Friday, April 25, 2008

ஏப்ரல் - 2008 போட்டி முடிவு

27 comments:
 
அனைவருக்கும் வணக்கம். என்ன எல்லோரும் இப்படி எங்களோட மண்டைய காயவச்சிடீங்க. பங்கேற்ற அனைவருக்கும் மீண்டும் நன்றி. செரி இதோ முதல் மூன்று.

மூன்றாம் இடம் : நானும் ஜீவா அண்ணாச்சியும் சண்டை போட்டு கடைசில இரண்டு படம் மூன்றாம் இடத்துக்கு தேர்வு செய்துள்ளோம்.
----------------------------------------------------------------------------------
கைப்புள்ள :
----------------------------------------------------------------------------------
கைப்புள்ள
படம் மிக அழகு. ஒரு பறவையை வைத்து தனிமை சித்தரித்துள்ளார்
----------------------------------------------------------------------------------
நிலாக்காலம் :
----------------------------------------------------------------------------------
நிலாக்காலம்
போட்டியின் தலைப்புக்கு உகந்த படம் இது. சிறிது பிற்சேர்க்கை செய்து பார்த்திருக்கலாம்
----------------------------------------------------------------------------------
இரண்டாமிடம்: கோமா
----------------------------------------------------------------------------------
கோமா
படத்தின் தன்மை, அமைப்பு அருமை. எப்படிங்க இப்படி ஒரு படத்தை எடுத்தீங்க?
----------------------------------------------------------------------------------
முதலிடம்: அம்மல்
----------------------------------------------------------------------------------
அம்மல்
புகைப்படத்தின் உட்பொருளை blur செய்து மிக அழ்காக தனிமையை வெளிப்படுத்தியுள்ளார். அற்புதம்.

இவைகள் போக சிறப்புகவனம் பெற்ற படம்.
PeeVeeads : இவரும் இந்த மாத போட்டியின் தற்காலிக நடுவர் என்பதால், இவரின் புகைபடம் போட்டிக்கு எடுத்துக்கப்படவில்லை. ஆனால் படம் படு சூப்பர்.
.

ஒவ்வொரு படத்தின் கருத்துக்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

27 comments:

  1. :-O என்னது???!!! மூன்றாவதா? நம்பவே முடியலைங்க.. எதோ விளையாட்டா அனுப்பினேன்.. இப்போ ஆச்சரியமா இருக்கு! அமல், கோமா, கைப்புள்ள ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்! தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் __/\__

    ReplyDelete
  2. நடுவர்களுக்கும், PIT -க்கும் நன்றி.

    வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    சரண்

    ReplyDelete
  3. அட அமல் படத்தை கரெக்டா யூகிச்சேனே. எனக்கு நானே ஒரு பாராட்டு.

    உண்மையில் அமல் படம் க்ளாஸ்.

    PeeVeeads அ இனிமேலும் போட்டிக்குள்ள சேக்காதீங்க. அவரு ரொம்ப ஓவரா போறாரு. இதே மாதிரி ஒவ்வொரு மாசமும் ஜட்ஜாவே போட்ருங்க

    ReplyDelete
  4. அமல், கோமா, கைப்புள்ள, நிலாக்காலம் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் :))

    எனக்கு மிகவும் பிடித்திருந்த கோமாவின் படம் இரண்டாம் இடத்தில் வாழ்த்துக்கள் :)))

    ReplyDelete
  6. //நிலாக்காலம் said...
    :-O என்னது???!!! மூன்றாவதா? நம்பவே முடியலைங்க.. எதோ விளையாட்டா அனுப்பினேன்..
    /

    விளையாட்டுத்தான் வினையாகும்

    இனி ஆர்வமுடன் கலந்துக்கொள்வீர்கள் தானே

    வாழ்த்துக்கள் நிலாக்காலம்!

    ReplyDelete
  7. Excellent photos. My wishes to all participants, winners and judges.

    ReplyDelete
  8. வெற்றிபெற்ற நால்வருக்கும் பாராட்டுகளும் வாழ்த்து(க்க்)களும்.

    நடுவர்களுக்கு நன்றி.

    அந்த ரெண்டாவது படம் எனக்கு ரொம்பவே புடிச்சுப்போச்சு.

    ReplyDelete
  9. //அட அமல் படத்தை கரெக்டா யூகிச்சேனே. எனக்கு நானே ஒரு பாராட்டு.
    உண்மையில் அமல் படம் க்ளாஸ்//

    ரீப்பீட்டு... :)


    வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  11. நன்றி
    இரண்டு போட்டிகளில் முதல் சுற்றில் வந்ததே எனக்கு முதல் பரிசு பெற்ற மகிழ்சியைத் தந்தது .இந்த கணிப்பு என்னை மேலும் மகிழ்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
    மறுபடியும் அந்த மனிதரைக் காண நேர்ந்தால் நீங்கள் கேட்டுக் கொண்டபடி உதவுகிறேன்.
    நான் பயணித்த அந்த சமயத்தில்[மே-07] ஒரு மணிக்கு ஒரு ரயில் என்று ஓடிக் கொண்டிருந்ததால் யாரும் அந்த சேவையை பயன் படுத்தவில்லை .கூட்டம் குறைவு....ஓடும் ரயிலில் நான் நின்று நிதானமாக எடுக்க முடிந்தது.என்னைக் கவர்ந்த ஒரு விஷயம்...நானானி பதிவில் வியர்டு என்ற வகையில் ஒவ்வொரு காலுக்கும் வெவ்வேறு வண்ண செருப்பு ...என்ற விஷயம் வாசித்தேன் ...அதுவே இந்தியா என்றால் ஏழ்மையின் சின்னம் என்ற ரீதியில் பார்த்து பிடித்தேன்.
    once again thank you

    ReplyDelete
  12. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. வெற்றி பெற்ற மற்றும் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஒவ்வொரு தனிமையும் ஒவ்வொரு கதை சொல்லுது....

    ReplyDelete
  14. அருமையான தேர்வு.
    பரிசு பெற்றவர்களுக்கு
    என் வாழ்த்துக்கள்.
    சகாதேவன்

    ReplyDelete
  15. நடுவர்களுக்கும் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

    கடைசி இரு போட்டிகளிலும் முதல் சுற்றில் வந்ததே மகிழ்ச்சியைத் தந்தது.

    //
    நந்து f/o நிலா said...
    PeeVeeads அ இனிமேலும் போட்டிக்குள்ள சேக்காதீங்க. அவரு ரொம்ப ஓவரா போறாரு. இதே மாதிரி ஒவ்வொரு மாசமும் ஜட்ஜாவே போட்ருங்க
    //

    :-)
    இதுவும் ஒரு காரணம் என்றே நினைக்கிறேன். :-)
    PeeVeeads படம் அசத்தல்.

    ReplyDelete
  16. Congras winners.

    #1 is really good.

    personally, I didnt like #2 and #3 that much ;)

    ReplyDelete
  17. //personally, I didnt like #2 and #3 that much ;)//

    வந்துட்டாருடா கருத்து கந்தசாமி. இவருக்கு எதாச்சும் பிடிச்சிருந்தா தான் அது ஆச்சரியம்.

    திருவிளையாடல் படத்துல தருமி பேசற டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது...

    ReplyDelete
  18. //வந்துட்டாருடா கருத்து கந்தசாமி. இவருக்கு எதாச்சும் பிடிச்சிருந்தா தான் அது ஆச்சரியம்.//

    :)

    ReplyDelete
  19. //திருவிளையாடல் படத்துல தருமி பேசற டயலாக்// குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கறதா? வெறும் குற்றம் கண்டுபிடிச்சா பேர் வாங்க முடியாதே, நெறைய கெட்ட பேர் தான் வாங்க முடியும். Constructive Criticism is the best method to improve things.

    ReplyDelete
  20. //Anonymous said...

    //personally, I didnt like #2 and #3 that much ;)//

    வந்துட்டாருடா கருத்து கந்தசாமி. இவருக்கு எதாச்சும் பிடிச்சிருந்தா தான் அது ஆச்சரியம்.

    திருவிளையாடல் படத்துல தருமி பேசற டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது...

    //

    அனானி,

    மற்றவர்கள் கருத்தை கண்டிப்பாக மறுக்கக் கூடாது. எல்லாருக்கும் ஒரே பார்வை ஒரே ரசனை சாத்தியமில்லை. பொதுவாக அந்த அந்த மாத நடுவர்களின் தீர்ப்பு இருவர்களின் பொது இரசனை கொண்டே வருகிறது.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  21. வெற்றிபெற்ற கைப்புள்ள, நிலாக்காலம்,கோமா, அமல் அனைவருக்கும் ...

    வாழ்த்துகள்,வாழ்த்துகள்,வாழ்த்துகள்,வாழ்த்துகள்.:).குட் கேள்,குட் பாயா(boy) ஆளுக்கு ஒண்ணு எடுத்துக்கணும் :-))))

    இவ்வளவு பொறுமையுடன் 63 படங்களைப் பார்த்த நடுவர்களுக்கும்...

    வாழ்த்துகள்,வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. @கீரன்
    தன் சொந்தக்கருத்தை கூற சர்வேசனுக்கு முழு சுதந்திரம் உள்ளது!!
    அதையும் யாருக்கும் புண்படாத வண்ணம் சொல்லியிருக்கிறார் என்றே எனக்கு பட்டது.
    உங்களுக்கு அது புண்படும்படி அமைந்திருந்தால் மன்னிக்கவும்!! :-)

    ReplyDelete
  23. நம்ம படத்துக்கு மூனாவது இடமா? சந்தோஷமா இருக்கு.

    வெற்றியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. கோமாவின் வெற்றிக்கு என் பதிவும் ஒரு காரணமாயிருந்த்துக்கிறது என்பதுபற்றி மிக்க மகிழ்ச்சி!!!
    வாழ்த்துக்கள்! கோமா!
    மற்ற இருவருக்கும் சேர்த்துத்தான்!!!

    ReplyDelete
  25. வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள். அதுவும் முதலிடம் பிடித்த புகைப்படம் ரொம்பவும் அருமை. Oh.... Peevee தற்காலிக நடுவர்ங்கிரதால தான் அவரு படம் select ஆகலையா.... ஏன் அவரோடது வரவே இல்லைன்னு யோசிச்சிட்டு இருந்தேன். நான் எதிர்பார்த்த இன்னொரு படம் ஸ்ரீகாந்தோடது.

    ReplyDelete
  26. naduvars !! congrats for completing your exam :))

    first and second choice were excellent choice

    Missing Post processing.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff