Monday, January 19, 2009

அடிப்படை விவரங்களை நினைவூட்டல் - Recalling the basics

9 comments:
 
போட்டியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் முதலில் குழுவின் சார்பாகவும், பார்வையாளர்கள் சார்பாகவும் நன்றிகள் பல. வழக்கம் போல் நல்ல அதீத அழகுடன் கூடிய படங்கள் திக்கு முக்காட வைக்கிறது.

இருந்தும் சில புகைப்படங்கள் நன்றாகவே இருந்தாலும், அதில் சில காரணிகள் நம்மை அந்தப் புகைப்படத்தின் அழகை ரசிக்க விடாமல் செய்யும். முக்கியமானது "நேரம்/தேதி". இது பெரும்பாலும் தவிர்க்கக் கூடியதே. போட்டிக்கு என்று இல்லாமல் உங்களின் தனித்தேவைக்கு என்று பார்த்தாலும் இது தேவையற்றதே. நேரம் மற்றும் தேதி மற்றும் பல முக்கியமான விவரங்கள் புகைப்படத்தின் எக்ஸிஃப் [EXIF Details ] பகுதியில் ஏற்கனவே சேமிக்கப் பட்டிருக்கும். ஆதலால் அது பற்றிய கவலை இல்லாமல் நீங்கள் நேரம் மற்றும் தேதிக்குண்டான தேர்வை தேர்ந்தெடுப்பதை நிறுத்துங்கள்.


அதுபோலவே படத்தின் மேலேயே தலைப்பை எழுதுவது, படத்தின் அழகை வெகுவாக குறைத்து விடுகிறது.



போட்டிக்கு என்று இல்லை. தனிப்பட்டத் தேவைக்கும் புகைப்படம் எடுக்கும் போதும், எடுத்தப் பின்னும் கீழே சொல்பவற்றை முடிந்த வரையில் பின்பற்றினால் நல்ல புகைப்படம் கிடைக்கும்.

1 - புகைப்படத்தின் மீது எதையும் திணிக்காதீர்கள்.
2 - வெகு சாதரணமாய் இருக்கும் புகைப்படத்தையே கோணம் மாற்றி எடுங்கள். உங்களுக்கு திருப்தியாக தோன்றும் வரை எடுத்துக் கொண்டே இருங்கள்.
3 - அடிப்படை விவரங்களை மனதில் கொண்டு அதற்கேற்றமாதிரி செயல்படுங்கள். (அடிப்படை பாடங்களின் பட்டியல் இடுகைக்கும் கீழே இருக்கிறது )
4 - புகைப்படத்தின் தேவையற்ற பகுதிகளை வெட்டிவிட்டு பாருங்கள், அல்லது வேறு கோணத்தில் க்ராப் செய்து பாருங்கள்.
5 - நீங்கள் எடுத்த புகைப்படத்தை வேறொரு மூன்றாம் மனிதரின் புகைப்படம் போல தயவு தாட்சண்யம் இன்றி உங்களுக்கு நீங்களே விமர்சித்துப் பாருங்கள்.

இவையெல்லாம் பல முறை ஏற்கனவே சொன்னது தான். மீண்டும் நினைவுறுத்துகிறோம்.
******
More tips are available in the below slide from hp.com. This slide will open only when you open this post. Not in consolidate list mode.




Thanks HP for the above slide: Link : http://www.hp.com/united-states/consumer/digital_photography/tours/beginners/index.html


உங்களுக்கு சில விவரங்கள் புரியவில்லை, ஏற்கனவே சொன்ன பாடங்களில் திருப்தி இல்லை என்று தோன்றினால், மின்னஞ்சலில் எங்களைத் தொடர்புக் கொள்ளலாம்.

முதல் பத்து இடங்களுக்கான இடத்தைப் பிடிக்கும் படங்களின் விவரம் இரண்டொரு நாளில் வெளிவரும். அதுவரை பொறுத்திருக்கவும்.

9 comments:

  1. அருமையான .TIPS FROM PIT.

    இப்பொழுதுதானே டிஜிடல் கேமரா,அந்த நாளில் 12,36 எண்ணிக்கைக்குள் வீணாக்காமல் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் யோசித்து எடுப்போம்.
    இன்று அப்படியில்லை.
    நீங்கள் சொல்வது போல் ,ஒரு ரோல் முடிந்து பிரிண்ட் போட்ட பிறகு அந்த 36ல் எது பெஸ்ட்,எது வேஸ்ட் ,எதில் தவறு நேர்ந்தது ,எதனால் அந்த படம் ,நேர்த்தி இழந்தது, என்று எனக்கு நானே மார்க் போட்டு,தவறுக்கு மைனஸ் என்று மனதுக்குள் சார்ட் போட்டபிறகு அடுத்த ரோல் தயாராகும்.

    இப்படியாக என் ஆள்காட்டி விரலுக்கு, அழகாகப் படம் எடுக்க கோச்சிங் தொடர்கிறது.

    ReplyDelete
  2. nice tips for those who have forgotten the basic rules in the interest of creating good pictures

    ReplyDelete
  3. கோம்ஸ் மேடம்,

    சரியா சொன்னீங்க.

    அந்த ஸ்லைட் பாத்தீங்களா, அதுல நிறைய விவரங்கள் இருக்கு. முக்கியமா ப்ராக்டிகல் டிப்ஸ் - கேமரா இல்லாம நீங்களே படங்களை சரி பாக்கலாம். எந்த வித செட்டிங்குக்கு எப்படி படம் வரும்னு.


    நன்றி வாசி அண்ணே!!

    ReplyDelete
  4. Jeeves
    தங்களின் கருத்து முற்றிலும் உண்மை
    நான் அடிக்கடி செய்யும் தவறுகளில்
    இதுவும் ஒன்று.
    திருத்திக் கொள்ள முடிந்ததது

    நன்றிகள்

    ReplyDelete
  5. // CVR said...

    Very useful slide..

    January 21, 2009 4:45 AM
    Delete
    Blogger திகழ்மிளிர் said...

    Jeeves
    தங்களின் கருத்து முற்றிலும் உண்மை
    நான் அடிக்கடி செய்யும் தவறுகளில்
    இதுவும் ஒன்று.
    திருத்திக் கொள்ள முடிந்ததது

    நன்றிகள்//


    thanks CVR,

    Thigaz, coool:) thanks

    ReplyDelete
  6. பழைய படங்களை ஸ்கேன் செய்துதானே போடமுடியும்? வேறு வழியேதேனும் இருக்கிறதா? சொல்லவும். இப்பல்லாம் டைம் டேட் செட் செய்வதேயில்லை.
    குறிப்புக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  7. recently come to know u r page.I am a beginner &hobbyist. Very very Useful.KEEP GOING.very fortunate to have in TAMIL

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff