வணக்கம் மக்களே,
எல்லோரும் எப்படி இருக்கீங்க??
காலம் ரொம்ப வேகமா ஓடுதுங்க!! நாம் நினைத்துப்பார்க்கக்கூட முடியாத வேகத்தில் பல்வேறு சாதனைகளையும் சோதனைகளையும்,மைல் கல்களையும்,முக்கியமில்லா மௌனங்களையும் நம் பக்கம் வீசிக்கொண்டே செல்கிறது.என்றாவது ஒருநாள் சற்றே தலை உயர்த்திப்பார்த்தால் நாம் கடந்து வந்த தூரத்தை நம்மாலேயே நம்ப முடியவில்லை...
இப்போ எதுக்கு இம்புட்டு பில்டப்புன்னு கேக்கறீங்களா?? நம்ம பதிவுல முதல் போட்டி ஜூலை 2007-இல் தொடங்கிவைக்கப்பட்டது!! எப்படி போச்சுன்னே தெரியல ஆனா அதுக்குள்ள கிடு கிடுவென்று ஒரு வருடம் ஓடிப்போய்விட்டது பாருங்களேன்...
இந்த ஒரு வருடத்தில் நாம் எத்தனை படங்களை பார்த்து ரசித்திருப்போம்,எத்தனை பேர்களை தெரிந்துக்கொண்டு நண்பர்களாக்கிக்கொண்டிருப்போம்,எத்தனை விஷயங்களை கற்றுக்கொண்டிருப்போம்..என்னால் பட்டியலிடக்கூட முடியவில்லை.இந்த போட்டிக்காகவே தமிழ்ப்பதிவை தொடக்கியவர்கள் பலர்.இந்தப்போட்டிகளினால் ஆர்வமேற்பட்டு எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கும் அளவுக்கு புகைப்படக்கலை மோகம் தொற்றிக்கொண்ட கதைகளும் உண்டு.தன்னிடம் ஒளிந்திருக்கும் குறிப்பிடத்தக்க திறமை வெளிவருவது கண்டு அதில் மேலும் ஆர்வம் செலுத்தி கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக கலைப்படைப்புகளை அடுக்கிக்கொண்டு செல்பவர்களை பார்த்தால் மிகவும் சந்தோஷமாகிறது.
இந்த போட்டிகளில் பங்கேற்பவர்கள் மட்டுமில்லாமல் பார்வையாளர்களும், நடுவர்களும் கூட ஒவ்வொரு மாதமும் நிறைய விஷயங்களை அறிந்துக்கொண்டார்கள்,தெரிந்துக்கொண்டார்கள்,நட்புகளை வளர்த்து மகிழ்ந்துக்கொண்டார்கள்.
இப்படி இந்த போட்டியைப்பற்றி சொல்ல ஆரம்பித்தால் நான் நிறுத்தவே மாட்டேன்,அதனால் விஷயத்திற்கு வருவோம்.
இப்படி நாம் அனைவரும் பெருமைகொள்ளும் பிட் மாதாந்திர போட்டியின் முதல் வருட நிறைவை ஒட்டி தமிழில் புகைப்படக்கலை ஒரு சிறப்பு போட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த தடவை போட்டி இரண்டு கட்டமாக இரண்டு மாதங்களுக்கு நடக்க போகிறது.
முதல் சுற்றின் முடிவு இந்த மாதமும் இரண்டாவது சுற்றின் முடிவு அடுத்த மாதமும் வரும்.
சரி முதல் சுற்றுக்கும் இரண்டாவது சுற்றுக்கும் என்ன வித்தியாசம்???
வழக்கமா எல்லோரும் சொல்ற புகார் என்னன்னா,சில பேர் மட்டும் எப்பவும் நல்ல படங்களாக எடுத்து முதல் நிலைக்கு வந்துடறாங்க.அவங்க கிட்ட எஸ்.எல்.ஆர் கேமரா எல்லாம் இருக்கு,இதனால போட்டியில ஒரு சமநிலையே இல்ல,அப்படின்னு சொல்லி கேட்டிருக்கேன்.
ஆனா இந்த போட்டியின் முதல் சுற்றில் நீங்கள் இந்த புகாரை தெரிவிக்க முடியாது!!
ஏண் தெரியுமா??
முதல் சுற்றில் இதுவரை போட்டியில் வென்றவர்கள் பங்கேற்க முடியாது.
ஆமாம்!! இதுவரைக்கும் நடந்த போட்டிகளில் யாரேனும் முதல் மூன்று இடங்களில் வந்திருந்தால் அவர்களின் படங்கள் முதல் சுற்றில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
அப்படி போடு அறுவால!! அப்புறம்????
முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் ஐந்து போட்டியாளர்கள் இரண்டாவது சுற்றிற்கு முன்னேறுவார்கள்.இந்தச்சுற்றில் இதுவரை எங்கள் போட்டிகளில் வெற்றிப்பெற்ற போட்டியாளர்களும் கலந்துக்கொள்வார்கள்.அதாவது முதல் சுற்றில் சேர்த்துக்கொள்ளப்படாதவர்கள்
அட்ரா அட்ரா ... .
இரண்டாவது சுற்றில் போட்டியாளர்களை தேர்வு செய்யப்போவது நடுவர்கள் மட்டுமல்ல பார்வையாளர்களும் தான்.
ஆமா!! இரண்டாவது சுற்றில் பங்கு பெறும் படங்களில் வாக்கெடுப்பு எடுக்கப்படும்.அதில் வரும் முடிவும் நடுவர்கள் எடுக்கும் முடிவுகளின் 50-50 கலவைதான் வெற்றி பெற்றவர்களை தீர்மானிக்கும்.
சூப்பரு!! சீக்கிரம் தலைப்பை சொல்லுங்கன்னு கேக்கறீங்களா?? இங்கிட்டு தான் அடுத்த சிறப்பு! முதல் சுற்று போட்டிக்கு தலைப்பு ஏதும் கிடையாது!!
ஆமாம்!! உங்க கலைத்திறனையும் கற்பனையும் கட்டவிழ்த்துவிட்டு நல்லா ஆற அமர யோசித்து உங்க திருப்திக்கு ஏற்றார்போல் படம் பிடித்து அனுப்புங்கள்!!
அப்போ இரண்டாவது சுற்றுக்கு???
அதை இரண்டாவது சுற்று அறிவிக்கும்போது சொல்றோமே..
சரியா??
அதெல்லாம் சரி!!! அப்போ பரிசு ஏதாவது இருக்கா???
பொறுமை எருமையிலும் பெரிது......
இதுக்கு மேல இப்போதைக்கு நான் ஒன்னும் சொல்லல!! :P
சரி போட்டிக்கான தேதிகளை ஒரு சுத்து பாத்துரலாமா??
ஆகஸ்டு 1 -15 - முதல் சுற்று போட்டிக்கான படங்கள் சமர்பிக்கும் தேதி
ஆகஸ்டு 15 - 25 - முதல் சுற்று படங்கள் தேர்வு,முடிவுகள் 25-ஆம் தேதி அறிவிக்கப்படும்
ஆகஸ்டு 25 - செப்டெம்பர் 15 - இரண்டாம் சுற்று போட்டிக்கான படங்கள் சமர்பிக்கும் தேதி
செப்டெம்பர் 15 - 25 - இரண்டாம் சுற்று படங்கள் தேர்வு,முடிவுகள் 25-ஆம் தேதி அறிவிக்கப்படும்.பார்வையாளர்கள் செப்டெம்பர் 20ஆம் தேதி வரை தங்கள் வாக்குகளை அளிக்கலாம்.
சரிங்களா?? வாங்க போட்டியின் நடுவர்கள் யார் யார் என்று பார்த்து விடலாம்
நடுவர்கள் - ஜீவ்ஸ்,CVR,சர்வேசன்,ஆனந்த்,தீபா(சிறப்பு போட்டியாச்சே,அதான் எல்லோரும் கோதால குதிச்சிரலாம்னு.. ஹி ஹி)
நான் முன்பே சொன்னது போல முதல் சுற்றில் நடுவர்களின் தேர்வு மட்டுமே இருக்கும் ஆனால் இரண்டாவது சுற்றில் நடுவர்களோடு பார்வையாளர்களின் தேர்வும் கணக்கிலெடுத்துக்கொள்ளப்படும்!!
ஆங்!!சொல்ல மறந்துட்டேன்!! முதல் சுற்றில் பிட் போட்டியில் இதுவரை பங்கு பெற்றவர்கள் கலந்துக்கொள்ளக்கூடாது என்று சொன்னேன் அல்லவா.அவர்கள் யார் யார் என்று பார்த்துவிடலாமா?? :-)
July 2007
ஜெயகாந்தன்
தீபா
இளவஞ்சி
August 2007
சத்யா
நாதன்
ஒப்பாரி
Sep 2007
இம்சை
சுந்தர்
யாத்ரீகன்
ஒப்பாரி
Oct 2007
ஆதி
விழியன்
சுந்தர்
ஒப்பாரி
Nov 2007
ஸ்ரீகாந்த்
உண்மை
சிவசங்கரி
ஜவஹர்
Dec 2007
ஒப்பாரி
பிரியா
நந்து
Jan 2008
ஒப்பாரி
லக்ஷ்மணராஜா
நாதஸ்
Feb 2008
கார்த்திகேயன்
பிரபாகரன்
குட்டிபாலு
Mar 2008
கௌசிகன்
நாதஸ்
peeveeads
Apr 2008
கைப்புள்ள
நிலாக்காலம்
கோமா
அமல்
May 2008
பாபு
நெல்லை சிவா
நாதஸ்
June 2008
Sathiya
Srikanth
வாசி
Jul 2008
ஷிஜு
பாரிஸ் திவா
MQN
இப்போதைக்கு அவ்வளவு தாங்க!! எப்போதும் போல இந்த தடவையும் ஒரு கோலாகலமான புகைப்படத்திருவிழாவாக இந்த போட்டி அமையும் என்று நம்புகிறேன்
நல்லா அடிச்சு ஆடுங்க மக்களே!!
வாழ்த்துக்கள்!!!!!
இதுவரை வந்துள்ள படங்களின் அணிவகுப்பு!
பி.கு:வழக்கம்போல் பிட் குழுமத்தின் தற்போதைய ஆசிரியர்களின் படங்கள் தேர்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளபட மாட்டாது.
Subscribe to:
Post Comments (Atom)
ஹைய்யா.... அப்ப நான் முதல் சுற்றில் கலந்துக்கலாம்:-)))))
ReplyDeleteகூடவே இன்னொன்னும் சொல்லிக்கறேன்.
பிட்டுக்கு ஒரு வயசானதுக்கு பொறந்தநாள் வாழ்த்து(க்)கள்.
வாழ்க & வளர்க
வாழ்த்துக்கள்!
ReplyDeleteபூமி சுத்துறது நின்னாலும் பரவாயில்லைன்னு நானும் இந்த போட்டில கலந்துக்க போறேன்:)
ரொம்ப நாள் டச் விட்டுப் போச்சு. கலந்துக்க முடியுதா பார்க்கிறேன் இம்முறை.
ReplyDelete//பிட்டுக்கு ஒரு வயசானதுக்கு பொறந்தநாள் வாழ்த்து(க்)கள்.//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்
அடடா எல்லாம் நன்மைக்கேங்கிறது இதானா? இவ்வளவு நாளும் பார்வையாளரா இருந்துட்டு ஜூலை போட்டிக்குத்தான் களத்தில குதிச்சேன்..வெல்லாதது நல்லதாப் போச்சு! :O))
ReplyDelete4ம் பந்தியில் சொல்லியிருக்கிறது உண்மையோ உண்மை. சும்மா Auto mode அல்லது scenery mode ல போட்டு படம் எடுத்துக் கொண்டிருந்தேன். கமரால இருக்கிற வசதிகள்/functions ஐ நோண்டிப் பார்க்கத் தூண்டினதே இந்த வலைப்பதிவுதான். .. இப்ப எங்க/எதைப் பார்த்தாலும் இது புகைப்படமா எப்பிடி இருக்கும்னு தான் தோணுது :O)
புகைப்படக்கலையை வளர்ப்பதற்கு அரிய தொண்டாற்றி வரும் அன்பர்களுக்கு நல் வாழ்த்துகள். ஓராண்டு நிறைவு பெற்ய்ம் "பிட்" டீற்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
ReplyDeleteம்ம்ம் என்ன கொடுமை இது... என்னை கூட போட்டில கலந்துக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்களே.... இத தட்டி கேக்க யாருமே இல்லயா
ReplyDeleteநானும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியுமா ரொம்ப சந்தோசமாக இருக்கு முயற்சிக்கிறேன் நல்ல படங்கள் கிளிக்க.
ReplyDeleteஹய் ஜூப்பரு:)))
ReplyDelete//July 2007
ReplyDeleteஜெயகாந்தன்
தீபா
இளவஞ்சி
August 2007
சத்யா
நாதன்
ஒப்பாரி
Sep 2007
இம்சை
சுந்தர்
யாத்ரீகன்
ஒப்பாரி
Oct 2007
ஆதி
விழியன்
சுந்தர்
ஒப்பாரி
Nov 2007
ஸ்ரீகாந்த்
உண்மை
சிவசங்கரி
ஜவஹர்
Dec 2007
ஒப்பாரி
பிரியா
நந்து
Jan 2008
ஒப்பாரி
லக்ஷ்மணராஜா
நாதஸ்
Feb 2008
கார்த்திகேயன்
பிரபாகரன்
குட்டிபாலு
Mar 2008
கௌசிகன்
நாதஸ்
peeveeads
Apr 2008
கைப்புள்ள
நிலாக்காலம்
கோமா
அமல்
May 2008
பாபு
நெல்லை சிவா
நாதஸ்
June 2008
Sathiya
Srikanth
வாசி
Jul 2008
ஷிஜு
பாரிஸ் திவா
MQN ///
இவுங்களெல்லாம் கிடையாதுல்ல பர்ஸ்ட் ரவுண்டுல்ல..? (கன்பார்ம் பண்ணிக்கிறேன் )
ரொம்ப ரொம்ப சந்தோஷம்! (எந்த மாசமானலும் சரி போட்டோ போட்டிக்கு அனுப்பிட்டு சரி நிம்மதியா இருக்கலாம்னா இந்த ஆளுங்க வுட மாட்டங்கப்பா இந்த தடவை டிரைபண்ணாலான் ம்ம்!
அடங்்கொய்யால
ReplyDeleteஇந்த தடவை கழுத்தில இல்ல கமெரால போட்டுடாங்கையா அருவால
PIT - க்கு, மனம் கனிஅந்த முதலாமாண்டு பிறந்த நாள் வாழ்த்துகள் :)
ReplyDeleteநல்ல ஐடியா. இரண்டாம் சுற்றில் பார்வையாளர்களும் தேர்ந்தெடுக்கப்போவது, PIT-க்கு இன்னும் இன்னும் அதிக ரசிகர்களைச் சேர்க்கும் :)
ReplyDeleteபொறுமையாய், உற்சாகத்துடன் இந்த வலைப்பூவை நடத்தி வரும் PIT குழுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் :)
வாழ்த்துகள் மக்கா...
ReplyDeleteவாழ்த்துக்கள்!! All the best for everyone! - Jk
ReplyDeleteஃபார்ம் சரியா வரலை ... after giving all info, nothing happened !
ReplyDeleteநொழஞ்சிட்டோம்ல :)))
http://moondraam-kan.blogspot.com/2008/08/blog-post.html
என்னது ஒரு வருசம் ஆகிப்போச்சா? எல்லோரும் குசேலன் படமும் பதிவும் போடப் போயிருக்காங்க.எல்லாரையும் கூட்டிகிட்டு நானும் வந்து சேர்ந்துக்கிறேன்.பரிசு கிடைக்காட்டியும் கூட திரும்பத் திரும்ப வருவோமில்ல:)
ReplyDeleteடிஸ்கி:எழுத்து தமிழுக்கு.காமிரா பிட் போட்டிக்கு.
தலைப்புக் கொடுத்துருந்தால் நல்லா இருக்கும். இப்பப்பாருங்க.....
ReplyDeleteஎன்னைச் சுத்தி எல்லாமே அழகா இருக்கு. எதை எடுக்க எதை விட?
சொக்கா.....நான் என்ன செய்வேன்?:-)
முதல் சுற்றில் கலந்து கொள்ளக் கூடாது என்று சொன்னதே பரிசு பெற்ற மகிழ்ச்சியைத் தருகிறதே.
ReplyDeleteஇதே நானும் ரெடி... :)
ReplyDeleteகலந்துக்கிறபோற மத்தவங்களை நினச்சா பாவமா இருக்கு
அப்பாடா வில்லன்களை ஒருவழியா ஓரங்கட்டி இருக்கிறீர்கள்:)))
ReplyDeleteபிறகு 1 வயசு ஆனதுக்கு வாழ்த்துக்கள்!
முக்கியமாக முதல் ரவுண்டில் ஒப்பாரி இல்லாதது என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துக்கிறது.
ReplyDeleteமனுசன் ஒவ்வொரு மாதமும் கலக்கி எடுப்பார்.
//Blogger சதங்கா (Sathanga) said...
ReplyDeleteஃபார்ம் சரியா வரலை ... after giving all info, nothing happened !///
மக்களே!!
டெக் தீபாவிடமிருந்து ஒரு ஆலோசனை!
உங்கள் கணினியில் நிறைய உபகரணங்கள் ஓடிக்கொண்டிருந்தால் இந்த படிவம் மெதுவாக செயல்படுமாம்!!
அதுவும் தவிர நீங்கள் உங்கள் தகவல்களை உள்ளிட்ட பிறகு "DATA ENTERED SUCCESSFULLY" என்று ஒரு செய்தி வந்து போகுமாம்!!
இதை சிலர் கவனிக்க தவறலாம்! அதனால் தகவல்கள் சேமிக்கப்படவில்லயோ என்று சந்தேகம் வரலாம்!!
பாத்துக்கோங்க!! :-)
முதலாமாண்டு பிறந்த நாள் வாழ்த்துகள்.
ReplyDeletehttp://pudugaithendral.blogspot.com/2008/08/ptt-mega.html
ReplyDeleteநானும் வந்துட்டேன்.
"பிட்" டீற்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்//
ReplyDeleteரிப்பீட்டு
பிட்டுக்கு மண் சுமந்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இன்னும் நன்றாக வளரவும் எங்களைப் போன்ற குட்டிப் பசங்களை வளர்க்கவும் ஆசிகள்:)
ReplyDeleteதலைப்பே இல்லியா. ஆனா ஒரே ஒரு படமா. சாமி என்ன செய்யறது:))))
PIT ஆரம்பித்த போது எவ்வளவு நாள் இதைப்பண்ணுவாங்க என்று நினைத்தேன். உண்மையைச் சொன்னால், அபாரமான வளர்ச்சி.
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!
//
இந்த போட்டிக்காகவே தமிழ்ப்பதிவை தொடக்கியவர்கள் பலர்
//
எப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ
:-)
அருமை...! இந்த வலைப்பதிவின் பின்னால் இருப்பவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..!
ReplyDeleteலேட்டாய் வந்து சொல்றேன், PiT குழுவினர் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்! வளர்க உம் தொண்டு! இந்நேரத்துக்கு ஒரு பத்து என்ட்ரியாவது ஆகியிருக்குமேன்னு பார்க்க வந்தால்...என்ன நடக்குதுங்க? ரெண்டே பேர்தான் டக்னு முடிவெடுத்து டாண் என என்டர் ஆகியிருக்காங்க. [வாழ்த்துக்கள் சதங்கா, புதுகைத் தென்றல்!] மற்ற எல்லா வல்லுநர்களும் சுதாகரிப்பா தங்கள் பெஸ்ட் எதுன்னு யோசித்துக் கொண்டேயிருக்கிற மாதிரி தெரிகிறதே..என்ன செய்யலாம் வல்லிம்மா? சரி தைரியமா பிட்டுக்கு சுமந்திடலாம் மண்ணை:)!
ReplyDeleteம்ம். மண் சுமந்தவர்கள் குழுவினரா? சரி, நம்மை வளர்க்கத்தானே? வளர்வோம் பிட்டுடன் சேர்ந்து:)!
ReplyDeleteஅர்ஜுனனுக்கு,'அந்த மீனை குறி வை!' என்று சொன்னார்கள். சுலபமா யிருந்தது. எதையாவது குறி வைத்து அடி என்று சொல்லியிருந்தால் எப்படி
ReplyDeleteகுழம்பியிருப்பானோ...அப்படித்தான் குழம்பியிருக்க்றோம். இருந்தாலு எதையாவது குறிவைப்போமுல்ல?
PIT குழுவுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteபோட்டிக்கு, நம்ம புகைப்படங்கள் இங்கே,
http://kumarankudil.blogspot.com/2008/08/pit-mega.html
வாழ்தளித்த அன்பு உள்ளங்களுக்கு பிட் குழுவின் மனமார்ந்த நன்றிகள்...
ReplyDeleteஉங்கள் படங்களை ப்ளாக்கரில் பதிவேற்றி பிரசுரிக்கும்போது படங்கள் பெரியதாக தெரியும்படி செய்தால் பதிவில் படம் பார்ப்பவர்களை கவரும் வண்ணம் இருக்கும்.
இதை பற்றிய விரிவான ப்திவு இங்கே...
பதிவின் பின்னூட்டங்களையும் தவறாமல் படித்து பாருங்கள்.. :-)
PIT குழுவினரின் ஓராண்டுத் தொடர் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete"Data entered successfully" கவனிக்கத் தவறிவிட்டேன்.
போட்டிக்கான புகைப்படத்தின் சுட்டி:
http://kaiyedu.blogspot.com/2008/08/pit-2008.html
My first Participation in Photo contest.
ReplyDeletehttp://picasaweb.google.co.uk/devendran83/PhotoContest/photo#5233242742808901202
My Blog for photography
ReplyDeletehttp://deva-flash.blogspot.com/
நம்ம பங்கு இது.
ReplyDeletehttp://thulasidhalam.blogspot.com/2008/08/pit.html
படமும் அதை எடுத்த கதையும் இங்கே..(படிவம் மூலம் சேர்த்துவிட்டேன்)
ReplyDeleteமுதல் முறையாக போட்டியில் பங்கேற்கிறேன் .படத்தை பதிவு செய்யும் பொழுது 'லக்கி' என்பதற்கு பதில் தவறுதலாக 'தங்கை' என்று பதிவு செய்யப் பட்டிருக்கிறது .தங்கை லக்கி என்பது என் வலைத்தளம்.
ReplyDeletehttp://thangai-lucky.blogspot.com
pitபுகைப்படபோட்டிக்கு எனது படமிதோ
ReplyDeletehttp://photomathibama.blogspot.com/
வாழ்த்துக்கள் PIT !!!
ReplyDeleteபோட்டிகாக அல்ல, உங்கள் பார்வைக்காக :)
http://ilavattam.blogspot.com/2008/08/pit.html
போட்டிக்கான விண்ணப்பத்தை நிறைவு செய்து சமர்ப்பித்தால் error in page என்று வருகிறது.
ReplyDeleteகீழ்க்கண்ட uRl ல் உள்ள புகைப்படம் போட்டிக்காக அனுப்பப்படுகிறது. இது என்னால் தான் எடுக்கப்படது என்று உறுதி கூறுகிறேன்.
Rajasubramanian S
http://ourtongue.blogspot.com/2008/08/blog-post.html
முதல் வருட பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஎன் நண்பன் (பீவீ) மூலம் அறிமுகமான இந்த தமிழ் புகைப்படக்கலை வலை பதிவு, எனக்கு என்னுடைய புகைப்படம் சார்ந்த விருப்பம் மற்றும் முயற்சியை மேலும் மேலும் வளர்த்தது மட்டுமல்லாமல் எப்படி புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவையும் வழங்கியது.
அதற்காக இந்த நேரத்தில் இந்த பதிவை சார்ந்த அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்!!!
என்னை போன்ற அனைத்து நண்பர்களுக்கும் இந்த பதிவு ஒரு நல்ல நூலகம் மற்றும் நல்ல ஒரு ஆசிரியரை போல் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
போட்டிக்கான என்னுடைய படம் இங்கே...
http://saran-nizharpadam.blogspot.com/
-சரவணன். த
பிட் கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள் மற்றும் போட்டிக்கு என்னுடைய படம் ..
ReplyDeleteபிட் கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள் மற்றும் போட்டிக்கு என்னுடைய படம் ..
ReplyDeletehttp://kmohankumar.blogspot.com/2008/08/pit-anniversary-competition.html
உள்ளேன் அய்யா....:D.
ReplyDeletehttp://naanpudhuvandu.blogspot.com/2008/08/pit.html
//உங்கள் படங்களை ப்ளாக்கரில் பதிவேற்றி பிரசுரிக்கும்போது படங்கள் பெரியதாக தெரியும்படி செய்தால் பதிவில் படம் பார்ப்பவர்களை கவரும் வண்ணம் இருக்கும்.
ReplyDeleteஇதை பற்றிய விரிவான ப்திவு இங்கே...//
நீங்கள் சொன்னது போலவே செய்து பார்த்தேன். மிகவும் நன்றி CVR.
எனது படம் இங்கே
முதல் தடவையாக நானும்......
ReplyDeletehttp://nejamanallavan.blogspot.com/2008/08/pit.html
This is my photo for competition :-)
ReplyDeletehttp://ramsphotopakkam.blogspot.com/2008/08/blog-post_13.html
http://click1click.blogspot.com/2008/08/blog-post_14.html
ReplyDeleteமெகாப்போட்டிக்கு ஒரு குட்டியூண்டு குருவி படம் போட்டிருக்கேன்.. குருவி படம் இல்ல குருவி புகைப்படம்..
ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்.
பொன் எழில் பூத்தது என் பதிவில்...
ReplyDelete//http://tamilamudam.blogspot.com/2008/08/pit.html
வானவில் வளைந்தது என் பதிவில்:)http://naachiyaar.blogspot.com/2008/08/august-pit-entry.html
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
வணக்கம் ,
ReplyDeleteபோட்டிக்கு, எனது புகைப்படங்கள் இங்கே,
http://rainbow-attitudes.blogspot.com/2008/08/pit.html
thank u
T Jay
நானும் இரண்டு புகைப்படங்களை அளித்துள்ளேன். இன்னும் பதிவேற்றவில்லை. பதிவேற்றியபின் லிங்க் கொடுக்கிறேன்..
ReplyDeleteஎன்னுடைய முதல் படம் போட்டிக்காக
ReplyDeletehttp://pmtibrm.blogspot.com/2008/08/pit-15.html
வாழ்க & வளர்க
என்னுடைய முதல் படம் போட்டிக்காக
ReplyDeletehttp://pmtibrm.blogspot.com/2008/08/pit-15.html
வாழ்க & வளர்க
நண்பர்காள், ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களை பதிவில் ஏற்றியவர்கள், எந்தப் படம் போட்டிக்குன்னு சொல்லிடுங்க.
ReplyDeleteசொல்லலன்னா, கட்டத்தில் இருக்கும் முதல் படத்தை எடுத்துப்ப்போம்.
I posted two photos. If you consider only one :( you can take Statue of Liberty
ReplyDeleteநான் கொடுத்திருக்கும் இரண்டு படங்களில் பச்சைப் பாம்பை படம் தான் போட்டிக்கு.
ReplyDeletePIT - ஆகஸ்ட் 2008 - போட்டோ போட்டாச்சு!
ReplyDeleteநன்றி!
ஒரு வருஷம் முடிஞ்ச சந்தோசத்தில பயபுள்ளைக்கி எதுனா பரிசு கொடுத்து போங்கப்பு! நானும் கிட்டதட்ட ஆறு மாசமா கிடந்து தவிச்சிக்கிட்டிருக்கேன்! எதுனா பரிசு கிடைக்காமலா போய்டும்ன்னு!
போட்டி நடுவர்களுக்கு...,
ReplyDeleteநான் இரண்டு படங்களை பதிவேற்றம் செய்து உள்ளேன்...புலி படத்தை போட்டிக்கு எடுத்துக்கொள்ளவும்....நன்றி.
ReplyDeleteநாங்களும் ரவுடி தான்... ஜீப்பில் ஏத்திக்கக்கங்க
முதல் சுற்றுக்கு என் புகைப்படம் இங்கே...
ReplyDeletehttp://jegadeesangurusamy.blogspot.com/2008/08/pit.html
என் புகைப்படத்தை அனுப்பினேன்...வந்ததா இல்லையான்னு தெரியல.......
ReplyDeletehttp://baluindo.blogspot.com/2008/08/blog-post_2391.html
http://thacnathaku.blogspot.com/
ReplyDeleteபோட்டா போட்டியிலே போட்டா போட்டாச்சு
Not for the competition. Only for display.
ReplyDeletehttp://memycamera.blogspot.com/2008/08/brighton-beach.html
Filter-um, polarizer konjam thiruppi paathen. avlo thaan.
~Truth
Me also present sir...:)
ReplyDeleteI have added entry using the form...but I am not sure whether that has been accepted properly...
Any I am giving link to my blog please find my entry from here...
http://anbblogs.blogspot.com/
Please give your valuable comments on the photos....
Thanks,
ANB
(Arun Nishore Baskaran)
எனது புகைப்படம்:
ReplyDeletehttp://labtap.blogspot.com/2008/08/pit-lazy-trinity.html
ஒரு சந்தேகம், போட்டிக்கு ஒரு புகைப்படம் தானா இல்லை ஒன்றிற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் அளிக்க வேண்டுமா?
வணக்கம்.ஆட்டைக்கு சேர்த்துக்குவீங்களா? இங்கே நேரம் 21.12 PM தட்டச்சும்போது:-)
ReplyDeleteஎதுக்கும் இதைப் பார்த்து பாஸ் மார்க்காவது போடுங்க.உஸ்த்தாதுகள்தான் ஆட்டத்துல இல்லையின்னு சொன்னீங்களே:-))
http://parvaiyil.blogspot.com/2008/08/blog-post_15.html
என்னுடைய 2 படங்களில், 'பப்பாளி' படத்தைப் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளுமாறு மிகத்தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஎன்னையும் ஆட்டையிலே சேர்த்துக்கோங்க சாமிகளா.... :)
ReplyDeleteplease use my clip picture for the competition.
ReplyDeletethanks
sumi
இத்துடன் போட்டிக்கான படங்களின் ஏற்பு நிறைவு பெருகிறது!
ReplyDeleteபங்கு பெற்ற அனைவருக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்!! :-)