Saturday, January 15, 2011

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா - பாகம்-13, INTERCHANGABLE LENS கேமராக்கள்... DSLR கேமரா..

6 comments:
 

இதற்கு முன்னர் பகுதி வரையில் நாம் பார்த்த கேமராக்கள் அனைத்திலும் லென்ஸ் என்பது கேமராக்களுடனே attached ஆனது ஆகும்.. இதில் நமது விருப்பத்திற்கேற்ப புதிய லென்ஸ்களை மாற்றவே முடியாது..

அதுவுமில்லாமல் அவைகள் சிறிய அளவிலான லென்ஸ்கள் மற்றும் சிறிய சென்சார்கள் கொண்ட கேமராக்கள்..

இதனால் சிறிய கேமராக்களில் அதிக zoom உள்ள லென்ஸ்களை பயன்படுத்தும் போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கண்டிப்பாக குவாலிட்டி கிடைக்காது.. படம் soft ஆக தான் கிடைக்கும்..

ஒரு நல்ல டீடெய்ல்ஸ் , noise அதிகமில்லாத படங்கள் , வேகம் , இவையெல்லாம் வேண்டுமென்றால் அததெற்கென specialஆக தனித்தனி லென்ஸ்கள் வேண்டும்..

உதாரணமாக சிறிய கேமராக்களில் 28-200mm , 28-600mm இந்த மாதிரி ஒரே zoom ல் பயன்படுத்துவதால் குவாலிட்டி கொஞ்சம் கிடைக்காது..
இதற்கு பதிலாக 18-55, 55-200, 200-300 என்று இந்த மாதிரி தனிதனியாக லென்ஸ்களை பிரித்து பயன்படுத்தும் போது குவாலிட்டி நன்றாக இருக்கும்.

நம் விருப்பத்திற்கேற்ப லென்ஸ்களை மாற்றிக்கொள்ளும் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட கேமராக்களை தான் interchangable lens கேமரா என்று கூறுகின்றோம்..

தற்பொழுது சந்தையில் inter changable lens கேமரா என்பது 3 வகைகளில் வருகின்றன. அவை,

1.DSLR

2.MIRROR LESS CAMERA
3.RANGE FINDER



இவற்றில் முதலில் DSLR வகைகளை பற்றி பார்ப்போம்..

இன்றைக்கு குவாலிட்டியான படம் வேண்டுமென்றால் DSLR கேமரா ஒரு சிறந்த வழி..



இன்றைக்கு இது தான் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன..

விலையும் பல வகைகளில் கிடைக்கின்றன,பல வகைகளில் லென்ஸ்களும் கிடைக்கின்றன..

அதே சமயம் இவ்வகை கேமராக்கள் பெரியதாக இருப்பதால் பல பேர் இதை வாங்கி பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டுவார்கள்.. பெரியதாக இருப்பதால் பயன்படுத்துவதற்கு என்று தனி திறமை வேண்டும் என்றும் நினைப்பார்கள்..

ஏன் DSLR கேமராக்கள் பெரியதாக இருக்கின்றன என்பதை பார்ப்போம்..

பொதுவாக DSLR கேமராக்கள் பெரியதாக இருப்பதற்கு நான்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன, அவற்றில் முதலாவது,

1.optical viewfinder..
முன்பெல்லாம் 1980களுக்கு முன் இந்த மாதிரி கேமராக்களை நாம் பார்த்திருப்போம்.


இதை twin lens reflex கேமரா என்று கூறுவார்கள்..

இதில் இரண்டு லென்ஸ்கள் இருக்கும்..ஒரு லென்ஸில் வரும் ஒளி நேராக negativeற்கும், மற்றொரு லென்ஸ் வழியாக நாம் படத்தை compose செய்வதற்காகவும் இரண்டு லென்ஸ்களாக வடிவமைக்கப்படிருந்தது..


இந்த மாதிரி பயன்படுத்துவதற்கு மிகுந்த சிரமம் இருந்ததாலும்,இரண்டு லென்ஸ்கள் தேவைபட்டதாலும்,அந்த சிரமத்தை குறைக்க, ஒரே ஒரு லென்ஸ்(single lens) வழியாகவே நாம் opticalஆக படத்தை கம்போஸ் செய்வதற்கும் , அதே லென்ஸ் வழியாக படத்தை பதிவு செய்வதற்கும் கேமராவை வடிவமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது..

பொதுவாக நாம் optical viewfinderல் நாம் ஒரு கண்ணால் தான் பார்ப்போம்.


ஒரு சப்ஜெக்ட்டை நேரிடையாக ஒரு கண்ணால் பார்க்கும் போது ஒரு மாதிரியும், அதையே மறு கண்ணால் பார்க்கும் போது சப்ஜெக்ட் மாறி போய் இந்த மாதிரியும் தெரியும்..


இதை தான் parallax error என்று சொல்வார்கள்..

இதை நாம் நம் கையை நீட்டி ஒரு கண்ணை மூடி பார்த்தும்,மீண்டும் மறு கண்ணை மூடி பார்த்தால் தெரியும்.. இரண்டும் மாறி மாறி தெரியும்..
அதே சமயம் இரு கண்களையும் திறந்து பார்த்தால் அது வேறு மாதிரி center ஆக தெரியும்.. இரண்டு கண்களால் பார்ப்பது தான் சரியானதாகும்..

இதனால் ஒரு படத்தை சரியாக compose மற்றும் expose செய்வது சிரமம்..தவறுகள் கண்டிப்பாக வரும்..

இந்த மாதிரி parallax error வராமல் இருக்கவும்,நாம் இரண்டு கண்களால் பார்க்கும் போது என்ன தெரிய வேண்டுமோ, அதை ஒரு கண்ணால் view finderல் பார்க்கும் போது சரியாக தெரிவதற்காக DSLR கேமராவிற்கு உள்ளே mirror box, pantaprism போன்றவைகள் அமைக்கப்படுகின்றன..

லென்ஸ் வழியாக வரும் ஒளியினை நேரடியாக அப்படியே கண்ணாடியில் பார்ப்பது போல் கண்டிப்பாக பார்க்கமுடியாது.. அதற்கு என்று reflex design ஒன்று தேவைப்படுகின்றது..

இந்த parallax error வராமல் இருப்பதற்காக கேமராவிற்குள் mirror box,pentaprism அல்லது pentamirror பயன்படுத்தப்படுகின்றன..அது எப்படி இருக்கும் என்பதை இப்படத்தை பார்த்தால் புரியும்..


இந்த படத்தில் ஒளி லென்ஸ் வழியாக வந்து mirror ல் பட்டு அது reflect ஆகி மீண்டும் pentaprism வழியாக மீண்டும் reflect ஆகி நமது கண்களுக்கு eye piece வழியாக தெரிகின்றது..

இந்த மாதிரி ஒரே லென்ஸில்(Single Lens) reflection ஆகி நமக்கு லென்ஸ் பார்ப்பதை நமக்கு தெரியும்படி வடிவமைக்கப்பட்ட கேமராவை தான் நாம் SLR(single lens reflex) கேமரா என்று கூறுகின்றோம்.. இதுவே டிஜிட்டலில் வரும் போது அதை தான் DSLR என்று கூறுகின்றோம்..

அதே சமயம் அந்த காலத்தில் சிறிய கேமராக்களிலேயே ஒரு optical view finder இருந்ததே என்று ஒரு சந்தேகம் வரலாம்..

அது உண்மையான optical view finder கிடையாது..

அது என்னவென்றால், அதில் லென்ஸ் வழியாக வரும் ஒளியானது negativeல் பதிவு செய்யும்,அதே சமயம் கேமராவிற்குள் ஒரு குட்டி டம்மி லென்ஸ் ஒன்று eye piece அருகே இருக்கும்..ஆனால் அதில் பார்க்கும் போது நாம் படத்தை பதிவு செய்வதற்கும்,நாம் பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கும்.. இந்த வித்தியாசத்தையும் parallax error என்று சொல்லுவார்கள்..

சிறிய கேமராக்களில் parallax error எப்படி ஏற்படும் என்பதை இந்த படங்களை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்..






இந்த மாதிரி இருப்பதால் நாம் viewfinder ல் என்ன பார்க்கிறோமோ அது படமாகாமல் வேறு மாதிரி படம் பதிவாகும்.. இதற்காக தான் viewfinderல் ஒரு கட்டம் இந்த மாதிரி வைத்திருப்பார்கள்..


தோராயமாக அந்த கட்டத்திற்குள் இருக்கும் படம் மட்டுமே பதிவாகும்,அதற்கு வெளியே இருப்பதெல்லாம் பதிவு ஆகாது.. இந்த மாதிரி..



அதே சமயம் இப்பொழுதுள்ள சிறிய கேமராக்களில் நாம் படம் எடுப்பதை பார்ப்பதற்கு ஒரே வழி LCD screen அல்லது EVF மட்டும் தான் வழி..


இதில் லென்ஸ் வழியாக ஒளி ஊடுருவி,சென்சாரில் பதிவான பிறகே நாம் அதை LCD யில் காண முடியும்.

இந்த மாதிரி process ஆகி LCD க்கு வருவதற்கு சற்று நேரமும் பிடிக்கும். இதனால் நாம் கண்களால் பார்ப்பதற்கும்,LCD finderல் பார்ப்பதற்கும் சற்று கால தாமத வித்தியாசம் இருக்கும்..

இது முழுக்க முழுக்க electronics என்பதால் இந்த தாமதம்..

ஆனால் அதுவே DSLR கேமராக்களில் நாம் பார்ப்பதை electronics ஆக இல்லாமல் mechanical mirrorஆக இருப்பதால், நாம் ஒரு கண்ணாடி ஜன்னல் வழியே பார்ப்பது போல் இருக்கும்.. இதனால் படத்தை எளிதாக எடுக்க முடியும்.

இதை வடிவமைப்பதற்காக தான் கேமராவிற்குள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இடம்(mirro box) தேவைப்படுகின்றது.. இதனால் தான் DSLR கேமராக்கள் பெரியதாக இருக்கின்றது..

அதே சம்யம் parallax error எனபதும் இல்லாமல் நாம் view finderல் பார்க்க முடிகின்றது..


மீண்டும் அடுத்த பகுதியிலும் DSLR ன் மற்றொரு விசயங்களை பற்றி பார்ப்போம்

-கருவாயன்

6 comments:

  1. எளிதாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதியுள்ளீர்கள். மனதிலிருந்த சில கேள்விகளுக்கு பதில் கிடைத்தது, புதிய விஷயங்களையும் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  2. I need link for you part - 9 ,please provide that link too(i did not studied the 9th part yet).My mail id ganeshg5s2@gmail.com.

    ReplyDelete
  3. Really I like this web page to read all the things in my own language. Great thanks for this site author..

    ReplyDelete
  4. சிறந்த கேமராவை தெரிவு செய்வதற்கு எவற்றை முக்கியமாக அவதானித்து தேர்ந்தெடுக்க வேண்டும்?

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff