Thursday, February 10, 2011

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா.. பாகம்-15..INTERCHANGABLE LENS கேமராக்கள்....DSLR கேமராக்களின் நன்மைகள் , குறைகள்..

11 comments:
 
அன்பு நண்பர்களே...

சென்ற பகுதிகளில்,

1. DSLR கேமராக்கள் ஏன் பெரிதாக் இருக்கின்றன ..

2. DSLR சென்சாரின் பல வகைகள்..

ஆகியவற்றை பற்றி பார்த்தோம்..

இப்பகுதியில் DSLR கேமராக்களின் நன்மைகள் , குறைகளை பற்றி பார்ப்போம்..


DSLR ன் நன்மைகள்:



1. DSLR ல் பெரிய சென்சார் என்பதால், அதிக விலை உயர்ந்த,பல features கொண்ட சிறிய கேமராக்களின் image quality ஐ விட ,விலை குறைந்த DSLR ல் image quality கண்டிப்பாக நன்றாக இருக்கும்..(ஒழுங்காக எடுத்தால்).

2. லென்ஸ்களை நம் விருப்பம் போல் தெர்ந்தெடுத்துக்கொள்ளலாம்,மாற்றிக்கொள்ளலாம்.
உதாரணமாக wide angle , macro , telephoto,etc.. போன்றவைகளை தனிதனியாகவே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
பாதிப்பு,டேமேஜ் வந்தாலும் லென்ஸை மட்டும் மாற்றிக்கொள்ளலாம்.

3.optical viewfinder இருப்பதால் நாம் கண்ணாடியில் பார்ப்பது போன்று subjectஐ தெளிவாக பார்க்கலாம்..

இதனால் படத்தை எளிதாக கம்போஸ் செய்யலாம்..

சிறிய கேமராக்களில் view finder இல்லாததால் , நமது shoulder துனையுடன் arm levelல் படங்களை எடுக்கும் போது கைகள் ஆடும் வாய்ப்பு அதிகம். (ARM LEVEL COMPOSING)



ஆனால் DSLR ல் கண்களை(eye level) ஒட்டி படம் எடுக்கும் போது கேமராவை க்ரிப்பாக பிடிக்க வசதியாக இருக்கும். இதனால் படங்களை ஆடாமல் எடுக்கலாம்.


(EYE LEVEL COMPOSING)


4.இன்றைக்கு basic DSLR கேமராக்கள் கூட 10 மெகா பிக்ஸல்களுக்கு மேல் வரத்தொடங்கி விட்டன.. அதே சமயம் 18,24 MP என்று அதிக மெகா பிக்ஸல் கேமராக்களும் கிடைக்கின்றன..
சிறிய கேமராக்களில் அதிக பிக்ஸல்கள் அமைப்பது சிரமம், அப்படியே இருந்தாலும் பெரிய நன்மை கிடையாது..

5.சிறிய கேமராக்களில் live view பயன்படுத்தி படமெடுப்பதால் shutter lag (தாமதம்) அதிகம்..இது DSLR ல் சுத்தமாக இல்லை. அதே சமயம் switch ஐ on பன்னினதும் உடனே படம் எடுக்கலாம்.. response time அதிகம்.

6.DSLR ல் கண்ட்ரோல்ஸ் அதிகம்.. தனிதனியாக பட்டன்கள், manual controls .. போன்ற பயன்பாடுகள் அதிகம்

7.அதி வேக லென்ஸ்களை பயன்படுத்தலாம்.. இதனால் flash இல்லாமல் இருட்டிலும் படம் எடுப்பது சாத்தியமாகின்றது..

8.flash பவர் என்பது அதிகம்.. பல சிறிய கேமராக்களில் external flash பயன்படுத்த முடியாது. அதே சமயம் சிறிய கேமராக்களின் internal ஃப்ளாஷ் power பல இடங்களில் பத்தாது.. இதனால் studio வைப்பவர்களுக்கு DSLR தான் வழி..

9.focusing speed என்பது பல மடங்கு அதிகம்..சிறிய கேமராக்கள் வெளிச்சம் குறைவான இடங்களில் சில சமயம் focus ஆகாது.. ஆனால் DSLR ல் இருட்டிலும் focus செய்வதற்கு எளிதாக focus light வசதி உண்டு.

10.சிறிய கேமராக்கள் தான் பயன்படுத்துவது எளிது என்று பலர் நினைக்கின்றனர்..ஆனால் practicalஆக DSLR தான் எளிது..

11.DSLR ல் ISO 3200 வரை எளிதாக பயன்படுத்தலாம்..படமும் தெளிவாக இருக்கும்,noiseம் குறைவாக தான் இருக்கும்.. ஆனால் சிறிய கேமராக்களில் ISO 200 க்கும் மேல் பயன்படுத்தும் போது கண்டிப்பாக noise இல்லாமல் படம் எடுப்பது வாய்ப்பு குறைவு.

12.இன்றைக்கு படம் எடுப்பது எவ்வளவு முக்கியமோ,அவ்வளவு photo editing என்பதும் முக்கியமாகி விட்டது.. DSLR ல் படம் எடுத்து பின் photo editing செய்தால் பாதிப்பு என்பது மிக மிக குறைவே..இதுவே சிறிய கேமராக்களில் சிறிது crop செய்தாலே smudging ,வந்து விடும்..

13. focusing area(focusing point) எந்த இடத்தில் வேண்டுமானாலும் எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.. இதனால் நமக்கு முக்கியமான இடத்தை மட்டும் தெளிவாக ஃபோகஸ் செய்யலாம்..

இன்றைக்கு சாதாரணமாக 5 focusing point முதல் 51 focusing point வரை (இதற்கு மேலும் உண்டு) மாற்றிக்கொள்ளும் வசதி DSLR கேமராக்களில் உண்டு..



(5 point focusing area)





(51 point focusing area)




DSLRன் குறைகள்:

1.தனிதனியாக லென்ஸ்கள் வேண்டும் என்பதாலும், நிறைய controls இருப்பதாலும் தானாக பட்ஜெட் ஏறிவிடுகின்றது..

2.அளவில் பெரியது..

3.எல்லா இடங்களுக்கும் கொண்டுபோக முடியாது..இதுக்கென தனியாக பேக் வேண்டும். பாக்கெட்டில் வைத்து கொண்டு எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்த முடியாது..இதனால் சில கேண்டிட் ஷாட்களை நாம் தவற நேரிடலாம்..

4.வெயிட் அதிகம்.. எனவே ஒரு சிலர் குறிப்பாக பெண்கள் இதை பயன்படுத்த சிரமப்படுவார்கள்.,விரும்ப மாட்டார்கள்

5.பெரிய சென்சார் என்பதால் depth of field என்பது சிறிய கேமராக்களை விட குறைவு..

6.சிறிய கேமராக்களில் இருப்பது போல் ஒரே லென்ஸில் நல்ல wide angle முதல் telephoto zoom வரை அமைக்க முடியாது..சிறிய கேமராக்களில் 24mm முதல் 700mm வரையில்(35mm formatல்) இப்போழுது லென்ஸ்கள் உடைய கேமராக்கள் கிடைக்கின்றன.. ஆனால் DSLRல் 28mm முதல் 400mm வரை தான் இப்போதைய நிலவரப்படி உண்டு..


இப்படி ஒரு சில குறைகள் இருந்தாலும்...பட்ஜெட் , அளவில் பெரியது இவ்விரண்டை தவிர , அனைத்து விசயங்களும் , சிறிய கேமராக்களை விட பல வகைகளில் DSLR சிறந்ததே...

சரி, சிறிய சைஸ் கேமராக்களில் இதே DSLR image quality யுடன் படங்கள் எடுக்க வாய்ப்பே இல்லையா ?


என்று கேட்பவர்களுக்கு.. பதில்.. உண்டு..


அட...அது என்ன கேமரா? என்பதை அடுத்த பகுதியில் விரிவாக பார்ப்போம்..


நன்றி
கருவாயன்

11 comments:

  1. //அட...அது என்ன கேமரா? என்பதை அடுத்த பகுதியில் விரிவாக பார்ப்போம்..//

    அடுத்த பகுதி எப்போ வரும்?

    இன்னும் 10 நாளில் ஒரு சிங்கைப் பயணம் இருக்கு. எந்தக்கெமெராவை பரிந்துரைக்கப் போறீங்கன்னு தெரிஞ்சா அங்கே இருந்து வாங்கிவருவேன்.

    உங்களுக்குக் கஷ்டம் இல்லைன்னா தனிமடலிலாவது விவரம் அனுப்புவீங்களா?

    ReplyDelete
  2. @துளசி கோபால்...

    நீங்க எப்படியும் கோபால் அவர்களுக்கு செலவு வைக்காம இருக்க மாட்டீங்க போலிருக்கே...

    மிக அவசரம் என்றால் உங்க email id ஐ அனுப்புங்க.. இங்கேயே சொன்னால் கொஞ்சம் சுவாரஸ்யம் போய் விடும்..

    அல்லது 4-5 நாளில் அந்த பகுதியை பதிவிட்டு விடுகின்றேன்..

    அதே சமயம் சிங்கப்பூரில் தான் விலை குறைவு என்றேல்லாம் இப்போ இல்லை... அதெல்லாம் அந்த காலம்..

    சென்னை , பெங்களூருவிலேயே மிக நல்ல விலைகளுக்கு கிடைக்கின்றன.. அப்படியே விலை வித்தியாசம் இருந்தாலும் மிக குறைவாக தான் இருக்கும்...

    -கருவாயன்

    ReplyDelete
  3. இப்ப இருக்கும் ஊரில் (சண்டிகர்) இருந்து சென்னை போறதுக்கு சிங்கையே போயிட்டு வந்துடலாங்க:-)

    சிங்கையில் வாங்குனா அட்லீஸ்ட் ஜிஎஸ்டி திருப்பிக் கிடைக்குமே.

    gopal.tulsi@gmail.com

    உடனடி பதிலுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  4. அருமை! அடுத்த பகுதி எப்போ?

    ReplyDelete
  5. @ tulsi gopal///
    pls explain
    What is gst(ஜீஎஸ்டி)?

    ReplyDelete
  6. ``அடுத்த பகுதி எப்போ?``

    விரைவில்... 4-5 நாட்களுக்குள்..

    -கருவாயன்

    ReplyDelete
  7. //@ tulsi gopal///
    pls explain
    What is gst(ஜீஎஸ்டி)?
    //

    Goods & Services TAX

    ReplyDelete
  8. //7.அதி வேக லென்ஸ்களை பயன்படுத்தலாம்.. //

    Does it mean small f-number lenses[fast lenses]? Ex: f/1.0, f/1.2, etc

    ReplyDelete
  9. //7.அதி வேக லென்ஸ்களை பயன்படுத்தலாம்.. //

    `Does it mean small f-number lenses[fast lenses]? Ex: f/1.0, f/1.2, etc``

    @anton..

    மிகச் சரி..

    -கருவாயன்

    ReplyDelete
  10. @ பிரியமுடன் பிரபு...

    noise என்பது கேமராக்களை பொறுத்த வரையில் `தேவையற்ற புள்ளிகள்` என்று எடுத்துக்கொள்ளலாம்..

    இது பொதுவாக dark இடங்களில்,நாம் iso வை அதிகப்படுத்தி எடுக்கும் போது கானலாம்.. குறிப்பாக இருட்டில், மங்கலான பகுதிகளில் நன்றாக தெரியும்..

    இதனால் படத்தில் details குறைந்து விடும்..

    -கருவாயன்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff