Tuesday, August 5, 2008

PiT: இரண்டாவது மேகம்.

7 comments:
 
பிற்சேர்க்கையில் மேகம் சேர்ப்பது எப்படி என்று ஏற்கனவே ஒருமுறை பார்த்து இருக்கிறோம். இந்த முறை அதை விட எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வெளிறிப் போன வெள்ளை நிற வானத்துக்கு இந்த செய்முறை எளிதாக இருக்கும்.




முதலில் படத்தை கிம்பில் திறந்துக் கொள்ளுங்கள்.





ஒரு புதிய லேயரை உருவாக்குங்கள்











அடுத்து உங்களுக்கு பிடித்த மேகப் படத்தை திறவுங்கள்.
( ஒரு எளிய குறிப்பு. மேகம் சூழ்ந்த வானத்தை பார்த்தால் படம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது போன்ற நேரத்தில் உபயோகித்துக் கொள்ளலாம். உங்கள் கேமராவில் எடுக்கபட்ட படம் இணையத்தில் இருந்து உருவப்பட்ட படத்தை விட நன்றாகவே பொருந்தும்.





மேகபபடத்தை முழுமையாக நகலெடுத்து ( Ctrl-A, Ctrl-C ,Ctrl-V )




உங்களின் படத்தின் மேல் ஒட்டுங்கள். ஒட்டியப்பின் படத்தில் குறிப்பிட்டபடி "நங்கூரம்" பொத்தானை அமுக்கினால், ,மேகம் ஒரு புதிய லேயராகத் தோன்றும்.




மேகப்படம் இனித் தேவை இல்லை, அதை மூடி விடலாம்.

Mode => Darken Only தேர்வு செய்யுங்கள். கிட்டத்தட்ட வேலை முடிந்து விட்டது.



சிலப் பல இடங்களில் , தேவை இல்லாத இடத்திலும் மேகம் வந்து இருக்கக் கூடும். அதை எளிதில் நீக்கி விடலாம்.

முதலில் ஒரு Layer Mask உருவாக்குங்கள்.






பின்னர் கருப்பு நிற பிரஷ் கொண்டு எந்த இடத்தில் எல்லாம் வானம்/மேகம் தேவையில்லையோ அங்கே வண்ணமடித்து விடுங்கள்.







அவ்வளவுதான். வானத்தை ஒட்டியாகி விட்டது.



மேகமற்ற வெள்ளை வானத்தில் இருந்து , மேகம் சூழ்ந்த நீல வானத்துக்கு மாறியாச்சு !


7 comments:

  1. Its very useful.
    Thanks a lot...!

    ReplyDelete
  2. great technique!

    megam mattumdhaan otta mudiyumaa?

    options unlimited?

    what are the other things you can bring in like this? :)

    ReplyDelete
  3. with layering, i think everything is possible to bring there. :)


    simple and faster solution

    ReplyDelete
  4. http://picasaweb.google.com/kirankumar.gosu/Imaging/photo#5231770819103326450

    check this photo. Used HDR.
    AEB = -2, 0, +2
    But vaanathula megam konjam irundichi. Romba konjam :)

    ~Truth

    ReplyDelete
  5. இது தெரியாத விஷயம்.ஜிம்ப் எதைக்குறிக்கிறது?நான் pit ல் உறுப்பினரானால் தான் போட்டியில் கலந்துகொள்ள முடியுமா?
    கேமரா கையில் இருப்பது மட்டும்தான் என் ஒரே தகுதி!
    உபயோகமாக இருக்கி
    றது.

    ReplyDelete
  6. ராஜசுப்ரமணியம்,
    PIT உறுப்பினர் என்பது எல்லாம் இல்லை, யார் வேண்டுமானலும் போட்டியில் கலந்துக் கொள்ளலாம்.


    கிம்ப் ( http://gimp.org)என்பது ஒரு வரைகலை மென்பொருள், இதைக் கொண்டு புகைப்படங்களை மெருகேற்றலாம்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff