Monday, October 1, 2007

அக்டோபர் மாத PIT புகைப்பட போட்டி அறிவிப்பு

31 comments:
 
வலையுலக நண்பர்களுக்கு என் அன்பார்ந்த வணக்கங்கள்,
அக்டோபர் மாதத்திற்கான PIT புகைப்பட போட்டிக்கான அறிவிப்பு இதோ.

தலைப்பு - உணவுப்பொருட்கள்
நடுவர்கள் - நாதன் மற்றும் யாத்திரீகன்
படங்கள் அனுப்பும் முறை - பதிவிட்டு விட்டு ,பின்னூட்டத்தில் அறிவிக்க வேண்டும்
போட்டிக்கான விதிகள்:அதிகபட்சம் இரண்டு படங்கள் போட்டிக்காக சமர்பிக்கலாம்.எதுவும் சொல்லாத பட்சத்தில் இடுகையில் உள்ள முதல் இரண்டு படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
காலம்
- அக்டோபர் 1 முதல் 10
நாட்டாமைகள் தீர்ப்பு சொல்லும் நாள் - 15 அக்டோபர்




படங்கள் ஏதாவது உணவு பதார்த்தமாகவோ அல்லது கனி காய்கறிகளாகவும் இருக்கலாம்.அதுக்காக செடி கொடி, ஆடு,மாடு,கோழி எல்லாம் உயிரோடு இருக்கும்போது படம் எடுத்து அனுப்பினால் ஒத்துக்கொள்ளப்பட மாட்டாது!! :-)
முடிந்த வரைக்கும் போட்டிக்காக புதிதாக படம் எடுத்து அனுப்பப்பாருங்கள்,ஏற்கெனவே எடுத்திருக்கும் படங்களில் இருந்து எடுத்து அனுப்பினால் பொதுவாக அவ்வளவாக பொருந்தி வராது.
போட்டிக்கு படம் எடுக்க டிப்ஸ் வேண்டுமென்றால் இந்த பக்கத்திற்கு சென்று படித்துக்கொள்ளுங்கள்!!
பங்கு பெறும் அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :-)

பி.கு:இந்த இடுகை இந்த குழுப்பதிவின் 50-ஆவது இடுகை!! :-)

போட்டியாளர்களின் படங்கள் :

1.) ஆயில்யன்

2.) சிவபாலன்

3.) இம்சை

4.) காசி ஆறுமுகம்

5.) போட்டோ பழனி

6.) Srikanth - படம்1 படம்2

7.) கைப்புள்ள

8.) நட்டு

9.) veerasundar

10.) ஒப்பாரி

11.) சத்தியா

12.) மஞ்சு

13.) சதங்கா

14.) முகவை மைந்தன்

15.) Jayashree Govindarajan

16.) God Pic1 Pic2

17.) விழியன்

18.) வற்றாயிருப்பு சுந்தர்

19.) நாகை சிவா

20.) ஆதி

31 comments:

  1. விதிகளுக்குட்பட்டிருந்தால் இதையும் பரிசீலிக்கலாமே...??!!

    http://kadagam.blogspot.com/2007/10/blog-post.html

    ReplyDelete
  2. போட்டிக்கான எனது ஆக்கம்.

    இந்த புகைப் படங்களை போட்டிக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்.

    http://sivabalanblog.blogspot.com/2007/09/pit.html

    நன்றி

    அன்புடன்
    சிவபாலன்

    ReplyDelete
  3. சூப்பர் போட்டி! ;-)

    எது இல்லாமலும் வாழலாம். உணவில்லாமல் வாழமுடியுமா?

    ஆனாலும் வித்தியாசமான தலைப்பு. 'இதையெல்லாமா போட்டோ எடுப்பாய்ங்க?' என்ற மனோநிலையே என் போன்றவர்களுக்கு இருந்திருக்கிறது. புகைப்படப் போட்டியில் பங்கு பெறத் துவங்கியதிலிருந்தே, பொதுவாகவே காட்சிகளின் மீதான கண்ணோட்டம் மாறியிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

    எதையும் புகைப்படத்திற்கு லாயக்கில்லாதது என்று இப்போதெல்லாம் ஒதுக்கிவிட முடிவதில்லை. :-)

    புகைப்படக் கலையை கற்க ஆர்வம் மிகுந்திருக்கிறது. அதற்கேற்ப உங்களைப் போன்ற 'தலை'ங்க எல்லாம் அருமையான, பயனுள்ள பதிவுகளைக் கொடுத்து வருகிறீர்கள் - நன்றிகள் பல.

    அடிக்கடி நான் எனக்குச் சொல்லிக்கொள்வது 'கண்ணைத் திற காட்சி வரட்டும்!' :-)

    போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வந்துட்டென்.....

    http://iimsai.blogspot.com/2007/09/pit.html

    இம்சை - அக்டோபர் மாத PIT புகைப்பட போட்டி படங்கள்

    This month also I am the firstu with 2 pictures as per PIT October topic....

    ReplyDelete
  5. என்னையும் ஆட்டத்துக்கு சேத்துக்குங்க.

    இங்கே ரெண்டு படம் போட்டுருக்கேன்.
    -சாப்பாட்டுராமன்.

    http://kasiphotos.blogspot.com/

    ReplyDelete
  6. என்னோட கலக்சன்ல ஒன்னும் தேறல. இந்த வாட்டி ஜகா வாங்கிக்கிறேன். போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. @Prakash

    அட!!
    என்ன பிரகாஷ் இப்படி சொல்லிட்டீங்க!!!
    ஒன்னுக்கு பத்து நாள் இருக்கு,நல்லா பொறுமையா முயற்சி பண்ணி ஒரு படம் எடுத்து போடுங்க!
    இப்போ செய்யலைன்னா வேறு எப்போ செய்யப்போறோம்!!

    புது புது விஷயங்களை கற்றுக்கொள்ளவும்,முயற்சி செய்யவும் தானே இந்த போட்டியே!! எல்லா சமயமும் பழைய படங்களில் தேடினா முடியுமா?? :-)

    சொல்லப்போனா ஒவ்வொரு தடவையும் வாசகர்கள் புதுசா படம் எடுத்து அனுப்பவேண்டும் என்பது தான் எங்கள் விருப்பமே!!! :-)

    ReplyDelete
  8. ஆயில்யன் - இன்னும் நல்லா முயற்சி செஞ்சிருக்கலாம் ;)

    சிவபாலன் - பட்டர்ஃப்ளை நெருடல்; படங்கள் நல்லா வந்திருக்கு. தர்பூஸ் இன்னும் கலரா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் ;)

    இம்சை - கலக்கிப்புட்டீங்க.

    காசி - நூடுல்ஸ் சூப்பர். பேக்ரவுண்ட் கொஞ்சம் டார்க்கா கறுப்பா இருந்திருந்தா இன்னும் தூக்கலா இருந்திருக்கும் :)

    ReplyDelete
  9. இந்ததடவை ஜட்ஜ் பண்றது ரொம்ப சுலுவா போய்டும் :P மொத்தமே நாலு பேர்தான்:D

    ReplyDelete
  10. http://photopazani.blogspot.com/2007/10/blog-post.html

    ReplyDelete
  11. அனானி,
    அப்படி சுலபமா விட்டுடமாட்டாங்க ;-)
    எப்படிப்பட்ட படங்கள் வருதுன்னு பாத்துட்டு போடறதுக்குன்னே காத்துகிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன். ஒரு பெரும்படையே கடைசி 2 நாள்ல வரும் பாருங்க ;-)

    ReplyDelete
  12. நன்றி சத்தியா!
    எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது!

    எல்லோரும் சாதாரணமாக எடுக்கக்கூடிய படங்களில்லாமல் சற்றே வித்தியாசமான தலைப்பு இது என்பதால் எல்லோரும் சிரத்தை எடுத்து நிறைய முயற்சி செய்து கடைசியில் பதிவிடலாம் என்று எண்ணியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
    போட்டியாளர்கள் குறைவாக இருந்தாலும் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு இந்த கலையில் புதிதாக கற்றுக்கொண்டால் அதுவே இந்த பதிவின்/போட்டியின் வெற்றி!! :-)

    ReplyDelete
  13. //SurveySan said...
    ஆயில்யன் - இன்னும் நல்லா முயற்சி செஞ்சிருக்கலாம் ;)//

    ss சார் உண்மையா போட்டிக்குன்னு ஃபீல் பண்ணி எடுக்கலை ஊர்ல எவ்ளோ உணவு வகைகள்,ஒட்டல்கள் இருந்தும் போய் தின்னு அனுபவிக்கலையே! இப்ப இங்க வந்து ஒண்ணுமே கிடைக்காத நிலைமையில, இத சாப்பிடுறோமேன்னு ஒரு நாள் ரொம்ப ஃபீல் பண்ணி எடுத்த மேட்டருதான் அது!

    ReplyDelete
  14. mudalil intha muyarchikum , kuzhuvirkum manamaarntha vaazhthukal...

    pathivirku enudaiya siriya muyarchi.


    http://lighttome.blogspot.com/2007/10/for-pit-azhaipu.html

    http://lighttome.blogspot.com/2007/10/for-pit-azhaipu_05.html

    nandriyudan
    srikanth

    ReplyDelete
  15. Supper photos so far\

    ReplyDelete
  16. Srikanth,
    kaippulla,
    photo pazani,


    AWESOME PICS so far!

    ReplyDelete
  17. அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க!ஜீவ்ஸ் போட்டிக்கு முன்னாடியே எனது போட்டா போட்டிக்கு முதுகுல ஒரு அன்பு தட்டு போட்டார்.பார்ப்போம் நிலவரத்தை.நம்ம படத்தை இங்கே பாருங்க!

    http://parvaiyil.blogspot.com/2007/10/blog-post.html

    ReplyDelete
  18. என்னுடையது

    http://oppareegal.blogspot.com/2007/10/pit.html

    ReplyDelete
  19. போட்டிக்கு வந்துட்டேன். இங்க என்னோட பங்களிப்புகள்

    ReplyDelete
  20. போட்டிக்கான எனது புகைப்படங்கள்

    http://snehamudansakthi.blogspot.com/2007/10/pit.html

    ReplyDelete
  21. என்னுடைய நுழைவு இங்கே!

    http://mugavairam.blogspot.com/2007/10/blog-post.html

    ReplyDelete
  22. http://mykitchenpitch.wordpress.com/2007/10/10/october-maadha-pugaippada-potti/

    ReplyDelete
  23. அடிக்கடி வந்து இந்த பக்கங்கள பாக்கரதுண்டு...
    சரி நம்மளும்தான் கலந்துக்குவமேன்னு ஒரு ஆசை...இதோ என் புகைப்படங்கள்

    http://hhappydays.blogspot.com/2007/10/bachelors-cooking-1.html

    http://hhappydays.blogspot.com/2007/10/bachelors-cooking-2.html

    ReplyDelete
  24. இத்தனை காலம் இப்படி ஒரு வலைப்பூ தமிழில் இருப்பது தெரியாமல் போனது.

    இந்த மாதம் முதல் கலந்து கொள்கின்றேன். போட்டிக்கான எனது கிளிக்குகள் இதோ

    http://vizhiyan.wordpress.com/2007/10/10/vizhiyan-photography-14/

    நீண்ட குழப்பத்திற்கு பிறகு, தெளிவான ஒரு முடிவிற்கு வர முடியாமல் (புகைப்படம் 4 மற்றும் புகைப்படம் 6) ஆகியவற்றை போட்டிக்கு சமர்பிக்கிறேன்.

    - விழியன்

    ReplyDelete
  25. போட்டிக்கான எனது பங்களிப்பு இங்கே.

    http://raajapaarvai.blogspot.com/2007/10/pit.html

    மற்ற படங்களைப் பார்க்கையில் சாப்பிட்டதெல்லாம் வேகமாகச் செரித்துவிடும் போல இருக்கிறது! :-)

    அருமையான படங்கள். போட்டியாளர்களுக்கு வாழ்த்துகள். நடுவர்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  26. என்னையும் ஆட்டையில சேர்த்துக்கோங்க...

    http://tsivaram.blogspot.com/2007/10/test.html

    முதல் மற்றும் கடைசி படம்

    1 & 13

    கலந்த கொண்ட மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. Sorry... இந்த முறையும் கொஞ்சம் late ஆகிடிச்சு. உணவுப் பொருட்கள்ங்கிறதால கொஞ்சம் அலைஞ்சி திரிஞ்சி எடுக்க வேண்டி இருந்தது. சென்ற ஞாயிற்றுக் கிழமை, South Usman Road'ல், எல்லோரும் என்னை ஏதோ வேற்று கிரக வாசி போல் பார்த்தார்கள். :-)

    இரண்டு photos'க்கு தான் border போட time இருந்துச்சு. Photoshop'ல border மட்டும் போட்டுட்டு அப்படியே save பண்ணா, image size குறைந்து போயிடுதே... ஏன்?

    http://luvathi.blogspot.com/2007/10/food-items-for-oct-2007-photography.html

    இதுக்காக paisa'லாம் செலவு பண்ணி photo புடிச்சிருக்கேங்க. பாத்து ஏதாவது ஆறுதல் பரிசாவது தாங்க மக்களே!! :-)

    ReplyDelete
  28. Guys & Gals,

    Lot of Excellent Pictures this time!

    Thanks for taking the time and shooting the pictures.

    உங்களின் ரசிப்புத்தன்மையும் ஆர்வமும் பெருமகிழ்ச்சியைத் தருகிறது.

    ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு படியாக மேலே ஏறிக் கொண்டிருக்கிறீர்கள்.

    We Salute You!


    நடுவர்கள் பாடு திண்டாட்டம்தான், வழக்கம் போல்.

    நடுவர்காள், ஒவ்வொரு படத்துக்கும் ஒரு சின்ன விமர்சனம் தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ;)

    நன்றி!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff