்கா.. அதுவரைக்கும் பை பை

19 comments:

  1. அருமையான தேர்வு + விளக்கங்கள். தேர்வானவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. Congrats to top 15 contestants:)

    ReplyDelete
  3. பதிவர்களின் பதிவுக்கும் தொடுப்பு கொடுத்தால் நன்று.

    ReplyDelete
  4. ஒவ்வொரு போட்டியிலும் என் கேமரா சாயாமல் நிமிர்ந்து கொண்டே போகும் வகையில் ஊக்கிவிக்கிறீர்கள் நன்றி .இந்த படம் ,canon sure shot கொண்டு எடுக்கப் பட்டது

    ReplyDelete
  5. பத்து பதினைந்தானது படங்களை பார்க்கையிலேயே புரிகிறது!இதை தவிர்த்த மற்ற சில படங்களும் கூட என்னை பிரமிக்க வைத்தது!

    பங்கு பெற்றவர்களுக்கும் வெற்றி பெறப்போகும் அந்த மூவருக்கும் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  6. goma eagerly waiting ti see your choice of pic என்று தீபாவின் எதிர்பார்ப்பு என்னை உசிப்பி விட மிக ஜாக்கிரதையாகத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தேன்.தீபாவுக்கு நன்றி

    ReplyDelete
  7. வெற்றிபெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  8. பதினைந்துக்குள் தேர்வாகி இருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்... முத்தான மூண்றை காண ஆவலாய் உள்ளோம்.

    Advance wishes to the WINNERS.

    தேர்வர்களுக்கு Special Thanks.

    அன்புடன்
    வெண்ணிலா மீரான்

    ReplyDelete
  9. congrats. :-)
    நல்ல தேர்வு

    ReplyDelete
  10. முதல் பதினைந்தில் வந்தவர்களுக்கு என் பாராட்டுகள்.
    என் படத்துக்கு தந்த பாராட்டுக்கும் நன்றி! ஜீவ்ஸ்!!

    ReplyDelete
  11. எல்லாருமே கலக்கிருக்காங்க!

    ReplyDelete
  12. முதல் பதினைந்திற்குள் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது ... முதல் மூன்று வந்த பின்னால் நடுவர்கள் அனைத்து 15படங்களுக்கும் கமெண்ட் கொடுத்திருக்கலாம் ..

    -சுரேஷ் பாபு

    ReplyDelete
  13. அனைத்துமே அட்டகாசமாய் இருந்தது. முதல் மூன்றை காண இப்போதிலிருந்தே காத்திருக்க ஆரம்பித்து விட்டேன்..

    ReplyDelete
  14. //ரவிசங்கர் said...
    பதிவர்களின் பதிவுக்கும் தொடுப்பு கொடுத்தால் நன்று.
    //

    ரிப்பீட்டே :-))

    ReplyDelete
  15. எல்லாம் ஓக்கே... நந்து படம் யாக்கே??

    அங்க சொன்னதும் இங்கயும் தான்...

    டியர் நாட்ஸ்,

    நந்து படத்திலே நிலா தான் டாப்பு... அதுக்காக பரிசை போட்டோகிராபர்'க்கு கொடுக்கப்பிடாது...

    என்னவெல்லாம் சொல்லி ஆட்டைய கலைக்கவேண்டியதா இருக்கு... முடியல... :)

    ReplyDelete
  16. வெற்றி பெற்ற படங்களை எடுத்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. ராமலக்ஷ்மி,ப்ரியா :) நன்றி
    ரவிசங்கர் : எல்லாருக்கும் வலைப்பதிவு இருக்கிறதா தெரியவில்லை. படங்கள் பிகாசா ஆல்பத்தில் இருந்து நேரடியாக வெளியிட்டதால் அவர்களின் பதிவுச் சுட்டித் தெரியவில்லை.

    கோமா :) உண்மை தான். விடா முயற்சி தான் வெற்றியின் தாரக மந்திரம்.

    நன்றி ஆயில்யன், சர்வேசன், திகழ்மிளிர்,வேலன், :)

    நனானி - நன்றி. ஸ்கேன் செய்த புகைப்படம் ஆயினும் அதை சற்று ஜிம்பில் பிற்தயாரிப்பு செய்திருக்கலாம். இன்னும் நன்றாக வந்திருக்கும்.

    நன்றி ட்ரூத், முஹம்மது மீரான் & வால்பையன்.

    கருவாயன், உண்மைதான். நேரமில்லாத காரணத்தால் கிடைத்த நேரத்தில் எல்லாவற்றையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் :)

    நன்றி சென்ஷி - கூடிய விரைவில் முதல் மூன்று வந்து விடும்.

    ராம் : முதல் மூனுல நிலா வந்தா, பரிசு நிலாக்குன்னு சொல்லிடலாம். நந்துக்கு இல்ல :))

    ஜாக்கிசேகர் - நன்றி. உங்களிடம் இருந்து நிறைய புகைப்படங்களை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  18. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff