Saturday, September 27, 2014

செப்டம்பர் 2014: போட்டிமுடிவுகள்

8 comments:
 
 ***
வணக்கம் மக்கா,

போட்டியில் சிறப்பு கவனம் பெறும் படத்தையும் வென்ற படங்களையும் பார்ப்போம்.**

சிறப்புக் கவனம்:

பூபதி :


அருமையான காம்போஸிஷன்,கடற்கரை Reflection அருமை,எனினும் Horizon correction செய்யாமலிருப்பது அதைவிட over saturation கண்ணை சற்று உறுத்துவதால் சிறப்பு கவனத்தோடு நின்றுவிட்டது.

சற்று saturation ஐ போட்டோஷாபில் குறைத்து horizon லைனை கரெக்ட் செய்திருக்கிறேன். இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கிறதில்லையா?





மூன்றாமிடம் பிடிப்பது :

வினோத் :
எளிமையான கம்போஸிஷனில் அற்புதமான காட்சி.

இரண்டாமிடம் பிடிப்பது :

அந்தோனி சதீஷ் :
என்ன இது பார்ப்பதற்க்கு எதோ புள்ளி புள்ளியாய் தெரிகிறது இதற்க்கு எதற்கு சிறப்பு கவனம் என பார்கிறீர்களா? அதாவது இந்தStar Trials எடுப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது,Long Exposureல் தொடர்சியாக சுமார் 2 மணி நேரம் படம் பிடிக்கவேண்டும்,அதன் பின்னர் எடுத்த அத்தனை படங்களையும் எடிட் செய்வதும் ஒரு லாங் பிராஸஸ் ஆகும் எனவே  அவரது இந்த முயற்சிக்கு பிட்டின் வாழ்த்துக்கள்.


முதலிடம் பிடிப்பது :

ராஜேஷ் நடராஜன் :


அற்புதமான silhouette, தலைப்புக்கு பொருந்துவது போலவும் இருக்கிறது.அதிலும் ஆதவனின் ஜுவாலை Light leaksபோல இருவருக்கு நடுவில் பீய்சிக்கொண்டு வருவது அருமை.

வாழ்த்துக்கள் ராஜேஷ் நடராஜன்.

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும்,வெற்றிபெற்றவர்களுக்கும் பிட்டின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு மற்றொரு கட்டுரையில் உங்களுடன் இணைகிறேன்.

என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்

8 comments:

  1. அருமையான புகைப்படங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி.

    ராஜேஷ் நடராஜன்😃

    ReplyDelete
  3. நானும் இந்த போட்டியில் கலந்து கொள்ள ஆசை... எந்த ஐடிக்கு போட்டோஸ் அனுப்ப வேண்டும் நான் இந்த தளத்திற்க்கு புதிது.. உதவி செய்யுங்கள்

    ReplyDelete
  4. நீங்கள் தெரிவு செய்திருக்கும் புகைப்படங்கள் அழகானவைதான். ஆனால் நீங்கள் தந்திருந்த தலைப்புக்கேற்ற புகைப்படங்களாக அவை இல்லை. 'Subject - வானம்' என்றால் வானம் மட்டும்தான் பிரதானமாகத் தெரிய வேண்டும். அவ்வாறுதான் PIT மூலமாக நீங்கள் போதித்திருக்கிறீர்கள். நீங்கள் தந்திருந்த உதாரணப் படங்கள் கூட அவ்வாறுதான் இருந்தன இல்லையா? இங்கு நீங்கள் தெரிவு செய்துள்ள புகைப்படங்களில் Subject வானமாகத் தெரியவில்லை. இவற்றுக்கான 'Subject - வானத்தைப் பின்னணியாகக் கொண்ட புகைப்படங்கள்' எனலாம். இவ்வளவு காலமும் PIT ஐ நேர்மையானதாகத்தான் கண்டு வருகிறோம். இனிமேலும் இத் தவறு நிகழாதவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  5. அருமையான படங்கள். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. @vasuki :

    தங்களின் கருத்துரைக்கு முதற்கண் என் நன்றி...

    "பிட் தளம்" என்றுமே போட்டியில் யாருக்கும் பாரபட்சம் பார்ப்பது கிடையாது,அதாவது போட்டியின் தலைப்பு "வானம்" அல்ல "வானம் எனக்கொரு போதிமரம்"

    அதேபோல படத்தில் human content இருக்ககூடாது என போட்டியின் தலைப்பில் நான் குறிப்பிடவில்லை.

    தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று படங்களின் இரண்டு படங்கள் human content ஐ கொண்டுள்ளதால் ஒருவேளை தங்களுக்கு இந்த முடிவில் திருப்தியில்லாமல் இருந்திருக்கலாம்.

    வானம் எனக்கொரு போதிமரம் என்பதில் சூரியன்,நிலா,நட்சத்திரங்கள்,மேகம்ன்னு அனைத்துமே அடக்கம்.அந்த வகையில்தான் மாதிரிப்படங்களும் போடப்பட்டிருந்தது. மாதிரிப்படங்களில் silhoutte படங்களையும் பகிர்ந்திருக்கிறேன். எனவே போட்டியின் தலைப்பை மீறி படம் தேர்வுசெய்யப்படவில்லை.

    போட்டியின் மாதிரிப்படங்களை அப்படியே பிரதிபலிக்காமல் கொஞ்சம் சொந்த கற்பனையோடு அனுப்பியிருந்த படங்களைத்தான் நான் தேர்வு செய்திருக்கிறேன்.


    அனைத்தையும் தாண்டி நடுவரின் சொந்த ரசனையும் இதில் அடக்கம்,எனினும் போட்டியின் தலைப்பினை மீறியோ அல்லது விதிமுறைகளை மீறியோ இருக்கும் படங்களுக்கு "பிட் "என்றுமே முக்கியத்துவம் அளிக்காது என்று உறுதியாக கூறுகிறேன் நன்றி.

    நித்தி ஆனந்த்

    ReplyDelete
  7. Dear nithi anand sir

    I like to speak with u plese give ur mobile no. Or please call me.

    Ganapathi
    9941754760
    Gunsannamalai@gmail.com

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff