முதல் பகுதி இங்கே...
ஒரு கேமராவில் உள்வரும் ஒளியின் அளவு(திறப்பளவு-exposure) போதுமானதா என்பதை நாம் எப்படி அறிந்துக்கொள்வது???
ஒளி அதிகமாகிவிட்டால் ,படம் ஓவர் எக்ஸ்போஸ்ட்(overexposed) ஆகி வெளிரிப்போய்விடும்,அதே ஒளி கம்மியாக இருந்தால் படம் அண்டர் எக்ஸ்போஸ்ட்(underexposed) ஆகி படம் இருண்டுபோய்விடும்!
உங்கள் வ்யூ ஃபைண்டர்(viewfinder) அல்லது LCD திரையின் கீழே ஒரு விதமான அளவுகோள் ஒன்று இருக்கிறதே கவனித்தீர்களா???
பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்து ஒரு பங்குக்கு மூன்று புள்ளிகள் எனும் அளவுகளில்,பூஜ்ஜியத்திற்கு அதிகமாகவும்,குறைவாகவும் (positive and negative)இரண்டு அல்லது மூன்று புள்ளிகளுக்கு இருக்கும்.
இதுதான் ஒளியை அளக்கும் அளவுகோளான லைட்மீட்டர்(Lightmeter).உங்கள் கேமராவில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கருவி ஒரு காட்சியின் ஓளிக்கு எந்த அளவு திறப்பளவு வேண்டும் என்பதை உங்களுக்கு கணித்துச்சொல்லிவிடும். நீங்கள் ஆட்டோ மோடில் படம் எடுக்கும் போது இந்த லைட்மீட்டரின் கணிப்பை பொருத்து தான் கேமரா லென்ஸின் விட்டம் மற்றும் ஷட்டர் வேகத்தை தீர்மானித்துக்கொள்கிறது.நீங்கள் Manual-இல் படம் எடுக்கும் போதும் நீங்கள் தீர்மானிக்கும் லென்ஸ் விட்டம் மற்றும் ஷட்டர் வேகம் போதுமானதா என்பதை நிர்ணயம் செய்ய இந்த லைமீட்டரைதான் நம்ப வேண்டும்.போன பகுதியில்,பாடத்தின் மிக முக்கியமான விஷயம் ஒன்றை சொல்லப்போகிறேன் என்று சொல்லியிருந்தேன் அல்லவா!!அந்த விஷயம் இதுதான் ... :)
சரி இந்த லைட்மீட்டர் என்னன்னு தெரிஞ்சுகிட்டாச்சு! இதை எப்படி உபயோகப்படுத்தனும்???
உங்க லைமீட்டர்ல அம்புக்குறி பூஜ்ஜியத்துல இருந்துச்சுன்னா அப்போ படம் பிடிக்க சரியான அளவு ஒளி வருதுன்னு அர்த்தம்!! ஆனா சில சமயங்களில் கேமராவின் லைட்மீட்டர் ஒளி அளவை அவ்வளவு துல்லியமாக கணக்கிடாது என்பதால் சிலர் லைட்மீட்டர் அளவை விட சற்று குறைவான ஒளியமைப்போடு படம் எடுப்பார்கள்!! அதை பற்றி பிறகு பார்த்துக்கொள்ளலாம்,ஆனால் இப்போது அதை குழப்பிக்கொள்ள வேண்டாம்.
சரி! உங்கள் கேமராவை Av மோடில் பொருத்திக்கொண்டு கேமராவின் குறைந்தபட்ச f-நம்பர்(அதிகபட்ச லென்ஸ் விட்டம்) செட் செய்துவிட்டீர்களா?
உங்கள் கேமரா, ஷட்டரின் வேகத்தை எவ்வளவு நிர்ணயித்துள்ளது என்று கவனியுங்கள்.அது ஒவ்வொருவரின் காட்சியை பொருத்தது.பொதுவாக 1/60 நொடிகளுக்கு மேல் ஷட்டரின் வேகம் இருந்தால், அவை handheld -இல் எடுத்தால் படம் அதிர்வுக்குள்ளாகும் என்று சொல்லுவார்கள். கேமராவை முக்காலியில் பொருத்தியாகிவிட்டது அல்லவா??முக்காலி இல்லாதவர்கள் தட்டையான மற்றும் கடினமான பரப்பில் கேமராவை வைத்துக்கொள்ளுங்கள்.
இப்பொழுது கேமராவை டைமரில் போட்டுவிட்டு ஒரு படத்தை எடுத்துக்கொள்ளுங்கள்(டைமரில் போட்டால் படத்தை க்ளிக்கும் போது ஏற்படக்கூடிய அதிர்வுகளை தவிர்க்கலாம்).
இப்படி அதிகபட்சமான லென்ஸ் விட்டத்துடன் என் கேமராவில் எடுக்கப்பட்ட படம் கீழே .
பாத்தீர்களா!! படத்தில் நடுவில் பேனாவில் மட்டும் நல்ல தெளிவான ஃபோகஸ் உள்ளது.பின்னால் இருக்கும் தொலைபேசி மற்றும் முன்னால் இருக்கும் லென்ஸ் மூடி இவை சற்றே மங்கலாக காட்சியளிக்கிறது.
என்ன படம் எடுத்தாச்சா???
வாழ்த்துக்கள்!! உங்கள் கேமராவில் முதல் manual படத்தை எடுத்துவிட்டீர்கள்!! படம் எப்படி இருந்தாலும்,உங்கள் பதிவில் போட்டி சுட்டியை பின்னூட்டத்தில் அறிவிக்கலாமே!! ;)
சரி!! இப்பொழுது குறைந்த பட்ச லென்ஸ் விட்டத்தோடு ஒரு படம் எடுத்துப்பார்ப்போம்.
இப்பொழுது உங்கள் கேமராவின் இருப்புநிலையில்(position) மாற்றங்கள் எதுவும் செய்யாமல் உங்கள் லென்ஸ் விட்டத்தின் அளவை மட்டும் குறைத்துக்கொள்ளுங்கள்.அதாவது உங்கள் fநம்பரை கூட்டிக்கொள்ளுங்கள்.அதை எப்படி செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு கேமராவிற்கு மாறுபடும்.என் கேனான் கேமராவை பொருத்தவரை ஷ்ட்டர் பொத்தானின் பக்கத்தில் உள்ள ஒரு டயலை திருகினால் fநம்பரை மாற்றிக்கொள்ளலாம்.
எவ்வளவு அதிகப்படுத்துவது???
நீங்கள் Av மோடில் இருப்பதால்,நீங்கள் உங்கள் லென்ஸின் விட்டத்தை குறைக்க குறைக்க,அதற்கேற்றார்போல் சரியான அளவு ஒளியை தக்க வைக்க ஷட்டரின் வேகத்தை உங்கள் கேமரா குறைத்துக்கொண்டே செல்லும்.
ஒவ்வொரு கேமராவிலும் குறைந்த பட்ச ஷட்டர் வேகம் என்று ஒன்று உண்டு.என்னுடைய கேமராவில் அது 30 வினாடிகள்.அதற்கு மேல் ஷட்டரின் வேகம் அமையுமாறு நான் லென்ஸின் விட்டத்தை குறைத்தால் அப்போது திரையில் தெரியும் அளவுகள் விட்டு விட்டு எரிய ஆரம்பிக்கும்!! இப்படி விட்டு விட்டு எரிந்தால் கேமராவின் எல்லைக்கு மேல் அளவுகளை நான் செட் செய்ய முயல்கிறேன் என்று பொருள்.அதுவுமில்லாமல் நீங்கள் சரியான திறப்பளவிற்கு மேலோ கீழோ அளவுகளை நிர்ணயம் செய்தால் உங்கள் லைட்மீட்டர் பூஜ்ஜியத்திற்கு மேலோ கீழோ சென்றுவிடும்.அதனால் சரியான திறப்பளவு உள்ளதா என்பதை நீங்கள் லைட்மீட்டரை கவனித்தாலே தெரிந்துவிடும்.
இப்படி நான் லென்ஸின் விட்டத்தை குறைத்துக்கொண்டே போக (fநம்பர் ஏற்றிக்கொண்டே போக) எனது குறைந்த பட்ச ஷட்டர் வேகமான 30 வினாடிகள் வரும்போது இருந்த லென்ஸ் விட்டம் f14.
இந்த அளவில் எடுத்த படம் கீழே.
இந்த படத்தில் மேலே இருந்த படத்தைவிட தொலைபேசி நல்ல தெளிவாக இருப்பதை பாருங்கள்.நடுவில் உள்ள பேனா மட்டுமல்லாது சற்றே முன்னே பின்னே உள்ள பொருட்கள் கூட ஃபோகஸில் இருப்பது ,லென்ஸின் விட்டம் குறைவாக உள்ளதனால் தான்.
இப்பொழுது Av மோடில் படம் எடுப்பது எப்படி என்று பார்த்துவிட்டோம்.
Tv மோடில் இதே போன்று ஷட்டரின் வேகத்தை மட்டும் மாற்றிவிட்டால் லென்ஸின் விட்டத்தை கேமராவே தீர்மானித்துக்கொள்ளும்.
முழுமையான Manual மோடில் லென்ஸின் விட்டம்,ஷட்டரின் வேகம் ஆகிய இரண்டையும் நாமே மாற்றிக்கொண்டு படம் எடுக்கலாம்.
இது வரை படித்துப்பார்த்து ஆற அமர முயற்சி செய்து பாருங்கள்!!! இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.உங்களின் புரிதலைப்பொருத்து Tv,Manual மோட்களுக்கு பதிவு தேவையா என்று பார்க்கலாம்!!
வரட்டா?? :)
நன்றி:
Exposure compensation picture from
http://www.cameras.co.uk/cameraimages/canon-powershot-a510-exposure-compensation.jpg

ரொம்ப உபயோகமான பதிவு! எடுத்துகாட்டுடன் நல்லா சொல்லி இருக்கீங்க. நன்றி!
ReplyDeleteromba nalla post CVR. both are nice and informative. thanks.
ReplyDeleteexpecting similar kind in future too.
வணக்கமுங்க! இந்தப் பூனையும் பறவையும் உங்கள் அளவீடுகளில் வருமா என்று கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்.
ReplyDeletehttp://parvaiyil.blogspot.com/2008/04/blog-post.html
@சத்தியா மற்றும் இலக்குவன்
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே!! :-)
@நட்டு
இந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பது ஒரு படம் எடுக்கும் முறை,உங்கள் படத்தின் அபெர்ச்சர் மற்றும் ஷட்டர் வேகம் போன்றவற்றை அறிய வேண்டும் என்றால்,அது உங்கள் படத்தின் EXIF தகவல்களை பார்த்தாலே தெரிந்துவிடும்!! ;)
அந்தப் பேனா ... Cross?
ReplyDelete:)
Its very informative. thank u CVR
ReplyDeletetheo
from my archives for AV
ReplyDeletehttp://picasaweb.google.co.uk/kirankumar.gosu/Imaging/photo#5189792830277755138
@தருமி
ReplyDeleteஎன்ன க்ராஸ்???
புரியலையே அண்ணாச்சி!! :-)
@டி.ஜே
நன்றி டி.ஜே! :-)
@கானா பிரபா
The pleasure is mine! :-)
@உண்மை
பகிற்வுக்கு நன்றி! :-)
உதாரண படங்களுடன் விளக்கியது அருமையா இருக்குங்க மாம்ஸ்:)
ReplyDeletecanon S5 IS இருக்கிறது. teleconverter வாங்கலாமா? அதனை உபயோகப்படுத்துவதால் பாதகம் என்ன?
ReplyDeleteoption teleconverterஆ wide angleஆ என்றால் தற்பொழுது உடனடியாக என்ன வாங்கலாம்?
Dear friends how to use manual mode. My camera is
ReplyDeleteConon Power shot A580
mikavum arumai, arumayana tamilil namaku purium padi vilaki ullirkal. nan yennudaya camera arivai periki kola mikavum uthaviyathu. ithay englishil solvathirku mannikavum
ReplyDeletethis is very useful for me why means the example was indoor,so i can try easily.If possible please give the same indoor example to all lessons.
ReplyDeleteplease explain where is tv and av mode in d300s,i am confused...please..
ReplyDeletesuper super very easy learing in tamil.
ReplyDeletesuper,duper .
ReplyDeletenalla easyya sollithringa sir.rompa helpfulla irukku.itha thalam.keepitab...