Thursday, July 12, 2007

மூன்றுக்குள்ளே காட்சி இருக்கு ராமைய்யா

13 comments:
 
என் இனிய தமிழ் மக்களே,
எல்லோரும் எப்படி இருக்கீங்க??
மனிதர்களாகிய நாம் காட்சிப்பிரியர்கள். உன் பதிவுக்கு பத்து பேரு வந்தாய்ங்க,ஆறு பேரு துப்பிட்டு போய்ட்டாய்ங்க,நாலு பேரு இந்த மொக்கைய கூட மெனக்கெட்டு படிச்சாய்ங்க,ரெண்டு பேரு கும்மி அடிச்சாய்ங்க, அப்படிங்கற சொத்த மேட்டர கூட சும்மா சொல்லாமா படம் போட்டு காட்டுனா ஆஆஆ-னு வாயை பொளந்து பாத்துகிட்டு இருப்போம். அதனால தான் கதை கவுஜை இது எல்லாத்தையும் விட படங்கள்னா மக்கள விரும்பி பாக்கறாங்க!!!்
எல்லோர் கிட்டேயும் இருக்கற கேமராதான் நம்ம கிட்டையும் இருக்கு,எல்லோரையும் போல தான் நாமளும் க்ளிக்கிட்டு இருக்கோம்,ஆனா சில பேரு மட்டும் எப்படிய்யா பாத்தா பாத்துக்கிட்டே இருக்கறா மாதிரி படம் எடுக்குறாய்ங்க அப்படின்னு நான் பல சமயம் யோசிச்சிருக்கேன். அட!! அவனுங்க எல்லாம் லட்ச கணக்குல பணத்தை கொட்டி கேமரா வாங்கி இருக்காங்கையா!! நாம எல்லாம் அது மாதிரியா அப்படின்னு சொல்றீங்களா???அதென்னமோ நானும் அது மாதிரி தாங்க நெனைச்சிட்டு இருந்தேன்,ஆனா கொஞ்சம் கொஞ்சமா எடுக்க எடுக்க இதுல நாம எல்லாம் கூட சுலபமா தெரிஞ்சுக்கறா மாதிரி சில நுணுக்கங்கள் இருக்குன்னு தெரிஞ்சுது!!! அதான் உங்க கிட்ட அப்பப்போ இதை பத்தி கொஞ்சம் கதை அடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். இதெல்லாம் நாம தெரிஞ்சுக்கிட்டு உபயோகப்படுத்தியே ஆகனும்னு அர்த்தம் இல்லீங்கன்னா. ஒரு காட்சி நல்லா இருக்கும்னு உங்க மனக்கண்ணுல தோனிச்சுன்னா டப்புனு அதை ஒரு படம் புடிச்சுறனும்!! அங்க போய்ட்டு நம்ம நுணுக்கம் எல்லாம் யோசிச்சிட்டு இருக்க முடியாது தான்.ஆனா இந்த மேட்டரு எல்லாம் காதுல போட்டு வெச்சா நம்மல அறியாமையே அதெல்லாம் நம்ம யோசனையில ஊறி படம் எடுக்கும்போது தானா தோனாதா??சும்மா கேட்டு தான் வெச்சுக்கலாமே்!! என்ன நான் சொல்லுறது???

மூன்றுக்குள்ளே காட்சி இருக்கு ராமைய்யா

நம்ம தலைவரு என்னடான்னா எட்டுக்குள்ளே வாழ்க்கையே இருக்குன்னு சொல்லிட்டு போயிருக்காரு. ஆனா இந்த புகைப்படக்கலையில் இருக்கற தலைங்க எல்லாம் என்ன சொல்றாங்கன்னா ,ஒரு காட்சியை மூனா பிரிச்சு குறுக்கையும் நெடுக்கையும் கோடு போட்டோம்னு வெச்சுக்கோங்க ,அந்த கோடுகள் ஒடுற பகுதிகளும் ,அவை ஒன்றுக்கொன்ரு குறுக்கிட்டுக்கொள்ளும் பகுதிகளும் தான் மனிதனின் பார்வை இயற்கையாக விழும் பகுதிகள் அப்படின்னு சொல்றாய்ங்க. அதாவது எந்த படத்தை நீங்க எடுத்துக்கிட்டாலும் உங்க பார்வை இயற்கையாக நாம கோடு போட்ட பகுதிகளை தான் முக்கியமா கவனிக்குமாம். எந்த ஒரு படம் பாத்தாலும் அதுல ஏதாவது ஃபிகரு தேறுமா அப்படின்னுதான் என் கண்ணு போகுதுன்னு என்று எல்லாம் யோசித்துக்கொண்டு இங்க போட்டு குழப்பிக்காதீங்க!!
அது உங்கள சொல்லி குத்தம் இல்லை!!! உங்க வயசு அப்படி!!! அதுக்கும் புகைப்பட கலைக்கும் ஒன்னும் சம்பந்தம் கிடையாது.
அதாவது நீங்க எந்த ஒரு படம் எடுத்தாலும் படத்தோட முக்கியமான பொருள் இந்த கோடுகளிலோ அல்லது கோடுகள் தொட்டுக்கொள்ளும் புள்ளிகளிலோ இருக்கிறார்போல் பார்த்துக்கொண்டால் பார்வையாளர்களுக்கு படம் அழகாக தெரியும் என்று சொல்கிறார்கள்.இதற்கு ஆங்கிலத்தில் "Rule of the thirds" என்று பெயர். தமிழிலே இதற்கு உங்களுக்கு சௌகரியமான பெயரை நீங்களே சூட்டிக்கொள்ளுங்கள்!!முப்பகுதி கோட்பாடு என்று வேணும்னா கூப்டுக்கலாமா??

சரி சரி!!! சாதாரணமாவே நான் எழுதினா ஒன்னும் புரியாது அதுலையும் பெரிய கோட்பாடு எல்லாம் சொன்னால் புரியுமா?? இருங்க ஒரு உதாரணத்தோடு இந்த நுணுக்கத்தை தெளிவா பாக்கலாம்.
இப்போ நீங்க வலது பக்கத்துல இருக்கற படத்தையே எடுத்துக்கோங்களேன்,எவ்ளோ சீரா அழகா இருக்கு. படத்தோட முக்கியமான பகுதின்னு பாத்தீங்கன்னா அது வானமும் தண்ணீரும் சேருகிற தொடுவானப்பகுதி. அது எப்படி சரியா மேலிருந்து போடப்பட்ட இரண்டாவது கோடுடன் இணைந்து இருக்கு பாருங்க. அதுவும் இல்லாம படத்தின் ஒரு முக்கிய பொருளான மரமும் கூட இரண்டாவது கோடுகள் சேரும் புள்ளியில் இருப்பதால் படத்துக்கு அது பாந்தமாக இருக்கு. படத்தின் இன்னொரு முக்கியமான விஷயமாக இருக்கும் வானில் தோன்றும் ஒளித்திட்டு பகுதி சரியா புள்ளிக்கு மேல இல்லாட்டாலும் கொஞ்சம் பக்கத்துல இருக்கறதுனால பரவாயில்லை.

(இந்த படத்தை இந்த சுட்டியில் சென்று பார்த்தால் அசைவூட்டத்துடன் தெளிவாக இருக்கும்.)

அப்போ இனிமே படம் எடுக்க போனா ஸ்கேல்,டேப்பு எல்லாம் எடுத்துட்டு போய் புள்ளி வெச்சு கோடு போட்டு தான் படம் எடுக்கனுமா??? அப்படின்னு கேக்கறிங்களா???
நான் முன்னமே சொன்னா மாதிரி இதுப்படி எடுக்கும் படங்கள் தான் அழகாக இருக்கும் என்று ஒன்னும் சட்டம் அல்ல. எடுத்த படங்கள் எதனால் நன்றாக வரவில்லை என்று குழப்பம் இருந்தாலோ மற்றும் நம் படம் எடுக்கும் திறனை பட்டை தீட்டிக்கொள்ள வேண்டும் என்றாலோ இந்த நுணுக்கங்களை எல்லாம் கருத்தில் கொள்ளலாம். ஏதாவது ஒரு காட்சி அழகாக உங்களுக்கு தோன்றினால் உடனே எதை பற்றியும் யோசிக்காமல் படம் எடுத்து விடுங்கள்!! இந்த நுணுக்கங்கள் எல்லாம் வெறும் வாழிகாட்டுதலுக்காக மட்டும்தானே தவிர செயல்படுத்தியே ஆக வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

அதுவுமில்லாமால் நீங்கள் இந்த கோட்பாட்டை போட்டோ எடுக்கும்போது தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று இல்லை. ஏற்கெனெவே எடுத்த படத்தில் கூட இந்த கோட்பாட்டிற்கு ஏற்றார்போல் கொஞ்சம் வெட்டி (crop) செய்து கூட போட்டோக்களை மெருகேற்றலாம். அதற்கான உதாரணத்தை கீழே பார்க்கலாம்!! :-)
வேறு ஒரு புகைப்படக்கலை சார்ந்த தலைப்போடு அடுத்த பகுதியில் உங்களை சந்திக்கிறேன். அது வரை இந்த முப்பகுதி மகத்துவத்தை புரிஞ்சிக்கறா மாதிரி சில படங்களை விட்டு செல்கிறேன்.
பார்த்து விட்டு போங்க!! இதை பயன்படுத்தி பாத்துட்டு பின்னூட்டத்துல உங்க அனுபவங்கள சொல்லிட்டு போங்க!!

வரட்டா??? :-)









References:
http://en.wikipedia.org/wiki/Rule_of_thirds

படங்கள்:
http://digital-photography-school.com/blog/rule-of-thirds/
http://www.silverlight.co.uk/tutorials/compose_expose/thirds.html
http://www.allensphotoblog.com/blog1/images/WolfRuleThirds.jpg
http://www.asme.org/Jobs/Entrepreneurs/Blogging_Way_Business_Success.cfm
http://www.digicamhelp.com/learn/shoot-pro/rule.php

பி/கு : இது என் வலைப்பூவில் முன்னமே போடப்பட்ட ஒரு இடுகையின் மீள்பதிவு.

13 comments:

  1. நான் எப்பவோ எடுத்த படம் இங்கே இருக்கு... இது இந்த rules ஐ சரியா follow பண்ணியிருக்கான்னு சொல்லுவீங்களா? ? ?

    ReplyDelete
  2. @தீபா
    வாங்க தீபா!!
    உங்க பஞ்ச பூதம் படம் நல்லாவே வந்திருக்கு. அதிலும் மேலே உள்ள வானத்தின் டிசைன் பாக்கறதுக்கு அழகா இருக்கு.

    சூரியன் சற்றே சிறியதாக தெரிகிறது,ஆனால் நீங்கள் நிலம்,தண்ணீர் வானம் என்று எல்லாவற்றையும் கவர் பண்ண வேண்டி இருந்ததால் இப்படி ஆகிவிட்டது தெரிகிறது.

    சூரியன் நட்ட நடுவில் இல்லாமல் சற்றே தள்ளி இருப்பது நன்று. சூரியன் சற்றே இடது பக்கம் வந்திருந்தால் நம்ம கோட்பாடுக்குக்கு ஏத்தா மாதிரி இருக்கும். தொடுவானமும் நிலபறப்பும் கட்டத்திற்கு parallel-ஆக அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
    என்னை விட்டிருந்தால் கொஞ்சம் zoom செய்து ,காமெராவை சற்றே திருப்பி cross-ஆக எடுத்திருப்பேன்.

    இது மாதிரி
    எப்படி இருக்கும் என்பது படம் எடுத்தால் தான் சொல்ல முடியும்!! :-)

    நானும் உங்களை போல ஒரு கத்துக்குட்டி தான்,ஏதோ எனக்கு தோன்றியதை சொன்னேன். :-)
    தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்!! :-)

    இரண்டாவது படமான Drop - துளி மிக அருமை. படத்தில் DOF எனப்படும் depth of focus நன்றாக அமைந்திருக்கிறது.
    இதை பற்றி தனியாக ஒரு பதிவில் எழுதுகிறேன்.
    Keep Clicking!! :-)

    ReplyDelete
  3. ///தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்!! :-)///
    நெவர்... கத்துக்க தானே இங்கே வறோம்..
    ////சூரியன் நட்ட நடுவில் இல்லாமல் சற்றே தள்ளி இருப்பது நன்று. சூரியன் சற்றே இடது பக்கம் வந்திருந்தால் நம்ம கோட்பாடுக்குக்கு ஏத்தா மாதிரி இருக்கும். தொடுவானமும் நிலபறப்பும் கட்டத்திற்கு parallel-ஆக அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது///
    We were on the farthest lane..& moving fast .. அதனால "moving mode" லே direct ஆ களிக் பண்ணினது..ஜூM பண்ணி எடுத்தது நல்லா வரலை.. நடுவிலே வண்டி வந்து சூர்யன் & தொடுவானத்தை மறைச்சுடுச்சு

    When the abundance is abundant.. அப்போ க்ராஸா எடுத்தா.. எடுப்பா இருக்கும்ன்னு உங்க படைத்தை பார்த்ததும் தெரிஞ்சுது.. நினைவில் வச்சுக்கிறேன்

    இதுவரை எனக்கு "துளி"க்கு தான் நிறைய பாரட்டு வந்திருக்கு.. DOF யெல்லாம் இனிமே தான் கத்துக்கணும்.. Thanks to this blog..You guys are doing a great job

    ReplyDelete
  4. சி.வி.ஆர் படம் நல்லா எடுப்பருன்னு தெரியும்... ஆனா எழுத்துலயே "படம் காட்டுற" ஆள்னு இப்பத்தான் தெரியுது. நீங்க மட்டும் வாத்தியாரா போயிருந்தேங்கன்னா நம்ம பய புள்ளைக மட்டம் போடாம உங்க க்ளாசுக்கு மட்டும் டான்னு ஆஜர் ஆயிருவாங்க. சுவையான எழுத்து உங்களுடையது. வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    ஓசை செல்லா

    ReplyDelete
  5. ஆரம்பமே கலக்கல் சி.வி.ஆர். அட்டகாசம்.

    ReplyDelete
  6. http://www.photo.net/photodb/photo?photo_id=2539984 -- cvr unga kattaththukkulla ithu porunthuthaa parunga

    ReplyDelete
  7. @தீபா!
    அட! கார்ல போய்ட்டு இருக்கும் போது எடுத்ததா???
    அப்போ இவ்வளவு வந்ததே பெருசு!!
    :-)

    Tilt பண்ணி எடுப்பது பத்தியும் கோணங்களை மாற்றி எடுப்பது பற்றியும் தனி பதிவு போடலாம் என்று இருக்கிறேன்.என் flickr தளத்தில் பல படங்கள் இப்படி tilt செய்து இருக்கும்!! :-)

    @செல்லா
    இந்த கூட்டுப்பதிவில் எழுத அழைப்பு விடுத்ததற்கு நன்றி.
    /சுவையான எழுத்து உங்களுடையது. வாழ்த்துக்கள்.//
    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    @நிழற்படம்

    //ஆரம்பமே கலக்கல் சி.வி.ஆர். அட்டகாசம். //
    நன்றி! :-)


    //http://www.photo.net/photodb/photo?photo_id=2539984 -- cvr unga kattaththukkulla ithu porunthuthaa parunga //
    ஏதோ காரணத்தினால் அலுவலகத்தில் உங்கள் இணைப்பை திறக்க முடியவில்லை. வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு கூறுகிறேன்!! :-)

    ReplyDelete
  8. @நிழற்படம்
    படத்தை பாத்தேன் தல!
    தீபாவின் துளிகள் படத்தை சொன்னது போல் இந்த படத்திலும் நல்ல DOF.
    ஒரு வண்டை படம் பிடிப்பது எவ்வளவு கஷ்டம் என்று எனக்கு தெரியும். சும்மா ஒரு இடத்தில் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும்,அதனால் நன்றாக zoom செய்து பொறுமையாக எடுக்க வேண்டும்.
    வாழ்த்துக்கள்!! :-)

    இதை போன்ற என்னுடைய முயற்சி இதோ மற்றும் இதோ

    நம் படங்களில் இந்த கோடுகள் மற்றும் புள்ளிகளை ஒற்றியே சரியாக எல்லா சமயமும் எடுக்க முடியாது,கொஞ்சம் பக்கத்தில் இருந்தாலும் ஓகே தான்.
    நட்ட நடுவில் இல்லாமல் படத்தில் உங்கள் பொருள் (subject) சற்றே தள்ளி அமைந்திருப்பது நல்லது.

    உங்கள் வண்டு வலது புறம் நோக்கி இருப்பதால் அது இடது ஓரத்தில் இருந்தால் பார்ப்பதற்கு இன்னும் நன்றாக இருந்திருக்கும்.ஏன் என்று இதை பற்றி பேச ஆரம்பித்தால் இங்கேயே பதிவு எழுதி விடுவேன்!! அதனால் கொஞ்சம் நிறுத்திக்கொள்கிறேன்!! :-)

    படத்தை நீங்கள் மதியவாக்கில் எடுத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்,அதனால் படம் கொஞ்சம் overexposed ஆனது போல் தெரிகிறது. சிறிது contrast-ஐ post production மூலம் சரி செய்தால் படம் பார்க்க இன்னும் அழகாக இருக்கும் :-)

    ReplyDelete
  9. Good Post CVR but having a couple of doubts, In a normal digital cameras where can we see these lines. Is these lines specific to digital SLR's?

    Can you guys remove this word verification pls?

    ReplyDelete
  10. //In a normal digital cameras where can we see these lines. Is these lines specific to digital SLR's? //

    சில கேமராக்களில் இந்த கோடுகள் guidelines போன்று திரையில் தோன்றும்.
    It depends on the camera as to whether you have the option or not.
    My mobile phone has that option where i can set it through a setting so that the lines appear on the screen when i take the photo,whereas my camera does not.

    ReplyDelete
  11. சி.வி.ஆர்,


    சீக்கிறம் அந்தப் பதிவை எழுதுங்க. காத்திட்டு இருக்கோம். DOF இருந்தாலும் மதிய வெயில் மண்டைய பிளக்க எடுத்த போட்டோ அது. Camera = Nikon coolpix 2500

    ReplyDelete
  12. Hi,
    I taken one photo(https://docs.google.com/file/d/0B3YI373PgQCvOXVmaXhoejdIQWM/edit?usp=sharing)
    please check whether I have followed the rule of thirds in that, please provide your negative,positive comments

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff