Wednesday, October 17, 2007

PiT - உணவுப்பொருட்கள் - எப்படி எடுக்கலாம் - போட்டி புகைப்பட கமெண்டுகள்

11 comments:
 
இப்போது போட்டிக்கு வந்த எல்லா புகைப்படங்களைப்பற்றியும் நடுவர்களின் கமெண்டுகள். PiT குழுவினரும் தங்கள் கருத்துக்களை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


நடுவர் பணியில் மாட்டிவிட்டமைக்கு .. . மன்னிக்கவும்.. நடுவர் பணிக்கு தேர்வுசெய்தமைக்கு PiT குழுவினருக்கு மிகவும் நன்றி :-D



ஆயில்யன்:
வழக்கமான கோணம், சப்ஜெக்டான குப்பூஸ் ஒரு அழகுணர்ச்சியுடன் அடுக்கப்பட்டிருக்கலாம். தேவையற்ற ப்ளாஸ்டிக் கவர் போன்று கவனத்தை திசை திருப்பும் பொருட்களை தவிர்திருக்கலாம்.ஆனா வித்தியாசமான உணவு வகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் நன்றி ;-) .. ஊத்தாப்பம் மாதிரி இருக்கு.
Has to think on arranging the food items properly to get a interesting shot...Its just a snapshot of his dinner :)

சிவபாலன்:
உங்கள் பதிவிலேயே பல விமர்சனங்கள் வந்து விட்டன :-) , அந்த ஆரஞ்சு சுழை அழகியதாக தோன்றுகிறது, அதை தனியே வைத்து எடுத்திருந்தால் அருமையாக இருந்திருக்குமோ ?!
Though its different with butterfly..there are lot of tech issues like sharpness, exposure etc., Again its just a snapshot.

இம்சை:அடாடா எவ்வளவு வகைகள். பைனாப்பிள் அல்வா பார்க்கவே நல்லா இருக்கு, ஆனாலும் அந்த கரண்டி மட்டுமில்ல, ஆங்காங்கே தெரியும் வண்ணத்துளிகள் இன்னும் அதிகமாயிருந்திருந்தால் மிகவும் அழகு சேர்த்திருக்குமோ..?!
Has to think on arranging the food items properly to get a interesting shot...Its just a snapshot

காசி ஆறுமுகம்:
உணவு அருமையாய் அடுக்கப்பட்டிருந்தாலும், பின்னால் இருக்கும் பேக்டிராபிலும், அங்கங்கே விழுந்திருக்கும் நிழலை தவிர்திருந்தாலும் இன்னும் அழகாய் இருந்திருக்கும்.
Both are good..But my eye is looking for some more properties to add a value to the pic..But its good though it lacks sharpness.

போட்டோ பழனி:
ப்ரேமிங்கை சரியாய் பயன்படுத்திய படங்களில் ஒன்று, மொபைல் போனிலேயே இப்படி அட்டகாசமா ? குறைந்த பிக்சல் இருப்பதால் நிறைய நாய்ஸ் உள்ளது, ஷார்ப்னெஸும் இல்லை.
2nd one is not interesting. Also lack of sharpness.

சிரீகாந்த்:
முதல் படம் நல்ல டெக்னிக் ஆனால் உணவு என்ற தீம்கேற்ற ஒன்றாய் தோன்றவில்லை, இரண்டாம் படம் மிகவும் அருமை, சிகப்பு பேக்டிராப்பில் ஆப்பிளின் வண்ணம் தூக்கலாய் தெரியாவிடிலும், ரொம்ப ஸ்டைலிஷான படம் இது.
Both are good..1st one not made to top 10 b'se of lack of sharpness and composing issues. Should have shown more apple..

கைப்புள்ள:போட்டிக்கான முதல் படத்தில் ப்ரசென்டேஷன் இன்னும் கண்ணைகவரும் வண்ணம் இருந்திருந்தால் சூப்பரா இருந்திருக்கும். இரண்டாவது படத்தில் உங்க தங்கமணி ஐடியா வொர்கவுட் ஆகிடுச்சுனு நினைக்குறேன் :-)
2nd one not made to top 10 as it dont have much sharpness and composing issues.

நட்டு:
முதல் படத்தில் போகஸ் இல்லவே இல்லை. இரண்டாவது போட்டோ மிகவும் அருமை, செம ப்ரொபொஷனல், நாதன் சொன்ன மாதிரி ஒரு ஓரமாய் வைத்திருந்தால் அட்டகாசமாய் இருந்திருக்குமோ ? அன்னாசியின் கலரும் அருமையான தேர்வு.
1st - just a snapshot and no sharpness
2nd - might be in top 10, but lost due to composing..it might be interesting if he placed it in any corners..

வீரசுந்தர்:
வித்தியாசமாய் செய்யமுயன்றுள்ளது தெரிகின்றது, ஷார்ப்னெஸ் சுத்தமாய் இல்லாதது மிகப்பெரும் குறை.
lack of sharpness, no interesting composition

ஒப்பாரி:
இரண்டு படங்களுமே அருமை, முதல் படத்தில் போகஸ் எங்கோ ஒரு மூலையில் இருப்பதைப்போலவும், ஷார்ப்னெஸ் இல்லாதது போலவும் உள்ளது. இரண்டாவது படம் அருமை.
congrats, both made to top 10.

சத்தியா:
இன்னும் கொஞ்சம் வெளிச்சம் வைத்து எடுத்திருக்கலாம் முதல் படத்தை, சின்ன ரெஸொல்யூஷனில் படம் அழகாய் இருக்குது.இரண்டாவது படத்தில் க்ராபிங் இன்னும் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம்.
1st one - lighting is not enough..severly underexposed and arrangements not proper..

மஞ்சு:இரண்டாவது படத்தில், பின்புலம் மற்றும் பச்சை, ஆரஞ்சு நிறப்பழங்களை மாற்றி மாற்றி அடுக்கியிருந்தால் இன்னும் அழகாயிருந்திருக்கும்.
1st -pic of a pic is not valid..
2nd - no interesting composition

சதங்கா:
இரண்டு படத்திலும் க்ராப்பிங்கில் கவனம் செலுத்தியிருக்கலாம்
its good, though some exposure issues r there..but arrangements are not good , also lack of sharpness.

முகவை மைந்தன்:
மிகவும் வித்தியாசமான அரேஞ்மென்ட், மிகவும் பொறுமை சார் உங்களுக்கு. ஆனால் ஷார்ப்பாக இல்லையே.
great arrangements, but lack of sharpness..

ஜெயஷ்ரீ:
நீங்க இல்லாமல் உணவுத்திருவிழாவா, அது புகைப்படத்திருவிழாவாகவே இருந்தாலும் :-) , அருமையான புகைப்படங்கள், மிகவும் ஷார்ப்பாக அழகாக இருக்கின்றது. (அந்த தக்களி இரசப்பதிவு என்னோட பேவரைட் ;-)
1st one - Paathiram padithiduchu..close call might be good..
2nd one - just a snapshot.

காட்:
இரண்டாவது படம், நாதன் சொன்னதை கவனித்திருந்தால் அழகாக வந்திருக்கும்.
both are severly underexposed..take care of composition

விழியன்:
மாதுளை படம் சரியாய் வந்திருக்கின்றது, மூன்றாவதை தவிர, போகஸ் மற்றும் லைட்டிங் நன்றாக இருக்கின்றது
both are good..but 4th one made to top 10 b'se of some diff color arrangements as single color generally dont attract much..if u've added some thing interesting in 2nd pic, it might be good. loved other pics in your food items..

சுந்தர்:
சாதரண சாலட்டா அது :-) , இரண்டாவது படம் ரொம்ப நடுங்கினால் போல் இருக்கின்றதே. பாதி இருட்டில் இருக்கும் சாலட் அருமையான யோசனை நல்ல எக்ஸிக்யூஷன்.
2nd one - diff colors, looks attractive..but total lack of sharpness

நாகை சிவா:இரண்டாவது படதின் கோணம் சற்று வித்தியாசமாயிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். முதல் படம் நன்றாக வந்திருக்கின்றது
2nd one was different from others..but overexposure and lack of arrangements made it below the list..

ஆதி:
இட்லியை கொஞ்சம் வெளிச்சத்துல படம் பிடிச்சிருக்கலாம், வண்ணங்கள் சரியாய் பொருந்தி இருக்கு ஒன்றோடொன்று. நெல்லிக்காய் சரியான க்ராபிங்க், ப்ரேமிங்க், கோணம் என படம் அழகாய் வந்திருக்கு.
1st one - underexposed and not good arrangement


எந்த அடிப்படையில் இம்முறை புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.


முதலில், ஷார்ப்னெஸ் & போகஸ். எடுக்கப்படும் சப்ஜெக்ட் முன்னிலையில் சரியாய் போகஸ் ஆகி பார்பவரின் கவனத்தை கவர்வது முக்கியம். படங்கள் நடுக்கத்துடன் இருப்பது மற்றொரு முக்கியமான ஒரு தவறு.


இரண்டாவது லைட்டிங், உடனே பி.சி. மாதிரி இருட்டில் ஒரு ஓரத்தில் குட்டி லைட்டை வைத்து எடுத்தால்தான் அருமையான லைட்டிங் என்பது என்று நினைத்திருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். எந்த படத்திலும், பரவலான வெளிச்சம், பார்ப்பவர் காணவிரும்புவதை நாம் கண்ணைக்கவரும், மைல்டான, கண்ணைக்கூசாத ஒளியில் கொடுத்தாலே மினிமம் அது போதும்.


அழகுணர்ச்சி, உணவுப்பொருட்கள் எடுக்குறோம், எந்த ஹோட்டல்லங்க ஒட்டியிருக்குற படம் மாதிரி பரிமாறுறாங்க ;-) , பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கும் சாதரண் ஹோட்டலுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம், உணவை பிரசண்ட் பண்ணும் விதம். ஒரு சாதரண தயிர்சாதத்துல கூட, காரெட், கொத்தமல்லி, திராட்சை என சரியான விகிதத்தில் தூவி, ருசியாயிருக்குமா என யோசிக்க வைக்காமல் வாங்க வைப்பது தான் கலை. அதுதான் Food Photogaphy பொருத்த வரைக்கும் முக்கியமானதாய் இருக்கும்.


எக்ஸ்போஷர், பிளாஷ் போட்டு எடுக்கும்போது மிகவும் கவனமாய் இருக்கவேண்டிய விஷயங்களில் ஒன்று. அழகான அரெஞ்மெட்டை கூட சொதப்பிவிடும் ஆற்றல் இதற்கு உண்டு :-)


Disturbance, நாம் எடுக்கும் சப்ஜெக்ட், மற்றும் அதற்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமே படத்தில் தெரிய வேண்டும், தேவையற்ற பாத்திரங்கள், ப்ளாஸ்டிக் பைகள் என பார்ப்பவரின் கவனத்தை திசை திருப்பும் விஷயங்கள் வேண்டாம்.

இவை மட்டுமல்ல கவனிக்க வேண்டிய விஷயங்கள், இவை இந்த தலைப்பில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்.



பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும் , நன்றிகளும் :-)

11 comments:

  1. சூப்பர் போஸ்ட்!!!

    அழைப்பை ஏற்று நடுவர்களாக சிறப்பித்த நாதன் மற்றும் யாத்திரீகன் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!!

    படங்களின் தேர்வு,முடிவுகள் சம்பந்தப்பட்ட பதிவுகள்,கமெண்டுகள் என்று உங்கள் பணியை மிகவும் பாராட்டும்படி செய்திருக்கிறீர்கள்
    வாழ்த்துக்கள்!!

    உங்கள் சொந்த வேலைகள்,பிரச்சினைகளுக்கு நடுவில் ஏற்ற பணியை திறம்பட செய்தமைக்கு இந்த குழுப்பதிவின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலோட்டமாக பார்த்தவரை நான் நினைத்த பல விஷயங்களை நீங்களே சொல்லிவிட்டீர்கள்!!
    நேரம் கிடைக்கும்போது ஆற அமர படித்து ஏதாவது கூடுதலாக தோன்றினால் பின்னூட்டமிடுகிறேன்.
    நன்றி! :-)

    ReplyDelete
  2. Thanks Judges!

    excellent work this time ;)

    One of us will/should embed the image URLs on each comment ;) i can do it over the weekend.

    ReplyDelete
  3. நன்றிகளுடன்...!

    //ப்ளாஸ்டிக் கவர் போன்று கவனத்தை திசை திருப்பும் பொருட்களை தவிர்திருக்கலாம்.//
    உண்மைதான் அந்த ஒரு விஷயமே என்னை நெருடியது! ஆனாலும் ரொம்ப யோசிக்காமல் அனுப்பிவிட்டு, பின்னர் வந்த படங்களை பார்த்து அவசரப்பட்டுவிட்டோமே, என கவலைகொண்டேன்!

    தவறுகளை சுட்டி காட்டியதற்கு நன்றி இது என்னை மேம்படுத்த உதவும்..!

    ReplyDelete
  4. யாத்ரீகன்.

    இது வரை வந்த போட்டிகளில் மிக அதிகமான கஸ்டத்தை தேர்வு செய்வதில் கொடுத்திருக்கக் கூடிய போட்டி இது மட்டுமே. இருவரும் திறம்பட செய்திருக்கிறீர்கள். நன்றிகளுடன் கலந்த வாழ்த்துகள்.


    படங்களுக்கு சிறப்பான மனம் நோகாத அதே நேரத்தில் ஊக்குவிக்கும் வகையிலான காமென்ட்ஸ்.. Hats Off...

    ReplyDelete
  5. நல்ல மற்றும் தேவையான விமர்சனங்கள்....

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. முழுமையான முடிவுகள் பங்கெடுத்துக்கொண்டவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் நிம்மதியையும் கொடுத்திருக்கும். நம் புகைப்படம் ஏன் தேர்வு பெறவில்லை என்ற கவலையையும் தெளிவுபடுத்தியிருக்கும். அந்த வகையில் உழைத்து உற்சாகத்துடன் தங்களது கருத்துகளைக் கொடுத்த நடுவர்களுக்கு மிகவும் நன்றிகள். ஒவ்வொரு போட்டியிலும் இதைச் செய்ய முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். குறைந்த பட்சம் Top10 படங்களுக்கான மதிப்பீடுகளைக் கொடுத்தால் உதவிகரமாக இருக்கும். நேரப்பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் போட்டியின் தேதிகளை லேசாக மாற்றியமைக்கலாம். அதாவது 1-15 வரை போட்டிக்கு நேரம் கொடுத்துவிட்டு 15-25 வரை நடுவர்களுக்கு நேரம் கொடுக்கலாம். 25-30 வரை முடிவுகள் வெளியிடப்பட்டு அடுத்த போட்டியை அறிவிக்கலாம். இதன் மூலம் இன்றிலிருந்து அடுத்த போட்டி அறிவிக்கப்படும் வரையான 10-15 நாட்கள் இடைவெளி வெறுமையைக் குறைக்கலாம். இது நடைமுறையில் சாத்தியப்பட்டால் கருத்தில் கொள்க என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.

    நன்றிகள்.

    ReplyDelete
  7. //போட்டோ பழனி:
    ப்ரேமிங்கை சரியாய் பயன்படுத்திய படங்களில் ஒன்று, மொபைல் போனிலேயே இப்படி அட்டகாசமா ? குறைந்த பிக்சல் இருப்பதால் நிறைய நாய்ஸ் உள்ளது, ஷார்ப்னெஸும் இல்லை.
    2nd one is not interesting. Also lack of sharpness.//


    இருக்கிறதை தான் தரமுடியும். ஏஸ்தடிக் மற்றும் ஒரிஜினாலிடி மட்டும் தான் பாப்பீங்கன்னு நினைச்சேன்.. :( நீங்க போட்டோ டெக்னிகல் குவாலிட்டியும் பாக்கறீங்க. பிளிம் கேமரால எடுத்து ஸ்கேன் பண்ணி போட்டாலும் சரி வராது. அடுத்த போட்டில கலந்துக்கற ஆர்வம் போய்டுச்சு. டிஜிடல் கேமரா வாங்குனா தான் கலந்துக்க முடியும்போல...


    -- போட்டோ பழனி..

    ReplyDelete
  8. சிரமமான வேலையை மிகச்சிறப்பாக செய்தமைக்கு வாழ்த்துக்கள். எல்லோருமே அவர்கள் படங்களுக்கான் விமர்சனங்களை நிச்சயம் எதிர்பார்ப்பார்கள். சிரமமாயினும் தொடர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  9. போட்டோ பழனி,

    //இருக்கிறதை தான் தரமுடியும். ஏஸ்தடிக் மற்றும் ஒரிஜினாலிடி மட்டும் தான் பாப்பீங்கன்னு நினைச்சேன்.. :( நீங்க போட்டோ டெக்னிகல் குவாலிட்டியும் பாக்கறீங்க. பிளிம் கேமரால எடுத்து ஸ்கேன் பண்ணி போட்டாலும் சரி வராது. அடுத்த போட்டில கலந்துக்கற ஆர்வம் போய்டுச்சு. டிஜிடல் கேமரா வாங்குனா தான் கலந்துக்க முடியும்போல...
    //

    டிஜிட்டல் வாங்கும் வரை, தொடர்ந்து மொபைல்லயே எடுத்து போடுங்க. முடிந்தால், ஃபிலிம் கேமரால எடுத்து ஸ்கேன் பண்ணிப் போடுங்க - கண்டிப்பா நல்லா வரும். ஸ்கேன் பண்ணப்பரம், photoshopல டச் பண்ணலாம்.

    நடுவர்கள், எல்லா படத்தையும் பாத்து, கூட்டி கழிச்சுதான், வெற்றியாளர்களை அறிவிக்கிறார்கள்.

    ஒரிஜினாலிட்டி + க்வாலிட்டி ரெண்டும் முக்கியமாச்சே சிறந்த படங்களுக்கு.

    ஆர்வத்தை இழக்காமல், முயற்சியைத் தொடரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் :)

    ReplyDelete
  10. SurveySan said...

    போட்டோ பழனி,

    //இருக்கிறதை தான் தரமுடியும். ஏஸ்தடிக் மற்றும் ஒரிஜினாலிடி மட்டும் தான் பாப்பீங்கன்னு நினைச்சேன்.. :( நீங்க போட்டோ டெக்னிகல் குவாலிட்டியும் பாக்கறீங்க. பிளிம் கேமரால எடுத்து ஸ்கேன் பண்ணி போட்டாலும் சரி வராது. அடுத்த போட்டில கலந்துக்கற ஆர்வம் போய்டுச்சு. டிஜிடல் கேமரா வாங்குனா தான் கலந்துக்க முடியும்போல...
    //

    டிஜிட்டல் வாங்கும் வரை, தொடர்ந்து மொபைல்லயே எடுத்து போடுங்க. முடிந்தால், ஃபிலிம் கேமரால எடுத்து ஸ்கேன் பண்ணிப் போடுங்க - கண்டிப்பா நல்லா வரும். ஸ்கேன் பண்ணப்பரம், photoshopல டச் பண்ணலாம்.

    நடுவர்கள், எல்லா படத்தையும் பாத்து, கூட்டி கழிச்சுதான், வெற்றியாளர்களை அறிவிக்கிறார்கள்.

    ஒரிஜினாலிட்டி + க்வாலிட்டி ரெண்டும் முக்கியமாச்சே சிறந்த படங்களுக்கு.

    ஆர்வத்தை இழக்காமல், முயற்சியைத் தொடரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் :)///


    ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுங்களே :D.. ஆனாலும் நடுவர்கள் சும்மா சொல்லக் கூடாது. ரொம்பவே வெளுத்து வாங்கற வேலை செய்யறாங்க.. நடுவர்களை தப்பா சொன்னேன்னு நினைச்சுக்காதீங்க. பிளிம் கேமரா ல முடியாது.. மொபைல் ல தொடர்ந்து போடறேன். டிஜிடல் வாங்கிடுவேன் கூடிய சீக்கிறம். அப்புறம் ஒரு போட்டியிலாவது வின் பண்ணாம விடப்போறதில்லை..

    நடுவர்களே தப்பா நினைச்சுக்காதீங்க. உங்க கருத்துகளை மதிக்கிறேன். இன்னும் தெளிவான படத்தோட வர்ரேன்.. சீக்கிறம் அடுத்த தலைப்பு சொல்லுங்க.


    கொஞ்சம் வருத்தம் இருந்தது. ஆனா மத்த படங்களை பார்த்த பின்னாடி.. சரியான தீர்ப்பு தந்த நடுவர்களுக்கு என்னோட பாராட்டுகள்.


    அன்புடன்
    போட்டோ"பழனி"

    ReplyDelete
  11. //முடியாது.. மொபைல் ல தொடர்ந்து போடறேன். டிஜிடல் வாங்கிடுவேன் கூடிய சீக்கிறம். அப்புறம் ஒரு போட்டியிலாவது வின் பண்ணாம விடப்போறதில்லை..

    நடுவர்களே தப்பா நினைச்சுக்காதீங்க. உங்க கருத்துகளை மதிக்கிறேன். இன்னும் தெளிவான படத்தோட வர்ரேன்.. சீக்கிறம் அடுத்த தலைப்பு சொல்லுங்க.


    கொஞ்சம் வருத்தம் இருந்தது. ஆனா மத்த படங்களை பார்த்த பின்னாடி.. சரியான தீர்ப்பு தந்த நடுவர்களுக்கு என்னோட பாராட்டுகள்.


    அன்புடன்
    போட்டோ"பழனி"//



    thats the spirit .. :) keep shooting

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff