Tuesday, February 1, 2011

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா - பாகம்-14.. INTERCHANGABLE LENS கேமராக்கள்..DSLR வகைகள்..

8 comments:
 
1..சென்ற பகுதியில் DSLR கேமராவின் அளவு பெரிதாக இருப்பதற்க்கான முதல் காரணத்தை பார்த்தோம்..

பிற காரணங்களை இப்பகுதியில் பார்ப்போம்...

2.. DSLR சென்சார்கள்..

சென்சார்களை பற்றி ஏற்கனவே இந்த பகுதியில் பார்த்து விட்டோம்..

மேலும் சென்சாரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், DSLR லேயே பல வகை அளவுகளில் சென்சார்கள் பயன்படுத்தப்படுகின்றன..

இதில் சென்சார் அளவுகள் குறைய குறைய கேமரா bodyயின் அளவுகளும் ஒரு குறிப்பிட்ட அளவு சிறியதாகும்...

ஆனால் எப்படியும் viewfinder இருப்பதால் சிறிய கேமராக்கள் அளவுகளுக்கு குறையாது..

DSLR ல் பயன்படுத்தப்படும் சென்சார் வகைகள்..

இதில் வரிசைப்படி பெரிய சைஸ் ஆகும்..

1.medium format

2.full frame


3.aps-c size


4.four third sensor


இவற்றில் medium format சென்சார் பயன்படுத்தப்படும் கேமரா விலை அதிகமாக இருக்கும்..

இந்த மாதிரி பெரிய சென்சார் உள்ள கேமராக்கள் விளம்பர படம் எடுப்பதற்கு மிகவும் பயன்படுத்தப்படுகின்றன..

ஏனென்றால் சென்சார் பெரியதாக இருக்கும் போது தான் pixels அதிகமாக பயன்படுத்தமுடியும்..

பிக்ஸல்கள் அதிகமாக இருந்தால் தான் பெரிய்ய்ய்ய்ய அளவிலான விளம்பர பேனர்கள் வைக்கமுடியும் என்பதால் இவ்வகை கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன..

MAMIYA , PHASE ONE , HASSEL BLAD போன்ற கம்பெனிகள் இவ்வகை சென்சார்களை பயன்படுத்துகின்றன..

full frame சென்சார் கேமராக்கள்...இது நாம் முன்னர் பயன்படுத்திய ஃப்லிம் நெகட்டிவின் அளவு ஆகும்..

NIKON D700 , D3 , CANON 5D , 1D , etc.. போன்ற கேமராக்கள் full frame சென்சார்களை பயன்படுத்துகின்றன..


aps-c size என்பது தான் இப்பொழுது பரவலாக nikon , canon , sony போன்ற கேமராக்களில் பயன்படுத்தப்படும் அளவுகளாகும்.

NIKON D3100 , D5000 , D300 , D90 , D7000 ,
CANON 550 D , 60 D , 7 D
SONY ALPHA A250 , A100
PENTAX k 5

போன்ற கேமராக்கள் இந்த அளவுகளை பயன்படுத்துகின்றனர்..

மேலே சொன்ன மூன்று சென்சார்களின் அளவுகள் சிறியது, பெரியதாக வித்தியாசமாக இருந்தாலும், அமைப்பு என்பது 3:2 எனற அளவில் ஒரே மாதிரி தான் இருக்கும்..

படத்தை பார்த்தால் புரியும்..



ஆனால் ,

four third sensor என்பது olympus மற்றும் panasonic போன்ற DSLR கேமராக்களில் பயன்படுத்தப்படும் வேறு மாதிரி அமைப்பு கொண்ட சென்சார் ஆகும்..

இந்த வகை சென்சார்கள் எதற்கு என்றால்??

DSLR கேமராக்களின் அளவுகள் என்பது பெரியதாக இருக்கின்றது.. அதை குறைக்க என்ன வழி ?

DSLR கேமராக்களின் அளவுகளை குறைக்க வேண்டுமென்றால் , சென்சாரின் அளவை குறைக்க வேண்டும்..
இதனால் லென்ஸையும் சற்று சிறியதாக வடிவமைக்கலாம்..
இதனால் ஒரு குறிப்பிட்ட அளவு கேமராவை சிறியதாக்கலாம்..

ஆனால் சென்சார் சிறிதானால் குவாலிட்டி குறையுமே...

சென்சாரையும் சிறிதாக்கவேண்டும்,அதே சமயம் குவாலிட்டியும் குறைய கூடாது ..

அதற்கு 4:3 சென்சார்அமைப்பு ரொம்பவும் உதவியாக இருக்கும் என்பதால் அதை உருவாக்கினர்..

அது என்னவென்றால்,

four third sensor என்பது 4:3 என்ற அமைப்பில் சென்சார் இருக்கும்..
வீடியோ கேமராக்கள் மற்றும் சிறிய கேமராக்களிலும் இந்த மாதிரி தான் அமைப்பு இருக்கும்..

சரி இதில் என்ன நன்மை?

இது எதற்கு என்றால்,பொதுவாக லென்ஸ் வழியாக வரும் ஒளி என்பது வட்டமாக தான் வரும்..அந்த வட்டத்தை கட்டமாக தான் சென்சாரில் பதிவு செய்ய முடியும்...

அப்படி கட்டமாக பதிவு செய்யும் போது லென்ஸ் வழியாக வருகின்ற ஒளியில் ஒரு குறிப்பிட்ட அளவு கட் ஆகி தான் பதிவு செய்ய முடியும்.. (முதல் படத்தை பெரிதாக பார்த்தால் புரியும்)

இதில் இரண்டு வகைகளில் கட்டம் கட்டுகின்றனர்.. ஒன்று 3:2 மற்றொன்று 4:3..

இதில் 3:2 ratio வில் பதிவு செய்வதை விட 4:3 ratio வில் பதிவு செய்தால் அதிக அளவில் light fall off இல்லாமல் படத்தை பிடித்துக்கொள்ளலாம்..

சென்சாரும் சிறியதாக இருந்தால் போதும் என்பதால் 4:3 முறையை உருவாக்கினர்..

உதாரணமாக நாம் பார்க்கும் TV மற்றும் computer ன் அமைப்பும் கிட்டதட்ட அதே மாதிரி அளவு என்பதால் நாம் computerல் 4:3 போட்டோவை பார்க்கும் போது screen முழுவதும் பார்க்கலாம்..

உதாரணமாக இந்த படங்களை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்..


4:3 சென்சார்



APS - C 3:2 சென்சார்




இவ்வகை சென்சார்களால் மற்ற DSLR கேமராக்களை விட கொஞ்சம் சிறிதாக வடிவமைக்க முடியும்..

ஆனால் படம் பிடிக்கும் 4:3 அமைப்பு பெரியதாக இருந்தாலும் , சென்சாரின் அளவு என்னவோ full frame சென்சாரை விட பாதி சிறியது தான்..

இதனால் , full frame மற்றும் APS-C சென்சார் கேமராக்களை விட சற்று noise அதிகம் வரும், அதே சமயம் நாம் ப்ரிண்ட் என்பது 3:2 ratio வில் தான் வரும் என்பதால் பிரிண்ட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதி கட் ஆகி விடும்..

3.லென்ஸ்கள்

ஏற்கனவே சொன்ன மாதிரி தனித்தனியாக பிரித்து zoom லென்ஸ் தயாரிக்கும் போதும், வேகமான aperture லென்ஸ்களை தயாரிக்கும் போதும், இதன் அளவுகள் பெரியதாகிக்கொண்டே இருக்கும்..

இதுவும் DSLR கேமராக்கள் பெரியதாவதற்கு ஒரு காரணம்..

4. DSLR கேமராவின் அமைப்பு (ergonomics)

எளிதாக பயன்படுத்துவதற்காக அததெற்கென தனிதனி பட்டன்கள், mode dial,கைகள் நன்றாக க்ரிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆழமாகவும்,internal flash போன்றவைகள் இருப்பதாலும் கேமராக்கள் தானாக பெரியதாகிவிடுகின்றது..

இவையெல்லாம் தான் ஒரு DSLR என்பது பெரியதாக இருப்பதற்கு முக்கிய காரணங்களாகும்..

அடுத்த பகுதியில் DSLR கேமராக்களின் நன்மைகள் , குறைகளை பற்றி பார்ப்போம்...

நன்றி
கருவாயன்

8 comments:

  1. புகைப்படக்கலையில் அனுபவமில்லாதவர்களும் புரிந்து கொள்ளும்வண்ணம் மிக எளிமையாகயும் சிறப்பாகவும் விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கேமரா வாங்கும் போது எதற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கனும். (slr)

    ReplyDelete
  3. @ பிரியமுடன் பிரபு...

    ````கேமரா வாங்கும் போது எதற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கனும். (slr)````

    இது ஒவ்வொரு நபரின் தேவையை பொறுத்தது..

    உதாரணமாக,

    1. லென்ஸ் சாய்ஸ் : ஒரு சிலர் கேமரா வாங்கி பயன்படுத்திய பிறகு அவர்களுக்கு அடிக்கடி லென்ஸ்கள் புதிதாக தேவைப்படும்..இந்த மாதிரி விருப்பம் இருப்பவர்கள், எந்த ப்ராண்ட் அதிக லென்ஸ்கள் வைத்திருக்கின்றன என்பதை பார்க்க வேண்டும்.. உதாரணமாக canon மற்றும் nikon இரண்டும் அருமையான கேமராக்கள் தான்.. ஆனால் மீடியம் பட்ஜெட் லென்ஸ் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு canon கம்பெனி nikon ஐ விட சிறந்த லென்ஸ்களை கொண்டுள்ளது..nikon லும் நமது தேவைக்கேற்ப low end , high end ல் லென்ஸ்கள் சிறந்ததாக உள்ளது என்பதையும் கவனத்தில் வைக்கவும்..

    2.user friendly : DSLR ஐ பயன்படுத்தும் போது நாம் அடிக்கடி செட்டிங்ஸை மாற்ற வேண்டிய தேவை இருக்கும்.. இதற்காக நாம் அடிக்கடி மெனு பயன்படுத்த வேண்டியிருக்கும்..இதனால் அடிக்கடி சிறிது எரிச்சல் வரும்.. ஒரு சில கேமராக்கள் அருமையாக படம் எடுத்தாலும் user friendly என்று வரும் போது நமக்கு தொல்லை தரும்.. user friendly என்று வரும் போது என்னை பொறுத்த வரையில் canon ஐ விட nikon சற்று சிறந்ததாக தெரிகின்றது..

    3.noise திறன் : பல கேமராக்கள் low ISO(upto ISO 400) பயன்படுத்தி படம் எடுக்கும் போது எந்த noise தொந்தரவும் தராது..சில சமயம் நாம் low lightல்படம் எடுக்கும் போது கண்டிப்பாக ISO 800,1600,3200 என்று தேவைக்கேற்ப ISO வை அதிகப்படுத்த வேண்டியிருக்கும்..இந்த மாதிரி அதிகம் படம் எடுப்பவர்கள் கண்டிப்பாக ஒரு கேமராவில் high ISO வில் noise திறன் எப்படி உள்ளது என்பதை கண்டிப்பாக பார்க்கவேண்டும்..

    4.கேமராவின் அளவு : ஒரு சிலர் அதிக விலை கொடுத்து நன்றாக இருக்கும் என்று DSLR ல் பெரிய கேமராக்களை வாங்கி விடுவார்கள்.. ஆனால் அது அவர்களுக்கு தேவையிருக்காது.. உதாரணமாக nikon ல் d3100 , d5000 , d90 , d300 போன்ற கேமராக்கள் முறையே விலை அதிகமாக இருந்தாலும் ஒரே சென்சார்கள் தான்.. இதனால் ஒரு சில தேவைகளை தவிர,பல சமயங்களில் இந்த கேமராக்கள் அனைத்தும் கிட்டதட்ட ஒரே மாதிரி தான் picture quality தரும்..ஒரு சில டெக்னிக்கல் தேவைகள் மட்டும் கண்டிப்பாக மாறும்..இதற்காக நாம் தேவையில்லாமல் அதிக விலையும் , அதிக எடையும் நமக்கு தேவையில்லை..


    மேலே சொன்ன சில விசயங்களை எது உங்களுக்கு முக்கியமோ அதை கவனத்தில் வைத்தால் போதும்.. ஏனென்றால் இன்றைய காலத்தில் பேஸிக் பட்ஜெட் DSLR கூட நல்ல குவாலிட்டியில் வருகின்றன.. இதனால், நீங்கள் DSLR உலகிற்கு புதிதாக இருந்தால் தைரியமாக எந்த DSLR கேமராவையும் வாங்குங்கள்.. கண்டிப்பாக சிறிய கேமராக்களை விட (ஒழுங்காக எடுத்தால்) நன்றாக தான் இருக்கும்..

    அல்லது உங்கள் தேவை வேறு ஏதாவது என்றால் தெரியப்படுத்தவும்..

    -கருவாயன்

    ReplyDelete
  4. மிக்க நன்றி
    நான் கேனான் 550d வாங்கியுள்ளேன் ,நன்மை தீமைகள் பற்றி சொல்லவும்
    உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றாக படிக்கிறேன்
    பயனுள்ளதாக உள்ளது ,. என் நண்பருக்கு அனுப்பினேன்
    நன்றி ..
    18mp

    ReplyDelete
  5. @பிரியமுடன் பிரபு...

    உங்களுக்கு இந்த தளம் உதவும்...

    http://www.dpreview.com/reviews/CanonEOS550D/page29.asp

    -கருவாயன்

    ReplyDelete
  6. பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  7. சார்,DSLR புதியதாக canon eos1300 அல்லது Nikon 3200d வாங்கலாம? அலோசனை கூறுங்கள்

    ReplyDelete
    Replies
    1. இரண்டுமே நல்ல கேமராக்கள் தான்.. இரண்டும் basic DSLR மாடல்கள்.. இதில் எதை வாங்கினாலும் தவறில்லை.. உங்களுக்கு எது விலை குறைவாக கிடைக்கிறதோ அதையே வாங்கலாம்..

      Delete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff