- உங்களின் படங்களில் ஏதே ஒன்று குறைவது போல இருக்கா ?
- மற்றவங்க எல்லாம் ஏதேதோ பிற்சேர்க்கை செய்து கலக்கறாங்களே என்று வருத்தப்படுவதுண்டா ?
- எளிய முறையில், ஒரே ஒரு கிளிக்கில் படங்கள் வித்தியாசமாக மாறினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதுண்டா ?
- HDR மாதிரி படங்கள் எடுக்க ஆர்வம் உண்டா ?
இதன் மூலம் இநத சோதா படங்களை ஒரே கிளிக்கில் மாற்றி விடலாம்.
முதலில் இந்த இடுகையை படித்து விடுங்கள். போட்டாஷாபின் நீட்சிகளை கிம்பிற்கு மாற்றுவது எப்படி என்று விளக்கமாய் வழிமுறைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
என்ன படித்து, அதில் சொல்லியவாறு செய்து விட்டீர்களா ?
இனி Topazlab தளத்தில் இருந்து topaz adjust தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
இதை நிறுவியப்பின்னர், tladjust.8bf எடுத்து உங்களின் கிம்ப் நீட்சிகள் இருக்கும் இடத்தில் போட்டுக் கொள்ளுங்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்ட இடுகையின்படி செய்தீர்கள் எனில். C:\Program Files\GIMP-2.0\lib\gimp\2.0\plug-ins\photoshop-plugins என்ற இடத்தில் இதை போட்டுக் கொள்ளுங்கள்.
அவ்வள்வுதான் வேலை. அடுத்த முறை கிம்ப் திறக்கும் போது, Filters பகுதியில் இந்த நீட்சி தெரிய வேண்டும்.
இனி விளையாட வேண்டியதுதான் பாக்கி.
கோயில் படம் அருமையா மாறி இருக்கு.
ReplyDeleteஒரு விஷயம் நான் கவனிச்சது, இந்த மாதிரி சுலப 'HDR' பண்ணிய படங்கள், ப்ரிண்ட் எடுக்கும்போது, ரொம்ப சாயம் பூசின மாதிரி வருது. detailம் போயிடுது.