Tuesday, April 21, 2009

Vignette ( வினியட்) எப்படி

5 comments:
 
வினியட் ( Vignette) : பொதுவாக இது லென்ஸில் உள்ள ஒரு குறைபாடு. ஓரங்கள் கருப்பாகவும் நடுப்பகுதி தெளிவாகவும் வரும். இநத குறைப்பாடு ஒரு விததில் நன்மையும் தரக்கூடும். படத்தின் நடுவில் இருக்கும் கருப்பொருளை தெளிவாக காட்ட இது உதவும். கிம்பில் இதை செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. எளிதான ஒரு முறை இங்கே.



உதாரணத்திற்கு இந்த படம்.


படத்தை கிம்பில் திறந்து ஒரு Transparent புதிய லேயரை உருவாக்கிக் கொள்ளுங்கள்.





இனி சதுர அல்லது நீள்வட்ட அளவில் நமக்குத் தேவையான கருப்பொருளை படத்தில் உள்ளப்படி, தெரிவு செய்துக் கொள்ளுங்கள்.



வட்ட அள்வை கொஞ்சம் feather செய்துக் கொண்டால் விளைவு செயற்கையாய் தெரியாது.




பெரிய அளவில் feather செய்ய வேண்டும். உதாரணதிற்கு இந்த 1024 * 800 படத்திற்கு நான் 50 எடுத்துக் கொண்டேன். பெரிய அளவு படத்துக்கு பெரிய feather தேவை.




நமக்குத் தேவையான பகுதி கருப்பொருளை தவிர்த்த மற்ற பகுதி. இதைதான் நாம் கருப்பாக மாற்றப் போகிறோம்.எனவே invert செய்துக் கொள்ளுங்கள்.



முன்னணி வண்ணம் கருப்பாக இருக்கும் படி செய்துக் கொண்டு, இந்தப் பகுதியை கருப்பு வண்ணத்தால் நிரப்புங்கள்.




படம் இப்படி மாறி இருக்கும்



இனி உங்களின் விருப்பத்துக்கு ஏற்ப Opacity மற்றும் Mode மாற்றிக்கொள்ளுங்கள்.

opcaity மிகவும் குறைத்துக்கொள்ள் வேண்டும். Mode - Normal/Multiply/Overlay/Softlight என்று மாற்றிக் கொள்ளலாம்.




விளைவு இந்தமாதிரி இருக்கும்.


5 comments:

  1. நன்றிஹை ....

    ReplyDelete
  2. ரொம்ப நன்றிங்க... இப்பவே செய்து பார்க்கிறேன். செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.

    You made my day. Thanks a lot.

    :)

    ReplyDelete
  3. லென்ஸில் உள்ள இந்தக் குறைபாடை சரி செய்ய முடியுமா? என் டிஜிடல் கேமராவில் கருப்புக்கு பதிலாக ஓரங்களில் ரோஸ் நிறத்தில் வருகிறது. என்ன வழி? நன்றி.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff