Monday, August 25, 2008

PiT மெகாப் போட்டி 2008 ~ இறுதிச் சுற்று அறிவிப்பு!

56 comments:
 
வந்தனம்!

மெகா போட்டி, ஏன், எதுக்கு, எப்படி நடத்தறோங்கர விவரங்கள் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும்.
தெரியாதவங்க, அறிவிப்பு பதிவையும், முதல் சுற்றில் தேறியவர்களின் விவரங்களையும் படிச்சுத் தெரிஞ்சுக்கங்க.

இனி, இந்த மெகாப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கான தலைப்பையும், விதிமுறைகளையும், படங்கள் அனுப்பும் முறை எல்லாம் பாப்பமா?

அதுக்கு முன்னாடி, ஒரு சின்ன விளக்கம்.
முதல் சுற்றின் போட்டியில் இடம்பெற்ற 45 படங்களில், பதினோறு படத்தை அடுத்த சுற்றுக்கு அனுப்புகிறோம்னு உங்களுக்குத் தெரியும்.
நேரமின்மை காரணத்தால், எல்லா படங்களுக்கும் விமர்சனங்கள் சொல்ல முடிவதில்லை என்றும் அங்கே சொல்லியிருந்தேன். தேறிய பதினோரு படத்துக்கான விமர்சனத்தை படித்திருப்பீர்கள்.
நடுவர்கள் கூறும் விமர்சனம் படங்களை மெறுகேற்ற உதவும் என்பதில் உண்மையிருந்தாலும், இது ஒரு கூட்டு முயற்சி என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
போட்டிக்கு அனுப்பப்படும் படம் பற்றிய கருத்தை, அனைவரும் முடிந்தவரை போட்டியாளருக்கு, உடனுக்குடன் தெரியப் படுத்தவேண்டும்.
ஒரு படத்தை பற்றிக் கருத்துக் கூற, "புகைப்பட வித்வானாக" இருக்கணும்னு அவசியம் கிடையாது.
யார் வேண்டுமானாலும், தங்கள் மனதில் பட்டதை உடனே தெரிவிக்கலாம். தெரிவிக்கணும்!
அப்பதான், எல்லோரும் (நடுவர்கள் உட்பட) இந்தக் கலையில் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும்.
PiT குழுவில் இருப்போர்கள் யாரும், தங்களை 'வித்வானாக' நினைக்கவில்லை. நாங்களும், இந்தப் புகைப்படத் துறையைப் பொறுத்தவரை, சாமான்யர்கள் தான். We are just co-ordinators :).
ஸோ, வாங்க, எல்லாரும் சேந்து, சக பயணிகளை, விமர்சித்து, திருத்தி, கைதட்டி, அடுத்த கட்டத்துக்கு அனுப்புவோம் ;)


சரி, இறுதிச் சுற்றுக்கு ரெடியாகுவோமா?

முக்கியமான விஷயம்: முதல் சுற்றில் தேறிய பதினோறு பதிவர்களும், PiTன் முதல் வருட வெற்றியாளர்களும் மட்டுமே, இறுதிச் சுற்றுக்கு படங்கள் அனுப்ப முடியும்.
அதாவது, இவங்களும் (கடந்தகால வெற்றியாளர்கள்)
MQN ,peeveeads ,Sathiya ,Srikanth ,அமல் ,ஆதி ,இம்சை ,இளவஞ்சி ,உண்மை ,ஒப்பாரி ,கார்த்திகேயன் ,குட்டிபாலு ,கைப்புள்ள ,கோமா ,கௌசிகன் ,சத்யா ,சிவசங்கரி ,சுந்தர் ,தீபா ,நந்து ,நாதன் ,நாதஸ் ,நிலாக்காலம் ,நெல்லை சிவா ,பாபு ,பாரிஸ் திவா ,பிரபாகரன் ,பிரியா ,யாத்ரீகன் ,லக்ஷ்மணராஜா ,வாசி ,விழியன் ,ஜவஹர் ,ஜெயகாந்தன் ,ஸ்ரீகாந்த் ,ஷிஜு

இவங்களும் (முதல் சுற்று வின்னர்ஸ்)
இலவசக் கொத்தனார், Sathanga, Mazhai Shreya, Parisalkaran, T Jay, Iravu Kavi, Ramalakshmi ,Jagadeesan, Gregory Corbesier, Surya, Raam

போட்டிக்கான தலைப்பு: Architecture / கட்டமைப்பு. வெறும் கட்டடக் கலை மட்டுமல்லாது, ஒரு artificial man-made கட்டமைப்பு எங்கெல்லாம் தென்படுகிறதோ, அதை படமெடுத்து போட்டிக்கு அனுப்பலாம். இயன்றவரை, புதுசா புடிச்சு அனுப்புங்க.
உ.ம்: பீஜிங் ஒலிம்ப்பிக் ஸ்டேடியமும் அனுப்பலாம், ஒரு மரக் கதவையும் அனுப்பலாம்.

சில மாதிரிகள் இங்கே: (படங்களை க்ளிக்கி பெரிதாய் பார்க்கலாம்)




படங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசித் தேதி: செப்டெம்பர் 15 2008

இம்முறை, PiT co-ordinatorsம் (Deepa, CVR, சர்வேசன், An&, Jeeves), வாசகர்களும் இணைந்து வெற்றிப் படத்தை தேர்தெடுப்போம். அது எப்படிங்கரத செப்டெம்பர் 16 அன்னிக்கு பாப்போம்.

பரிசு: மெகா போட்டியாச்சே பரிசில்லாமலா? ரூ.3500 மொத்தப் பரிசுத்தொகை.
முதல் பரிசு: ரூ 2000, இரண்டு: ரூ 1000, மூன்று: ரூ 500.

ஸ்பான்ஸர்ஸ்: CVR (ரூ1000), மதுமிதா (ரூ1000), நிஜமா நல்லவன் (ரூ1000), ஜீவ்ஸ் (ரூ500). (நன்றி ஸ்பான்ஸர்ஸ் :) )

படம் அனுப்புவது எப்படி?:
கீழே உள்ள ஃபார்ம் உபயோகித்து, உங்கள் படத்தை அனுப்புங்கள்.
ஃபார்ம் மூலம் அனுப்பப்படும் படங்கள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ஒருவர், ஒரு படம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

--FORM REMOVED--

படத்தை போட்டிக்கு அனுப்பியாச்சா? சரியா இருக்கான்னு இங்க அமுக்கி சரிபாருங்க. நன்றி!

தவறிருந்தால், பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

வேறென்னங்க?

'கட்டடம்' கட்டலாம்ல? கட்டி அனுப்புங்க.

மேலே சொன்ன மாதிரி, அனைவரும், போட்டிக்கு வரும் படங்களுக்கு உடனுக்குடன் உங்களின் எண்ணத்தில் எழும் பாராட்டையும், கேள்விகளையும், திருத்தங்களையும், தவறுகளையும் சுட்டிக்காட்டத் தவறாதீர்கள்.

லைட்ஸ் ஆன்!

-சர்வேசன்

படங்கள் இதுவரை:
இங்கே க்ளிக்கி காண்க

56 comments:

  1. அடபாவிகளா... இந்த தலைப்பு முதலிலே தெரியாமே போச்சே... :(

    போனதடவை போட்ட பதிவிலே என்னோட ஒரிஜினல் படத்தை(இந்த பதிவிலே இருக்கிற அய்யப்பன் டிங்கரிங் பண்ண படம்) போட்டு வைச்சிட்டேனே... :((

    ReplyDelete
  2. "தண்டூராக்காரரே.. பரிசுத்தொகை எவ்வளவு..?? ரண்டாஆஆஆஅயிரம் ரூபாய்களா..?? அட சொக்கா.... நா இப்ப எங்க போவேன்.. யெப்படி படம் புடிப்பேன்.."
    திருவிளையாடல் நாகேஷ் மாதிரி பொலம்பவுட்டுட்டீங்களே.. ஏற்கனவே சும்மா தமாசுப் போட்டிகளுக்கே கேமராவும் கையுமா ஒரு மார்க்கமாத்தான் சுத்திட்டிருந்தேன்.. இப்ப இன்னும் நெலம மோசமாகப்போகுது... கண்ணுல படர ஒரு கட்டிடத்தையும் உடமாட்டேன்ல..

    பரிசுத்தொகை அன்பளிப்பாளர்களுக்கெல்லாம் ரொம்பப் 'பெரிய' மனசுங்க... நல்லாருங்க சாமிகளா..!!

    ReplyDelete
  3. ஆகா.. நான் போனவருடம் வெற்றி பெற்றதுக்கு அப்புறம் பெரிய தொய்வு விழுந்துபோச்சு. இந்த பக்கம் வருவதேயில்லை.சரி பதினஞ்சாந்தேதிவரை நேரமிருக்கா. இந்த முறை கட்டாயம் பங்குகொள்கிறேன். அப்புறம் என் பேரு Sathia. Sathiya இல்லை. ;-))

    -சத்தியா.

    ReplyDelete
  4. friends, Please let these folks know that they need to click & send.
    I am not sure if all are regular bloggers/readers :)
    thanks,

    MQN ,peeveeads ,Sathiya ,Srikanth ,அமல் ,ஆதி ,இம்சை ,இளவஞ்சி ,உண்மை ,ஒப்பாரி ,கார்த்திகேயன் ,குட்டிபாலு ,கைப்புள்ள ,கோமா ,கௌசிகன் ,சத்யா ,சிவசங்கரி ,சுந்தர் ,தீபா ,நந்து ,நாதன் ,நாதஸ் ,நிலாக்காலம் ,நெல்லை சிவா ,பாபு ,பாரிஸ் திவா ,பிரபாகரன் ,பிரியா ,யாத்ரீகன் ,லக்ஷ்மணராஜா ,வாசி ,விழியன் ,ஜவஹர் ,ஜெயகாந்தன் ,ஸ்ரீகாந்த் ,ஷிஜு

    ReplyDelete
  5. ஆக, கதவு/யன்னல்/தூண்/கூரை/பாலம்/கட்டடம்/படிக்கட்டு என்று 'கட்டுமானத்துறை'யுடன் சம்பந்தப்பட்டதா எடுக்கணும். அப்பிடித்தானே? (ஐயமில்லாமப் படமெடுக்கணுமே, அதான்.. :O)

    ReplyDelete
  6. Sathia,

    fixed.

    Shreya,

    Right On! :)
    man-made கட்டமைப்பு எங்கெல்லாம் இருக்கோ, எல்லாத்தையும் க்ளிக்கலாம்.

    ReplyDelete
  7. ஒரு அருமையான கோட்டை ஒன்று என் கண்ணில் பட்டது .ஐய்யோ!அதை மட்டும் படம் எடுக்க முடிந்தால் பரிசு எனக்கே எனக்குத்தான்.....அதற்கான ஷார்ப் கேமரா யாரிடம் கிடைக்கும் ....சரி எப்படியோ கேமரா ரெடி.அந்தக் கோட்டையைப் படம் எடுப்பது எப்படி?
    என்ன பெரிய கஷ்டம் ?கோட்டை பக்கத்தில் போய் எடுக்க வேண்டியதுதானே...என்கிறீர்களா?
    அந்தக் கோட்டை,வேறு எதுவுமில்லை.
    "எனக்குத்தான் பரிசு", என்று நான் கட்டிய 'மனக்கோட்டை'

    ReplyDelete
  8. //இவங்களும் (கடந்தகால வெற்றியாளர்கள்)
    MQN ,peeveeads ,Sathia ,Srikanth ,அமல் ,ஆதி ,இம்சை ,இளவஞ்சி ,உண்மை ,ஒப்பாரி ,கார்த்திகேயன் ,குட்டிபாலு ,கைப்புள்ள ,கோமா ,கௌசிகன் ,சத்யா ,சிவசங்கரி ,சுந்தர் ,தீபா ,நந்து ,நாதன் ,நாதஸ் ,நிலாக்காலம் ,நெல்லை சிவா ,பாபு ,பாரிஸ் திவா ,பிரபாகரன் ,பிரியா ,யாத்ரீகன் ,லக்ஷ்மணராஜா ,வாசி ,விழியன் ,ஜவஹர் ,ஜெயகாந்தன் ,ஸ்ரீகாந்த் ,ஷிஜு

    இவங்களும் (முதல் சுற்று வின்னர்ஸ்)
    இலவசக் கொத்தனார், Sathanga, Mazhai Shreya, Parisalkaran, T Jay, Iravu Kavi, Ramalakshmi ,Jagadeesan, Gregory Corbesier, Surya, Raam//

    இந்த லிஸ்ட்-ல பேரைப் பார்த்ததுமே மனசு நிறைஞ்சு போச்சு.. :D

    ReplyDelete
  9. நல்ல தலைப்பு, கட்டிடங்கள் இல்லாத ஊரே இல்லை ஆனால் எந்த கோணத்திலிருந்து எடுப்பது எப்படி எடுப்பது என்பது பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார் ஜீவ்ஸ். நல்ல பதிவு. கட்டிடத்தை தான் படம் எடுக்கப்போகிறீர்கள் அதனால் இந்த குறிப்பையெல்லாம் ஒரு வெள்ளைத்தாளில் எழுதி வைத்து படம் எடுக்கும்போது உபயோகிக்கலாம்.

    இனி போட்டி பத்தி...
    பரிசெல்லாம் அறிவிச்சி கலக்கிட்டீங்கப்பா. துபாய் ல வெய்யில் கொளுத்துது, எந்த கட்டிடத்தப் போய் படம் எடுக்குறது? ஆனாலும் போட்டி ன்னு வந்த பின்னே சும்மா இருக்க முடியுமா? சுட்ர வெய்யில்ல நானும் சுடத்தான் போரேன்

    வாசி.

    ReplyDelete
  10. TKB Gandhi,

    thanks for submitting your picture.
    but, sorry to say that, we cannot include yours in this months contest.

    this month is a 'special' contest aimed for our past winners, as I mentioned in the post above.

    btw, your PIC url must be the actual JPG's URL and not the PAGE URL.

    i fixed the data, but as I said, can't consider yours for the contest. sorry.

    if there is a mistake, let me know.

    ReplyDelete
  11. உதாரணத்திற்கு போட்டிருக்கிற படங்கள் எல்லாம் மிரட்டுது. ரொம்ப குஷ்டமப்பா!

    //அப்புறம் என் பேரு Sathia. Sathiya இல்லை. ;-))
    //
    அப்போ நான் ஆட்டத்துக்கு கிடையாதா?

    ReplyDelete
  12. Sathiya, நீங்க ஆட்டத்துல உண்டு. (i fixed the name) :)

    Sathia, நீங்க யாருங்க? உங்களின் போன வருடம், வெற்றி பெற்ற படம் எது? ;)

    ReplyDelete
  13. இரண்டாவது படத்தில் கூரையும் 3-வதில் படிக்கட்டும் சூப்பர். தேவாலயப் பட ஆங்கிளும் நல்லாயிருக்கு. இப்படி எடுத்த ஆலயப் படம் ஒன்றும்
    கைவசமிருக்கு:)!

    கோமா அவர்களின் மனக்கோட்டைக்கே பரிசு கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. ஆகா, குழப்பிட்டேனா. Sathiya மன்னிச்சுருங்க. நான் அவனில்லை மாதிரி ஆயிப்போச்சு ;-((

    //Sathia, நீங்க யாருங்க? உங்களின் போன வருடம், வெற்றி பெற்ற படம் எது? ;)
    //
    சர்வேசன்,
    பாருங்க ஜனவரிக்கு அப்புறம் இந்தப்பக்கம் வரலை. பதிவுகளும் போடலைன்னா நிலைமை இப்படி ஆயிப்போச்சு.
    இங்கன பாத்துட்டு நான் இருக்கேனா இல்லையானு சொல்லுங்க.

    ReplyDelete
  15. sathia,

    sorry about that. YOur name is already in the list as "சத்யா".

    so, please participate and send us the pic :)

    ReplyDelete
  16. athu saringka.எங்கே பாத்து கமென்டரதுன்னு சொல்லையே?
    போன முறை போட்டியின் கடேசி நாட்கள்ல செஞ்ச மாதிரி இப்பவே ஒரு பிக்காஸா ஆல்பம் துவக்கிட்டா என்ன?
    அப்புறம் இந்த போஸ்ட் ப்ராசஸிங்க்ல என்ன என்ன அனுமதிச்சு இருக்குன்னு சொல்லிட்டா நல்லது. இதப்பத்தி நான் என் ப்ளாக்கிலே சரியா எழுதாம இ.கொ வுக்கு கொஞ்சம் மனவருத்தம் ஏற்பட்டது போல இருக்கு. :-(

    ReplyDelete
  17. திவா, படங்கள் வந்ததும், கட்டம் கட்டி காட்டுவோம்.

    இன்னும் படங்கள் வரல. வந்த ஒண்ணும், invalid entry.

    பிற்தயாரிப்புல இதத்தான் பண்ணனும் இதப் பண்ணக்கூடாதுன்னு ஒண்ணும் பெருசா ரூல் எல்லாம் கிடையாது.
    tastefulஆ பண்ணுங்க.

    ReplyDelete
  18. pria, are you பிரியா?

    pls confirm ;)

    ReplyDelete
  19. /* போட்டிக்கான தலைப்பு: Architecture / கட்டமைப்பு. வெறும் கட்டடக் கலை மட்டுமல்லாது, ஒரு artificial man-made கட்டமைப்பு
    */

    ஒரு artificial man-made கட்டமைப்பு -- apdina ennadu? konjam theliva vilakunga.

    ReplyDelete
  20. //ஒரு artificial man-made கட்டமைப்பு -- apdina ennadu? konjam theliva vilakunga.//

    not only buildings and towers, but also look at bridges, memorials and othe architecturally aesthetic places.

    just a cieling and not the whole building, qualifies too.

    hope you get the picture :)

    ReplyDelete
  21. pria, are you பிரியா?

    pls confirm ;)



    That is me Survey San with the Flickr image.

    ReplyDelete
  22. indha screw, bolt, nut ellam architechture-la varaada?

    ReplyDelete
  23. ஆரம்பமே கண்ணைச் சுத்துதே....அருமையான படம்.

    ReplyDelete
  24. patam pootuRavangka kaament maththavangka seyyaRA maathiri vasthiyoota poottaa wallathu. ooooops1 sorry for tanglish.

    those who are entering pics for competition pl. give post them in such a way that we can comment
    tnks

    ReplyDelete
  25. goma, iimsai படத்தின் உரல் சரிபார்க்கவும்.

    சரியான உரலை மீண்டும் பதியவும்.

    நன்னி!

    ReplyDelete
  26. எனக்கு அந்த form-ku office-la இருந்து access இல்ல. so நான் link-a இங்க அடிச்சா அங்க வலிக்குமா ச்சி இங்க அடிச்சா அங்க accept பண்ணிக்குவீங்க இல்ல? [ கேப்டன் படம் பாத்து பாத்து இந்த effect.]

    http://memycamera.blogspot.com/2008/09/add-title.html

    comments please.

    உண்மை

    ReplyDelete
  27. truth, i dont see your name in the list 'contestants' - are you our past winner?

    sorry, just checking.

    ReplyDelete
  28. truth, never mind.

    i figured it out ;)

    ReplyDelete
  29. survey, one must always figure out the truth!

    ReplyDelete
  30. அந்த உண்மை-தாங்க இந்த truth.

    ReplyDelete
  31. btw, first round-la last year winners partcipate பண்ண கூடாது- nu சொன்னதுல ஒரு அர்த்தம் இருக்கு. ஆனா second round-la restriction எதுக்கு போடணும்? எல்லோருமே participate பண்ணலாம் ல?

    ReplyDelete
  32. @Truth
    இது முதலாமாண்டு நிறைவை ஒட்டிய மெகா போட்டி என்பதால் ஒரு சிறப்பு வேண்டும் என்பதால் இரண்டு கட்டமாக வைத்திருக்கிறோம்.இதுவரை வெற்றி பெற்றவர்களுடன் நேரடியாக போட்டியிடாமல் முதல் சுற்று மூலமாக தேறி பின்னர் இறுதிச்சுற்றில் போட்டியிடுவது இந்த முறை போட்டியின் சிறப்பு

    ReplyDelete
  33. SURVESAN
    got the point .i will check url and send the picture again .
    thank you

    ReplyDelete
  34. என்னப்பா இது? இன்னும் 4 நாள்தான் இருக்கு, இதுவரை 1 (3) படம்தானா? எல்லாரும் ரூம்போட்டு யோசிக்கிறீங்களா? இல்லை காமிரா தூக்கிகிட்டு ஊர் ஊரா பறக்கறீங்களா? சரி நீங்க போடலைனா நானே நாளைக்குள்ள படம் போடறேன். என் ப்ளாக்லதான். இங்கேதான் இப்ப போட முடியாதே?
    :-)))))))

    ReplyDelete
  35. என்னுடைய படத்த போட்டியில சேர்த்துக்கொங்க மக்கா.

    http://4.bp.blogspot.com/_Iqxfs_bkBVA/SMps_ewmm1I/AAAAAAAAAu4/pjuPWMIQ26E/s1600-h/1.jpg

    ReplyDelete
  36. என்னோட படம் இங்கே

    http://the-second-eye.blogspot.com/2008/09/pit-2008.html

    வாசி

    ReplyDelete
  37. படத்தை போட்டாச்சு மக்களே.
    இங்க பாருங்க.

    ReplyDelete
  38. நான் இணைத்திருக்கும் படத்துக்கான url சரியாக இல்லை. போன இரண்டு முறையும் அவரவர் கணினியிலிருந்தே படத்தை ஏற்றிட முடிந்ததாக ஞாபகம். பதிவிலிருந்து படத்தின் url-யைப் பெற்றிட அதன் மேல் கிளிக்கிட்டு முயற்சித்தாகி விட்டது. முடியவில்லை. ஆகவே flickr url தந்தேன். அதுவும் குறிப்பாக படத்துக்கு இட்டுச் செல்லவதாக இல்லை:(! ஆகையால் இங்கே சென்று ஐந்தாவது படத்தை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  39. check the pics listed in the post above and ensure its right pic. thx.

    ReplyDelete
  40. சரியான படம்தான் சர்வேசன். நன்றி:)!

    ReplyDelete
  41. எம்க்யூஎன் படத்துக்கு காமென்ட வழிய காணோம். ஸோ, நோ காமென்ட்ஸ்!

    ReplyDelete
  42. surveysan ayya avargale,

    ividam srikanth. padam sariyaaga ulathaa endru sari paarthu uruthiseiya panivanbudan vendugiren. nandri.

    itha ezhutharthu kaati emaan bejaaru poodichi paa...

    ReplyDelete
  43. my picture is also ready.
    http://haasya-rasam.blogspot.com/2008/09/blog-post.html#links
    ------
    http://haasya-rasm.blogspot.com

    ReplyDelete
  44. my picture is also ready.
    http://haasya-rasam.blogspot.com/2008/09/blog-post.html#links
    -----------------------------------
    blog:
    ------
    http://haasya-rasam.blogspot.com
    ---------
    corrected

    ReplyDelete
  45. என்னுடைய முயற்சி -
    http://ilavattam.blogspot.com/2008/09/pit-2008.html

    உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் !!!

    ReplyDelete
  46. அட பனோரமா பக்கம் எங்கேப்பா? காணோமே? அதனால் இங்கே பின்னூட்டம் போட வேண்டியதா போச்சு.
    சரி சரி என் பனோரமா முயற்சிய இங்கே பாத்து திட்டுங்க!
    http://chitirampesuthati.blogspot.com/2008/09/blog-post_14.html

    ReplyDelete
  47. போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    போட்டிக்கு புதிதாக எந்த படமும் எடுக்க முடியவில்லை. அதனால் பழைய படத்தினை மீண்டும் பதிக்கின்றேன்.

    விரைவில் முழுமூச்சாக படமெடுக்க வேண்டும்.

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  48. போட்டிக்கான எனது படம்:
    http://vadakkupatturamasamy.blogspot.com/2008/09/pit-2008.html

    ReplyDelete
  49. போட்டிக்கான எனது பதிவு.

    http://kaipullai.blogspot.com/2008/09/pit.html

    போட்டிக்கான புகைப்படம்.

    http://2.bp.blogspot.com/_TXCaXL0id1A/SM395yDXTRI/AAAAAAAABPM/pK2wIlBnPDo/s1600-h/26Jan07+017-2.jpg

    ReplyDelete
  50. http://nandhu1.blogspot.com/2008/09/blog-post.html

    அந்த லிங்க்ல எப்படி படத்த ஏத்தறதுன்னு இனித்தான் பாக்கனும்.முதல்ல இங்க லிங்க போட்டுக்கறேன்

    ReplyDelete
  51. போட்டிக்கான பதிவு.
    http://vizhiyil.blogspot.com/2008/09/pit.html

    ReplyDelete
  52. போட்டிக்கான எனது படம்:
    http://rainbow-attitudes.blogspot.com/

    Thank u
    T jay

    ReplyDelete
  53. Here is mine. I hope I made it within the deadline!

    http://picasaweb.google.com/2005Jay/PhotoContest#5088223056981758370

    ReplyDelete
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff