Wednesday, October 17, 2007

படம் செய்ய விரும்பு- 5 இரவு புகைப்படக்கலை - பாடம் 1

18 comments:
 
வணக்கம்,

இந்த பதிவில் இரவு புகைப்படங்களை பற்றிய எனது அனுபவங்களை உங்களோடு பகிர்கிறேன்.
இரவு புகைப்படம் (Night Photograph) எப்போதும் கனவாகவே இருந்தது. புதிய கருவி (Canon 400D Rebel XT) வாங்கியதில் இருந்து ஒரு இரவு காட்சி கூட எடுக்க வரவில்லை. முதல் தவறு முக்காலி (Tripod) இல்லை என்பது என்று புரிந்தது. இரண்டாவது சரியான நிறுப்பில் (Setting) வைக்க தெரியவில்லை என்பது தான். என்னென்னவோ முயற்சித்தும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. பிருந்தாவன் தோட்டதிற்கு சென்று எடுத்த வண்ணமயமான தண்ணீர் காட்சிகள், பேயின் நடமாட்டம் போல காட்சி தந்தது.
காசிக்கு சென்று இருந்த போது ஹிந்து நாளேட்டின் முக்கிய புகைப்படக் கலைஞர் கே.ஆர்.தீபக்கை சந்திக்க நேர்ந்தது.அவர் தான் கங்கை ஹார்த்தியினை எடுக்கும் போது என்ன செட்டிங் வைக்க வேண்டும் என கற்றுக்கொடுத்தார். அட படங்கள் அருமையாக வருகின்றதே !!!
முக்காலியின் அவசியம்:
இரவு புகைப்படங்களுக்கு முக்காலி (Tripod) மிக மிக அவசியமானது. ஏன் என்றால் நீண்ட நேரம் புடைக்க (Expose) செய்ய வேண்டி இருக்கும். அத்தனை நேரம் அசையாமல் கருவியை பிடித்திருக்க வேண்டும். (இரவும் புகைப்படங்கள் எடுக்கும் போது கிளிக் செய்வதை விட self timer உபயோகிக்க பரிந்துரைக்கின்றார்கள். ஏனெனில் நாம் கிளிக் செய்யும் போது ஏற்படும் அசைவுகள் கூட படங்களை கெடுத்துவிடலாம் என்கின்றார்கள். டிரைபாடில் வைத்து Self Timer வைக்கும் போது மிகச்சிறந்த காட்சிகள் நமக்கு கிடைக்கும்.
சூரியன் மறைந்து அதன் வெளிச்சம் மட்டும் இருக்கும் சமயத்தில் எடுக்கும் காட்சிகள் பிரமாதப்படுத்தும். ஏனெனில் வெவ்வேறு வண்ணங்கள் சிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
கீழே உள்ள படம் இரவு புகைப்படக்கலைக்கு தேவையான தொழிநுட்ப விடயங்களை நமக்கு தெளிவாக்கும். மேலும்

படத்திற்கு நன்றி (www.cambridgeincolour.com/)
இரவின் என்னென்ன எடுக்கலாம் என்கின்ற சில வழிகாட்டுதல்கள்
  • இரவு வாழ்கை
  • கட்டிடங்கள், மண்டபங்கள்
  • நீர் நிலைகளும் அதன் பிரதிபலிப்புகளும்
  • வான வேடிக்கைகள் (இதற்கு தனியாக யாரேனும் எழுதலாமே)
  • மின்னல்கள்
  • இரவின் நரகம்..ச்ச இரவின் நகரம்
  • விழாக்கள்
  • இன்னும்..இன்னும்......
ISO :
இரவும் புகைப்படங்களுக்கு அதிக ISO பயன்படுத்தினால் படங்கள் தெளிவாக வரும்.
சென்றவாரம் மைசூரில் நடந்த தசரா திருவிழாவிற்கு சென்றிருந்த போது எடுத்த படங்கள் இவை. மூன்றும் ஒரே நேரத்தில் எடுத்தவை தான். ஆனால் வேறு வேறு Exposure. ஒவ்வொரு படத்திலும் படத்தின் ஆழம் அதிகரித்து கொண்டே போவதை காணலாம். முதல் படத்திற்கு -2 Exposure (Under Expose), அடுத்ததற்கு -.67, மூன்றாவது 0 Exposure. ISO : 400
படம் : 1
படம் : 2
படம் : 3
இரவு புகைப்படங்கள் எடுப்பது மற்ற படங்களை எடுப்பதை விட சற்று சிரமம் தான், ஆனால் அதன் பலன்கள் ஆஹா !!!

தொடரும்.

- விழியன்

18 comments:

  1. முதல் பதிவிற்கு வாழ்த்துக்கள் விழியன்!
    மிக உபயோகமான பதிவு


    இரவு காட்சிகளில் முக்காலியின் அவசியத்தை பல காலம் கழித்துதான் தெரிந்து கொண்டேன்.அதன் பின் வெவ்வேறு ஒளி சூழ்ந்த நேரங்களில் முக்காலி இல்லாமல் எடுக்க முடியுமா இல்லையா என்பதில் தெளிவு பிறந்தது.
    இதே போல ஒரு பதிவை முன்பே படித்திருந்தால் உதவியாக இருந்திருக்கும்.
    ISO 400 என்றால் பரவாயில்லை ஆனால் ISO அளவு கூட கூட படம் மேலும் மேலும் grainy ஆகிக்கொண்டே போகும்!
    அதனால் அதிக ISO அளவை ஒளி குறைந்த சமயத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இல்லையெனில் படம் சொர சொரவென்றிருக்கும்!! :-)
    இந்த -2.-0.67,0 எல்லாம் எப்படி செட் செய்து படம் எடுப்பது என்று நான் இன்னும் பழகவில்லை!
    இனிமேல் தான் தெரிந்துக்கொள்ள வேண்டும்!!!

    ReplyDelete
  2. CVR,

    இந்த மூன்று படங்களும் முக்காலி இல்லாமல் தான் எடுக்கப்பட்டது. :-)

    ReplyDelete
  3. super.. 3rd one came out really well. awesome ..

    ReplyDelete
  4. விழியன். பதிவுக்கு நன்றி. இரவுப் படங்களுக்கு முக்காலி மிகவும் அவசியம். நீங்கள் முக்காலி இல்லாமல் எடுத்திருக்கிறீர்கள் - அற்புதமாக இருக்கிறது. ஆனால் அசையும் காட்சிகளை முக்காலியில்லாமல் எடுத்தால் ஆவி பறக்கும் - வாணவேடிக்கை போன்ற காட்சிகளை! :-)

    அசையாக் காட்சிகளை முக்காலி இல்லாமல் எடுக்கலாம். அதற்கு நிறைய பொறுமையும் நரம்புத்தளர்ச்சி இல்லாத கைகளும் வேண்டும்! :-)

    அதேபோல அந்திப் பொழுதுப் படங்கள் (சூரியன் மறைந்தும் அதன் வெளிச்சம் மிச்சமிருக்கும் நேரத்தில்) அருமையாக வரும் - லேசாக மேகமூட்டமாகக் காட்சியளித்தாலும்.

    முக்காலி இல்லாத காரணத்தால் அருமையான இரவுக் காட்சிகளைத் தவறவிட்டிருக்கிறேன்.

    பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  5. நிறைய விசயங்கள் தெரிந்துக் கொண்டேன் விழியன்...

    நன்றி

    ReplyDelete
  6. நல்ல போஸ்ட் விழியன்..
    ஈசியா புரியுற மாதிரி சொல்லிருக்கீங்க..

    ReplyDelete
  7. i LOVED THE POST AND IMAGES. iN MY DAYS WE CALL IT 'b' XPOSURE IMAGES! B=BULB. bUT ONE SMALL PERSONAL EXPERIENCE... FOR THIS TYPE OF IMAGES YOU DONT NEED CABLE rELEASE, MIRROR LOCK ETC.. EFFECTS OF SHAKING WHILE OPERATION IS INVERSELY PROPORTIONAL TO THE TIME OF RECORDING! sO YOU SHAKE YOUR CAM FOR 1 SECOND AND EXPOSE FOR NEXT 28 SEC AND THEN SHAKE IT FOR A SECOND TO COMPLETE THE 30 SEC eXPOSURE TIME... STILL YOU WILL GET A BETTER PIC!

    ReplyDelete
  8. நல்லதொரு பதிவுக்கு நன்றி விழியன்

    எனக்கும் படம் செய்ய விரும்பும் விருப்பம் (12 வருட‌) மேலோங்குகிறது

    ஆனால் உங்கள் கேமரா வேண்டும் விழியன்:-)

    ReplyDelete
  9. ஒன்று சொல்ல‌ விட்டுப்போய்விட்ட‌து விழியன்.

    நீங்கள் முக்காலி இல்லாம‌ல் எடுத்த‌ ப‌ட‌ங்க‌ளும் ஒளிர்கின்ற‌ன.

    ஆனால், இன்னும் க‌ற்றுக்கொள்ள‌ வில்லைய‌ல்ல‌வா( ????? !!!!! )

    அத‌னால் கேமராவுடன் முக்காலியும் வேண்டும்:-)

    ReplyDelete
  10. // மதுமிதா said...

    ஒன்று சொல்ல‌ விட்டுப்போய்விட்ட‌து விழியன்.

    நீங்கள் முக்காலி இல்லாம‌ல் எடுத்த‌ ப‌ட‌ங்க‌ளும் ஒளிர்கின்ற‌ன.

    ஆனால், இன்னும் க‌ற்றுக்கொள்ள‌ வில்லைய‌ல்ல‌வா( ????? !!!!! )

    அத‌னால் கேமராவுடன் முக்காலியும் வேண்டும்:-)

    //


    இதேதிது... நான் கேட்டே இன்னும் தரலை...

    விழியன்.. கேமரா எனக்குத்தான் எனக்குத்தான்.

    ReplyDelete
  11. அருமையான பதிவு விழியன்.. நிச்சயமாக இரவு நேர படமெடுப்பது பல பேருக்கு எட்டாக்கனவாகவே இருக்கும் ஆரம்பத்தில்.. உங்களை போன்ற அனுபவசாலிகள் இப்படி பதிவுகள் எழுதி புரியவைப்பத்தால் நன்றாக புரிகிறது.. இன்னும் நிறைய இரவு புகைபடக்கலையை பற்றி சொல்லலாமே விழியன்

    ReplyDelete
  12. இரவு புகைப்படத்தில் self timer... அருமையான idea. பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  13. //சென்றவாரம் மைசூரில் நடந்த தசரா திருவிழாவிற்கு சென்றிருந்த போது எடுத்த படங்கள் இவை. ......0 Exposure. ISO : 400
    படம் : 1
    படம் : 2
    படம் : 3
    இரவு புகைப்படங்கள்//

    என்ன ஆச்சு\? படங்களை காணோமே!

    ReplyDelete
  14. அ! இப்ப தெரியுதுங்க. நன்றி.

    ReplyDelete
  15. இரவும் புகைப்படங்களுக்கு அதிக ISO பயன்படுத்தினால் படங்கள் தெளிவாக வரும்.//

    என் டப்பாவில் அப்படி வருவதில்லை.. CVR சொல்வதைப்போல் noisy picture தான் பல்லை இளிக்கிறது.

    ReplyDelete
  16. /என் டப்பாவில் அப்படி வருவதில்லை.. CVR சொல்வதைப்போல் noisy picture தான் பல்லை இளிக்கிறது.//

    less ISO = less noise
    more ISO = more noise


    When they say increase ISO - to increase the lighting. Ofcourse there will be a loss of quality.

    ReplyDelete
  17. ISO அதிகமானா noise வரும்கிறது உண்மை. அதுல சென்சரோட சைஸுக்கு ஒரு பெரிய பங்கு இருக்கு. நாம் பொதுவா வைச்சிருக்க Canon Rebel XT, Nikon D40/70 எல்லாம் APS-C சென்சரோட வரும். அதாவது 35mm விட குட்டியான சென்சர். Nikon D3/D700 இல்லை Canon EOS 5D II மாதிரி FULL FRAME சென்சர்ல படம் புடிச்சு பாருங்க. ISO 1600 வரைக்கும் NOISE கொஞ்சம் கூட தெரியாது. இது (http://flickr.com/photos/sankar/2917208948/sizes/l/) நான் (ஓசியில கிடைச்ச) NIKON D3'ல எடுத்த படம். ஃபுல் சைஸில பாத்திட்டு சொல்லுங்க, இதைப் பாத்தா ISO 800’ல எடுத்த படம் மாதிரியா இருக்கு :-)

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff