இதற்கு முன்னர் பகுதியில் DSLR ஐ பற்றிய தகவல்களை நாம் பார்த்தோம்..
1. DSLR கேமராக்கள் ஏன் பெரிதாக் இருக்கின்றன .
2. DSLR சென்சாரின் பல வகைகள்..
3. DSLR நன்மைகள் , குறைகள்
அதன் அளவு பெரியது என்பதையும்,அதற்கான காரணங்களையும் பார்த்தோம்..பல நன்மைகள் இருந்தாலும் பலர் இவ்வகை DSLR கேமராக்களை வாங்குவதற்கு தயக்கம் காட்டுவார்கள்..
ஒரு சிலருக்கு பட்ஜெட் பிரச்சனை இருக்காது, ஆனால் பெரிய சைஸ் கேமராக்கள் அவர்களுக்கு ஒத்து வராது..பிடிக்காது.
ஒரு சிலர் அதை பெரிய அளவை பார்த்ததுமே ஏதோ பெரிய விசயங்கள் இருக்கும், எனவே நமக்கு அது ஒத்து வராது என்று ஒதுங்கி விடுவார்கள்..
ஆனால் அவர்கள் விரும்புவது, சிறிய சைஸ் கேமராவில் நல்ல குவாலிட்டி படங்கள் எடுக்க வேண்டும்.
இதற்காக விலை எவ்வளவு வேண்டுமானாலும் தர தயாராக இருப்பார்கள்..
ஆனால் சின்ன சென்சார் என்பதால் சிறிய கேமராக்களை வாங்கினால் குவாலிட்டி கொஞ்சம் இருக்காதே... என்ன செய்வது??
DSLR குவாலிட்டியில் படமும் வேண்டும் , அதே சமயம் கேமராவும் சிறியதாக இருக்க வேண்டும்..
சரி இந்த மாதிரி வாடிக்கையாளர்களுக்கு என்ன தான் வழி ?
இவர்களுக்கு ஒரு அருமையான வழி தான் இந்த mirror less கேமரா..
சரி, அதென்ன mirror less கேமரா?
DSLR கேமராக்களை விட சிறியதாக, ஆனால் DSLR போன்றே picture quality மற்றும் செயல்படும் திறன் கொண்ட கேமரா தான் mirror less கேமராவாகும்..
நாம் DSLR ல் பகுதியில் பார்த்திருப்போம்,அதன் பெரிய அளவிற்கு மிக முக்கிய காரணம் optical viewfinder க்காக கேமராவிற்குள் அமைக்கப்படும் mirror box மற்றும் pentaprism தான்..
இந்த mirror box ஐயே இல்லாமல் செய்தால் !!
இதனால், தானாக ஒரு கனிசமான அளவு கேமரா bodyன் அளவு குறையும்.. இதனால் கேமரா பார்ப்பதற்கு ஒரு குட்டி DSLR போல் இருக்கும்..
இந்த படங்களை பார்த்தால் வித்தியாசம் தெரியும்..(படத்தை பெரிதாக பார்க்கவும்)
இந்த மாதிரி கேமராக்கள் mirror box இல்லாமல் வடிவமைக்கப்பட்டதால் இது mirror less கேமரா என்று கூறப்படுகின்றது..இந்த mirror box ஐ தூக்கிவிட்டால்...
நாம் முக்கியமாக இரண்டு விசயங்களை தியாகம் செய்ய வேண்டியது தான்..
1.OPTICAL VIEW FINDER:
Mirror Less கேமராவில் , mirror box இல்லாததால் நம்மால் otical view finder ஐ பயன்படுத்த முடியாது..
எனவே optical view finderக்கு பதிலாக சிறிய கேமராக்களில் live view ஐ பயன்படுத்துவோமே அது மாதிரி பயன்படுத்தி தான் படமெடுக்க முடியும்.
live view ஐ மட்டும் பயன்படுத்தி படமெடுப்பதற்கு என்றால் mirror box என்பது தேவையில்லை..
2.AUTO FOCUS வேகம்:இவ்வகை கேமராக்களில் autofocus ன் வேகம் DSLR கேமராக்களை விட சற்று குறைவு தான்..
ஏனென்றால் DSLR ஐ பொறுத்த வரையில் லென்ஸ் வழியாக வரும் ஒளியினை ஒரு பகுதி அப்படியே நேரிடையாக auto focus செய்வதற்கு பயன்படுத்தப்படும்..
Auto Focus ற்க்கு என்று தனியாக சின்னதாக ஒரு சென்சார் இருக்கும்
இதை phase detection auto focus முறை என்று கூறுவர்..
ஆனால் Mirror Less கேமராவிலும் , மற்ற சிறிய கேமராக்களிலும் mirror box இல்லாததால் phase detection auto focus முறையை பயன்படுத்த முடியாது..
அதற்கு பதிலாக contrast detect auto focus முறையை தான் பயன்படுத்த முடியும்..
இது எப்படி என்றால் , லென்ஸ் வழியாக வரும் ஒளியினை சென்சாரில் பதிவு ஆனபிறகே AF செய்ய முடியும்.. இதில் Auto Focusற்க்கு என்று தனியாக சென்சார் எதுவும் கிடையாது..
இதனால் Auto Focus சற்று காலதாமதம் பிடிக்கும்..
ஆனால் சிறிய கேமராக்களை விட, mirror less கேமராவில் சற்று வேகமாக Auto Focus இருக்கும்..mirror less கேமராவில்.. சென்சார் பெரிது என்பதாலும் , லென்ஸும் பெரிது என்பதாலும், லென்ஸிற்கும் கேமரா பாடிக்கும் தொடர்புகள் அதிகம் என்பதாலும், இதன் AF வேகம் கண்டிப்பாக சிறிய கேமராக்களை விட வேகமாக தான் இருக்கும்..
தற்போதைய technology ன் படி கிட்டதட்ட 70-80 % வரை DSLR கேமராக்களின் AF வேகத்திற்கு சமமாக படம் எடுக்கக்கூடிய contrast detect AF முறைகள் வந்து விட்டன..
mirror less கேமராவின் அமைப்பு:
இதனால் நாம் live view பயன்படுத்தி படம் எடுக்கும் போது DSLR ன் LIVE VIEWஐ விட வேகமாக படம் எடுக்கலாம்,
ஆனால் இன்றைய technologyல் இந்த மாதிரி பயன்படுத்தும் போது manual focus தான் வழி.. manual focus பிரச்சனை இல்லையென்றால் எந்த ப்ராண்ட் லென்ஸையும் பயன்படுத்தி படம் எடுக்கலாம்.
பயன் படுத்தப்படும் சென்சார்கள்:
தற்போதைக்கு சந்தையில் olympus , panasonic போன்ற கம்பெனிகள் olympus DSLR ல் பயன்படுத்தப்படும் four third சென்சாரை பயன்படுத்துகின்றன..
இதனால் இவ்வகை கேமராக்கள் MICRO FOUR THIRD கேமராக்கள் என்று கூறுகின்றனர்..
அடுத்த கட்டமாக தற்போது sony மற்றும் samsung கம்பெனிகள் APS-C சைஸ் சென்சாரை பயன்படுத்துகின்றன..
இதன் சென்சார் four third sensorஐ விட சற்று பெரியதாகும்..
இதனால் லென்ஸ் அளவு மற்றும் lens- body mount diameter இரண்டு மட்டும் சற்று பெரிதாக தான் வரும்..
MIRROR LESS கேமரா வகைகள்:
ஒன்று, நாம் live view மட்டுமே பயன்படுத்தி படமெடுப்பதற்கு கேமராவின் பின்னால் இருக்கும் LCD finder ஒன்று மட்டும் தான் வழி..
இதில் view finder என்பது கிடையாது.. எனவே படத்தை shoulder உதவியுடன் arm levelல் தான் கம்போஸ் செய்வதற்கு வழி..
இதனால் தான் கனிசமான அளவில் கேமராவின் BODY அளவு குறைகின்றது..
மற்றொன்று , இந்த வகை கேமராக்களில் optical view finder என்பது சாத்தியமில்லை எனவே , eye level கம்போஸிசன் செய்வதற்கு வழியாக optical view finderற்கு பதிலாக electronic view finder ஐ பயன்படுத்தி படமெடுக்கலாம்..
EVF என்பது ஒரு குட்டி LCD monitor தான்.. EVF ஐ வடிவமைப்பதற்கு mirror box தேவையில்லை..
ஆனால் EVF இருந்தால் சைஸ் கொஞ்சம் பெரியதாகும்... இந்த மாதிரி..
இந்த படத்தில் இருக்கும் இரண்டு கேமராக்களுமே MIRROR LESS கேமரா தான்..
அதே சமயம், சிறிய mirror less கேமராவிலும் EVF பயன்படுத்துவதற்கு வேறு ஒரு வழி உள்ளது..
கேமராவில் hot shoe கொடுத்திருப்பார்கள்..
இதில் external flash ம் பயன்படுத்தலாம் , அதே சமயம் external EVF ஐயும் அதில் பயன்படுத்தலாம்.. இந்த மாதிரி.. Mirror Less கேமராக்களின் நன்மைகள் , குறைகள் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்...
நன்றி
கருவாயன்

- Mirror Less கேமராவில் mirror box இல்லாமல் போவதால் சென்சாருக்கும் , லென்ஸ் mountற்கும் உள்ள தொடர்பு தூரம்(flange back distance) பாதியாக குறைந்து விடுகின்றது..
இதனால் நாம் live view பயன்படுத்தி படம் எடுக்கும் போது DSLR ன் LIVE VIEWஐ விட வேகமாக படம் எடுக்கலாம்,
- கேமராவிற்கு தகுந்த குறிப்பிட்ட adoptor ஐ பயன்படுத்தி எந்த brand லென்ஸையும் பயன்படுத்த வழி இருக்கின்றது..
ஆனால் இன்றைய technologyல் இந்த மாதிரி பயன்படுத்தும் போது manual focus தான் வழி.. manual focus பிரச்சனை இல்லையென்றால் எந்த ப்ராண்ட் லென்ஸையும் பயன்படுத்தி படம் எடுக்கலாம்.
- DSLR கேமராக்களை விட ,லென்ஸிற்கும் கேமரா bodyக்கும் உள்ள தொடர்பு புள்ளிகள் அதிகம்.. உதாரணம் இந்த படத்தை பார்க்கவும்..
- இதனால், live view பயன்படுத்தி படமெடுக்கும் போது நல்ல வேகமாகவும் , smooth ஆகவும் இருக்கும்
- சிறிய கேமராக்களின் முக்கிய குறையான shutter lag என்பது பல மடங்கு குறைந்து விடும்..
- contrast detect AF கூட வேகமாக ஃபோகஸ் செய்யும்
- data processing என்பதும் வேகமாக நடக்கும், இதனால் வீடியோ அருமையாக பெரிய லென்ஸ்களில் அமையும்..
- அதே சமயம் லென்ஸையும் சிறியதாக வடிவமைக்கலாம் என்பதால் லென்ஸ் diameter அளவும் குறைந்து விடுகின்றது..
பயன் படுத்தப்படும் சென்சார்கள்:
தற்போதைக்கு சந்தையில் olympus , panasonic போன்ற கம்பெனிகள் olympus DSLR ல் பயன்படுத்தப்படும் four third சென்சாரை பயன்படுத்துகின்றன..
இதனால் இவ்வகை கேமராக்கள் MICRO FOUR THIRD கேமராக்கள் என்று கூறுகின்றனர்..
அடுத்த கட்டமாக தற்போது sony மற்றும் samsung கம்பெனிகள் APS-C சைஸ் சென்சாரை பயன்படுத்துகின்றன..
இதன் சென்சார் four third sensorஐ விட சற்று பெரியதாகும்..
இதனால் லென்ஸ் அளவு மற்றும் lens- body mount diameter இரண்டு மட்டும் சற்று பெரிதாக தான் வரும்..
MIRROR LESS கேமரா வகைகள்:
ஒன்று, நாம் live view மட்டுமே பயன்படுத்தி படமெடுப்பதற்கு கேமராவின் பின்னால் இருக்கும் LCD finder ஒன்று மட்டும் தான் வழி..
இதில் view finder என்பது கிடையாது.. எனவே படத்தை shoulder உதவியுடன் arm levelல் தான் கம்போஸ் செய்வதற்கு வழி..
இதனால் தான் கனிசமான அளவில் கேமராவின் BODY அளவு குறைகின்றது..
மற்றொன்று , இந்த வகை கேமராக்களில் optical view finder என்பது சாத்தியமில்லை எனவே , eye level கம்போஸிசன் செய்வதற்கு வழியாக optical view finderற்கு பதிலாக electronic view finder ஐ பயன்படுத்தி படமெடுக்கலாம்..
EVF என்பது ஒரு குட்டி LCD monitor தான்.. EVF ஐ வடிவமைப்பதற்கு mirror box தேவையில்லை..
ஆனால் EVF இருந்தால் சைஸ் கொஞ்சம் பெரியதாகும்... இந்த மாதிரி..
இந்த படத்தில் இருக்கும் இரண்டு கேமராக்களுமே MIRROR LESS கேமரா தான்..
அதே சமயம், சிறிய mirror less கேமராவிலும் EVF பயன்படுத்துவதற்கு வேறு ஒரு வழி உள்ளது..
கேமராவில் hot shoe கொடுத்திருப்பார்கள்..
இதில் external flash ம் பயன்படுத்தலாம் , அதே சமயம் external EVF ஐயும் அதில் பயன்படுத்தலாம்.. இந்த மாதிரி.. Mirror Less கேமராக்களின் நன்மைகள் , குறைகள் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்...
நன்றி
கருவாயன்
மிகவும் அருமை
ReplyDeleteVery informative!!
ReplyDeleteGreat post
Karuvayan, kalakkal. asaathyamaana vilakkangal. dhool!
ReplyDeleteNalla pakirvu.
ReplyDeleteமிக அருமையான விளக்கமான பதிவு! மிக்க நன்றி! சில மாதங்களுக்கு முன்பு தான் இவ்வகையான கேமராக்களைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அப்படியே இவற்றின் விலையைப் பற்றிய ஒரு comparison பதிவும் எழுதினால் மிக்க நிறைவாக இருக்கும். நன்றி!
ReplyDelete@siddhdreams.
ReplyDeleteநன்றி...அடுத்த பகுதியில் விலையை பற்றிய தகவல்களை பார்க்கலாம்..
-கருவாயன்
விரிவான காமிரா கண் உங்களுக்கு!இன்னும் சொல்லுங்க!
ReplyDeleteஎன்னதான் சொன்னாலும் DSLR ஐ அடிச்சிக்கவே முடியாது.
சரிதானே CVR:)
//மிக அருமையான விளக்கமான பதிவு! மிக்க நன்றி! சில மாதங்களுக்கு முன்பு தான் இவ்வகையான கேமராக்களைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அப்படியே இவற்றின் விலையைப் பற்றிய ஒரு comparison பதிவும் எழுதினால் மிக்க நிறைவாக இருக்கும். நன்றி!//
ReplyDeleteபல் இருந்தா முறுக்கு தின்னலாங்க:)
இந்தியாவில் அணு முதல் அந்தம் வரை அத்தனையுமே கண்ணுக்குள் விரிந்து மனதுக்குள் புகுந்து கொள்ளும் சொத்துக்கள்.ஆனால் எத்தனை ஆவணப்படுத்தியிருக்கிறோம்?
ReplyDeleteசோனி மிர்ரர் லெஸ் கேமரா வாங்கலாமா? பல விளம்பரங்களை பார்த்தேன். த.செய்து கூறவும் எந்த நிறுவனத்தின் கருவி வாங்கலாம் என்று சிபாரிசு செய்யவும்.
ReplyDelete@கோப்ஸா..
ReplyDeleteஉங்களுக்கு சின்ன சைஸ் தான் வேண்டும் என்றால் இந்த மாடலை தாராளமாக வாங்கலாம்..
அல்லது
உங்களுக்கு சைஸ் பிரச்சனை இல்லை என்றால் DSLR ஐயே வாங்கவும்.. விலையும் கிட்டதட்ட ஒன்று தான்..
பொதுவா, இந்த மிரர் லெஸ் கேமராவின் முக்கிய நோக்கமே சிறிய சைஸில் நல்ல குவாலிட்டி தான்..
அதே சமயம் இப்பொழுது சந்தையில்
1.olympus ன் E-PL2 என்கின்ற மாடலும்..
2.panasonicன் GF-2 என்கின்ற மாடலும்
sonyன் NEX 3/5 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக வந்துள்ளன..
முடிந்தால் இவற்றையும் நேரில் உங்கள் கையால் ஒப்பிட்டு பார்த்து வாங்கவும்.. ஏனென்றால் சோனி கேமராவை விட இதன் லென்ஸ் அளவுகள் சற்று சிறியதாகவும்,handling செய்வதற்கு எளிதாகவும் இருப்பது போல் தெரிகின்றது..
அப்படி முடியவில்லை என்றால்,சோனி மாடல் உங்களுக்கு பிடித்திருகின்றது என்றால்,பட்ஜெட் பிரச்சனையில்லை என்றால் தாராளமாக சோனியே வாங்கலாம்..தவறில்லை..
reviews அனைத்தும் நன்றாக இருக்கின்றது..என்ன.. விலை தான் கொஞ்சம் அதிகமாக தெரிகின்றது..
அதே சமயம் இம்மூன்றில் எதை வாங்கினாலும் தவறில்லை என்று தான் கூற வேண்டும்..
இருந்தாலும்,இந்த மிரர் லெஸ் கேமராக்கள் DSLR மாதிரி வேகமாக செயல்படாது என்பதையும் நினைவில் கொள்ளவும்..அதாவது வேகமான ACTION படங்களை எடுப்பதற்கு இதன் ஆட்டோ ஃபோகஸ் தடுமாறும்,வேகம் பத்தாது..
மற்றபடி நார்மல் படங்களை எடுப்பதற்கும்,வீடியோ எடுப்பதற்கும் இவ்வகை கேமராக்கள் ஒரு நல்ல கேமராவே..கண்டிப்பாக விலையுயர்ந்த சிறிய கேமராக்களின் குவாலிட்டியை விட நன்றாக இருக்கும்..
இவற்றை எதையும் நான் அதிகமாக பயன்படுத்தியதில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்..
வேறு சந்தேகங்கள் ஏதும் இருப்பின் தெரிவிக்கவும்..
-கருவாயன்
@கருவாயன்
ReplyDeleteபுதிதாக கேனான் 500டி வாங்கியுள்ளேன் இதில் உள்ள
bulb மோட் உபயோகிப்பது எப்படி என்று சொல்லுங்களேன்
நன்றி
ஷ்ரவ்யன்
ஷ்ரவ்யன்..
ReplyDeleteஇதை manual mode ல் வைத்து ஷட்டர் ஸ்பீட் செட்டிங்ஸை குறைத்துக்கொண்டே வந்தால் bulb வந்து விடும்..
பொதுவாக bulb மோட் என்பது ஃப்ளாஷ் இல்லாமல் இருட்டிலோ அல்லது நட்சத்திரங்களையோ படம் எடுப்பதற்கும் , சென்சாரை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்துவார்கள்..
-கருவாயன்
I am owning Nikon D3000 with 18-55mm lens. Now I have planned to upgrade to 200mm or 300mm lens. Please find the details below:
ReplyDeleteSigma 70-300mm F/4-5.6 DG Macro (for Nikon Digital SLR) Lens - Rs. 8425
Tamron AF 70-300mm F/4-5.6 Di LD Macro (for Nikon Digital SLR) Lens - Rs. 8000
Nikon AF-S DX VR Zoom-Nikkor 55-200mm f/4-5.6G IF-ED Lens - Rs. 11205
Please suggest which one will be good for my camera. I like outdoor photography. Provide me pros and cons if you suggest any. Thanks.
@தர்மா.. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மூன்று லென்ஸ்களில் nikon 55-200mm ஐயே வாங்கவும்.. மற்ற இரண்டும் வேண்டாம்..
ReplyDeleteஏனென்றால்,பார்ப்பதற்கு sigma மற்றும் tamron இரண்டுமே விலை குறைவு , மேக்ரோ,அதிக tele zoom போன்றவைகள் இருப்பது ரொம்ப நல்லது போல் தெரியும்..
ஆனால், இவையெல்லாம் மட்டுமே சிறந்தது என்று முடிவுக்கு வரக்கூடாது..
மேலே சொன்னவைகளை விட மிக முக்கியமான lens sharpness , AF speed , slightly wide zoom (55mm vs 70mm), own brand , light weight , silent auto focus , VR இவையெல்லாம் ஒரு tele zoom லென்ஸிற்கு மிகவும் அவசியமாகும்.. இது, இந்த மூன்று லென்ஸில் ,nikon ல் மட்டுமே உள்ளது..
nikon ல் இல்லாதது இரண்டு விசயம் தான் 1. macro focusing 2.200-300mm zoom range...இவ்விரண்டும் இல்லாதது ஒரு பெரிய விசயமே இல்லை...
இதில் sigma மற்றும் tamron ன் மேக்ரோ என்பது 1:2 என்று சொல்லக்கூடிய magnification ratio வரையில் focusing ஆகும்..nikonல் 1:4 வரை ஃபோகஸிங் ஆகும்... இதில் என்னவென்றால் 1:4 வரையில் close ஆக ஃபோகஸிங் போகும் போது tripod இல்லாமல் எடுக்கலாம்..ஆனால் அதற்கு கீழ் க்ளோஸ்(1:3,1:2.என்று) போகும் போது கண்டிப்பாக tripod வேண்டும்.. இல்லையென்றால் படம் blur ஆக தான் வரும்..ஆகவே இதை பெரிய விசயமாக நினைக்க வேண்டாம்..
அதே சமயம் 200-300mm இல்லாததும் பெரிய விசயம் இல்லை... 200mm ல் வைத்து ஒன்று அல்லது இரண்டு step முன்னே சென்று எடுத்தால் 300mm ல் கிடைக்க வேண்டியதை எடுக்க முடியும்...
எனவே நீங்கள் தைரியமாக nikon 55-200mm VR லென்ஸையே வாங்கவும்... விலை 11,000 என்பது கொஞ்சம் அதிகமாக தெரிகின்றது.. நான் இந்த லென்ஸை 3 வருடங்களுக்கு முன்பு 8500 ற்கு சென்னையில் grey market ல் வாங்கினேன்.. எதற்கும் இரண்டு மூன்று பக்கம் நன்றாக விலையை விசாரித்துவிட்டு வாங்கவும்..
-கருவாயன்
@கருவாயன் - மிக்க நன்றி....
ReplyDeletesir naan photo studio vaikalamnu iruken enaku oru nalla camera sollunga sir
ReplyDelete