Friday, January 28, 2011

2011 ஜனவரி மாத போட்டி.. முகம்(கள்) .. முடிவுகள்

21 comments:
 
அன்பு நண்பர்களே,

முதல் சுற்றில் முன்னேறியவர்களிலிருந்து முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் யார் என்று பார்ப்பதற்கு முன்,

இறுதி சுற்றில் முதல் ரவுண்டில் வெளியேறிய படங்களை பற்றி பார்ப்போம்...(வெளியேறியது எதுவும் வரிசைப்படி கிடையாது)

முத்துலெட்சுமி அவர்களின் படம்( யாரு சொர்ணமால்யா மாதிரி தெரியுது??)



நல்ல முகபாவத்தை படம் பிடித்ததற்காக முதல் சுற்றில் முன்னேறியது.. ஆனால் க்ராப் செய்த முறை நன்றாக இல்லை..அதே சமயம் கலர்ஸ் கொஞ்சம் saturations அதிகம்..

இந்த மாதிரி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்..

anton அவர்களின் படம் நல்ல ஒளியைமப்பிற்காக முன்னேறியது..



ஆனால் முகம் டைட் க்ராப், முகத்தில் உணர்ச்சிகளும் பெரிதாக இல்லை,அதே சமயம் முகத்தை விட ஜன்னலே அதிகமாக தெரிவது ஒரு மைனஸ்..

இந்த படத்தை இன்னும் கொஞ்சம் க்ராப் செய்து இப்படி இருந்தால் நன்றாக் இருக்கும் என்பது எனது கருத்து..





டில்லி பாபு
அவர்களின் படம்



குழந்தைகள் பாட்டு பாடிக்கொண்டே கேமராவை பார்ப்பது ஒருவித அழகாக இருந்ததால் முன்னேறியது..

ஆனால் பின்னால் ஒரு இருப்பவர்களால் கொஞ்சம் distraction மற்றும் ,

கம்போஸிசன் இன்னும் நன்றாக, ஆரஞ்ச் கலர் உடை அனிந்த குழந்தைகள் மட்டும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..




மணி அவர்களின் படம்,



சிறுவனின் படம் போஸ் ஆக இருந்தாலும், கரும்பை கடித்துக்கொண்டே இயல்பாக ஒரு வெட்கம் கலந்த புன்னகை அழகாக இருந்ததால் முன்னேறியது..

டோனும் நன்றாக இருக்கின்றது...ஆனால் படம் கம்போஸிசன் கொஞ்சம் சிறப்பாக இல்லை மற்றும் பின்னால் தெரிவது கரும்பு இலையாக இருந்திருந்தால் கொஞ்சம் நன்றாக வந்திருக்கும்..

கொஞ்சம் க்ராப் செய்து கீழே உள்ள படம் மாதிரி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்..




துரை
அவர்களின் படம்,



அந்த குழந்தையின் உணர்ச்சி அருமையாக இருந்ததால் முன்னேறியது..

ஆனால் ஃபளாஷ் அதிகம் , பின்னால் தெரியும் T.V. இவையெல்லாம் படத்திற்கு சிறு குறையே..

இந்த மாதிரி இருந்தால் படம் இன்னும் நன்றாக் இருக்கும்..






ASJ ALOYS
அவர்களின் படத்தில் ,


மழலை குழந்தையின் சலவாய் அழகு , மற்றும் distractions இல்லாத BW ல் படம் நன்றாக இருக்கின்றது..

ஆனால் ரொம்ப டைட்டாக க்ராப் செய்தது ஒரு குறையே..இன்னும் கொஞ்சமாவது இடம் வேண்டும்..அல்லது இன்னும் டைட்டாக க்ராப் கீழே உள்ள படம் மாதிரி இருக்க வேண்டும்...




அரவிந்த்
அவர்களின் படமும் இதே மாதிரி தான்..



மூன்று பெண்களும் எதையே பார்த்து இயற்கையாக சிரிப்பது நன்றாக இருக்கின்றது..

இருந்தாலும் படம் ரொம்ப டைட் க்ராப்..

அதுவும் முகத்தில் கையை வைத்து இருக்கும் பெண்ணின் கையை கண்டிப்பாக க்ராப் செய்திருக்கக்கூடாது என்பது எனது கருத்து..

அதே சமயம் அவர்கள் எதை பார்த்து சிரிக்கின்றார்கள் என்பதையும் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும்.

அல்லது அந்த படத்தை இன்னும் கொஞ்சம் டைட்டாக கம்போஸ் செய்து பின்,





அடுத்து,

இரண்டாவது ரவுண்டில் வெளியேறிய படங்களில்,


சித்தா ட்ரீம்ஸ் அவர்களின் படம்,




இந்த மாதிரி ஓணானை படம் பிடிப்பது என்பது எளிதான விசயம் இல்லை.. அதுவும் நல்ல தெளிவாக படம் எடுத்ததற்காக இரண்டாவது ரவுண்டில் முன்னேறினாலும்..

கம்போஸிசனில் கொஞ்சம் குறையே.. கொஞ்சம் அதிகமான blank space இருக்கின்றது..

அதே சமயம் தலைப்பிற்கு இப்படம் பொருந்தினாலும் மனித முகங்களுக்கே சற்று முன்னுரிமை கொடுக்க தோன்றுகின்றது..


இந்த மாதிரி படம் கம்போஸிசன் இருக்க வேண்டும்..




நித்தி க்ளிக்ஸ் அவர்களின் படத்தில் ,




சிறுவனின் அழகான உடைந்த பல் சிரிப்பு வசீகரிக்கின்றது.. distractions படத்தில் பெரிதாக இல்லை என்பதால் இப்படம் முன்னேறியது..

இருந்தாலும் படம் கொஞ்சம் டைட் மற்றும் சிம்பிள் போஸ் என்பதாலும் இந்த ரவுண்டில் வெளியேறுகின்றது..


இன்னும் கொஞ்சம் contrast இருக்க வேண்டும்..



சத்தியா அவர்களின் படமும் இதே மாதிரி தான்...




பையன் நல்லா குண்டு குண்டுன்னு அழகா இருக்கின்றான்.. சிரிப்பும் அழகு.. புடிச்சு கிள்ளி வெக்கனும் போல் இருக்கு..

இருந்தாலும் இப்படம் கொஞ்சம் சிம்பிள் டைப் போஸ் என்பதால் வெளியேறுகின்றது..

கொஞ்சம் contrast இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்..




அமைதி சாரல் எடுத்துள்ள படத்தில்




குழந்தையின் பொக்கைவாய் சிரிப்பு அழகு மற்றும் படம் நல்ல தெளிவாக இருந்ததாலும் முன்னேறியது.. ஃப்ளாஷ் ஒளியும் சரியாக உள்ளது...

இருந்தாலும் பின்னால் தெரியும் ஜன்னல் மற்றும் தலையனை கொஞ்சம் distractons..

எனவே இப்படம் இந்த ரவுண்டில் வெளியேறுகின்றது..

இந்த படத்தை கீழே உள்ள மாதிரி க்ராப் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்..






நந்தனா அவர்களின் படத்தில்




இருக்கும் சிறுவனின் துறுதுறு பார்வை மற்றும் பேக்கிரவுண்ட் டோன் இரண்டும் attract செய்தாலும் ,
படம் கொஞ்சம் ஒவர் exposure ,போஸ் கொடுத்திருப்பது, மற்றும் கொஞ்சம் குறையான கம்போஸிசன் இவற்றால் இப்படம் வெளியேறுகின்றது..

distractions ஐ க்ராப் செய்து இந்த மாதிரி படத்தை அமைக்கலாம்..






ப்ரேம் அவர்களின் படத்தில்,




அருமையான டோன், அழகான முகம் , நல்ல தெளிவான படம் இவற்றிற்காக முன்னேறியது..

இருந்தும் சிறு குறைகளாக க்ராப் மற்றும் கம்போஸிசன் , போஸ் ஆகியவற்றால் இப்படம் வெளியேறுகின்றது..

இருப்பினும் இப்படம் அழகான படமே..

கொஞ்சம் இந்த மாதிரி க்ராப் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து..






கோபி பிள்ளை அவர்கள் படம்,



மிக அருமையான portrait..black and white ல் படம் மிக அழகு ..
அருமையான ஷார்ப்.. நல்ல ஒரு ஸ்டுடியோ ஷாட்..

இருப்பினும் இந்த மாதிரி கம்போஸிசன் இருந்தால் படம் இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து..





இந்த ரவுண்டில் வெளியேறிய படங்கள் அனைத்தும் முகங்கள் தலைப்பிற்கு ஒத்து வந்தாலும், நன்றாக இருந்தாலும்,

இவை அனைத்தும்(சித்தா ட்ரீம்ஸ் தவிர) போஸ் கொடுக்க வைத்து எடுக்கப்பட்டவை மற்றும் கொஞ்சம் ஈஸி டைப் படங்கள்..

இவை அனைத்தும் முகங்கள் தலைப்பை விட portrait என்ற தலைப்பிற்கு நன்றாக பொருந்தும் என்பது எனது கருத்து.

அதாவது portrait படம் இருந்தாலும் முகங்கள் இயற்கையாக ,இயல்பாக இருப்பதை எடுத்த்ருந்தால் இத்தலைப்பிற்கு சிறப்பாக இருக்கும்...


இறுதி சுற்றில்,



BM கண்ணன் அவர்களின் படத்தில்,




சிறுவனின் உணர்ச்சி வெளிப்பாடு இத்தலைப்பிற்கு மிக அழகு.. கண்கள் அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது..டோனும் அருமை..

இருப்பினும் கம்போஸிசன் இந்த மாதிரி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..





மூன்றாம் இடத்திற்கு போட்டி போடுவது...

அஜின் ஹரி

ரேவதி


ஜெயஸ்ரீ



அஜின் ஹரி அவர்களின் படம்,



கண்களை மூடிக்கொண்டு சிரிக்கும் மழலை மிக அழகு.. நல்ல moment...

இடது தலை ஓரம் வந்திருக்கும் நிழல் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று நினைக்கத்தோன்றுகின்றது..அதே சமயம் படம் கொஞ்சம் brightness மற்றும் sharpness அதிகமாக தெரிகின்றது...இருந்தாலும் இப்படம் அழகு...

படத்தை கொஞ்சம் க்ராப் செய்து,contrast கொஞ்சம் அதிகப்படுத்தி இந்த மாதிரி படம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்..





ரேவதி அவர்களின் படத்தில்,




பால் வடியும் முகம் அப்படிங்கறது இது தான் என்கிற மாதிரி இப்படம் அழகாக உள்ளது..அழகான,இயல்பான புன்னகை இவை அனைத்தும் அருமை..

இருப்பினும் படம் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்திருக்க வேண்டும்.. அதே சமயம் க்ராப் அதிகமாகி விட்டது சிறு குறையே..

அல்லது இன்னும் கொஞ்சம் கீழே உள்ள படம் மாதிரி டைட்டாக க்ராப் செய்யலாம்..





ஜெய ஸ்ரீ அவர்களின் படத்தில்,



செம சிரிப்பு படம்.. கண்ணை மூடிக்கொண்டு எவ்வளவு ஆனந்தமாக சிரிக்கின்றது.. முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது..பேக்க்ரவுண்டும் உறுத்தல் இல்லை..

கொஞ்சம் இந்த மாதிரி கம்போஸிசன் இருந்திருக்கலாம்..





இம் மூன்றில் அனைத்துமே அருமை தான்..

இருப்பினும் எதோ ஒன்றை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால், இதில் சற்று சிறப்பாக இருப்பது ஜெயஸ்ரீ அவர்களின் படம்..

எனவே, மூன்றாம் இடம் பிடிப்பது ஜெயஸ்ரீ...




அடுத்து இரண்டாம் இடத்திற்கு போட்டி போடுவது

MQN

ஆயில்யன்



MQN அவர்களின் படம் எப்பொழுதும் போல் தெளிவாக படம் எடுத்து எளிதாக இறுதி சுற்று வரை வந்து விட்டார்..




கறுப்பு வெள்ளையில் படம் அழகு சேர்க்கின்றது..ஜன்னல் ஒளியும் அருமை,அந்த குட்டி பையன் கன்னம் அக்காவின் தோளில் சாய்ந்து இருப்பதும் அழகாக உள்ளது..

இருப்பினும் இன்னும் கொஞ்சம் க் டைட்டாக கீழே உள்ள படம் மாதிரி கம்போஸிசன் இருந்தால் இத்தலைப்பிற்கு நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.. நமது கண்களும் குழந்தைகளின் முகத்திற்கே பார்க்க சொல்லும்...

அதே சமயம் முகத்தில் கொஞ்சம் கூடுதல் உணர்ச்சி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்..







ஆயில்யன் அவர்கள் படத்தில்,




இந்த சிறுமி அப்படியே ஒரு சிலை மாதிரி இருக்கின்றார்.. அருமை..

நமது பார்வையை நேராக கண்களுக்கே அழைத்து செல்வது இப்படத்தின் பெரிய ப்ளஸ்..

இதே மாதிரி ஒரு பொம்மை இருந்தால் கண்டிப்பாக நமது வீட்டு வரவேற்பறையில் வைக்கலாம் போல் உள்ளது...

கொஞ்சம் ஷார்ப்னெஸ் ,கொஞ்சம் இடம் விட்டு இருந்தால் இப்படம் இன்னும் நன்றாக இருக்கும்..

இருப்பினும் இது ஒரு பெரிய குறை இல்லை..

கொஞ்சம் contrast வைத்து, வண்ணங்களை கொஞ்சம் மாறுதல் செய்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்



இவ்விரண்டில் ஆயில்யன் அவர்களின் படம் கொஞ்சம் போஸ் கொடுப்பது போல் இருப்பது சிறு குறையாக இருந்தாலும்,

அதையும் அழகாக படம் எடுத்ததற்காக ,

இரண்டாம் இடம் பிடிப்பது ஆயில்யன்..

இறுதியாக நாகப்பன் அவர்களின் படத்தில்,





முகங்கள் தலைப்பிற்கு மிக சரியாக இந்த படம் பொருந்துகின்றது...

எத்தனை முகங்கள்..,ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான முக உணர்ச்சிகள்..

அப்படியே whole saleல ஜப்பான் முகங்களை அள்ளிக்கொண்டு வந்திருக்கின்றார் எதுவும் உறுத்தாமல்..

கம்போஸிசனும் நன்றாக உள்ளது.. முன்னாடி இருந்து பின்னாடி சென்றாலும் முகங்கள்...

அருமை...

எனவே,

முதலிடம் பிடிப்பது நாகப்பன்...



நாகப்பன் அவர்களுக்கு PIT ன் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

மற்றும் முதல் மூன்றில் வந்தவர்களுக்கும் ,

இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்...


விரைவில் அடுத்த மாதத்திற்கான தலைப்புடன் உங்களை சந்திக்கின்றோம்..

நன்றி
கருவாயன்

21 comments:

  1. வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. முதலிடம் பெற்ற மூவருக்கும் நல்வாழ்த்துக்கள்! அருமையான தேர்வு.

    பதிவு நிறையக் கற்றுத் தந்தது. நேரம் எடுத்து ஒவ்வொரு படத்துக்கும் திருத்தம், ஆலோசனை சொல்லியிருக்கும் நடுவருக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. வெற்றி பெற்ற மூவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

    கருவாயன், உங்க விளக்கங்கள் அருமையோ அருமை. இதோ கத்திரியைத் தூக்கிட்டேன். க்ராப் பண்ணத்தான்!!!!!

    ReplyDelete
  4. நான் உங்கள் தளத்திற்குப் புதியவன்! இந்தப் போட்டிகளில் பங்குபெற, படங்களை நாமே சொந்தமாக எடுத்திருக்க வேண்டிய அவசியமில்லையா? ஒருசில படங்கள் சினிமாக்களில் இருந்து எடுத்தது போலத் தோன்றுகிறதே!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. ஜீ

    அப்படி உங்களுக்குத் தோன்றினால் அது புகைப்படக்கலைஞரின் வெற்றி. இங்கே பங்கு பெறும் அனைத்துப் போட்டியாளர்களும் பல போட்டிகளில் கலந்துக் கொண்டிருப்பவர்கள். காப்பி எடுத்து இங்கே போடும் தரம் குறைந்த வேலையை பிட் வாசகர்கள் இதுவரை செய்ததில்லை. இனியும் செய்ய மாட்டார்கள். எங்களுக்கு அவர்கள் மேல் பூரண நம்பிக்கை இருக்கிறது.

    பிட்டின் மீதான உங்களின் அக்கறைக்கு நன்றி

    ReplyDelete
  6. beautiful selection and thoughtful review.

    ReplyDelete
  7. Excellent review...Congrats to all the winners and kudos to all the participant as well!.

    ReplyDelete
  8. போட்டியில் பங்கு பெற்ற/ வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! ஒவ்வொரு படத்துக்கும் திருத்தம், ஆலோசனை நல்கிய நடுவருக்கு மிக்க நன்றி! இதே போல் ஒவ்வொரு மாதமும் செய்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  9. வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு படத்துக்கும் விளக்கம் கொடுத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும்.

    அப்படியே நடுவருக்கு Big Black Border மீது அதிக காதல் போல... :-)

    ReplyDelete
  10. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.. திருத்தங்கள் சொல்லியிருப்பது ரொம்பவே பயனுள்ளதா இருக்கும். அடுத்ததடவை கவனத்தில் வெச்சுக்கலாம் இல்லியா.. நன்றி.

    ReplyDelete
  11. உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி....வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  12. Congratulations for the winners!

    Thanks கருவாயன் for your detailed comments!

    Thanks Jeeves for your mutual understand!

    ReplyDelete
  13. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!
    இரண்டாவது இடத்திற்கு போட்டி போட்டு இரண்டாவது இடம் கிடைக்காது போன MQN இன் படத்திற்கு மூன்றாவது இடமும் கிடைக்காதுவிட்டது ஏன் என்பது புரியவில்லை.

    ReplyDelete
  14. @ vijay...

    கவனித்து சுட்டி காட்டியதற்கு நன்றி..

    அவருடைய படமும் இரண்டாமிடத்திற்கு தகுதியானது தான்.. இது இரண்டாமிடத்திற்கும் ,மூன்றாம் இடத்திற்கும் இடையிலான போட்டி என்று வைத்துக்கொள்ளலாமே..

    சரி,அவருக்கு 2.5 ம் இடம் கிடைத்ததாக வைத்துக்கொள்வோம்..:)

    நன்றி
    கருவாயன்

    ReplyDelete
  15. Super!
    நான் இங்கு முதல் முதலாக என் படத்தை உள்ளிட்டேன்... பெரிதான எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி!

    ஆனால் நண்பர் கருவாயன் அளித்திருக்கும் விளக்கங்களும் தேர்தெடுத்த முறையும் மிக அருமை...
    அடுத்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
    Prem.

    ReplyDelete
  16. As usual excellent and useful reviews...nice judgement. Congrats to the winners.

    ReplyDelete
  17. விளக்கங்கள் அருமை..

    நன்றி..
    வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. Thanks PiT, what a pleasant surprise !!!

    I was not quite sure after the first round results, highly competed indeed.

    ReplyDelete
  19. வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. அப்பாடா! ஒரு வழியா நல்ல விமர்சனங்களோட பதிவு. நிறைய கத்துக்க முடிஞ்சது. நன்றி கருவாயன்!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff