திருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.
- இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ்வு. எனவே ஒவ்வொரு நிகழ்வும் மிக முக்கியமானவை. தவறவிட்ட தருணங்கள் மீண்டும் கிடைக்காது. ஆகவே மிகவும் கவனம் தேவை.
- மொத்தக் குடும்பமும் உங்களை நம்பி இருக்கிறது. ஆகவே முடிந்தால் இரு குடும்பத்தினரின் முக்கியமானவர்களிடம் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பழகி சினேகபாவம் வளர்த்துக் கொள்ளுதல் நலம். கூடவே தவற விடக்குடாத முக்கிய ஆட்கள் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். பாட்டி, மாமா மாமி என்று. அது உங்களின் மேல் அவர்களுக்கு நம்பிக்கை வளர்ப்பதோடு நிகழ்ச்சியில் அவர்கள் சிறப்பாக ஒத்துழைக்க உதவும். கூடவே எது போன்ற புகைப்படங்கள் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று ஒரு பட்டியலை செய்து கொள்ளுங்கள்.
- உதாரணத்துக்கு என்னுடைய திருமணத்தை புகைப்படம் எடுத்தவர் மிக முக்கியமான ஒருவரை புகைப்படம் எடுக்க தவற விட்டுவிட இன்றும் அது ஒரு புள்ளியாக நிற்கிறது.
- புகைப்படம் எடுக்கும் இடத்தை ஏற்கனவே ஒருமுறை சென்று பார்த்து பழகிவிட்டால் எந்த இடத்தில் நிறுத்தி மணமக்களை புகைப்படம் எடுக்க ஏதுவாக இருக்கும் என்று தேர்வு செய்ய வசதியாக இருக்கும்.
- உங்களிடம் இருக்கும் கேமரா ஒன்று மட்டுமே போதும் என்று முடிவு செய்து விடாதீர்கள். கூட ஒன்று வைத்துக் கொள்ளுங்கள் கடன் வாங்கியாவது. ஏற்கனவே சொன்னது போல் இது வாழ்கையில் ஒருமுறை நடக்கும் நிகழ்ச்சி. இந்த கேமரா எதாவது பிரச்சினை செய்தால் அடுத்தது உதவியாக இருக்கும்.
- பேட்டரி, மெமரி கார்ட் & சார்ஜர் எல்லாம் ஒரு ஸ்பேர் வைத்துக் கொள்ளுங்கள்.
- மணமக்களை புகைப்படம் எடுக்கும் போது அவர்களின் முகத்தை & கண்களை போகஸ் செய்து எடுக்கவும். முகபாவம் துல்லியமாகத் தெரிய உதவும்.
- ஏற்கனவே நீங்கள் எடுத்த புகைப்படங்களில் சிறந்தவைகளை ஆல்பமாகத் தொகுத்து அவர்களுக்கு காண்பிக்கலாம். அது உங்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.
- முக்கியமாக உங்களின் ஈடுபாடும் கூடவே க்ரியேட்டிவிட்டியும். ப்ளாஷ் அடிச்சு எல்லாரும் போட்டோ எடுத்துவிடலாம். நன்றாக எல்லாரும் கவரும் வகையில் எடுக்க வேண்டும்.
- மணமக்களை தனியாக நிறுத்தி எடுக்கும் போது வெறுமனே இப்படி அப்படி என்று போஸ் கொடுத்து எடுக்கச் சொல்லாமல் முகபாவம் சிறப்பாக அமையும் படி சிறு சிறு ஜோக்குகள், கிண்டல்கள் என்று ஆரம்பித்தால் புகைப்படம் வெறும் புகைப்படமாக இல்லாமல் உயிரோட்டமாக இருக்கும்.
- மணமக்களை மட்டுமே இல்லாமல் அங்கே ஓடியாடும் குழந்தைகளையும் கவனியுங்கள். அவை ஆல்பத்திற்கு மேலும் மெருகேற்றும் ஒன்றாக இருக்கும்.
முடிந்தால் ஒரு துணை புகைப்படக்காரரை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பக்கம் மணமக்களை எடுத்துக் கொண்டிருக்கையில் அடுத்தவர் மற்றவர்களை, குழந்தைகளை என கவனித்து எடுக்க உதவும்.
- முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, புகைப்படம் எடுப்பது உங்கள் தொழில் அதே நேரத்தில் மணமக்களை அல்லது விழாவில் உள்ளவர்களை தொந்தரவு செய்வது இல்லாமல் எடுக்க வேண்டும்.
- ஃப்ளாஷ் / விளக்கின் வெளிச்சம் ரொம்ப ஹார்ஷாக முகத்தின் மீது விழுவதை தவிர்க்கவும். முடிந்தால் டிஃப்யூசர் உபயோகிங்கள்.
- முடிந்தால் ரா (RAW ) பார்மாட்டில் புகைப்படம் எடுக்க முயலுங்கள். கொஞ்சம் அதிகப் படியான வேலை தான் ஆனாலும் சில கருப்படித்த படங்கள் ஆனால் முக்கிய படங்கள் எல்லாம் சரி செய்து திரும்ப பெற உதவும்.
- ஒரே ஆங்கிள்,ஒரே பெர்ஸ்பெக்டிவ் என இருக்காமல் வித்தியாசமாக முயன்று பாருங்கள்.
- மோதிரம் போடுதல், மங்கல நாணை பிடித்திருக்கும் நாத்தியின் கை என சின்ன சின்ன விஷயங்களை க்ளோசப்பில் எடுக்கலாம். அட்டகாசமாக இருக்கும். இரண்டாவது ஆள் இந்த நேரத்தில் உதவலாம்.
- பிண்ணனியில் கவனம் செலுத்துங்கள். பேக்ட்ராப் சீலைகள் சில கைவசம் வைத்திருங்கள். மணமக்களை தனியாக புகைப்படம் பிடிக்க உதவும்.
- குழு புகைப்படம் எடுக்கும் போது கஞ்சி போட்ட மாதிரி விரைப்பாக இருப்பார்கள் நம் ஆட்கள். முடிந்தால் அதை மாற்றி கல கலப்பான சூழல் உருவாக்கப் பாருங்கள்.
- பொறுமை மிக அவசியம். கல்யாண வீட்டை சேர்ந்தவர்கள் சற்றே இப்படி அப்படி உங்களை விரட்டலாம், பொறுத்துக் கொள்ளுங்கள், அவர்களுக்கு விளக்குங்கள் இப்படி அவர்கள் விரட்டுவதால் புகைப்படங்கள் சரியாக வராமல் போகக் கூடிய வாய்ப்புகளை. அதே நேரம் முக்கியமானவற்றை தவற விடக் கூடாது.
- எடுத்த புகைப்படங்களை சரியில்லை என்றால் அவ்வப்போதே அழித்து விடாதீர்கள். அவை பெரிய திரையில் வேறு பெர்ஸ்பெக்டிவ் தரலாம்.
- கடைசியா... மாத்தி யோசிங்க. ஒரே மாதிரி எடுக்காதீங்க
- கல்யாணத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமக்களை சுற்றி கண்டிப்பாக கூட்டம் இருக்கும் . அந்த மாதிரி நேரத்தில் நமக்கு viewfinderல் பார்த்து போட்டோ எடுப்பது சற்று சிரமமாக இருக்கும். ஆகையால் முடிந்த அளவு live view கேமராவை பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..அதுவும் TILT LCD ஆக இருந்தால் மிகவும் நல்ல உபயோகம்..மற்ற சொந்தங்களை தொந்தரவு செய்யாமல் நின்று கொண்டே எடுக்க உதவியாக இருக்கும். இப்போதைக்கு சந்தையில் nikonஐ பயன்படுத்துவோருக்கு nikon d5000 ஒரு நல்ல உபயோகம். இந்த கேமராவின் விலை ஆரம்பத்தில் அதிகமாக இருந்தது .இப்போது அமெரிக்காவில் இந்த கேமரா கிட் லென்ஸ் உடன் சுமார் rs.25000ற்கு(refurbished..americaவில் refurbished என்பது 95-99% புதியதே) இந்த சைட்டில் கிடைக்கின்றது.விலை மிகவும் குறைவாக தெரிகிறது..யாராவது அமெரிக்காவில் இருந்து தெரிந்தவர்கள் வந்தால் இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளவும்.
- http://www.adorama.com/INKD5000R.html
- எப்படியும் இரண்டு அல்லது மூன்று ஆல்பம் போடுவது இப்போது சகஜம்..ஆனால் நான் அதிகம் பார்த்த வரையில் நெருங்கிய சொந்தங்களின் படங்களும்,சாதாரன அழைப்பாளர்களின் படங்களையும் ஒன்றாக வைத்து ஒரு order இல்லாமல் ஆல்பத்தில் ஒட்டி வைக்கப்பட்டிருக்கும்.. இதனால் சொந்தங்கள் தங்களுடைய போட்டோக்களை கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமப்படுவர்..எனவே மணமகன்/ள் படங்கள்,முக்கிய நிகழ்வுகள், நெருங்கிய சொந்தங்கள்,முக்கிய நண்பர்கள்,மணமக்களின் outdoor படங்கள்,போன்றவற்றை மட்டும் பெரியதாக ஒரு ஆல்பமும்,மற்றவர்களின் படங்களை ஒரு ஆல்பமாகவும் போட்டால் நன்றாக வரும்.
- முடிந்த அளவு outdoor போட்டோ(திருமனத்திற்க்கு பிறகு) எடுக்கும் போது மணமகனை,முடிந்தால் மணமகளையும் t-shirt போன்ற கேஷுவல் உடைகளை போட்டு படம் எடுத்தால் மிகவும் நன்றாகவும் சற்று வித்தியாசமாகவும் இருக்கும்.
அருமையான தகவல் அண்ணா :-)
ReplyDeleteதல,
ReplyDeleteகலக்கல் பதிவு.. என் நண்பன் ஒரு போட்டோ ஸ்டுடியோ வெச்சி இருக்கான் அவனுக்கு பிரிண்டு போட்டு அனுப்ப போறேன்..
நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். திருமணத்திற்கு புகைப்படம் எடுக்க இவ்வளவு முக்கிய குறிப்புகள் இருக்கா.
ReplyDeleteஅப்பா நினைச்சாலே ஆச்சரியமா இருக்கு...
அதை மிக அருமையாக ஒவ்வொன்றாய் அதன் முக்கியத்துவத்திற்கு ஏற்றார் போல வரிசைபடுத்தி எங்களுக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி... ஜீவ்ஸ் அவர்களே...
புகைப்படம், புகைப்படம்னு சொல்றிங்களே ஆனா ஒரு கேமராவில் இருந்தும் புகை வர மாட்டிங்குதே ஏன்!?
ReplyDeleteநாலு வருசமா சென்னையில் ஸ்டுடியோவில் வேலை செய்யும் போது சொல்லியிருந்தா கொஞ்சம் சம்பள உயர்வாவது வாங்கியிருப்பேன்!
ReplyDeleteஅருமையான தகவல்கள்
ReplyDeletenalla pathivuga anna
ReplyDeleteஅருமையான தகவல்கள்.
ReplyDelete/////மோதிரம் போடுதல், மங்கல நாணை பிடித்திருக்கும் நாத்தியின் கை என சின்ன சின்ன விஷயங்களை க்ளோசப்பில் எடுக்கலாம். அட்டகாசமாக இருக்கும். இரண்டாவது ஆள் இந்த நேரத்தில் உதவலா//////
சில சமயங்களில், திருமண வீட்டாரின் 'ரசிப்புத்தன்மையை' பொறுத்து, இந்த மாதிரி 'ஆர்ட்டிஸ்ட்டிக்' படங்கள் பல்பு வாங்கி விடுவதுண்டு. க்ளோஸ் அப் எடுத்ததும், தவறாமல், முழுப் படமும் எடுத்தல் அவசியம்.
"என்னாங்க மூஞ்சி தெரீல'ன்னாங்கன்னா, முழுப் படத்தை கொடுத்திடலாம், அதுக்காக. :)
எனக்கு அந்த மாதிரி ஒரு நிகழ்வு நடந்திருக்கு சமீபத்தில்ல் :)
// சந்தையில் nikonஐ பயன்படுத்துவோருக்கு nikon d5000 ஒரு நல்ல உபயோகம். இந்த கேமராவின் விலை ஆரம்பத்தில் அதிகமாக இருந்தது .இப்போது அமெரிக்காவில் இந்த கேமரா கிட் லென்ஸ் உடன் சுமார் rs.25000ற்கு(refurbished..americaவில் refurbished என்பது 95-99% புதியதே) இந்த சைட்டில் கிடைக்கின்றது.விலை மிகவும் குறைவாக தெரிகிறது..யாராவது அமெரிக்காவில் இருந்து தெரிந்தவர்கள் வந்தால் இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளவும். //
ReplyDeleteபயன்படுத்திக்கோங்க, பயன்படுத்திக்கோங்க
முக்கியமான விசயம் இப்போ தான் நியாபகம் வந்தது!(போட்டோகிராபர் டிப்ஸ் தான்)
ReplyDeleteமணமக்களுக்கு நலுங்கு செய்யும் போது, செய்யும் பெண்களுக்கு வலது பக்கத்தில் இருந்து தான் படம் பிடிக்க வேண்டும்.
காரணம்:தமிழக பெண்கள் இடது தோளில் தான் தனது மாராப்பை போட்டிருப்பார்கள்!
மிக நல்ல யோசனைகள் மிக்க நன்றிங்க
ReplyDeleteஅட போங்கப்பா...
ReplyDeleteஇந்த யோசனையெல்லாம் கொஞ்சம் முன்னாடி கொடுத்திருக்க கூடாது...? இப்ப தான் போன மாசம் தம்பி கல்யானத்தை முடிச்சிட்டு... அதுல அரகொரய போட்டோ எடுத்து...
ம்ச்.. ஓகே what to do...? அடுத்து யாருக்காவது கல்யானம் வராமலா போயிரும்... அப்போ பாத்துக்கலாம்.
anyhow, நல்ல தகவல்களுக்கு நன்றியுங்கோ...
மிக நல்ல குறிப்புகள். பலருக்கும் பயனாகும்.
ReplyDeleteநன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteWELDONE SIR I GOT A NEW OF NALUNGU PHOTO IDEAS
ReplyDeleteThankyou sir
ReplyDelete