Thursday, July 29, 2010

2010 ஜூலை மாத போட்டி ---- வெற்றி பெற்ற `வழிபாட்டுத்தலங்கள்`...

32 comments:
 
அன்பு நண்பர்களே,

முன்னேறிய 15 வழிபாட்டுத் தலங்களில் இருந்து முதல் மூன்று எது என்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பீர்கள்..

முதலில்,அந்த 15 படங்களில் இருந்து முதலில் வெளியேறிய படங்களை பற்றி பார்ப்போம்..

இந்த வெளியேற்றம் என்பது இங்குள்ள மற்ற புகைப்படங்களை வைத்து தானே தவிர எந்த படமும் நன்றாக இல்லாத படங்கள் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.. சிறு சிறு குறைகள் தான்..

இங்கு வெளியேறிய ஒரு சில படங்களில் சிறு குறைகளை தவிர்த்திருந்தால் ஒரு வேளை அந்த படமும் முதல் மூன்றிற்குள் வந்திருக்கும்..

இதில் முதல் ரவுண்டில் வெளியேறுவது,

கீர்த்தி

கலை

அமைதிச்சாரல்

இவர்களில்,

கீர்த்தி படத்தில் framing நன்றாக இருக்கின்றது..

இருந்தாலும் கலர்ஸ் கொஞ்சம் Dull, பெரிதாக effect இல்லாத foreground,details குறைவு(பெரிதாக பாதிக்கவில்லை) இந்த காரணங்களுக்காக வெளியேறுகின்றது..

கலை படத்தில்,

அந்த அழகான நீல வானம், சந்தன(தங்கம்) கலரில் கோவில் மற்றும் சிவப்பு வெள்ளை சுவர் இந்த மூன்று combinationம் சேர்ந்து இந்த படத்திற்கு attractive brightness தருகின்றன..படம் பளிச் என்று அழகாக இருக்கின்றது..

இருந்தாலும் படத்தின் அழகை குறைக்கும் அந்த தார் ரோடு,கொஞ்சம் குறைவான details, effect குறைவான composition இந்த காரணங்களுக்காக வெளியேறுகின்றது..

அமைதிச்சாரல் படத்தில்,

தொந்தரவுகள் அதிகம் இல்லாத composition, neat foreground,அழகான வானம் இம்மூன்று காரணங்களுக்காக முதல் 15ல் முன்னேறியது..

ஆனால் மிக குறைவான details, tight cropping, dull colours.. இந்த காரணங்களுக்காக வெளியேறுகின்றது..


அடுத்த ரவுண்டில் வெளியேறுவது

சுரேஷ்

துளசி கோபால்

ஆயில்யன்

காவியம்

இவர்களில் சுரேஷ் படத்தில்,

வர்ணங்கள் இல்லாத கோபுரம் மற்றும் தொந்தரவுகள் இல்லாத நீல வானமும் perfect ஆக மேட்ச் ஆகின்றது.. பார்ப்பதற்க்கும் attractive ஆக இருக்கின்றது...

ஆனால் ரொம்ப டைட் க்ராப் மற்றும் சிறிது குறையுள்ள composition காரணங்களுக்காக வெளியேறுகின்றது..

துளசி கோபால் படத்தில்,

சரியான exposure,அழகான பழங்காலத்து ஆலயம்,அதற்கேற்றார் போல் உள்ள வானம்,நல்ல ஷார்ப்னெஸ் இவையெல்லாம் ப்ளஸ்..படம் நல்ல brightness..

இருந்தாலும் டைட் க்ராப் தான் இந்த படத்துக்கு எதிரி..கொஞ்சம் சிம்பிளான கம்போசிசன்..இந்த காரணங்களுக்காக இப்படம் வெளியேறுகின்றது..இருந்தாலும் உங்கள் படம் அருமை..

அடுத்து ஆயில்யன்,

ஆயில்யன் எப்பவுமே கடைசி சுற்றில் முதல் ரவுண்டில் வெளியேறுவார்,ஆனால் இந்த முறை கொஞ்சம் முன்னேற்றம்..உங்கள் படத்தில்,
அருமையான wide angle கம்போஸிசன்,அழகான வானம்,இந்த காரணங்களுக்காக முன்னேறியது..

ஆனால்,கொஞ்சம் exposure குறைத்து இருக்கலாம் ,அந்த சுவற்றில் டீடெயில்ஸ் burn ஆகிவிட்டது கொஞ்சம் வெளுத்தது போல் இருக்கின்றது,அதே சமயம் படத்தில் ஒரு நபர் இருப்பது படத்தின் பிரம்மாண்டத்தை காட்டுவதற்கு இருந்தாலும் படத்தை கொஞ்சம் distract செய்கின்றது..

நல்ல படம்,இருந்தாலும் மேலே சொன்ன காரணங்களுக்காக வெளியேறுகின்றது..

காவியம் படத்தில்,

முதன் முதலில் இந்த படத்தை பார்த்ததும் ரொம்பவும் பிடித்து விட்டது.. நல்ல dark background, தூணில் உள்ள சிலைக்கு மட்டும் ஃப்லாஷ் லைட்டிங்.. முதலில் இந்த படத்தை பார்க்கும் போது PP செய்தது மாதிரி பெரிதாக கண்டேபிடிக்க முடியவில்லை..அதற்கு வாழ்த்துக்கள்..

நல்ல attractive ஆக இருந்தாலும்.. PP என்பது இப்படத்தில் அதிகம் இருப்பதால் இந்த சுற்றில் வெளியேறுகின்றது..

அடுத்த ரவுண்டில் வெளியேறுவது,

கே.ஜி.சன்முகம்

அமல்

மெர்வின் ஆண்ட்டோ


இவர்களில் கே.ஜி.சன்முகம் அவர்கள் படத்தில்,

இருளில் ஒளியாய் படம் கலர் கலராய் அழகாக இருக்கின்றது..பல வண்ணங்களில் லைட்டிங்ஸ் அருமை..

ஆனால் படத்தை வேறு மாதிரி நேராக compose செய்து எடுத்திருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது..கொஞ்சம் blur (low lightல் இது பெரிய குறையில்லை),இந்த காரணங்களுக்காக வெளியேறுகின்றது.

அமல் படத்தில்,

சிலுவையில் இயேசுவும்,அந்த பனிமூட்டமும் ரொம்பவும் அழகு..இவ்விரண்டும் சேர்ந்து ஒரு வித அமைதி effect தருகின்றது அழகு..

ஆனால் இந்த படத்தின் பெரிய மைனஸ் என்பது அந்த கேபிள் வயர்கள் மற்றும் நுழைவு வாயில் கம்பி தான்..நமது கண்கள் நேராக அங்கே தான் செல்வது இப்படத்துக்கு ஒரு குறை..

அதே சமயம் சிலுவையை பின்னால் இருந்து எடுத்திருப்பது சரியான effect தரவில்லை..இந்த காரணங்களுக்காக் இப்படம் வெளியேறுகின்றது..

மெர்வின் ஆண்ட்டோ படத்தில்,

வித்தியாசமான கோணத்தில் படம். வானம்,சூரியன் இவற்றிற்கு எதிராக படம் எடுப்பதற்கு ரொம்பவும் பொறுமை வேண்டும்.அதையும் அழகாக எடுத்துள்ளார்..படம் அருமை..
ஆனால் படத்தின் முக்கிய சப்ஜெக்ட் ரொம்பவே க்ராப் ஆகி சின்னதாக போய்விட்டது ஒரு பலவீனமே..

சிலைக்கு இன்னும் லைட்டிங்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்..இன்னும் கொஞ்சம் முழுவதுமாக க்ராப் இல்லாமல் எடுத்திருந்தால் இப்படம் கலக்கியிருக்கும்..
இப்படம் இந்த காரணங்களுக்காக வெளியேறுகின்றது..

அடுத்த கடைசி ரவுண்டில் இருப்பது

இப்ராஹிம்

கமல்

ஆதவா

வீரா

நிமல்


இதில் முதலில் வெளியேறுவது வீரா...



இதுக்கு ஒரே ஒரு காரணம் தான்.. அது டைட் க்ராப்..

வீரா,அந்த செவ்வானமும்,பறவைகளும்,அழகான கோபுரமும் ஒன்று சேர கவிதையாய் இருக்கின்றது... ஆனால் இப்படி அநியாயமா மேலே டைட்டா கட் பன்னீட்டீங்களே... இதனால் தான் இப்படம் வெளியே போகுது...

இருந்தாலும் என் மனதிற்கு இந்த படம் மிகவும் பிடித்திருக்கின்றது... ஆனால் என்ன செய்ய..? சரி,அடுத்த முறை கவனமா பார்த்துக்குங்க..

அடுத்து மூன்றாவது இடத்துக்கு போட்டி போடுவது,

இப்ராஹிம் மற்றும் ஆதவா அவர்களின் படங்கள்..

இப்ராஹிம் படத்தில்


இரவு நேரத்தில் நல்ல ஷார்ப்பான படம்..அதுவும் point and shoot கேமராவில்..ரொம்ப அழகாகவும் எடுத்திருக்கீங்க..வரிசையான தூண்கள் ஒளியில் அழகாக இருக்கின்றன..அதன் reflectionsம் தண்ணீரில் தெரிவதும் அழகு..

இந்த மாதிரி இடங்களில் பக்தர்கள் இல்லாமல் எடுப்பது கண்டிப்பாக கடினம் தான்..ஆனால் அதுவே, யாராவது பக்தியுடன் இருந்திருந்தால் நல்ல effect இருந்திருக்கும்..இதனால் இந்த இடமானது ஒரு பில்டிங் உள்ளே எடுத்தது போல காட்சியமைப்பாகின்றது.. இதுவே இப்படத்திற்கு பலவீனமாக தெரிகின்றது

ஆதவா படத்தில்,

lights மற்றும் shadows ஐ மிக அழகாக படம் பிடித்துள்ளார்..அதுவும் அந்த மண்டபத் தூண்கள் இடையே வரும் ஒளியமைப்பு மிகவும் அழகு..distraction எதுவும் இல்லாத framing,சரியான அளவு exposure, எல்லாம் இப்படத்திற்கு பலம்..

ஆனால் அந்த தூண்கள் நமது பார்வையை ஒரு வெறுமையான இடத்துக்கு அழைத்துப் போவது ஒரு பலவீனமே..இதனால் அந்த இடத்தில் ஏதாவது இருக்ககூடாதா என்று நினைக்க தோன்றுகிறது..

மேலும் water mark ரொம்பவே அதிகம்..இதெல்லாம் ஒரு பெரிய குறைகள் இல்லை..மற்றபடி படம் அருமை..

இவங்க ரெண்டு பேரும் கிட்டதட்ட ஒரே மாதிரியான படத்தை தந்துள்ளனர்..இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது?

ரெண்டு பேரும் சரியான அளவுகளில் உள்ளனர்..ஒருவர் இருளில் செயற்கை ஒளியை ஷார்ப்பாக, அழகாக பிடித்துள்ளார் ,
மற்றொருவர் கலைநயம் மிக்க தூண்களை இயற்கை ஒளியுடன் பிடித்துள்ளார்..

என்னை பொறுத்த வரையில் distraction இல்லாத அழகான தூண்களே சிறப்பாக தெரிகின்றன...

எனவே மூன்றாம் இடம் பிடிப்பது ஆதவா..



வாழ்த்துக்கள் ஆதவா..

அடுத்து இறுதி இடத்திற்கு போட்டி போடுவது

கமல் மற்றும் நிமல்... என்ன ஒரு பெயர் பொருத்தம்...

இவர்களின் படங்கள் இரண்டும் கடைசி சுற்று வரை வருவதற்க்கு காரணம், perfect composition,
கசகசன்னு distraction இல்லாத background,
வித்தியாசமான கோணம்...

இவர்களின் படங்கள் இரண்டுமே கோபுரத்தின் படங்கள்.. இதில் எந்த கோபுரம் சிறந்தது??

இதில் கமல் படத்தில்

ஃப்ரேமுக்குள் இன்னொரு ஃப்ரேம்... அழகு.. கோபுரமும் பெர்ஃபெக்ட்.. பேக்கிரவுண்ட் மேகமும் அருமை,திருவிளையாடல் படத்துல வர்ற மாதிரி மேககூட்டம் பிரம்மாண்டமா இருக்கு..

எப்படி மேலே ஏறி எடுத்தீங்களா? இல்லை கோவில் கீழே இருக்கின்றதா?மிகவும் அருமை..

ஆனால் படம் கொஞ்சம் closeஆக இருப்பதால் கண்டிப்பாக details இன்னும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்..அதுவுமில்லாமல் படத்தின் கீழே கொஞ்சம் வெளிச்சம் பத்தவில்லை..கலர் saturation கொஞ்சம் அதிகமா தெரியுது..

எனவே இரண்டாம் இடம் பிடிப்பது கமல்...


இதெல்லாம் சிறிய பலவீனமே..மற்றபடி இந்த படத்தின் ஃப்ரேம் எனக்கு மிகவும் பிடித்தது...

வாழ்த்துக்கள் கமல்..

அடுத்து நிமல் படம்..

perfect composition, கவிதையான perfect foreground.., அழகான நீல வானம், சரியான exposure, distraction பெரிதாக இல்லாத படம்,இப்படி பல..

அதென்ன கவிதையான fore ground..? அவருக்கு தெரிந்து எடுத்தாரோ, இல்லையோ...
கீழே கற்கள், மேலே அதே கற்கள் நிறத்தில் கோபுரம்.. கற்கள் அப்படியே கோபுரமாவது போல் இருக்கின்றது..(எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்)..

இந்த மாதிரி படம் எடுக்கும் போது fore ground என்பது மிக முக்கியம்..இந்த படத்தில் நிமல் அதை அழகாக பயன்படுத்தியுள்ளார்...

இந்த படத்தை பார்த்ததும் , எனக்கு இந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது...

`கல்லிலே கலை வண்ணம் கண்டான்`

`நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா`..


இறுதியில் முதல் இடம் பிடித்தது நிமல் அவர்களின் தலம்...



நிமல்.... வாழ்த்துக்கள்...

இந்த முறை வெற்றி பெற்ற படங்களை பார்த்தால் அனைத்து படங்களும் சாதாரண point and shoot , prosumer கேமராக்களில் தான் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

இதன் மூலம் நல்ல படங்களை எடுப்பதற்கு, நல்ல கேமரா மட்டும் காரணம் இல்லை என்பது நிரூபனம் ஆகின்றது..

சரி நண்பர்களே, இனி அடுத்த போட்டிக்கு தயாராகுங்க..விரைவில் அறிவிப்பு வரும்.. இந்த முறை கண்டிப்பாக செஞ்சுரி அடித்துவிடுவோம் ..

நன்றி
கருவாயன்

32 comments:

  1. superb selections. :) congratulations to all.

    ReplyDelete
  2. டீடெய்ய்ல்ல்டு ரிப்போர்ட்டு :)

    வாழ்த்துக்கள் நிமல்

    ReplyDelete
  3. மிக நல்ல தெரிவுகள்ங்க சுரேஷ்

    அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. வாவ் அருமையான விளக்கங்களுடன் அழகான தேர்வு என்னுடைய படம் 3 வது சுற்று வரை வந்துள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வெற்றி பெற்ற மூவருக்கும், எங்கள் தோல்விக்கு விளக்கம் அளித்த கருவாயனுக்கும் இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  6. Congrats to the winners! :)

    Happy that my photo came till the last round. Looking forward to the next title.

    ReplyDelete
  7. வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    //இதன் மூலம் நல்ல படங்களை எடுப்பதற்கு, நல்ல கேமரா மட்டும் காரணம் இல்லை என்பது நிரூபனம் ஆகின்றது..//

    ஆம். Camera is the least important element in photography - சொன்னவர் கட்டிடக்கலை புகைப்பட மேதையான Julius Shulman.

    ReplyDelete
  8. I loved the way, the review has been done - very good pointers for people like me who are in the learning curve.

    ReplyDelete
  9. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    என்னை மாதிரி புதுசா கத்துக்கிறவங்களுக்கு உங்களுடைய அலசல் ரொம்பவே உதவியா இருக்கும்.அடுத்த தடவை அதை நிவர்த்தி செய்ய ஏதுவா இருக்குமில்லையா..

    ReplyDelete
  10. Congrats "NIMAL" and better luck next to others

    ReplyDelete
  11. இந்த முறை படங்கள் அனைத்தும் சூப்பர். காவியம் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

    இன்னொரு விஷயம். கமல் படத்தின் மேகங்கள் போட்டொஷாப்பில் இன்னொரு படத்தில் இருந்து ஒட்ட வைத்தது என்றே நினைத்தேன். அப்படி இல்லையா? வலதுபுறம் உள்ள எலியின் பின்புறமும் கோபுரத்தின் கீழே இடது புறத்தில் முதல் அடுக்கில் உள்ள குட்டி கோபுரத்திலும் க்ராப்பிங் பிழை தெரிவது போல் உள்ளது. (கமல் தவறா எடுத்து கொள்ளாதீர்கள். May be I am wrong)

    ReplyDelete
  12. எனது படத்தை மூன்றாமிடத்திற்குத் தேர்வு செய்தமைக்கு நன்றி...

    மற்ற நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. ஒவ்வொரு படத்துக்கும் தந்திருக்கும் விளக்கம்,ஏன் தேர்வாகவில்லை என்ற காரணம் சொல்லியிருப்பது அருமை...
    தேர்வும் ,தராசின் துல்லியம்....

    ReplyDelete
  14. வெற்றி கொடி நாட்டியவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வெற்றி பெற்ற மூவருக்கு இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  16. நன்றி...
    அனைத்து நண்பர்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  17. படங்கள் அனைத்தும் தூள்.


    கருவாயன் - விமர்சனங்களும் தூள்.

    ReplyDelete
  18. //இன்னொரு விஷயம். கமல் படத்தின் மேகங்கள் போட்டொஷாப்பில் இன்னொரு படத்தில் இருந்து ஒட்ட வைத்தது என்றே நினைத்தேன். அப்படி இல்லையா? வலதுபுறம் உள்ள எலியின் பின்புறமும் கோபுரத்தின் கீழே இடது புறத்தில் முதல் அடுக்கில் உள்ள குட்டி கோபுரத்திலும் க்ராப்பிங் பிழை தெரிவது போல் உள்ளது. (கமல் தவறா எடுத்து கொள்ளாதீர்கள். May be I am wrong)//

    ஆ இதழ்கள் சொன்னது போல படத்தை பெரிது படுத்தி பார்த்தால் left சைட் எலிக்கு மேலே சிறிய கோபுரத்தில் சில பகுதிகள் காணவில்லை இது ஒருவேளை ஒட்டு வேலையோ எப்படியோ நடுவர்கள் கண்டு கொண்டால் சரி (கமல் தவறா எடுத்து கொள்ளாதீர்கள்)

    ReplyDelete
  19. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
    நாட்டாமை கருவாயனின் விமர்சனங்கள் அருமை!!!

    ReplyDelete
  20. செலக்ட் ஆகாத படங்க ஏன் முன்னுக்கு வரலன்னு அருமையா விளக்கி இருக்கீங்க.
    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-)


    //
    //இன்னொரு விஷயம். கமல் படத்தின் மேகங்கள் போட்டொஷாப்பில் இன்னொரு படத்தில் இருந்து ஒட்ட வைத்தது என்றே நினைத்தேன். அப்படி இல்லையா? வலதுபுறம் உள்ள எலியின் பின்புறமும் கோபுரத்தின் கீழே இடது புறத்தில் முதல் அடுக்கில் உள்ள குட்டி கோபுரத்திலும் க்ராப்பிங் பிழை தெரிவது போல் உள்ளது. (கமல் தவறா எடுத்து கொள்ளாதீர்கள். May be I am wrong)//

    ஆ இதழ்கள் சொன்னது போல படத்தை பெரிது படுத்தி பார்த்தால் left சைட் எலிக்கு மேலே சிறிய கோபுரத்தில் சில பகுதிகள் காணவில்லை இது ஒருவேளை ஒட்டு வேலையோ எப்படியோ நடுவர்கள் கண்டு கொண்டால் சரி (கமல் தவறா எடுத்து கொள்ளாதீர்கள்)

    //

    எனக்கும் பார்க்க அப்படி தான் இருந்தது...கோபுரமே கொஞ்சம் கட் ஆகி இருக்கு... அப்புறம் ஏதோ ஒரு கருப்பு உருவம் கோவில் கோபுரம் மேல இருந்து குதிக்கிறது போல வேற இருக்கு...நமக்கு இடது பக்கத்துல :-)

    நானே இப்ப தான் படம் எடுக்கவும், கொஞ்சம் அழகு பண்ணவும் கத்துக்கறேன். சோ, நோ வம்பு :-) உடு ஜூஊஊஊஊஊஊட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் :-)

    ReplyDelete
  21. நான் அனுப்பியதில் தவறு இருந்தா சாரி...இங்கே பதிய வேணாம் :-)

    ReplyDelete
  22. கமலின் படத்தைச் சுட்டிக் காட்டிய அனைவரின் சார்பில் கமல் வந்து பதிலளிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  23. ஆ இதழ்கள்,இப்ராஹிம்,ஸ்ருதி... நீங்கள் மூவரும் சந்தேகங்களை கேட்பதில் எந்த தவறும் இல்லை...இதில் வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை...கேளுங்கள்.. பதில் அளிக்க வேண்டியது எங்கள் கடமை...

    நாங்களும் அந்த படத்தை கவனிக்காமல் இல்லை... ஏற்கனவே ஆ..இதழ்கள் அவர்கள் picassa web albumல் சுட்டிகாட்டியிருப்பதை கவனித்தோம்.. இதற்கு மெர்வின் அவர்கள் ஒரு கமெண்ட்டும் கொடுத்துள்ளார்..அதற்கு கமல் நன்றியும் தெரிவித்துள்ளார்..அவரை நம்புவோமாக..

    பிட்டை பொறுத்தவரையில் PP செய்யக்கூடாது என்று எங்கும் கூறவில்லை..
    PP அதிகம் இருக்கக்கூடாது என்று தான் நினைக்கின்றோம்..

    மேலும் இந்த படத்தில், இடது ஓரத்தில் இருக்கும் சிறிய கோபுரத்தில் வானம் போன்ற துடைப்பு வேலையும் (retouch),மேலும் அதற்கும் மேல் கறுப்பு துடைப்பு வேலையும் செய்திருப்பதை ஏற்கனவே கவனித்தோம்.. ஆனால் இவையெல்லாம் படத்தை PP பன்னின பாதிப்பு தெரியாமல் செய்யப்பட்டு இருக்கின்றது.. இந்த துடைப்பு காரணத்திற்காகவும் இந்த படத்திற்கு முதலிட வாய்ப்பு பறிபோனது என்றும் கூறலாம்..இதை விளக்காமல் விட்டது தவறு தான்..

    எங்களுக்கு தெரிந்த வரையில் பின்னால தெரியும் BG வானம் ஒட்டு வேலையாக இருக்காது என்று நம்புகின்றோம்.. அப்படியே ஒட்டு வேலையாக இருந்தாலும் அந்த முயற்சியானது இந்த படத்தை பொறுத்தவரையில் பாராட்டத்தக்கதே..


    -கருவாயன்

    ReplyDelete
  24. கருவாயன் அவர்களுக்கு நன்றி. எனக்கு இது ஒரு பாசிடிவ் சந்தேகமாகத்தான் தோன்றியது. நான் இவர் அனுப்பியதையோ, செலக்ட் செய்ததையோ தவறென்று சுட்டிக்காட்ட இதை கேட்கவில்லை, இதை புரிந்து கொண்டு மேலும் கேட்க தூண்டுவதற்கு நன்றி. என்னுடைய ஆர்வத்தினால் தான் கேட்டேன்.

    வேறு படத்தில் இருந்து ஒட்டியது என்றால் (நான் அப்படித்தான் நினைக்கிறேன்) கமலிடம் இருந்து நான் எதிர்பார்ப்பது அவர் மாஸ்கிங் செய்த விதத்தை விளக்குவது தான். அப்படி ஒரு பெர்ஃபெக்ட் மாஸ்க்கிங் ஒரு புரொபஷனால் தான் செய்ய முடியும். அப்படியே நாமும் கற்றுக்கொள்ளலாம் தானே?

    புரிந்து கொண்டமைக்கும் கொள்வதற்கும் நன்றீஸ்....

    ReplyDelete
  25. சில நேரங்களில் தேவையற்றவைகளை சரிப் படுத்தும் போது இது போல நிகழ்வதுண்டு. முக்கியமாக மின் கம்பிகள். அதற்குத்தான் கமல் வந்து பதிலளிக்கவும் என்று கேட்டுக் கொண்டேன். மற்ற படி கருவாயன் ஏற்கனவே சொன்னது தான்.

    நன்றி

    ReplyDelete
  26. விளக்கத்திர்ற்கு நன்றி புகைப்படம் எடுக்கவே இப்போதான் கற்றுக் கொள்கின்றேன் இதுல போடோஷப் வேற கத்துக்கணுமா முயற்சி பண்ணனும் :) நன்றி.

    ReplyDelete
  27. கருவாயன் அவர்களுக்கு நன்றி. கமல் அவங்களோட முந்தைய படங்கள் அனைத்துமே ரொம்ப அருமையாக இருந்து பார்த்திருக்கிறேன்.

    இதில் அவர் என்ன செய்தார், எப்படி செய்தார் என கேட்டு தெரிந்துக்கொள்ள ஆவல் :-)

    நன்றி...

    ReplyDelete
  28. Very good selections, i expect ஆதவா will be the first, no problem, the explanation solves it.
    Congratulations to all. ada first, second, third la ennanga iruku, namma padathuku oru nalla vimarsanam kidacha atha vida periya santhosam enna iruku. Winners please tell us, how u make it...

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff