வணக்கம் நண்பர்களே. PiT மாதாந்திரப் போட்டிகள் ஆரம்பித்து, இரண்டு வருடம் நிறைவடைகிறது. சென்ற வருடம், ஜூலை 2008ல், ஓராண்டு நிறைவு விழாவை, 'மெகா' போட்டி நடத்தி க்ளிக்கி மகிழ்ந்தோம்.
இந்த வருஷம் சும்மா விட்ரலாமா?
என்னதான் பொருளாதாரம் சர்ர்ர்ர்ர்ர்ருனு சரிவடைந்து, பலருக்கு பிடுங்க ஆணி இல்லாமல் போனதும், ஆணி பிடுங்கரவங்களுக்கு சகட்டு மேனிக்கு ஆணிகள் வளஞ்சும் நெளிஞ்சும் பிடுங்க பிடுங்க வந்து கொண்டு இருப்பதும், காலத்தின் கோலமாய் நம் கண் முன் வந்து போனாலும், நாம் க்ளிக்குவது துவளாமல் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
இந்த இனிய வேளையில், க்ளிக்கிச் சிவந்த உங்கள் கைகளுக்கு, எம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வருட மெகாப் போட்டித்தலைப்பையும் பரிசு விவரங்களையும், பாக்கப் போறதுக்கு முன்னாடி, இதுவரை PiT போட்டியில் வெற்றி வாகை சூடியவர்கள் யார் யார்னு கீழ பாருங்க. ( சில பேரு எந்தத் தலைப்பக் கொடுத்தாலும், 'நச்னு' படம் புடிச்சு, அடிக்கடி ஜெயிக்கராங்க்ய. நெம்ப ஜெலஸ்ஸாவுது போங்க :) )
ஜூலை 2007லிருந்து, ஜூலை 2008 வரை வெற்றி பெற்ற க்ளிக்குகளை சென்ற வருட அறிவிப்பில் பார்க்கலாம்.
ஆகஸ்ட் 2008லிருந்து, ஜூன் 2009 வரை வென்ற க்ளிக் வேந்தர்கள் கீழே.
September 2008 - மெகா போட்டி
1. நாதஸ்
2. Truth
3. MQN
October 2008 - விளம்பரம்
1. Amal
2. TJay
3. Opparee
November 2008 - லீவு விட்டுட்டோம்
December 2008 - நிழல்கள்
1. Vennilaa Meeran
2. Amal
3. Truth
January 2009 - Open topic
1. நந்து
2. சங்கர் பாலசுப்ரமணியம்
3. MQN
February 2009 - Action
1. பிரகாஷ், கைப்புள்ள
2. சூர்யா
3. கருவாயன்
March 2009 - கருப்பு வெள்ளை
1. கருவாயன்
2. அன்பு
3. சத்யா, நந்தகுமார்
April 2009 - உணர்வுகள்
1. Greg
2. கருவாயன்
3. மன்(ணி)மதன்
May 2009 - மிருகங்கள், பறவைகள்
1. கருவாயன்
2. TJay, பிரகாஷ்
3. நந்தகுமார்
June 2009 - முதுமை
1. அன்பு ஆனந்த்
2. Vino
3. கருவாயன்
கலக்கிட்டாங்க இல்ல? இந்த வருட மெகா போட்டி விவரங்கள் பாத்துடலாமா?
போட்டிக்கான தலைப்பு: (Popular) Landmark (எளிதில் அடையாளங்கண்டு கொள்ளக்கூடிய சின்னம்)
உங்க் வீட்டுத் தெரு முனையில் இருக்கும் பஸ் ஸ்டாண்டு, உங்களால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். ஆனா, மத்தவங்களுக்கு முடியாது. ஸோ, பொதுவா, எல்லாருக்கும், சட்டுனு தெரியர ஓரளவுக்கு ப்ரசித்தி பெற்ற இடங்களா இருக்கணும். உதாரணத்துக்கு சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா/எம்ஜிஆர் சமாதி, மகாபலிபுரக் கற்கோயில், சென்ட்ரல் ஸ்டேஷன், சிங்கப்பூர் மில்லீனியா டவர், கலிஃபோர்னியா கோல்டன் கேட், இந்த மாதிரி.
படங்கள் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய கடைசி தேதி: ஜூலை 25ஆம் தேதி
வெற்றியாளர்களை ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிவிப்போம்.
முதல் பரிசு: US $50
இரண்டாம் பரிசு: US $25
மூன்றாம் பரிசு: US $10
பரிசுக்கான தொகை, பிட் குழுவினரின் பங்களிப்பிலிருந்து வருகிறது.
பரிசு, பணமாகவோ புத்தகமாகவோ அனுப்பப்படும். ( based on winners location and logistics and possibilities for mailing a cheque vs other options )
நடுவர்கள்: பிட் குழுவினர் (Jeeves, An&, CVR, Nathas, Deepa & Surveysan)
படங்களை எப்படி அனுப்பரதுன்னெல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்க, இங்கப் போய் பாத்துக்கங்க. (படம் அனுப்பக் கடைசித் தேதி ஜூலை 25).
போட்டிக்கான விதிமுறைகளை தவறாமல் பின்பற்றவும்.
குறிப்பாக, ஒருத்தர் ஒரு படம் மட்டுமே அனுப்பவும்.
குறிப்பாக, படத்தின் ஃபைலுக்கு உங்கள் பெயரை வைத்து, ஈ.மடலின் சப்ஜெக்ட்டுக்கும் உங்கள் பெயரை வைப்பது.
குறிப்பாக, நீங்கள் க்ளிக்கிய உங்கள் 'சொந்தப்' படமாக இருக்க வேண்டும்.
இனி, சாம்பிள் படங்கள் கீழே:
Source: Deepa
Source: Jeeves
Source: CVR
Source: An&
Source: Nathas
Source: Surveysan
ஜமாய்ச்சிடலாம்ல?
க்ளிக்குங்க!
நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
அதெல்லாம் கலக்கிருவாங்க நம்மாளுங்க.
ReplyDeleteவெற்றிபெறப்போகும் மக்களுக்கு அட்வான்ஸா வாழ்த்து(க்)களைச் சொல்லிக்கறேன்.
ஆகா! பெரும் திருவிழாவா இருக்கப்போவுது... நன்றி நன்றி...
ReplyDeleteஅட பரிசு வேற உண்டா!
ReplyDeleteகலக்குங்க!
இரண்டாம் ஆண்டு வாழ்துக்கள் பிட் குழுவினருக்கு.
ReplyDeleteகடசி 5 மாசமும் எங்க ஊருக்கு ஒரு இடம் இருந்துகிட்டே இருக்கு இந்த மாசமும் அது தொடரும்னு நம்புரோம்.
PiT குழுவினர்க்கு வாழ்த்துக்கள் ...
ReplyDeleteஒரே படபடப்பை கிளப்பிவிட்டுடீங்க. படங்களை பார்க்க இப்பவே ஆர்வமா இருக்கு.
ReplyDeleteஆங்....அப்புறம் வாழ்த்துக்கள் பிட் குழுவினருக்கு.
நன்றி, நன்றி, வாழ்த்துக்கள்.
ReplyDeleteTjay
வெற்றி பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள். நல்ல தலைப்பு சர்வேஸ்.
ReplyDeleteபடம் ஒன்னு அனுப்பி இருக்கேன். கிடைச்சிருக்கும்.
ReplyDeleteI have a doubt. I can see many HDR pictures in the examples given. Usually in any photo competition, only slight post-processing is allowed and HDR's are not allowed. How about here? Are HDR photo's allowed for the competition?
ReplyDeleteVijay,
ReplyDelete//only slight post-processing is allowed
The word "slight" is very subjective.
How do you define that?
What is slight for you , maybe too much for someone else.
Yes, we do allow HDR images.
Something like this:
ReplyDeleteDigital manipulation that distorts the reality of the photos will not be allowed. Only basic enhancements such as sharpening, contrast adjustment, converting color images to black and white will be allowed.
Coz, it's a photography competition. Some people know to take good photographs but doesn't know photoshop or HDR. Some are good in editing and they can make a simple photograph look awesome. But you can easily make-out if they are edited or unedited like I identified the HDR images here.
Thanks for the clarification.
Thanks for the clarification.
படம் ஒன்று அனுப்பியிருக்கேன்.
ReplyDeleteபடம் ஒன்று அனுப்பியிருக்கேன்
ReplyDeleteநானும் ஒரு படம் அனுப்பி இருக்கேன்.
ReplyDeleteI've sent my picture yesterday!
ReplyDeleteநானும் அனுப்பி உள்ளேன்
ReplyDeleteKodees.
போட்டிக்கு என் படமும் அனுப்பியாச்சு.
ReplyDeleteSrinidi
Im also sending on photo to you.
ReplyDeleteRegards
ackid32
எதை அனுப்பறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன். அனுப்புறேன்.
ReplyDeletesent my pic
ReplyDeleteநானும் கலந்து கொண்டேன். படம் அனுப்பியாச்சு. நன்றி.
ReplyDeleteI have sent Chanakyan.jpg
ReplyDeleteநானும் அனுப்பிட்டேன். சொக்கா!!!
ReplyDeleteI have sent my pic couple of days before but it is not displayed in flickr. Kindly check my entry.
ReplyDeleteMohan
Mohan, contest pics will only be shown here
ReplyDeletehttp://picasaweb.google.com/pitcontests/July2009Landmark#
flickr is just our group to share and showcase all 'nice' pics from our members. you can join the flickr group and post ur pics if interested.
நானும் அணுப்பிட்டேன்
ReplyDeletethamizhiniyan.jpg
PiT குழுவினர்க்கு வாழ்த்துக்கள்,
ReplyDeleteபோட்டிக்கு என் படமும் அனுப்பியாச்சு.
dear members,
ReplyDeletemy photo uploaded without my name, can u please edit it with my name.
thanks.
PIT புகைப்பட போட்டிக்கு எளிதில் அடையாளங்கண்டு கொள்ளக்கூடிய சின்னம் ஒன்றின் படம் இணைத்துள்ளேன்.
ReplyDeleteசுல்தான்
படம் அனுப்பி விட்டேன். பார்வைக்கு வைத்த மற்ற படங்கள் இங்கே: LAND MARK - July PiT மெகா போட்டிக்கு. நேற்றைய யூத்ஃபுல் விகடன் 'Good Blogs' பரிந்துரையில் இடம் பெற்றுள்ளது என்கிற மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறேன்:)!
ReplyDeleteமுதல் முறையா போட்டிக்கு படம் அனுப்பிருக்கேன். பார்த்துட்டு சொல்லுங்க
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteபோட்டிக்கான எனது புகைப்படத்தை அனுப்பியுள்ளேன்
http://rainbow-attitudes.blogspot.com/2009/07/pit.html
Thank u
Tjay
எனது புகைப்படத்தை மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறேன்.
ReplyDeleteபதிவாகப் பார்வையிட இங்கே...
http://msmrishan.blogspot.com/2009/07/pit.html
படம் அனுப்பியாச்சு,
ReplyDeleteசக போட்டியாளர்களுக்கு வாழ்த்துகள்.
thanks everyone for sending your pics.
ReplyDeleteplease note 25th is the last date for this months contest.
படம் அனுப்பியாச்சு, சக போட்டியாளர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஇங்கே உள்ள படம்தான் போட்டிக்கு.
ReplyDeleteநானும் கலந்து கொண்டேன்
ReplyDeleteHi,
ReplyDeleteI sent my picture. Thanks.
படத்தை அனுப்பிவிட்டேன்.கொஞ்சம் தாமதமாகிவிட்டது.என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள் :-))))
ReplyDeleteநானும் என் படத்தை அனுப்பிவிட்டேன்
ReplyDeleteஎனது புகைப்படங்கள் அனுப்பிவிட்டேன். அவை இங்கே இருக்கிறது. இன்னைக்கு தான் எடுக்க நேரம் இருந்தது :-). இம்முறை தான் கடைசி நிமிடத்தில் எடுத்து அனுப்புகிறேன்னு நினைக்கிறேன் :)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletethanks for your participation.
ReplyDeletefyi - entry for this month is closed. no new photos will be included in the contest.