Monday, October 8, 2007

படம் செய்ய விரும்பு - பாகம் 4 - Histogram

14 comments:
 
படங்கள் எடுக்கும் போது உங்க கேமராக்களிலோ அல்லது எடுத்த அப்புறம் கணிணியில் படம் சார்ந்த மென்பொருள்களிலோ இந்த பட்டை வரைபடத்தை (Histogram) பார்த்திருப்பீர்கள்.பல சமயங்களில் அதுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமலே மேலோட்டமாக பார்த்துவிட்டு விட்டிருப்போம். ஆனால் இன்றைக்கு இவைகளை பற்றி என்னவென்று பார்த்துவிடுவோம் வாருங்கள்.

இந்த பட்டை வரைப்படம் உங்கள் படத்தில் உள்ள வெளிச்சம்,மற்றும் வெளிச்சமற்ற பகுதிகளின் வரைபடம் என்று கொள்ளலாம். இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்துக்கு போக போக இருட்டிலிருந்து வெளிச்சப்புள்ளிகளின் அளவை பொருத்து கோடுகள் உயரமாகவோ,உயரம் குறைந்தோ காணப்படும்.இதன் ஒரு முக்கியமான உபயோகம் என்னவென்றால்,உங்கள் கேமராவின் LCD திரையில் படம் ஒழுங்காக வந்திருக்கிறதா என்பதை முழுமையாக பார்க்க முடியாவிட்டாலும்,படம் அதிக ஒளியினால் வெளிரிப்போயுள்ளதா,அல்லது வெளிச்சம் குறைந்து இருட்டிவிட்டதா என்பதை இந்த தட்டைப்படத்தை கொண்டு அனுமானித்துக்கொள்ளலாம்.
சில உதாரணங்களை பார்க்கலாமா??

கீழே உள்ள படத்தினையும் அதற்கான தட்டைப்படத்தினையும் பாருங்கள்கீழே இருக்கும் படத்தில் வெளிச்சம் அதிகமாக இருப்பதால் சற்றே வலது புறத்தில் உயரமான கோடுகள் இருப்பதை பார்க்கலாம்.இதனால் படம் சிறிது over exposed ஆகி இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்துக்கொள்ளலாம்.


இப்பொழுது கீழே இருக்கும் படத்தையும் அதற்கான தட்டை வரைபடத்தையும் பாருங்கள்.இந்த படத்தில் குழந்தை கருப்பு வண்ணத்தில் சட்டை அனிந்திருப்பதாலும்,படம் சற்றே வெளிச்சம் குறைந்து காணப்பட்டிருபதாலும் தட்டை வரைப்படத்தில் இடது புறம் கோடுகள் உயர்ந்து காணப்படுகின்றன.


இப்பொழுது எந்த ஒரு பக்கமும் தனியாக உயர்ந்து நிற்காமல் சீராக பரவி இருக்கும் ஒரு தட்டை வரைபடத்தையும்,அதற்கான படத்தையும் கீழே பாருங்கள்.இடது பக்கம்,வலது பக்கம் என்றில்லாமல் எப்படி ஒரே சீராக (ஓரளவிற்கு) கோடுகள் எல்லா பக்கமும் இருக்கிறது என்று பாருங்கள்.

புகைப்படக்கலையின் மற்ற பாடங்களை போல் இதுவும் நாம் நல்ல புகைப்படம் எடுப்பதற்கான ஒரு கருவி மட்டுமே. தட்டை வரைப்படம் ஒரே சீராக பரவி இருந்தால்தான் நல்ல படம் என்றோ,அப்படி இல்லாமல் இருந்தால் நல்ல படம் இல்லை என்றோ யாராலும் சொல்ல முடியாது.ஆனால் அடுத்த முறை எங்கேயாவது தட்டை வரைப்படம் பார்த்தால் பேந்த பேந்த முழிக்காமல்,அது என்ன,அதற்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்றாவது புரிந்துக்கொள்ள இந்த பதிவு உதவும் என்று நினைக்கிறேன்.

பதிவு புரியவில்லை என்றால் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.அடுத்த முறை இன்னும் தெளிவாக எழுத முயற்சி செய்கிறேன்.
நன்றி! :-)

படங்கள் மற்றும் ஆங்கில மூலம் :
Understanding Histograms

14 comments:

 1. வெரி யூஸ்ஃபுல், எப்பவும் போல் ;)

  black level ரொம்ப ஜாஸ்தியாவோ,
  white level ரொம்ப ஜாஸ்தியாவோ இருந்தாலும் சிறப்பா வரும் படங்கள் சில சேம்பிள் போட்டாலும் நல்லா இருக்கும். நானும் தேடிப் பாக்கறேன்.

  ReplyDelete
 2. இதை முதன் முதலில் சோனி கருவியில் பார்த்த ஞாபகம்.அதில் அவ்வளவு கவனம் செலுத்த வில்லை.
  படம் எடுப்பதற்கு முன்பே இதை வைத்து எடுக்கப்போகும் படத்தில் நிலையை ஓரளவு தெரிந்துகொள்ள முடியும்.

  ReplyDelete
 3. முன்பெல்லாம் 35ல ஒரு சில பொத்தான்கள்(Button)தான் இருக்கும்.இப்பவெல்லாம் எதை எந்த நேரத்துல அமுக்குறதுங்கிறதிலேயே தலக் குடைச்சல்.எப்படியோ வாத்தியார் சொல்றதை கவனமா கேட்டுக்கிறேன்.சமயத்துக்கு உதவும்.

  ReplyDelete
 4. histogram பத்தி தெரிஞ்சிக்கனும்னு யோசனை பண்ணும்போதே பதிவு வந்துவிட்டது நன்றி.

  ReplyDelete
 5. நல்ல பதிவு. எளிய விளக்கங்கள்.

  -சத்தியா

  ReplyDelete
 6. @சர்வேசன்
  என்னிடத்திலும் அப்படிப்பட்ட படங்கள் உண்டு என்று நினைக்கிறேன்.இன்றைக்கு சாயந்திரம் தேடி பார்க்கிறேன்.
  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  @வடுவூர் குமார்
  ஆமாம் குமார்,எதற்கும் தெரிந்து வைத்துக்கொள்ளலாம் என்றுதான்.....
  இப்போதைக்கு அவ்வளவாக இதை உபயோகப்படுத்துவதில்லை ஆனால் இந்தக்கலையை பயிலவேண்டும் என்று முடிவு செய்துவிட்ட பிறகு தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயம்தான் இது! :-)

  @நட்டு
  அடடா!!
  வாதியார் எல்லாம் இல்ல தலைவரே,நானும் உங்களை போன்ற மாணவன் தான்,பாடப்புத்தகத்தில் ஏதாவது படித்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுவோம் அல்லவா.அது போலத்தான் இதுவும்!! :-)

  @ஒப்பாரி
  அப்படி போடுங்க!!பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததில் மகிழ்ச்சி :-)

  @சத்தியா
  நன்றி சத்தியா :-)

  ReplyDelete
 7. நல்ல விளக்கமான உரை சி.வி.ஆர்.. புதியதாக படம் எடுக்க ஆரம்பிக்கும் என்னை போன்றவர்களுக்கு இது நல்ல பாடங்கள்.. தொடரட்டும் உங்கள் சேவைகள்

  ReplyDelete
 8. வாங்க கார்த்திகேயன்.. எந்த கேமரா வாங்குனீங்க கடைசீல?

  அப்புறம் போட்டில கலந்துக்கலாமே ?

  ReplyDelete
 9. மிகவும் உபயோகமான தகவல் . போட்டோ எடுக்கும்போது . தெரியம .. பட்டன அழுத்தி .. இந்த படம் வந்தா .. .ஒன்னும் புரியாம . .. படத்த மறைக்குதேன்னு .. மாத்தி விடுவோம் ...

  இவ்வளவு சிம்ம்பிளா .. உதவியா இருக்கும்னு இப்பதான் தெரியுதுங்க :)

  எனக்கும் புகைப்படக்கலை மேல ரொம்ப ஆசை .. ஒரு வழியா ஒரு சின்ன சோனி டபிள்யு 70 வாங்கி வீட்டுக்கு அனுப்பிச்சுட்டேன் ... !

  அடுத்து சொந்த உபயோகத்துக்கு ஒன்னு வாங்க ஆசை .. அது பத்தி ஒரு உதவிப் பதிவு போடுங்க :)

  அன்புடன்
  தனசேகர்...

  ReplyDelete
 10. உங்கள் பாடங்களைப் படித்து ரா (அந்த ரா இல்லை)அளவுக்கு தேடல்.அதில் முக்கியமாக கிஸ்டோகிராம் அவசியம்.அதுதான் உங்களது பதிவினை மீண்டும் ஒரு தேடல்.இப்பொழுது கருப்பு வெள்ளை நிறங்கள் ஓரளவுக்கு புரிகிறது.நன்றி மீண்டும்.

  ReplyDelete
 11. பாரதிய நவீன இளவரசன்March 2, 2008 at 9:44 AM

  //அடுத்த முறை எங்கேயாவது தட்டை வரைப்படம் பார்த்தால் பேந்த பேந்த முழிக்காமல்,அது என்ன,அதற்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்றாவது புருந்துக்கொள்ள இந்த பதிவு உதவும் என்று நினைக்கிறேன்.
  //

  நன்றி. இனி நான் பேந்தப் பேந்த முழிக்க வேண்டியதில்லை :)

  - பாரதிய நவீன இளவரசன் (due to blogger problems, using other option)

  ReplyDelete
 12. i can not see the xtns in gimp. how to get

  ReplyDelete
 13. photokarthik
  what are you not seeing ?
  You need to be more specific. I am really not sure what is the issue you are facing.
  More explanation will be useful
  and also post in the correct post. This post doesnt even talk about GIMP.
  We do have a specific question and answer post. Please post your questions there.

  ReplyDelete
 14. how to join as a member? pls reply to me....

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff