Tuesday, October 23, 2007

கலரா கருப்பு வெள்ளையா

4 comments:
 
வண்ணப்படங்களை விட கருப்பு வெள்ளை படங்களுக்கு ஒரு தனி சிறப்பு இருப்பது உண்மைதான். வண்ணக் கலவைகள் பல நேரங்களில் நாம் சொல்ல விரும்பும் கருத்தை சொல்ல விடாமல் தடுத்துவிடுகிறதோ என்ற ஐயம் தோன்றாமல் இருப்பதில்லை

கிட்டத்தட்ட அனைத்து டிஜிடல் கேமராக்களிலும் கருப்பு வெள்ளை படங்களை எடுக்கும் வசதி இருக்கிறது. ஃபிக்காசா பயன்படுத்தி வண்ணப்படங்களை கருப்பு வெள்ளைக்கு மாற்றும் சில வழிகள் இந்தப் பதிவில்.









இருப்பதிலேயே எளிய முறை ஃபிக்காசா வின் கருப்பு வெள்ளை முறையை நேரடியாகப் பயன்படுத்துவதுதான். இது Effects-> B&W இடத்தில் இருக்கிறது.

.




ஆனால் இந்த முறையில் நமக்கு தேவையான முடிவுகள் கிடைக்கும் வாய்ப்பு குறைவு.

மற்றுமொரு நிறை வசதிகள் இருக்கும் முறை Effects-> Filtered B&W உபயோகிப்பது.





Pick color பொத்தானை அமுக்கினால் ஒரு வண்ணப் பட்டியல் காட்சிதரும். எலிக்குட்டியை அதன் மேல் ஒடவிட்டால் கருப்பு வெள்ளைப் படத்தின் மாற்றங்கள் தெரியும். உங்களுக்கு பிடித்தமான கருப்பு வெள்ளை படத்தை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.





4 comments:

  1. கடைசி நாலு படங்களில் பல்வேறு வண்ண tint-களில் B&W மாறுதலகள் இருக்கின்றனவா??
    படங்களில் வித்தியாசம் தெரியவில்லையே! :-)
    உப்யோகமான பதிவு. கருப்பு வெள்ளையாக மாற்றிக்கொள்ள சுலபமான வழியை சொல்லியிருக்கிறீர்கள்!
    நான் எப்பொழுதும் பிக்காஸாவில் தான் B&W மற்றும் sepia-விற்கு மாற்றிக்கொள்வேன்!! :-)

    ReplyDelete
  2. சீவிஆர்
    வித்தியாசம் படங்களில் கொஞ்சம் தெரியும். உதாரணதிற்கு கோபுரத்தின் ஒளி அளவு
    மாறுபட்டு இருப்பது. இது tint அல்ல channels

    color = Red channel + Green channel + Blue channel

    ReplyDelete
  3. ஆர்வலர்களுக்கு பிக்காஸா இப்போது லினக்ஸ் க்கும் இருக்கிறது, ஆனால் என்னுடைய விருப்பம் ஜிம்ப். ஜிம்ப் ஒரு அற்புதமான இலவச மென்பொருள்.11

    ReplyDelete
  4. இதயே கிம்பில் செய்ய வேண்டுமானால்

    channel Mixer-> monochrome


    உபயோகப்படுத்தலாம்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff