Monday, August 25, 2008

Architecture / கட்டமைப்பு - நிழற்பட நுணுக்கங்கள்

41 comments:
 
பொதுவாகவே கட்டிடங்களைப் புகைப்படமெடுப்பதென்பது இலகுவாகத் தோன்றினாலும், சவால் நிறைந்த ஒன்று தான் அதுவும் புதிய நிழற்படக்காரர்களுக்கு. துறை சார்ந்த நிபுணர்களும் இதை ஒத்துக் கொள்வார்கள். இந்த வகை புகைப் படங்களுக்கு வரவேற்பும் அதிகம் என்பது முக்கியமான ஒன்று. ஆனால் முடியாததென்று எதுவும் இல்லை அல்லவா


Architecture / கட்டமைப்பு நிழற்படங்களுக்கு முக்கியமான இடையூறாக இருப்பது கோடுகள். எந்தப் பெரிய அல்லது சிறிய கட்டிடமாக இருக்கட்டுமே அதில் குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் இருக்கும். ( Remember leading line concept ). இந்தக் கோடுகள் கவனத்தைச் சிதறடிப்பதில் பெரும் பங்கு வகிக்கும். இது பெரும்பாலும் தவறான கோணத்தில் எடுக்கும் போது புகைப் படத்தின் அழகையே கெடுத்து குட்டிச் சுவராக்கி விடும். ஆனால் அதுவே சற்று யோசித்து சரியான கோணத்தில் எடுத்தால் அற்புதமான அழகைத் தரும். உதாரணத்துக்கு சொல்லனும்னா, கட்டிடத்தின் அருகே நின்று வெகு நேராக எடுக்கும் புகைப்படத்திற்கும் , அதையே பக்க வாட்டிலோ அல்லது சற்று வித்தியாசக் கோணத்திலோ எடுத்தால் வரும் படத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் தெரியும்.




பண்ணை வீடுகளையோ அல்லது தனித்திருக்கும் வீடுகளையோ அல்லது பழைய காலத்து கட்டிடங்களை எடுக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. அந்தக் கட்டிடத்தை சற்று தூரத்தில் இருந்து, கட்டிடத்திற்கு சுற்றி இடம் போதுமான அளவு இடம் விட்டு எடுத்துப் பாருங்கள். அந்தக் கட்டிடத்தை சுற்றி இருக்கும் பொருள்களே, இது போன்ற கட்டிடத்தின் அழகை நிர்ணயிக்கும் காரணிகள்.

Viewpoint - Rajaseat - Madikere - Coorg


உயரமான கட்டிடத்தை எடுக்க வேண்டுமெனில், கட்டிடத்தின் அருகில் நின்று மேலே பார்த்தவாரெடுத்தால், மேல் கட்டிடம் மிக வித்தியாசமாகக் காணும். ( அழகா இல்லையா என்பது எடுத்துப் பார்த்தால் மட்டுமே தெரியும் ;) )

Mysore- Tippu

இந்த வகைப் புகைப்படத்தில், நிழற்படத்தின் அழகை நிர்ணயிக்கும் முக்கிய காரணி - வெளிச்சம். கட்டிடத்தை முழுமையாக எடுக்கும் போது வானத்தின் வெளிச்சத்திற்கும், கட்டிடத்தின் மேலுள்ள வெளிச்சத்துக்கும் அதிக வித்தியாசம் இருக்கும். கட்டிடம் சற்று இருட்டாக இருக்கும் சில நேரங்களில். சூரிய வெளிச்சம் கட்டிடத்தின் மேல் விழும் நேரத்தில் எடுத்தால் அழகாக இருக்கும்.

On the way to mysore
உதாரணத்திற்கு சொல்லனும்னா, காலை அல்லது மாலை நேரத்தில், கட்டிடத்தின் பின் சூரியன் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அப்போது கட்டிடத்தின் மீது விழும் வெளிச்சம் வெகு குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் கட்டிடத்தின் அழகு கிடைக்காமல் கருப்பொருள் under-exposed condition ஆக போய்விடும்.

Sunset - at home town

கட்டிடத்தின் உள்ளேயோ அல்லது வெளியேயோ, எடுக்கும் போது நிழல்களையும் சற்று கவனித்து எடுக்கலாம். கட்டிட நிழல்கள் அருமையான புகைப்படத்திற்கு உத்திரவாதம் அளிக்கும். பக்க வாட்டில் இருந்து விழும் வெளிச்சத்தினால் அதிக அளவு நீண்ட நிழல் கிடைக்கும். ஆகவே காலை மற்றும் மாலை வேளைகளில் முயற்சித்துப் பாருங்கள்.





துறை சார்ந்த கட்டிடங்கள் எடுக்கும் போது அங்கு வேலை செய்யும் ஆட்கள் ஃப்ரேமில் இருந்தால், அழகு கூடும் இல்லையா ? சில கிராமத்து வீடுகளை தனியாக எடுப்பதை விட அந்த கிராமத்து மனிதர் அந்த ஃப்ரேமில் இருந்தால், சொல்ல வரும் செய்தி அழுத்தமாக வரும். அது போல இடத்திற்கேற்றவாறு முயற்சிக்கவும்.





அகழ்வாராய்ச்சி நிலையில் இருக்கும் அழிவு நிலைக் கட்டிடங்கள் கட்டமைப்புகள் எல்லாம் பிற்காலத்தில் பலருக்கும் உபயோகமாயிருக்கும். புதர் மண்டிய இடங்களை சற்று தூரத்தில் நின்று எடுக்கும் போது சற்று பேய்வீடு கெட்டப் வரும். எடுத்தப் பின் நீங்கள் பயந்து போகக் கூடாது என்பது முக்கியமான ஒன்று.

Tippu 01

உங்களிடம் நல்ல ஜூம் லென்ஸ் இருக்கிறதா, முடிந்த வரையில் சற்று தூரத்தில் நின்று அப்புறம் கட்டமைப்பை ஃபோகஸ் செய்யுங்கள். மிக அருகில் இருந்து எடுப்பதற்கும், தூரத்தில் இருந்து ஜூம் செய்து எடுப்பதற்கும் அதிக வித்தியாசம் காண்பீர்கள். ( ஏன் என்பது பற்றி நேரமிருந்தால் தனிப் பதிவிட முயற்சிக்கிறேன் )


சில நேரங்களில் கட்டிடங்களை/கட்டமைப்புகளை நேர் கோணத்தில் எடுத்தும் பாருங்கள். கட்டிடங்கள்/கட்டமைப்பு என்பதால், கட்டிடங்களில் உள்ள ஃப்ரேம்களை படத்தில் கொண்டு வர முயற்சியுங்கள்.

படிகள் உள்ளக் கட்டிடங்களை தேர்ந்தெடுத்தீர்களா ? நல்லது. அதில் உள்ளக் கோடுகளை வழி நடத்திச் செல்ல விட்டு அதற்கேற்றார்போல புகைப்படம் எடுங்கள்.

கட்டிடம்/கட்டமைப்பு என்ற உடனே அறைகளும், ஜன்னல்களும், கதவுகளும் நினைவுக்கு வருகிறதா? சரியான ஆள் சார் நீங்க. கோவில் சிலைகளை கணக்கெடுக்க மறந்துட்டீங்களே ? இந்தியாவுல கோவிலுக்காப் பஞ்சம். அழகான சிற்பங்களை வித விதமானக் கோணங்களில் எடுத்துப் பழகுங்கள். சிற்பங்கள் மட்டுமல்ல, அழகு நிறைந்தப் படித்துறைகளையும் கண்ணெடுத்துப் பாருங்கள்.




அதே போல இங்கே எனக்கு கோவில் கிடையாது, நான் பெரிய ஹோட்டலில் தங்கியிருக்கிறேன் என்கிறீர்களா, வசதியாப் போச்சு. செயற்கை நீர்வீழ்ச்சி, செயற்கை நீச்சல் குளம் எல்லாம் உங்களுக்காகத் தான் சார் கட்டி வைத்திருக்கிறார்கள் அதையேன் விடப் போகிறீர்கள்.


குறுகலான சந்துகளின் இருபக்கமும் கட்டப்பட்டிருக்கும் வீடுகளைப் பாருங்கள். கற்பனை ஊற்றெடுக்கும். குறுகலான, பாலங்கள், இடிந்து விழுந்தப் பாலங்கள், வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் தொங்குப் பாலங்கள் என இவை எல்லாம் இந்த வகைப் புகைப்படத்திற்கு உகந்தவையே.




செட்டி நாடு வீடு போன்ற இடங்களில், அங்கு அமைந்திருக்கும் அழகான வேலைப்பாடுகளை மேக்ரோ/க்ளோசப் எடுத்தால் அழகாய் இருக்கும். பழைய வீடுகளில் ஜன்னல், கதவு என எல்லாவற்றிலும் நல்ல வேலைப்பாடுகள் இருக்கும். தவற விடாதீர்கள்.




பகல் நேரத்தில் எடுப்பது போலவே, இரவு வெளிச்சத்தில் ( நிலா? அல்லது ஒளியூட்டப்பட்ட மாளிகைகள் ?) கட்டிடங்களை எடுக்கலாம். ஆனால் இவற்றிற்கு நிறைய பொறுமைத் தேவை. சற்று அவசரப் பட்டாலும் அழகு குறைந்து அலங்கோலமாகும் அபாயம் உண்டு.



பாதி இருட்டும், பாதி வெளிச்சமும் இருக்கும் சில இடங்களில் , உதாரணத்திற்கு நீண்ட ஹால் என்று வைத்துக் கொள்வோம் அப்போது படம் எடுக்கையில் ஏதோ ஒரு மூலை தான் சரியாக வரும். அதற்காக கவலைப் பட வேண்டாம். இருக்கவே இருக்கிறது HDR மெத்தேட். இது பற்றி சர்வேசன் ஏற்கனவே விளக்கி இருக்கிறார் இங்கே !



என்ன எல்லாம் படிச்சிட்டீங்களா, வழக்கமா சொல்றது தான். இவை எல்லாம் எங்களின் ஆலோசனை மட்டுமே . உங்கள் கற்பனைத் திறனை தறிகெட்டு ஓட விட்டால் வெகு அழகானப் புகைப் படங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமென்ன ?

உங்களுக்கு இதைப் பற்றி மேலும் தெரிந்தால் பின்னூட்டத்தில் பதிலிடவும்.

41 comments:

  1. குதுப்மினாரை இப்படித்தான் அடியில் நின்னு நேராப்பார்த்து எடுத்தோம்.. இன்னோரு ஒரு இடம் கண்டுபிடிச்சி வச்சிருக்கோம்.. எங்கருந்து எடுத்தா நாம பக்கத்துலயும் பின்னாடி மினார் உச்சி வரை தெரியும்ன்னு..ஏன்னா கைடாவே வேலை பார்த்து பார்த்து பழகிடுச்சு..

    ReplyDelete
  2. கட்டிடங்களைப் புகைப்படமெடுப்பதென்பது இலகுவாகத் தோன்றினாலும், சவால் நிறைந்த ஒன்று தான்//

    மிகச் சரியா சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  3. பல நல்ல தகவல்கள் கிடைச்சிருக்கு. ஞாபகத்துல வெச்சு படம் எடுக்கும்போது உபயோகப் படுத்திக்கிறேன்.

    ReplyDelete
  4. முதல் படம் மிக அருமையாக இருக்கு!

    ReplyDelete
  5. //மிக அருகில் இருந்து எடுப்பதற்கும், தூரத்தில் இருந்து ஜூம் செய்து எடுப்பதற்கும் அதிக வித்தியாசம் காண்பீர்கள். ( ஏன் என்பது பற்றி நேரமிருந்தால் தனிப் பதிவிட முயற்சிக்கிறேன் )//

    சிம்பிள் பிஸிக்ஸ்தானே? லென்ஸுக்கும் பொருளுக்கும் - நடுவிலும் ஓரத்திலும்- உள்ள தூரம் வேறுபடும். போகஸ் சரியா வராது. சரிதானே?

    ReplyDelete
  6. //திவா said...

    //மிக அருகில் இருந்து எடுப்பதற்கும், தூரத்தில் இருந்து ஜூம் செய்து எடுப்பதற்கும் அதிக வித்தியாசம் காண்பீர்கள். ( ஏன் என்பது பற்றி நேரமிருந்தால் தனிப் பதிவிட முயற்சிக்கிறேன் )//

    சிம்பிள் பிஸிக்ஸ்தானே? லென்ஸுக்கும் பொருளுக்கும் - நடுவிலும் ஓரத்திலும்- உள்ள தூரம் வேறுபடும். போகஸ் சரியா வராது. சரிதானே?
    //


    அது இல்லை. வைட் ஆங்கிளில் எடுக்கும் போது கருப் பொருளுடைய உருவம் மாறுபட்டு காணும்

    விரிவாக நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்

    ReplyDelete
  7. ஆஹா..படம் எடுப்பதில் இவ்வளவு இருக்கா? சத்யமா தெரியாது..

    நாங்களாம் பார்ப்போம், எடுப்போம்,
    சில சமயம் கேமிராவில்
    சில சமயம் கண்களால்...:))

    நல்ல போஸ்ட்!
    ஆமா...அந்த கடைசி படம்..யாரு வீடு! ரொம்ப அழகாக அலங்காரம் செஞ்சு இருக்காங்க வீட்டை..

    ReplyDelete
  8. கட்டிடங்களை எப்படி எப்படியெல்லாம் எடுக்கலாம் என எடுக்கலாம் என்பதை அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். கட்டிடங்கள் என்றில்லை எந்த கட்டமைப்புகளும் இருக்கலாம் என சர்வேசன் சொல்லியிருந்தாலும் எதை எதையும் எடுக்கலாம் என கோடு போட்டு காட்டி விட்டீர்கள் இனி ரோடு போடுவது உங்கள் வேலையென:))!

    எங்கே புதிதாய் போய் எடுக்க என அறிவிப்பு வந்த பின் கட்டிடப் படங்களையெல்லாம் தேடி வைத்திருக்கிறேன். உங்கள் கடைசிப் படத்தைப் பார்த்ததும் அட வீட்டு ஹாலைக் கூட போடலாமா (கை வசம் படங்கள் இதே போல எடுத்ததும் இருக்கு) என குஷியாகிப் பார்த்தா...HDR-னு பயம் காட்டி விட்டீர்கள்:(. ஆனா சர்வெசன் பதிவில போய் பார்த்த போது செஞ்சு பார்க்கலாம்னு தோணுது. கலவையா பல படங்களை பதிவில ஏத்திட்டு வழக்கம் போல ஒண்ணை கொடுக்க நல்ல வழி வகைகள் சொல்லியிருக்கீங்க. நன்றி ஜீவ்ஸ்!

    ReplyDelete
  9. அந்த கிராமத்துப்படம் அழகு என்றாலும் “மோட்டர்சைக்கிள்” இல்லாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  10. நிறைய விசயங்கள் இருக்கு போல!

    நான் எடுத்த படங்கள் கொஞ்சம் மேல கட்டாயிருக்கும் இல்ல கீழ கட்டாயிருக்கும் ( இப்பத்தான் தொழில்நுட்பததோட திரும்ப போட்டோக்களை எடுத்து பார்த்தேன்! )

    ரொம்ப பயனுள்ள பதிவு!


    பை தி பை இன்னும் ரொம்ப யூஸ் புல்லா போட்டோ எடுக்கலாம்ன்னு கத்துகொடுத்த நீங்க ஏன் இன்னும் எனக்கு அந்த டி80 பார்சல் அனுப்பல புண்ணியமா போகும்ல :)))))))

    ReplyDelete
  11. நல்ல விளக்கங்களோடு அருமையான பதிவு, படங்கள் கலக்கலோ கலக்கல்

    ReplyDelete
  12. //வடுவூர் குமார் said...

    அந்த கிராமத்துப்படம் அழகு என்றாலும் “மோட்டர்சைக்கிள்” இல்லாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.//


    உண்மை தான். அது எடுத்த வருடம் 2004 இறுதி என்று நினைக்கிறேன் ( அல்லது 2005 ஆரம்பம் ). அப்போது அவ்வளவாக இது பற்றி யோசிக்காததும் ஒரு காரணம் எனலாம்.

    ReplyDelete
  13. பால்கார அம்மா புடவை ரொம்ப அழகா இருக்கு.ரொம்ப மாடர்ன் பால்காரம்மா,வாட்செல்லாம் கட்டி இருக்காங்க.
    இன்னோரு கோணத்துக்காக இதை எழுதினேன்:)
    ஜீவ்ஸ், நாங்க அனுப்பின படங்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுங்கப்பா. அப்போதானே என்ன தப்பாப் போச்சுனு தெரியும்.!!!

    ReplyDelete
  14. //வல்லிசிம்ஹன் said...

    பால்கார அம்மா புடவை ரொம்ப அழகா இருக்கு.ரொம்ப மாடர்ன் பால்காரம்மா,வாட்செல்லாம் கட்டி இருக்காங்க.
    இன்னோரு கோணத்துக்காக இதை எழுதினேன்:)
    ஜீவ்ஸ், நாங்க அனுப்பின படங்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுங்கப்பா. அப்போதானே என்ன தப்பாப் போச்சுனு தெரியும்.!!!//



    அது எங்க அண்ணி :)) பூஜை செஞ்சு பொங்கல் வச்சு வீட்டுக்கு திரும்பினப்ப எடுத்தது

    :))

    ReplyDelete
  15. //ஜீவ்ஸ், நாங்க அனுப்பின படங்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுங்கப்பா. அப்போதானே என்ன தப்பாப் போச்சுனு தெரியும்.!!!//

    வல்லியம்மா நீங்க எந்த படம்னு சொல்லுங்க, ( மின்னஞ்சல் அனுப்பினாலும் சரி தான் jeevaa அட் gmail.com & photo.in.tamil அட் gmail.com அனுப்புங்க. கண்டிப்பா பதில் வரும்.

    ReplyDelete
  16. // பல நல்ல தகவல்கள் கிடைச்சிருக்கு. ஞாபகத்துல வெச்சு படம் எடுக்கும்போது உபயோகப் படுத்திக்கிறேன்.//

    உண்மைதான்

    முதல் படம் அருமை அண்ணாச்சி.

    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  17. நிறைய விஷயங்களை புரிவது போல் சொல்லி இருக்கீங்க.... கேமரா வாங்கியதும் இவைகளை கவனத்தில் வைத்துக் கொள்கிறேன்.... அப்புறம் PIT போட்டியில் நாம தான் பர்ஸ்ட்ட்ட்ட்ட்டூ

    ReplyDelete
  18. எளிய நடையில் அருமையா விவரிச்சிருக்கீங்க அண்ணாச்சி! படங்கள் அனைத்தும் அருமை! அந்த ஜூம் மேட்டர் நேரம் கிடைக்கும்போது எழுதுங்க! நன்றி!

    ReplyDelete
  19. நல்ல தகவல் அண்ணாச்சி... அடுத்த தடவைல இருந்து இத இம்ப்ளிமெண்ட் பண்ணிட வேண்டியதுதான் :)))

    ReplyDelete
  20. படங்கள் எல்லாமே சூப்பரு..

    ReplyDelete
  21. நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க....நன்றி!

    ReplyDelete
  22. Awesome post. Have one question - Can you please explain "Remember leading line concept " or can you please provide a link for that.

    ReplyDelete
  23. சாரி! அண்ணியா சாரியில்.:)
    சரிம்ம மெயில் அனுப்பறேன்.
    நன்றி ஜீவ்ஸ்.

    ReplyDelete
  24. //Can you please explain "Remember leading line concept " or can you please provide a link for that.//

    http://photography-in-tamil.blogspot.com/2007/07/blog-post_2695.html

    ReplyDelete
  25. @Saravanan
    The link for post about leading lines is in the sidebar.
    http://photography-in-tamil.blogspot.com/2007/07/blog-post_2695.html

    ReplyDelete
  26. Excellent Post!

    ///ஆமா...அந்த கடைசி படம்..யாரு வீடு! ரொம்ப அழகாக அலங்காரம் செஞ்சு இருக்காங்க வீட்டை..//


    ;)

    ReplyDelete
  27. போட்டி தலைப்புக்கு ஏற்றவாறு இந்த மாதிரி பதிவு போடறது ரொம்ப உபயோகமா இருக்கு! அருமையான படங்கள்! நன்றி!

    ReplyDelete
  28. Excellent post -- ஒது lesson மதிரி 2 - 3 முறை படிச்சா தான் நல்லா கவனத்தில் கொள்ள முடியும்
    சூப்பர்

    ReplyDelete
  29. //Thamizhmaangani said...

    ஆமா...அந்த கடைசி படம்..யாரு வீடு! ரொம்ப அழகாக அலங்காரம் செஞ்சு இருக்காங்க வீட்டை..
    //


    அடடே சொல்ல மறந்துட்டேன்ல.. அது நம்ம சர்வேசண்ணேன் வீடுதான்.

    ReplyDelete
  30. //Saravanan said...

    Awesome post. Have one question - Can you please explain "Remember leading line concept " or can you please provide a link for that.//


    சரவணன்,

    சீவியாரும், தி.வா வும் சொன்ன சுட்டி தான். ( நன்றி சீவீஆர் & திவா ) . பதிவிலேயும் சேர்த்துட்டேண்

    ReplyDelete
  31. a good eye opener on architechtural photography.
    thanks thalaiva

    ReplyDelete
  32. நல்ல அருமையான பதிவு. ஒரு கட்டிடத்தைப் படம் பிடிப்பதற்குரிய எளிய வழிமுறைகளைச் சொல்லித்தந்திருக்கின்றீர்கள். இவைகளை அடுத்த முறை கண்டிப்பாகப் பயன்படுத்திப் பார்க்கிறேன். இது போன்ற பல தகவல்களைத் தாருங்கள்.

    ReplyDelete
  33. குறந்த ஒளி படங்கள்.
    பெரியவங்க பாத்து கருத்து சொல்லுங்க ப்ளீஸ்!

    http://chitirampesuthati.blogspot.com/2008/08/blog-post.html

    ReplyDelete
  34. உறுப்படியா பெரிய விஷயங்கள் எதுவும் இல்லை. சில புகைப்ப்படன்கள் ஏனோ தான்னோ. ( அந்த சில்பம் படம் )


    கொஞ்சம் பார்த்து செய்யனும். நாலு பேறு படிஉக்கறதை சிரப்பா செய்யனும்

    ReplyDelete
  35. பழனி,

    மிகப் பலருக்கும் உபயோகமாய் உள்ளது என்ற கருத்து சொல்லியுள்ள பதிவு, உங்களுக்கு உறுப்படியானதாய் இல்லை என்பது வியப்பை அளிக்கிறது.

    'eye of the beholder' என்ற நியதியின் அடிப்படையில், இதில் ஆச்சரியம் இல்லை என்றாலும், நீங்கள் இந்தப் பதிவில் இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை தெளிவாய்ச் சொல்லவும்.

    நாங்கள் பல இடங்களில் கூறியதை போல், நாங்கள் ஜாம்பவான்கள் இல்லை, எங்களுக்குத் தெரிவதை, இயன்றவரை, பொறுப்புடன் 'பாத்துதான்' செய்யறோம்.

    உங்களின் பொறுப்பான, ஆக்கபூர்வமான, கருத்தை எதிர்பார்த்து,

    -சர்வேசன்.

    ReplyDelete
  36. / பழனி said...

    உறுப்படியா பெரிய விஷயங்கள் எதுவும் இல்லை. சில புகைப்ப்படன்கள் ஏனோ தான்னோ. ( அந்த சில்பம் படம் )


    கொஞ்சம் பார்த்து செய்யனும். நாலு பேறு படிஉக்கறதை சிரப்பா செய்யனும்/



    பழனி,

    உங்களுக்கு கருத்துச் சொல்வதற்கு முன்பாக,


    //உறுப்படியா// & //சிரப்பு// == முதலில் சரி செய்துக் கொள்ளுங்கள். உருப்படி வேறு "உறுப்படி" வேறு.


    வல்லினம் மிகவேண்டிய இடத்தில் மிகாமல், வேண்டாவிடத்தில் மிகுந்திருக்கிறது.


    இப்போது உங்களின் பின்னூட்டத்துக்கான பதில்.


    எழுதியதில் என்ன தவறு என்று சொல்ல முடியுமா ?


    அதையும் விட முக்கியமான ஒன்று, புகைப்படத்திற்கென்று யாரும் சொல்லிக் கொடுத்து மட்டுமே பழகிக் கொள்ள முடியாது. ஆகவே தான்

    ". இவை எல்லாம் எங்களின் ஆலோசனை மட்டுமே . " என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.


    சர்வேசன் ஏற்கனவே சொன்னது போல - எதை எதிர் பார்க்கிறீர்கள் என்பதில் உங்களுக்கு தெளிவிருந்தால் இங்கே தெரிவியுங்கள்.


    எங்களுக்குத் தெரிந்ததை இங்கே பதிவிடுகிறோம். தவறு சரி என்பதை விவாதிக்கலாம். பொத்தாம் பொதுவாக வாய் தான் புளிக்கிறது.. இல்லை இல்லை மாங்காய் தான் புளிக்கிறது என்று சத்தமிடுவதில் அர்த்தமில்லை :)
    உங்களு ஆக்கப் பூர்வமான கருத்துகளை எதிர் பார்க்கிறோம்


    நன்றி

    ReplyDelete
  37. ஒரு வேண்டுகோள் துபை U.A.E. இருந்து பார்க்கும் பார்வையாளர்களுக்கு FLICKR தளம் தடை செய்யப்பட்டுள்ளது அதனால் FLICKR தளத்தின் வழியாக வரும் படங்களை பார்த்து ரசிக்க முடியவில்லை அனைத்து படங்களையும் PICASA வில் பதியலாமே

    ReplyDelete
  38. //pmt said...

    ஒரு வேண்டுகோள் துபை U.A.E. இருந்து பார்க்கும் பார்வையாளர்களுக்கு FLICKR தளம் தடை செய்யப்பட்டுள்ளது அதனால் FLICKR தளத்தின் வழியாக வரும் படங்களை பார்த்து ரசிக்க முடியவில்லை அனைத்து படங்களையும் PICASA வில் பதியலாமே//

    கவனத்தில் கொண்டு அடுத்த பதிவில் செயல் படுத்துவோம் :) நன்றி PMT

    ReplyDelete
  39. I'm not basically a photographist, but your narration and explanations are very clear. I'm interested in photography, but i don't know where to get basics of photography. At that time i got ur address frm Dec month Anantha vikatan. Thanks to anantha vikatan.

    ReplyDelete
  40. arumai, kadaisi padathai patha vudan nan solla ninaithathu ithu hdr example padam yenru, annal ninikalay solli vitirkal. usful lesson.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff