Wednesday, August 13, 2008

டிப்ஸ் டிப்ஸ் & மெகாப் போட்டி முடிய இன்னும் இரண்டே தினங்கள்...

8 comments:
 
மக்களே,

ஒரு வருஷம் முடிஞ்சதுக்கு வாழ்த்துச் சொன்ன அத்தனை நல் உள்ளங்களுக்கு குழுவின் சார்பில் மிக்க நன்றி.

இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே இருக்கிறது போட்டி முடிவடைய. வாங்க சீக்கிரம், இது வரை கலந்துக்காதவங்க எல்லாரும் வந்து கலந்து கொண்டு கலக்குங்க. நீங்க எந்த தலைப்பிலேயும் படம் எடுக்கலாம். அதுல ரொம்ப அழகா வந்தது எதுன்னு உங்களுக்குப் படுதோ அதைப் போட்டியில் சேர்த்து விடவும்.

போட்டிக்கான சுட்டி இங்கே

நம்மைச் சுற்றியிருக்கும் உலகம் அழகியலில் நிறைந்திருக்கிறது. நம் பார்வையை சற்றே கூர்மையாக்கி அதன் அழகை புகைப்படத்தில் கொண்டுவர கண்டிப்பாக உங்களால் முடியும்.

உதாரணத்திற்கு சில கீழே



மேலே இருக்கிறது ப்ரொஃபஷனல் கொரியர் கைப்புள்ள அண்ணாச்சியின் புகைப்படம்.

A day at work - in Namakkal



இது இன்னோரு ப்ரொஃபஷனல் கொரியர் பீவீ அண்ணாச்சியோடது.


******

முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படை விதிகள் :




-- Rule of third
-- Rule of leading lines
-- composition tips

தொடர்ந்து இதை கடைபிடித்து வந்தால் ஒரு காலகட்டத்தில் அது பற்றிய யோசிப்பு இல்லாமலேயே தானாக உங்களின் புகைப்படத்தில் சேர்ந்து விடும்.

முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய இன்னுமொன்று.

புகைப்படம் எடுக்கும் போது தேவையற்ற distractions இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முதன்மையான படம் அழகாக இருந்தாலும் பக்கத்தில் தேவையற்றவை இருந்தால் கவனச் சிதறல்கள் அதிகரிக்கும்.


அதிகம் நான் பயன்பாட்டில் வைத்திருக்கும் சில குறிப்புகள்.

பொதுவாக landscape and architectural புகைப்படங்களுக்கு கட்டாயம் 1/3 பங்கு வானத்தையும் சேர்த்து எடுப்பது. அப்போது சாதாரணமாக வரும் புகைப்படங்கள் இன்னும் மெருகேறி இருக்கும் என்பது என் எண்ணம்.

முடிந்த வரையில் புகைப்படங்களை எளிமையாக வைத்திருத்தல் நலம். சாதாரண பார்வையாளர்களுக்கும் புரியும் படி படம் எடுத்தால் மட்டுமே அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர இயலும்.

மேலே குறிப்பிட்ட rule of third, rule of leading line போன்றவற்றை முடிந்த வரையில் தவறாமல் உபயோகிப்பது.

சரியான வண்ணக் கலவை இல்லாத புகைப்படங்கள் முடிந்த வரையில் தவிர்ப்பது.

எடுத்தப் புகைப்படங்களை ஆஹா ஓஹோ என்று நம்மை நாமே தட்டிக் கொடுத்துக் கொள்ளாமல், ஒரு மூன்றாம் மனிதன் அந்தப் புகைப்படத்தை நம்மிடம் தந்து கருத்துக் கேட்டால் நமக்கு உண்மையில் என்ன தோன்றும் என்று பார்த்து, நிறை குறைகளை அறிந்துக் கொள்வது.

முக்கியமாக " நான் யாரையும் விட சிறந்த புகைப் படக் கலைஞன் இல்லை. அதே சமயம் யாரும் என்னை விட சிறந்த புகைப் படக் கலைஞன் இல்லை. மற்றவர்களால் முடியும் என்றால் என்னாலும் முடியும். என்னால் முடியும் என்றால் மற்றவர்களாலும் முடியும் " என்ற மனோபாவம். இது அதிகம் கற்றுக் கொள்ளவும், தேவையற்ற விமர்சனங்களைப் புன்னகையுடன் புறந்தள்ளவும் உதவியது.


நாம் எடுக்கும் புகைப் படங்கள் ஏதோ ஒன்றை பார்வையாளர்களுக்கு உணர்த்த வேண்டும். அப்படி ஏதும் புகைப்படத்தில் இல்லாத பட்சத்தில் அது வெறும் காட்சிப் பதிவு. வெறுமனே நாம் பார்த்ததை அப்படியே பதிப்பதற்கும் , நாம் பார்த்ததை, உணர்ந்ததை மற்றவர்களும் உணரும் வகையில் வெளிப்படுத்த வேண்டும்.

A small care, makes photos much better. எடுத்தப் படங்களை சற்று பிற்தயாரிப்புக்கு உட்படுத்திப் பார்த்து அதை செம்மைப் படுத்துவது.


அவ்வளவு தாங்க.

படம் எடுக்கும் கருவியைப் பொறுத்து அழகிய புகைப்படங்கள் கிடைப்பதில்லை. அதை எடுக்கும் மனிதனைப் பொறுத்தே அது அழகு பெறுகிறது. உங்கள் சிந்தனையோட்டத்தை, கற்பனைத் திறனை சேர்த்து எடுக்கும் படங்கள் நீண்ட நாளைக்கு நினைவில் இருக்கும்.

எனவே

TREAT THE RULES OF COMPOSITION AS GUIDELINES & FOLLOW THE RULES UNTIL YOU KNOW WHEN TO BREAK THEM

எல்லாம் படிச்சாச்சா? சரி அப்படியே சீக்கிரம் புகைப்படம் எடுத்து போட்டில கலந்துக்கோங்க.

8 comments:

  1. எல்லாரும் கலந்துக்கணும் ரொம்ப ஈசிதான் போட்டி முதல் போட்டியில புரபஷனல் கொரியர்கள் யாரும் கிடையாது ஸோ மக்கள்ஸ் எல்லாம் தைரியமா கலந்துக்கலாம்!

    (ரகசியமா ஒரு மேட்டர்! போட்டோவை அனுப்பி எல்லா புரபொஷனல் கொரியரையும் ஒரு மிரட்டு மிரட்டிடணும் ஒ.கேவா!)

    ReplyDelete
  2. டிப்ஸ் எல்லாம் படிச்சாச்சு. டிப்ஸ் தந்ததுக்கு நன்னி!

    ஆனா இங்க வர படத்தை எல்லாம் பார்த்தா பயமா இருக்கு. அதனால போட்டி எல்லாம் எதுக்கு, எல்லாரும் ஒத்துமையா இருப்போமே - இதுதான் இப்போதைய டயலாக்! :))

    ReplyDelete
  3. உதாரண படங்கள் அருமை.

    //நம்மைச் சுற்றியிருக்கும் உலகம் அழகியலில் நிறைந்திருக்கிறது. நம் பார்வையை சற்றே கூர்மையாக்கி அதன் அழகை புகைப்படத்தில் கொண்டுவர கண்டிப்பாக உங்களால் முடியும்.//

    இதைச் சற்று மாற்றி பொதுவிதி ஆக்கிவிடலாம். 'புகைப்படத்தில்' என்பதற்கு 'அனைத்திலும்' என்று போட்டு.

    அருமையான வரிகள் ஜீவ்ஸ்.

    ReplyDelete
  4. //இலவசக்கொத்தனார் said...
    டிப்ஸ் எல்லாம் படிச்சாச்சு. டிப்ஸ் தந்ததுக்கு நன்னி!

    ஆனா இங்க வர படத்தை எல்லாம் பார்த்தா பயமா இருக்கு. அதனால போட்டி எல்லாம் எதுக்கு, எல்லாரும் ஒத்துமையா இருப்போமே - இதுதான் இப்போதைய டயலாக்! :))//

    மறுக்காச் சொல்லேய்..!!

    ReplyDelete
  5. "TREAT THE RULES OF COMPOSITION AS GUIDELINES & FOLLOW THE RULES UNTIL YOU KNOW WHEN TO BREAK THEM" ...

    punch dialogue - சூப்ப‌ர்...!

    ReplyDelete
  6. இதோ என்னுடைய பங்களிப்பு.
    http://naachiyaar.blogspot.com/2008/08/august-pit-entry.html

    கடைசியாக வருவது நானா:)

    ReplyDelete
  7. கடைசி நேரத்தில டிப்ஸா? ஒரு மாசத்துக்கு எங்கள ஓரங்கட்டிட்டிங்க...
    ஆனாலும் இந்த முயற்ச்சியை பாராட்டித்தான் ஆகணும். எந்தவித தலைப்பும் கொடுக்காமல் let the creativity flow என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. எல்லோருக்கும் வாழ்த்துக்கள். எப்படி நல்ல படம் எடுக்குறது ன்னு ரூல்ஸ் சொல்லிக்குடுத்திருக்கிறார் ஜீவ்ஸ். மறக்காம அதுக்குத்தகுந்தார்ப்போல் படம் எடுத்து கலக்குங்க.

    வாசி.

    ReplyDelete
  8. //மற்றவர்களால் முடியும் என்றால் என்னாலும் முடியும். என்னால் முடியும் என்றால் மற்றவர்களாலும் முடியும்//

    இப்படியெல்லாம் ஊக்கம் சொல்லி
    என் போன்று இங்கெல்லாம் கால் வைக்கப் பயந்தவர்களை அடியோடு மாற்றி வருகிறீர்கள். உங்கள் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff